உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, August 12, 2015

'மது'ரைத்தமிழனின்' மது மொழிகள்'மது'ரைத்தமிழனின்'  மது  மொழிகள்

எச்சரிக்கை : மது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
இந்திய தலைவர்கள் நாட்டிற்கு கேடு விளைவிப்பார்கள்

சினிமாவில் வருகிறது போல வார்னிங்க் கொடுத்தாச்சு இனிமேல் என்ன வேண்டுமானலும் சொல்லலாம்

1.மது மனிதக் குலத்திற்கு மிகப் பெரிய எதிரி அதனை ஒழித்து கட்ட வேண்டும் என்று  தமிழக தலைவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் பைபிள் உங்கள் எதிரியை நேசியுங்கள் என்று சொல்லுகிறது. அதனால்தான் நான் பைபிள் சொல்லும் வழியில் நடக்கிறேன்.

2. வாழ்க்கையில் மோசமான நிகழ்வுகள் நடக்கும் போது அதை மறக்க குடிக்கிறார்கள். அது போல நல்ல நிகழ்வுகள் நடக்கும் போது அதை கொண்டாட குடிக்கிறார்கள்.நல்லதும் நடக்கவில்லை கெட்டதும் நடக்கவில்லை என்றால் நீங்கள் குடித்து பாருங்கள் இந்த ரெண்டில் ஒன்று நிச்சயம் நடக்கும்

3 இளம் பெண்கள் கிச்சனுக்கு  சென்று அம்மாவிற்கு உதவிய காலம் எல்லாம் இப்போ மலையேறி போயாச்சு இப்பவெல்லாம் அப்பாவிற்கு உதவியாக கூட அமர்ந்து குடிக்கிறார்கள்

4.மது மிக மெதுவாக மனித உயிர்களை பறிக்கிறது... சிக்கிரம் சாக நினைப்பவர்கள் குடிக்காமல் ரயிலில் விழுந்து சாகுங்கள்

5.எவராலும் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளை ஆல்கஹால் தீர்த்து வைத்துவிடும், எப்படியென்றால் பிரச்சனையை மறக்கடித்துவிடும் அல்லது மரணத்தை கொடுத்து மிக நல்ல தீர்வாக கொடுத்துவிடும்

6. குடிப்பவர்கள் கெட்டவர்களாலாம் குடிக்காதவர்கள் நல்லவர்களாம் அப்ப குடிக்காதவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் நல்ல காரியங்கள் நடந்து இருக்க வேண்டுமே நம் தலைவர்கள் பலர் நல்ல செயல்களை செய்து இருக்க வேண்டுமே


7. குடிப்பவனால் அவன் குடும்பம் அழியலாம் ஆனால் குடிக்காத பலர் செய்யும் அட்டுழியங்களால் நாடே அழிகிறேதே?


8. குடிக்காரன் குடித்துவிட்டு ரோட்டிலோ பாரிலோ அல்லது வீட்டிலோ விழுந்து கிடப்பான். ஆனால் குடியாதவனோ பஸ்ஸில் பெண்களின் இடுப்பில் தடவியோ கிள்ளியோ அல்லது மாமா என்று சொல்லி வரும் சிறுமிகளிடம் தவறான செய்கைகளை செய்வார்கள்


மது குடிகாரர்களை மட்டும் அல்ல நம்ம அரசியல் தலைவர்களையும் உளர வைக்கிறது


குடிகாரன் குடிப்பதை நிறுத்திவிடுவேன் என்பதும் தமிழக அரசியல்  தலைவர்கள் மதுவிலக்கை அமுல்படுத்துவேன் என்பதும் குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது மாதிரிதான்

மது உடலுக்கு எவ்வளவு என்பதை குடிகாரர்களுக்கு புரியவைப்பதைவிட விட நம்ம தமிழக அரசியல்வாதிகளுக்கு யாராவது புரியவைத்துவிட்டால் மதுவை நிச்சயம் தமிழகத்தில் இருந்து ஒழித்துவிடலாம்

அன்புடன்
'மது'ரைத்தமிழன்

17 comments :

 1. சரி...சரி...தலைப்பைப் பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது... எதுக்கு அப்புறம் இந்த இடுகை எழுத ஆரம்பித்தீர்கள் என்று.

  ReplyDelete
  Replies
  1. முரளி அவர்களின் மதுமொழியை படித்தது மனதில் எழுந்தது இங்கு பதிவாக வந்துவிட்டது

   Delete
 2. அனைத்தும் அருமை நண்பரே மிகவும் போதையோடு ரசித்தேன் தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. மது மட்டுமல்ல 'மது'ரைத்தமிழனும் போதையை ஊட்டுவான்

   Delete
 3. தலைப்பும் தந்த செய்தியும் பொருத்தமே!

  ReplyDelete
  Replies
  1. நான் கிறுக்கியதையும் பொருத்தம் பார்த்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி

   Delete
 4. உங்களின் குசும்பான மொழிகள் மதுவாக இனித்தன!

  ReplyDelete
  Replies
  1. மது இனிப்பதில்லை உங்களுக்கு அனுபவம் இல்லை போலிருக்கிறது ஹீஹீ மது கசக்கும் அதுபோலத்தான் நான் சொல்லும் கருத்துக்கள் பலருக்கு கசக்கலாம். ஆனால் அது உங்களுக்கு இனிப்பாக இருந்திருக்கிறது

   பாராட்டிற்கு நன்றி

   Delete
 5. வணக்கம்,
  முடிந்தால் புரிவைத்துப் பாருங்கள் பார்ப்போம்,
  அனைத்தும் அருமை,
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தூங்குபவனை எழுப்பிவிடலாம் ஆனால் தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது அது போல புரியாதவர்களுக்கு புரிய வைத்துவிடலாம் ஆனால் புரியாதவர்கள் போல நடிக்கும் தலைவர்களை புரிய வைப்பது கடினம்

   Delete
 6. "மது"ரைத்தமிழனின் "மது"மொழிகள் மதுமொழிகள்....

  ReplyDelete
  Replies
  1. எனது மது மொழிகள் ரசிக்க மட்டுமே

   Delete
 7. ஆஹா! எனது மதுமொழிகளை தொடரந்து மதுரைத் தமிழனின் மதுமொழிகள் . அட! தொடர் பதிவாகி விட்டதே .
  அனைத்தும் மதுரைத் தமிழனின் டிரேட் மார்க் மது மொழிகள் . தொடரவோர் தொடரலாம்

  ReplyDelete
  Replies

  1. இந்த பதிவு உங்களின் பதிவை படித்தனால் தோன்றிய பதிவே....அதனால் என்னை திட்டாதீர்கள்

   Delete
 8. மதுவின் மது மொழிகள்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog