உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, March 18, 2017

அமெரிக்க பெண்களுக்கு இப்படி அறிவுரை சொல்லாம் ஆனால் இந்திய பெண்களுக்கு ?

avargal unmaigal
அமெரிக்க பெண்களுக்கு இப்படி அறிவுரை சொல்லாம் ஆனால் இந்திய பெண்களுக்கு ?

நேற்று  நான் வேலை பார்க்கும் இடத்தில் மிகவும் பிஸியாக இல்லாததால் எங்கள் டிபார்மெண்டை சார்ந்த அனைவரும் அரட்டை அடித்து கொண்டிருந்தோம். பல விஷயங்களை பேசி கிண்டல் கேலி என சென்று கொண்டிருந்த போது பேச்சு அவரவரகள் வீட்டை பற்றி திரும்பியது, அப்போது ஒவ்வொருவரின் வீடு எப்போது கட்டப்பட்டது அதில் இப்ப என்ன என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று பேச்சு திரும்பியது.

அப்போது என் கூட வேலை பார்க்கும் அமெரிக்க பெண்கள் தங்கள் வீட்டில் உள்ள அனைத்து அப்பளையன்ஸையும் ஒவ்வொன்றாக மாற்ற வேண்டும் மேலும் வீட்டின் தளங்களையும் மாற்ற வேண்டும் இது சம்பந்தமாக தத்தம் கணவரிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள் அதுமட்டுமில்லாமல் அவர் கணவரிடம் எடுத்து கூறி அவர்களுக்கு அதை புரிய வைத்து ஒவ்வொன்றாக மாற்ற அனுமதி வாங்குவதற்குள் உயிரே போய்விடுவதாக சொன்னார்கள்

அப்போது நான் குறிக்கிட்டு, இதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என்னிடம் சொல்ல்லி இருந்தால் ஒரு எளிமையான வழியை உங்களுக்கு சொல்லி இருப்பேனே.. அந்த வழியை பின்பற்றினால் எல்லாம் மிக எளிதில் மாற்றிவிடலாம் என்றேன்


அந்த பெண்களும் இந்தியர்கள் மிக ஸ்மார்ட்டான ஆட்கள்தான் அவர்களுக்கு பல நல்ல ஐடியாக்கள் தோன்றும் அதனால் சொல்லு சொல்லு என்றார்கள்


உடனே நீங்கள் எல்லாவற்றையும் மாற்ற ஏன் இவ்வளவு கஷ்டப்படுக்கிறீர்கள். அதற்கு பதிலாக உங்கள் வீட்டுக்காரரை மாற்றிவிட்டால் காரில் இருந்து வீடு வரை எல்லாம் உங்களுக்கு புதிதாக இருக்குமே என்று சொன்னதும் எல்லாம் சிரித்துவிட்டார்கள்


இப்ப சொல்லுங்க மக்கா இப்படிபட்ட  அறிவுரையை அமெரிக்க பெண்களிடம் தைரியமாக  சொல்லாம் ஆனால் இந்திய பெண்களிடம் சொன்னால் சிரிப்பதற்கு பதிலாக காரி விஜயகாந்த மாதிரி துப்பி இருப்பார்கள்தானே

இந்த பதிவில் உள்ள முதல் படத்திற்கு தமிழ் விளக்கம் இதுதான்.

பெண்களே உங்கள் கணவரை நீங்கள் பூரிக்கட்டையால் அடித்தாலும் மாறவில்லை என்றால் அடிக்கும் நோக்கத்தை விட்டுவிடாமல் பூரிக்கட்டைக்கு பதிலகாக உலக்கையை பயன்படுத்துங்கள் என்பதுதான்...


அய்யோ அம்மா என் மனைவி உலக்கையை எடுத்துகிட்டு வாராங்க ....மீ எஸ்கேப் இல்லேன்னா இப்படிபட்ட பதிவுகளை உங்களால் வருங்காலத்தில் படிக்க முடியாது


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments :

 1. இப்ப யார் வீட்டுல ஒலக்கை இருக்குது? பூரிக்கட்டை கூட சில வீட்டுல இல்லை. எல்லாம் ரெடிமேட் சப்பாத்தி, பூரி வாங்குற காலமாச்சே! வேற ஆலோசனை இருந்தா சொல்லுங்க!
  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. ஹலோ உலக்கைன்னா உண்மையான உலக்கைன்னு நினைச்சுட்டீங்களா? அப்படி நடந்தா நான் சொர்க்கத்திலேயும் எங்க வீட்டம்மா ஜெயிலிலும் குழந்தை தெருவிலும்தான் இருக்கும். இங்கு நான் உலக்கை என்று சொல்லுவது அவர்களிடம் இருந்து வரும் சொற்களை அது இடிமாதிரியல்லவா இருக்கும் அதைத்தான் நான் உலக்கை என்று சொன்னேன்

   Delete
 2. அட! ஏஞ்சல் இன்னும் சப்பாதி ப்ரெஸ்ஸர் அனுப்பலையா!! இருங்க ஏஞ்சல்கிட்ட கேக்கறேன்...! அதெப்படி இன்னும் அனுப்பாம இருக்காங்க..!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நான் போஸ்ட்மேனை சரிகட்டி வைத்திருக்கிறேன் அதனால வீட்டிற்கு வரும் கிப்ட்களை அவர் என்னிடம் மட்டுமே கொடுப்பார். ஹீஹீ

   Delete
 3. அப்போ இந்த விஷயம் இத்தனை நாள் உங்க வீட்டம்மா காதுக்கு போகலை போலிருக்கே ..அதான் வேலை செய்ற இடத்தில நிறைய பொண்ணுங்க உங்ககூட வேலை செய்றாங்களே அதை சொன்னேன் ..

  அந்த அமெரிக்க பொண்ணுங்க கணவர்கள் பாவம் :) இப்படியா அட்வைஸ் கொடுக்கறது :)
  ஹ்ம் அப்புறம் இந்திய பொண்ணுங்க வீட்டை திருத்தி அமைக்க இப்படியெல்லாம் கஷ்டப்பட மாட்டாங்க ஏன்னா கல்யாணமானதும்
  அவங்க கணவர்கள் ஆமாஞ்சாமி :) மட்டுமே போடுவதால் பிரச்சினைகள் வராதுன்னு சொல்றாங்க

  ReplyDelete
  Replies
  1. எங்க்கவீட்டாம்மாவிற்கு என் கூட பெண்கள் வேலை பார்ப்பதுமட்டுமல்ல நான் வேலை பார்க்கும் இடத்திற்கு நிறைய பெண்கள் வருவார்கள் என்று தெரியும் அப்படியாவது வேறு யார்கூடவாது இந்த தமிழன் ஒடிப்போனால் நல்லது என்றுதான் நினைக்கிறார்கள் அப்படி எல்லாம் நான் செய்யமாட்டேன் அப்படி நான் போனால் அவர் மிகவும் சந்தோஷமாக இருப்பார்களே ஐப்படி இருக்க நான் விட்டுருவேனா என்ன?


   நான் சொன்ன அட்வைஸை கேட்ட பல அமெரிக்க கணவர்கள் இப்படி சொல்லியாவது எங்களுக்கு விடுதலை தருகிறீர்களே என்ற சந்தோசத்தில் எனக்கு விழா எடுக்க ப்ளான் பண்ணிக் கொண்டிருப்பதாக தகவல் வந்து இருக்கிறது


   குழந்தைகளின் எதிர்காலம் கருதி பல இந்திய கணவர்கள் ஆமாம் சாமிகளாக ஆகிவிடுகிறார்கள்

   Delete
 4. மதுரைத் தமிழன் இது உமக்கே நல்லாருக்கா...கோபிகா ஸத்ரீகளுடன் கண்னன் இருப்பது போல....ஹஹஹஹ்ஹஹ் முதல் படத்திற்கு அர்த்தம் ..ஹஹஹ் சரிதான் அடுத்த பதிவு அப்ப அதுதானா...

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பதிவை விவரமாக சொல்லி மாட்டிக் கொள்ள மாட்ட்டேன் அதனால்தான் இந்த படம் இங்கே .அதுனால படத்தை பார்த்து மக்களாகவே நான் சொல்ல வருவதை விளங்கி கொள்ள வேண்டும்

   Delete
 5. நல்ல அறிவுரை தான் சொல்லி இருக்கிறீர்கள்..... :)

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog