உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, March 1, 2017

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமேஅமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமே

உலகில் உள்ள மற்ற எந்த நாட்டையும் விட மிக அதிக விகிதத்தில் இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்க தங்கி இருக்கின்றனர்

2014 ஆம் ஆண்டு கணக்கு படி  பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center )அறிக்கையின் படி, கிட்டத்தட்ட அரை மில்லியன் இந்திய மக்கள் இங்கு சட்டவிரோதமாக குடியிருக்கிறார்கள். அந்த சமயத்தில் அவர்களின் வருகை எண்ணிக்கை 350,000 இருந்த இருந்தாகவும்  தெரிவிக்கின்றது  2009 ஆம் ஆண்டு முதல் இந்தியர்களின் வளர்ச்சி கிட்டத்தட்ட 43% அதிகரித்தாகவும் குறிப்பிடப்படுகின்றன.


டிப்பார்ட்மென்ட் ஹோம்லேண்டு செக்கியூரிட்டி தகவலின் படி ஏசியா நாடுகளில் இருந்து வருபவர்கள் அநேக பேர் முதலில் சட்டபூர்வமாகதான் வருகிறார்கள் அத்ன் பின் அவர்கள் தங்களின் அனுமதிகாலம் முடிந்ததும் திருப்பி போகாமல் சட்டவிரோதமாக தங்கிவிடுகிறார்கள் மேலும் பலர் மெக்ஸிகோ மற்றும் கனடா பார்டர்கள் மூலம் சட்ட ஆவணங்கள் இல்லாமல் திருட்டுதனமாக நுழைகிறார்கள் கடந்த ஆண்டுகளில் மட்டும் 14,000 இந்தியர்கள் டூரிஸ்ட் மற்றும் பிஸினஸ் விசாக்களில் வந்து திரும்பி போகாமல் இங்கு தங்கி இருக்கிறார்களாம்


ஏசியா நாடுகளில் இருந்து வருபவர்களில் இந்தியர்கள்தான் மிக அதிக அளவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் சொல்லுகின்றன

ஆனாலும் டோனல்ட் ட்ரம்ப் இன்னும் மெக்ஸிகோ நாட்டை மட்டுமே  பார்த்து குத்து குத்துன்னு குத்திக் கொண்டே இருக்கிறார் ஆனால் 2009 ல் இருந்து 2014 வரை  உள்ள ஐந்தாண்டு காலகட்டத்தில் இப்படி சட்ட விரோதமாக வருபவர்களின் எண்ணிக்கை அரை மில்லியனுக்கும் கீழ் விழ்ச்சி அடைந்து  இருக்கிறது என்பதுதான் உண்மை

மெக்ஸிக்கோ இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடியேறி வாழ்பவர்களின் எண்ணிக்கை 2007 ல் 6.9 மில்லியன் ஆக இருந்தது ஆனால் 2014 ல் 5.8 மில்லியன் என சரிந்தது. மெக்விகோவின் கணக்குபடி  2007 ஆம் ஆண்டு 57% இருந்த இவர்களின் எண்ணிக்கை 2014 ல்  52%  ஆக குறைந்து இருக்கிறது என அறிக்கையில் வெளிவந்து இருக்கிறது

அதே நேரத்தில் சட்டபூர்வமாக வருபவர்களின் எண்ணிக்கையிலும் மெக்ஸிக்கோவிற்கு அடுத்த படியாக இந்திய இருக்கிறது.

இப்படி  சட்டவிரோதமாக இருப்பவர்களை திருப்ப அனுப்புவது என்பது நடந்து கொண்டிருந்தாலும் அனைவரையும் அனுப்புவது என்பது மிக எளிதான செயல் அல்ல இப்படி சட்டபூர்வமாக தங்கி இருப்பவர்க்ளை பிடித்தால் அவர்கள் மீது வழக்கு தொடுத்து தீர்ப்பு  வந்த பின் அசரசு செலவில் அவர்களது நாட்டிற்கு அனுப்புவதற்கு முதற் கொண்டு உள்ள செலவுகளை எப்படி கையாளப் போகிறது என்பது இன்னும் கேள்விக் குறியே,, அருகில் உள்ள மெக்ஸிகோவிற்கு அனுப்புவதற்கே அதிக செலவாக கூடிய நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இங்கு சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அனுப்பும் செலவும் மிக அதிகமே அதை அமெரிக்க அர்சு எப்படி கையாளப் பொகிறது என்று பார்த்தோமானால் அதனிடம் இருப்பது ஒரு வழிதான் அதுதான் இந்திய  மக்களுக்கு அதிக அளவு H1 விசா வழக்கம் போல வேண்டுமென்றால் இங்கு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்களை அழைத்து செல்ல மோடி அரசு நீதி ஒதுக்கியே ஆக வேண்டும் அப்படி இல்லையெனில் இந்திய அமெரிக்க அரசின் உறவுகள் மிகவும் பாதிக்க கூடிய சூழ்நிலை வரக் கூடும்  என எதிர்பார்க்கப்படுகிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. தகவலுக்கு நன்றி நான் sri lankan

  ReplyDelete
 2. அறிவியல் துறையில் மிகுந்த வளர்ச்சி கண்டிருக்கும் அமெரிக்காவால், அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து தங்கியிருப்பவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வியப்பளிக்கிறது. இம்மாதிரியான பாதுகாப்பின்மையைக் கொண்டிருக்கும் நாடு உலகில் வேறெங்கிலும் இருக்குமா என்று தெரியவில்லை.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
 3. அப்படி என்னங்க அமெரிக்காவில் இருக்கு? என்று கேட்போருக்கு தங்கள் பதில் என்ன?

  கோ

  ReplyDelete
 4. நிறைய தகவல்கள் அறிந்துகொண்டேன்.

  ReplyDelete
 5. அமெரிக்காவுக்கே உரிய
  வினோதப் பிரச்சனையை
  விவரித்த விதம் அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog