உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, March 20, 2017

கங்கை அமரன் இப்படி பேசுவது சரியா?


கங்கை அமரன்  இப்படி பேசுவது சரியா?இளையராஜா தான் இசை அமைத்த பாடல்களுக்கு காப்பிரைட் பெற்று இருக்கிறார் அதனால்தான் SPBக்கு வக்கில் நோட்டிஸை அனுப்பி இருக்கிறார்.இதனால் நாடு முழுவதும் பலவித விவாவதங்கள் நடை பெற்று கொண்டிருக்கின்றன. உண்மையில் இளையராஜா அவர் பாடலுக்கு உரிமைகள் பெற்று இருந்தால் அதை மீறுவது யாராக இருந்தாலும் தவறு. இப்போது அவர் சகோதரன் கங்கை அமரன் நான் இதற்கு எல்லாம் கட்டுப்படமாட்டேன் நான் பாடத்தான் செய்வேன். முடிந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும் என்று பேட்டியில் கூறி இருக்கிறார். இவர் இளையராஜாவின் சகோதரராக இருந்தால் ஏதோ உளறுகிறார் என்று போய்விடலாம். ஆனால் இப்போது அவர் பாஜக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர். அதாவது மக்களுக்காகச் சேவை செய்ய வருபவர்.....காப்பிரைட் சட்டத்தை நான் மதிக்க மாட்டேன் என்று சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம். மக்களுக்குச் சேவை செய்யவருபவராக இருந்தால் இவர் என்ன சொல்லி இருக்க வேண்டும். பிரச்சனை ஆராயுந்து நியாயம் யார் பக்கத்தில் இருக்கிறதோ அவர்களுக்குச் சாதகமாக நான் போராடுவேன் என்று சொல்லி அல்லவா இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொல்லாமல் நான் சட்டத்தை மீறுவேன் என்று சொல்லுபவரா சட்டமன்ற உறுப்பினராக ஆக ஆசைப்படுவது. இவரைப் போல உள்ள வேட்பாளர்கள்தான் பாஜகவிற்கு கிடைத்திருக்கிறது சட்டத்தை மதித்து நடப்பேன் என்று சொல்லுபவர்கள் யாரும் அவர்களுக்கு கிடைக்கவில்லையா? மக்களே நல்லா யோசிங்களேன்அன்புடன்
மதுரைத்தமிழன்
#gangai amaran  #ilayaraja

6 comments :

 1. அவர் ஒரு டம்மி பீஸ் விட்டுத் தள்ளுங்கள்

  ReplyDelete
 2. போதையில் உளறி விட்டது பேதை உள்ளம்

  ReplyDelete
 3. அண்ணனின் மேல் கங்கை அமரனுக்கு நீண்ட நாட்களாகவே மனவருத்தம் உண்டு. அவரது இசையில் தனக்கு நிறைய பாடல்கள் எழுத வாய்ப்பளிக்கவில்லையே என்று. அந்தக் கோபம் தான் இப்படியெல்லாம் வெளிப்படுகிறது. உண்மையில் கங்கை அமரனுக்கு முழு வாய்ப்பு கொடுத்திருந்தால் வைரமுத்து எப்போதோ காணமல் போயிருப்பார். எல்லாம் காலம் செய்த கோலம்!

  ReplyDelete
 4. அறிவிக்காமல் பாடியிருந்தாலாவது ஒகே
  இப்போது சவால் அல்லவா விட்டுருக்கிறார்

  ReplyDelete
 5. அட அவர் தேர்தல்ல நிக்கறாரா.... அரசியல்ல இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ.....

  ReplyDelete
 6. ஆஹா! "கங்கை" அமரன் அதான் பாஜக பக்கம் பாயுது போல!!! அவரும் தேர்தலில் என்பது எல்லாம் ரொம்ப தமாஷாக இருக்கிறது...ஏற்கனவே அவருக்கும் ராஜாவுக்கும் அவ்வளவாக ஆகாது. கங்கைக்கு மனவருத்தம் உண்டுதான்...வாய்ப்ப்க் கிடைக்கும் போதெல்லாம் அவர் இப்படிச் சொல்லுவது சகஜமே...

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog