உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 21, 2017

இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் - 10 முக்கிய அம்சங்கள் தினமலர் சொல்வதும் மதுரைத்தமிழன் சொல்வதும் )

இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் - 10 முக்கிய அம்சங்கள் தினமலர் சொல்வதும் மதுரைத்தமிழன் சொல்வதும் )

"இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் - 10 முக்கிய அம்சங்கள்"   இந்த தலைப்பில் தினமலர் இன்று செய்தி வெளியிட்டு இருக்கிற்து இந்த 10 அம்சங்களை படித்ததும் என்னுள் எழுந்த கருத்துக்களை இங்கே சிவப்பு கலரில் கொடுத்துள்ளேன். இது என் அறிவிற்கு எட்டியதை இங்கே சொல்லி இருக்கிறேன், இப்படி எனக்கு தோன்றியது போல உங்களுக்கும் கருத்துக்கள் தோன்றினால் பின்னுட்டத்தில் நீங்கள் சொல்லி செல்லாம், அதைப்படித்தபின் நான் சொல்லியது தவறு என்றால் நான் திருத்தி கொள்ள முடியும்

=====================================
சென்னை:தமிழ் சினிமாவில் இன்றைய ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருப்பது இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான காப்பி ரைட்ஸ் பிரச்னையை பற்றியது தான். இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இளையராஜா - எஸ்.பி.பி. இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பல்வேறு தரப்பில் பலவிதமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இளையராஜா ஏதோ பணத்தாசைப் பிடித்தவர் போலவும் எஸ்.பி.பி. அவர்கள் ஆசைகளை துறந்தவர் போலவும் இணையதளத்தில் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதுப்பற்றிய 10 முக்கிய அம்சங்கள் என்னவென்று இங்கு பார்ப்போம்...


01. இளையராஜா - எஸ்பிபி., இடையேயான மோதல் ஏதோ ராயல்டி பிரச்னை என்று பார்க்கப்படுகிறது. உண்மையை சொல்லப்போனால் இருவருக்கும் கடந்த 6 மாத காலமாகவே ஒரு வித பனிப்போர் நடந்து வருகிறது என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.

(கடந்த ஆறுமாத காலம் பனிப்போர் நடந்து இருந்த்தால் புகைந்த விஷயம் ஊர் உலகத்திற்கே தெரிந்திருக்குமே )

02. கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த இளையராஜாவின் இசை கச்சேரிக்கு 7 லட்சம் வாங்கி கொண்டிருந்த எஸ்பிபி., 20 லட்சம் தந்தால் தான் வருவேன் என அதிரடியாக தன் சம்பளத்தை உயர்த்தி கறாராக நடந்து கொண்டு அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்து அமெரிக்கா போகாமல் இருந்துவிட்டாராம், அதன் வெளிப்பாடு தான் இந்த பிரச்னை என்கிறார்கள்.

( எஸ்பிபி அப்படி நடந்து இருந்தால் அதை பார்த்து அமைதியாக போகிற ஆள் இல்லை இளையராஜா அப்போதே பொங்கி எழுந்திருப்பார் )


03. இதுஒருபுறம் இருக்க இளையராஜா- எஸ்.பி.பிக்கு இடையேயான பிரச்சனைஅவர்களுக்கிடையேயானது அல்ல, அவர்களின் வாரிசுகளுக்கிடையேயான பிரச்சனை என்று கூறப்படுகிறது. கார்த்திக் ராஜாவை போன்றே, எஸ்.பி.பி.சரணும் தனது தந்தையை வைத்து உலகம் முழுக்க கச்சேரி நடத்த முடிவு செய்துள்ளார். அந்த போட்டியின் வெளிப்பாடு தான் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

( இந்த பிரச்சனைக்கு முழுகாரணமே பழைய நண்பர்களான இளையராஜா  எஸ்பிபி அல்ல அவர்களின் பிள்ளைகள் தான் காரணம். இதுதான் உண்மையா காரணம் )

04. காப்புரிமை சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டது. சட்டப்படி, எந்த ஒரு பாடலையும் கேசட், சிடி, அல்லது நவீன கால ஐடியூன்ஸ் போன்றவை மூலமே விலைக்கு வாங்க வேண்டும். ரேடியோவில், டிவி சேனலில் கேட்கும் போது அந்தந்த நிறுவனங்கள் அதை விலை கொடுத்துத் தான் வாங்குகின்றன. அப்படிபார்க்கும் போது சட்டப்படி இளையராஜா செய்தது சரி தான்.


(இளையராஜா செய்வது சரிதான்)

05. ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீதான உரிமையை நிலை நாட்டுவதையே தவறு என்றும் பேராசை என்றும் எப்படி சொல்ல முடியும்
.
( தனது படைப்பின் மீது உரிமை கொள்வது தப்பு அல்ல)

06. எஸ்பிபி.யின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணம் அல்ல. நூறு சதவீதம் பணம் வசூலிக்கும்இசை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சியை ரசிக்க வரும் மக்களிடமிருந்து வசூலிக்கும் பல லட்சம், மில்லியன் டாலர்களிலிருந்து, பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு என எல்லாத் தரப்புக்கும் பணம் தருகிறார்கள். அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளியான இளையராஜா, தனக்கான உரிமையை நிலை நாட்ட முயன்றால் மட்டும் 'பேராசையா'? என்ற கேள்வி எழுகிறது.

( இந்திய காப்பிரைட் சட்டத்தின் படி இளையராஜாவிற்கு முழு உரிமை இல்லாத போது அதற்கு முழு உரிமை கொண்டாடுவது பேராசைதான்  பாடலை தயாரிப்பவருக்கு 50% பாடல் ஆசிரியருக்கு 25% இசை அமைப்பாளருக்கு 25% மட்டுமே உரிமை உண்டு. வெளிநாடுகளில் இளையராஜா இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் அப்போது அவர் சம்பாதித்த பணத்தில் பாடல் தயாரிப்பாளருக்கும் பாடல் ஆசிரியருக்கும் இதுவரை அவர் ராயல்டி கொடுத்திருக்கிறார அல்லது கொடுத்தற்கான ஆதாரத்தையாவது வெளியிடுவாரா? அப்படி செய்யவில்லை என்றால் அவருக்கும்  எஸ்பிபி போல பேராசைதானே அவருக்கு  இருக்கிறது  )

07. இந்த நோட்டீஸ், வணிக ரீதியில், அவரது பாடல்களை பயன்படுத்துவோருக்கே அனுப்பப்பட்டுள்ளது. சாதாரண மேடைகச்சேரி நடத்துவோர், ராயல்டி செலுத்த வேண்டியதில்லை என்று இளையராஜா தரப்பு கூறிவிட்டது கவனிக்கத்தக்கது.

(பாடலுக்கு முழு உரிமை இல்லாதாவர் இப்படி சொல்ல அவருக்கு அதிகாரம் தந்தது யார் )

08. தனது பாடல்களை பாட பணம் தர வேண்டும் என்று இளையராஜா கேட்பது சாதாரண மக்களை பாதிக்காதா என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. காப்புரிமையை பற்றியெல்லாம் பேசினால் இளையராஜாவின் இசையை கேட்பது குறைந்துவிடும் என்பது அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்.


( இளையராஜாவின் ரசிகர்கள் ,நல்ல இசை என்றால் பணம் கொடுத்தாவது ரசித்து மகிழ்வதுதானே நல்லது.)

09. தனக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை தான் மட்டும் அனுபவிக்காமல், அதில் ஒரு பகுதியை சம்பந்தப்பட்ட பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கு தருவதாக இளையராஜா கூறியிருக்கிறார்.

( இவர் என்ன தாதாவா மற்றவர்களிடம் பணம் வசூலித்து இவர்களிடம் தருவதற்கு....பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கும் உரிமை இருக்கிறது அதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ராயல்டியை அவர்கள் பெற வேண்டியவர்களிடம் அவர்கலே நேரடியாக பெற்றுக் கொள்வார்களே )

10. ராயல்டி கலாச்சாரத்தை ஏதோ இளையராஜா மட்டும் தான் கேட்கிறார் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளது. உண்மையை சொல்லப்போனால், ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் தங்களுக்கான ராயல்ட்டியை பெற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.


(ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் மிக புத்திசாலிகள் அதனால்தான் முதலிலேயே பாடல்களுக்கான முழு உரிமையை தங்கள் பெயரில் வாங்கி வைத்துள்ளனர்  ஆனால் இளையராசா அதை செய்ய தவறிவிட்டார் அதனாலே அவரது பாடல்களுக்கான உரிமை பிரச்சனை கோர்ட்டில் உள்ளது )


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: இளையராஜாவின் வக்கில் நோட்டிஸ் அனுப்பியதும் எஸ்பிபியும் தனது அடுத்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடலை பாடப் போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார். மேலும் இளையராஜாவிடம் அந்த பாட்டிற்கு உங்களிடம் முழு உரிமை இருக்கிறதா என்று குறுக்கு கேள்விகளை எழூப்பவில்லை..


இனிவரும் காலங்களிலாவது எஸ்பிபி ஒன்றை மிக நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் இந்திய காப்பிரைட் சட்டத்தின் படி பாடலை பாடியவருக்கு எந்த உரிமையும் இல்லை என்பது அறிந்து அதற்கேற்ப வருங்காலத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி ராயல்டி கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் அதற்கான தண்டனையை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சும்மா அடுத்தவன் உழைப்பில் பஜனை பாடிக் கொண்டு இருக்க கூடாது, நட்புதான் என்றாலும் வாயும் வயிறும் வேற வேறதான்

7 comments :

 1. நண்பரே 2011 லேயே... எஸ்.பி.பி.யின் ரேட் 12 லட்சம் இதை டோலராக ஸ்விஸ் அக்கவுண்டில் போடவேண்டும் பிறகு விசா, தங்கும் செலவு, ஃபிளைட் டிக்கட் செலவு

  தனி இந்த முழு விபரமும் எனக்கு தெரியும் காரணம் அமைப்பாளர்களுடன் இணைந்து இவர்களை அழைத்து வந்து ஹோட்டலில் தங்க வைத்தவன் நான்தான் இது நடந்தது அபுதாபியில்.

  ReplyDelete
  Replies
  1. அவ்வளவு தானா? 2௦௦7 என்று நினைக்கிறேன். மங்களூரில் அவருடைய இசைக்கச்சேரி நடந்தது. அப்போதே அவருக்கு மட்டும் நான்கு லட்சமும், அவரது குழுவிற்கு இரண்டு லட்சமும் வாங்கியதாக அமைப்பாளர்கள் கூறினார்கள். இதில் நான்கில் ஒரு பகுதிக்கு மட்டுமே ரசீது தரப்படும், மற்றது ரொக்கமாக தர வேண்டும் என்பது உடன்பாடாம்...(2) இதில் நாம் பெருமைப்படவேண்டுமே ஒழிய வருத்தப்படவேண்டாம். இதுவே மேற்கத்தியக் கலைஞர்கள் என்றால் மில்லியன் கணக்கில் கொட்டி அழுகிறோமே, நம்மவர் எப்போதோ ஒருமுறை தானே இது மாதிரி வாங்குகிறார்?

   Delete
 2. தஹவளுக்கு நன்றி

  ReplyDelete
 3. எல்லாம் பணம் தான் காரணம். சட்டப்படி சம்பாதிக்க முடியும் என்ற நிலைமை திரை உலகத்தில் இல்லை. இளையராஜா - எஸ் பி பி மோதலுக்குப் பிறகாவது வெளிச்சம் வரட்டும். அது சிறிய இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்குப் பாதுகாவலாக இருக்கும்.
  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
 4. your comments on point 6 is wrong. Coz Raja Already got the 100% copy rights of his songs from the producers. Lyricists rights also he got it from producer and singers having rights on songs from 2012 only. If lyricists want their share, Raja sir already announced that he is ready to share with everybody including musicians.

  ReplyDelete
  Replies
  1. அனைத்து பாடல்களுக்கும் அவரிடம் ரைட்ஸ் கிடையாது என்பதுதான் உண்மை அது சம்பந்தமான பிரச்சனை கோர்ட்டில் உள்ளது இது அவர் வழக்கறிஞர் டிவியில் சொன்னா தகவல்

   Delete
 5. உங்கள் பதில்களைப் பற்றிச் சொல்லும் அளவிற்கு எனக்கு லா அறிவு கிடையாது.

  திரைப்பட உலகமே பணத்தைச் சுற்றித்தானே சுழல்கிறது! நம்மூரில் இன்னும் லா உறுதியாக வலுவாக்கப்படவில்லை அதைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லை என்றே தோன்றுகிறது. பார்த்தீர்கள் என்றால் இந்த சர்ச்சையிலுமே லா பற்றி பேசுபவர்கள் ஒவ்வொருவரின் பாயின்டும் வித்தியாசப்படுவதாகவே தோன்றுகிறது. எனவே இதைப் பற்றிய நல்ல விவரமான தற்போதைய லா என்ன சொல்லுகிறது என்பதை ஒரு லாயர் சரியாக விளக்கினால்...லே பெர்சனுக்குக் கூட விளங்கும்படியாக.(லா க்குள்ள போனா நிறைய சப் க்ளாஸ் இருக்கு ஒவ்வொன்னும் மண்டைய குழப்பும்...) சொன்னால் வருங்கால இளைய இயக்குனர், ப்ரொட்யூசர், மற்றும் இசைக்கலைஞர்களுக்கு உதவியாக இருக்கும் இல்லையா...

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog