உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, March 15, 2017

கமல் நடிக்கும் திராவிட நாடகம்

கமல் நடிக்கும் திராவிட நாடகம்

அமித்ஷா தாயாரிப்பில், மோடி டைரக்ட் செய்து, கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் மிகப் பெரிய ப்ராஜெக்ட் நாடகம்தான் திராவிடம்

கமலஹாசனுக்கு நடிப்பதற்கு சொல்லிதரவா வேண்டும். அவர்தான் உலகநாயகன் ஆச்சே.. அதனாலதான், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மாநில கட்சிகளை உடைத்து தேசிய கட்சிகள் உள்ளே நுழைய முற்படுகின்றன. இதன் விளைவே மோடியின் டைரக்ஷனில் திராவிடம் என்ற நாடகம் கமல்ஹாசனை கொண்டு  நடத்தி வைக்கபடுகிறது.


பாஜக தமிழக்த்தை ஆளவேண்டுமென்றால் இந்துத்துவாவை வைத்து வர முடியாது அதனால் இப்போது கலைஞர் மற்றும் ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் திராவிட வேஷத்தை போட்டு கொண்டு வரபார்க்கிறது என்பது மட்டும் உண்மை.


இப்ப டிவியில் வரும் நிகழ்ச்சிகளை உற்று பார்த்தால் தமிழக பாஜக தலைவர்கள் நாங்களும் தமிழ்நாட்டில்தான் பிறந்தவர்கள் அதனால் நாங்களும் திராவிடர்கள்தான் என்பது மாதிரியாக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்

திராவிடம் பேசி கட்சிகள் ஆட்சி செய்தன அதை திராவிடத்தை பேசி ஆட்சி செய்ய முயல்கிறது பாஜக


இந்த திராவிட நாடகத்தில் கமல் ஒரு டிவியில் தோன்றி சிவப்பு சட்டை அணிந்து கொண்டு திராவிடம் என்று சொல்லிக் கொண்டு இந்துத்துவாவிற்கு எதிராக சில கருத்துகளை சொல்லுவார்.

அதை கேட்ட எதிர் தரப்பு என்று சொல்லப்படும் ஒரு குருப் கமலை இந்துத்துவா பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது யோக்கியம் இருக்கிறது என்று பல இடங்களில் அவருக்கு எதிராக பேசுவது போல பேசி அவருக்கும் எங்களூக்கு எந்தவித உறவும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கும் வேளையில் இன்னொரு குருப் தமிழ அரசியலில் பெரிய இடைவெளி இருக்கிறது அந்த இடைவெளியை இவரை கொண்டு அடைக்க வேண்டும் என்று கிளம்பும் இப்படி செய்கையில் திராவிடம் என்று கத்தி கொண்டு இருக்கும் தமிழகத்தில் இருக்கும் முட்டாள்கள் இவர் பக்கம் வருவார்கள் இப்படி வருவதால் இது வரை திராவிடம் பேசி வந்த குருப்புக்கள் சின்னபின்னாமாகும் அப்புறம் என்ன திராவிடத்தை பேசிக் கொண்டே பாஜக ஆளும் இப்படிதான் கதை ஒட்டம் போகிறது

மீதியை நீங்கள் நேரடியாகவே பார்க்கப் போகிறீர்கள்


ஒன்று மட்டும் நிச்சயம் யாரு ஆட்சிக்கு வந்தாலும் தமிழன் நிலை மாறப்போவதில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

என் பதிவுகளை தொடர்ந்து படிக்க
 Follow அவர்கள்...உண்மைகள் on Google Plus
Follow அவர்கள்...உண்மைகள்  on Twitter 

If you love அவர்கள்...உண்மைகள்  like it on Facebook

12 comments :

 1. தேசியக்கட்சிகளுக்கு தமிழகத்தில் இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. பிஜேபிக்கு வாய்ப்புகள் இருக்கின்றன என நான் நினைக்கிறேன் ஆனால் அவர்கள் அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த தெரியவில்லை என்றே நான் கருதுகிறேன் தமிழகம் மற்ற மாநிலங்கள் போல அல்ல அதனால் மற்ற மாநிலங்களி வளர பயன்படுத்தும் உத்தி தமிழகத்திற்கு பயன்படாது நிறைய வழிகள் எனக்கே தோன்றுகிறது அதெல்லா பாஜகவினருக்கு ஏன் தோன்றவில்லை என்பது எனக்கு மிகவும் ஆச்சிரியம் அளிக்கிறது

   Delete
 2. முடிவில் சொன்னதே உண்மை தமிழரே

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கில்லர்ஜி

   Delete
 3. பார்க்கலாம்

  ReplyDelete
 4. தேசியக் கட்சிகள் இப்போது தமிழகத்தில் வர இயலுமா தெரியவில்லை. சாத்தியதை இல்லை என்றே தோன்றுகிறது... இறுதி வரி ரெண்டுவிதமா பொருந்துமோ....யார் வந்தாலும் தமிழன் நிலை மாறப்போவதில்லை ஆம் தமிழ் நாட்டு மக்களின் நிலை மாறப் போவதில்லை அது போல யார் வந்தாலும் (ம) தமிழனும் கூறு போடாமல் விடமாட்டார்!! சரிதானே தமிழன்!!??

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹஹாஹ் மதுரைத்தமிழனை நன்கு புரிந்த ஆள் நீங்கள்தான்

   Delete
 5. யார் வந்தாலும் தமிழனின் நிலை மாறப் போவதில்லை! உண்மை தான். எனக்கும் அப்படித்தான் தோன்றியது!

  ReplyDelete
  Replies

  1. உண்மைதான் அதனால் நாம் நன்கு படித்து உழைத்து நம்மை நாமே உயர்த்தி கொள்ள வேண்டும்

   Delete
 6. மதுரை தமிழன் இப்போ மதுரை திராவிடனாக்கும்!

  ReplyDelete
  Replies
  1. நோ நோ அமெரிக்க திராவிடன் என் கூட வேலை பார்க்கும் டில்லிகாரனுக்கும் நன்கு தெரியும் ப்ல தடவை அவனுடன் விவாதல் செய்யும் போது நாங்கள் திராவிடரகள் உங்களை போல அல்ல என்று ப்ல முறை சொல்லி விவாதித்து இருக்கிறேன் அவன் என்னை ஏலியன் என்றும் நான் அவனை ஏலியன் என்றும் கூறிக் கொள்வோம்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog