உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, March 24, 2017

மதுரைத்தமிழன் பாணியில் புடலங்காய் கூட்டுபுடலங்காய் கூட்டு /புடலங்காய் கட் செய்வது எப்படி snake-gourd-curry-

தேவையானவை:

புடலங்காய் - ஒன்று
வேக வைத்த பயத்தம் பருப்பு - அரை கப் (கடலை பருப்பையும் பயன்படுத்தலாம் )
மஞ்சள் தூள் சிறிதளவு
கருமிளகு சிறிதளவு

தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் 6
சீரகம் 2 ஸ்பூன்

கடுகு - ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஸ்பூன்
சீரகம் ஸ்பூன்

உப்பு - ஒரு தேக்கரண்டி


செய்முறை:புடலங்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

பருப்பை நன்றாக வேவைத்து தனியாக எடுத்து வைக்கவும்

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, போட்டு வெடித்ததும் உளுத்தம் அதன் பின் சீரகமும் போட்டு அதன் மீது சிறிது பெருங்காய பவுடரையும் போட்டு இறுதியாக கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்

தாளித்தவுடன் அதில் வேக வைத்த புடலங்காயை சேர்த்து கிளறி விடவும்

அதன் பின் தேங்காய் சீரகம் பச்சைமிளகாயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதை இந்த புடல்ங்காய் மேல் போட்டு ஒரு கிளரு கிளறவும்.

அதன் பின் சில சில நிமிடங்கள் கழித்து பருப்பை அதில் சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு சேர்க்கவும் அதன்பின் சிறிதளவு பொடித்து வைத்த கருமிளகை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி வைது ரசம் அல்லது வத்தல் குழம்புடன் சாப்பிட்ட்டால் மிக அருமையாக இருக்கும்..


இங்கே புடலங்காயை எப்படி கட் செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் கூட்டு எங்கே என்று கேட்காதீர்கள் செய்து முடித்தவுடன் பசி என்பதால் சாப்பிட்டு முடித்துவிட்டோம் ஹீஹீ


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இந்த பதிவு மதுரைத்தமிழன் புடலங்காயை எப்படி கட் செய்வது என்பதை காட்டுவதற்காக போடப்பட்ட பதிவு ஹீஹீ தமிழன்


29 comments :

 1. சாப்பிடலாம்ல....

  ReplyDelete
  Replies
  1. தைரியமாக சாப்பிடலாம்

   Delete
 2. ஆஆவ்வ்வ்வ்வ்வ் நான் போட இருக்கும் அடுத்த ரெசிப்பியை இவர் எப்பூடிக் கண்டுபிடிச்சு இப்போ முந்திட்டார்ர்ர்ர். என் கொம்பியூட்டருக்கு எனக்கு வர வரப் பாதுகாப்பே இல்லாமல் போச்சூஊஊ... எல்லோரும் உள்ளே வந்து படிச்சிட்டுப் போறாங்க போல இருக்கே.. த்த்தோஓஒ இப்பவே போறேன் ஹாண்ட் கோர்ட்டுக்கு:)

  ReplyDelete
  Replies
  1. ஹலோ கொஞ்சம் உங்க பேங்க் அக்கவுண்டையும் செக்கபண்ணி பாருங்க ஏதற்கும் அதையும் இந்த மதுர காலி பண்ணியிருக்க போறான்

   Delete
 3. படம் எனக்கு மொபைலில் தெரியவில்லையே... நானும் எப்படிக் கட் பண்ணுவது என கட் பண்ணிப் ப்போஸ்ட் எழுதுறேனே ஆஅவ்வ்வ்வ்வ் இது என்னமோ நடக்குது... விடுங்கோ விடுங்கோ என்னை விடுங்கோ.....

  எங்களுக்கு ஸ்ரெப் பை ஸ்ரெப் போட்டோஸ் வேணும்ம்ம்ம்ம்ம் அப்போதான் நம்புவோம்ம்ம்ம்.) ஒக்கே ரைமாச்சூஉஅஞ்சூஉ கீதா கொண்டினியூ யாஅ:)

  ReplyDelete
  Replies
  1. நான் வாக் போவதை எல்லாம் ஸ்டெப் பை ஸ்டெப்பாக எடுத்து போட முடியாது

   Delete
 4. ஹாஹா ஹா அது வீடியோவா கொம்பியூட்டர் வந்து பார்த்தேன்ன்... புலடங்காய் பாவம்:) மென்மையாக வெட்ட வேண்டியதை இந்த வெட்டு வெட்டுறீங்களே.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). நாங்கள் இதில் மைசூர் பருப்பு.. ரெட் ஸ்பிலிட் டால் தான் சேர்ப்போம்...

  ReplyDelete
  Replies
  1. நீங்க தமிழின துரோகி அதனாலதான் நீங்க மைசூர் பருப்பை போடுறீங்க

   Delete
  2. மதுரக்காரங்க எல்லாம் இப்படிதான் மென்மையாக வெட்டுவாங்க்

   Delete
 5. அவ்வ்வ்வ் :) அதிரா நிஷா கீதா ஓடிவாங்க அவர்கள் ட்ரூத் புடலங்கா புடலங்கா வெட்றார் :)
  ஹை ரெசிப்பி நல்லாருக்கும் போலிருக்கே ..நான் இதுவரை வேக வச்சதில்ல அப்படியே போடுவேன் ..இதே மாதிரி நான் புடலங்கா பீர்கங்கா ரெண்டும் சேர்த்தும் செஞ்சிருக்கேன் ..

  இங்க வீட்ல நீங்கதான் கிச்சன் அசிஸ்டன்ட் என்பது கண்டுபுடிச்சிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சல் ஓடி வந்துட்டன்!!!!புடலங்கா புடலங்கா ஹஹஹஹஹ்ஹ

   யப்பா என்னமா கட் பண்ணுறாரு!!! டக் டக்குனு...பொன்னான கைகள் புண்ணாகலாமா நு மாமிய பார்த்துப் பாடிக்கிட்டே கட்டிங்க்... ஏன்னா மாமியின் கைகள் பூரிக்கட்டைய தூக்கிக் தூக்கி சிவந்த கைகள்....ஏஞ்சல்...ஹஹஹ்

   கீதா

   Delete
  2. அசிட்டெண்ட்தான் எல்லாம் செய்யனும் தலைமை செஃப் சேரில் காலாட்டிகிட்டு உட்கார்ந்திருப்பாங்க

   Delete
  3. மாமிமீதுள்ள கோபத்தை அவர்கள் மீது காட்ட முடியுமா அதனாலதான் புடலங்காய் மீது அந்த வேகம்

   Delete
 6. படித்து ருசித்தோம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு அது பிடிக்கும் என்றால் நேரிலே சாப்பிட வாய்ப்புகள் மிக அதிகம் உண்டு... சிக்கிரம் மீட் பண்ணுவோம்

   Delete
 7. மதுரைத் தமிழன் சேம் ரெசிப்பி நானும் செய்வதுண்டு....சில சமயம் பச்சை மிளகாய் சில சமயம் சிவப்பு மிளகாய்...தேங்காய் எண்ணைதான்...இதை ஏஞ்சல் சொல்லியிருப்பது போல் பீர்க்கங்காய், சுரைக்காயிலும் செய்வேன்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் தென் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் நமது சமையல் பழக்கமும் ஒன்றாகத்தான் இருக்கும்

   Delete
 8. சரி சரி மதுரைத் தமிழன் "என்ன சமையலோ....எதிர்த்துக் கேட்க யாருமில்ல என்ன சமையலோ"!!!!!!

  போனா போகுது!!! உங்க புடலங்காய் கூட்டு பா......ர்....சலேய்!!! ரெண்டு லண்டனுக்கு, ஒன்னு ஸ்விஸுக்கு, ஒன்னு சென்னைக்கு....எல்லாருக்கும்தான்..!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சரி சரி உடனே அனுப்பி வைக்கிறேன் இலவசமாக ஆனால் ஷிப்பிங்க் சார்ஜ் மட்டும் நீங்கள்தான் கட்டனும் அது ஒன்றும் அதிகமில்லை 4 ஆர்டர் என்பதால் 400 டாலர்தான் ஆகிறது அதை அனுப்பி வைத்த உடன் உடனே அனுப்பி வைக்கிறேன்

   Delete
 9. மச்சான் எல்லோரும் சமையல் பதிவைப் போட்டு என்னை காண்டாக்குறீங்க ...
  இருங்க வரேன்
  தம

  ReplyDelete
  Replies
  1. ஒரு சின்ன டெஸ்ட் பண்ணுவதற்காக அதாவது எத்தனை ஹிட் இந்த பதிவிற்கு கிடைக்கிறது என்பதை அறிய போட்டேன் ஹீஹீ அவ்வளவுதான்

   Delete
  2. நேற்று வலைத்தளத்திற்கு கிடைத்த மொத்த ஹிட் 3000 ஆனால் இந்த பதிவிற்கு கிடைத்த ஹிட் 474 மட்டுமே

   Delete
 10. ஹாஹா. இங்கேயும் சமையல் பதிவா? நடத்துங்க! :)

  நம்ம மது கொஞ்சம் பயப்படறா மாதிரி இருக்கு......

  ReplyDelete
  Replies
  1. மது பயப்பட காரணம் எங்கே இதை படித்துவிட்டு நீங்களும் வீட்டில் எனக்கு செஞ்சு போடக்கூடாதா என்று தங்கை கேட்டுவிடுவார்கள் என்பதால்தான்...

   Delete
 11. புதுசாத்தான் இருக்கு...ம்ம் ..

  சமைத்து பார்க்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. இந்த கூட்டு பொதுவாக தமிழ் பிராமிணர்கள் வீட்டில் செய்யக் கூடியதுதான்

   Delete
 12. சமையல் பதிவு நல்லாத்தான் இருக்கு. சில பகுதிகள் விட்டுப்போயிட்ட மாதிரி இருக்கு. இதுவா?

  "புடலங்காயை நறுக்கும்போது மெதுவாகச் செய்தீர்களானால் நேரம் போய்விடும். அம்மணி நேற்று பூரிக்கட்டையால் செய்த அர்ச்சனைகளை ஞாபகத்தில் கொண்டுவந்தால் வேகவேகமாக நறுக்கலாம். பாருங்கள் வீடியோவை. மனைவியை நினைத்துக்கொண்டேன்... சர் சர்னு எவ்வளவு வேகமா கட் பண்ணறேன்'

  ReplyDelete
  Replies
  1. இதை நான் சொல்லாமல் சென்றதற்கு காரணம் இதை பார்த்து மற்றவீட்டு பெண்களும் காய்கறியை நறுக்க சோம்பேறி பட்டு தன் கணவர்களை அர்ச்சனை செய்துவிடக் கூடாது என்பதால்தான் ஆனால் நீங்கள் அதை இங்கே சொல்லிவிட்டீர்கள் இனி தமிழகத்தில் எத்தனை வீட்டில் அர்ச்சனை நடக்கப் போகிறதோ?

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog