உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, July 30, 2013

எனது தளத்தில் வந்த தவறான செய்திக்கு மனமுவந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.எனது தளத்தில் வந்த தவறான செய்திக்கு மனமுவந்து   மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.


07/28/2013  அன்று மரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில்  நடிகைகனகா:  என்ற பதிவு என்று தமிழக பத்திரிக்கை உலகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது,.

செய்தி பத்திரிக்கைகளில் அவர் நோயால் மரணப்படுக்கையில் இருக்கிறார் எனறு செய்தியும் அதை தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார்' என்று, "டிவி' சேனல்கள்  செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்திகளை அறிந்த கனகாதான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்துள்ளதாக இன்று செய்திகள் வெளி வந்துள்ளன
 கனகா  மிகவும் நல்ல நிலையில் உயிரோடுதான் இருக்கிறார்.....ஆனால், கேன்சரை விட மிகவும் நோய்பிடித்துள்ள  தமிழக    ஊடகங்களின் நம்பகத்தன்மைதான் இறந்துவிட்டன.

தமிழக ஊடகங்களில் வந்த செய்தியை உண்மை என்று நம்பி நானும் பதிவு எழுதி வெளியிட்டுள்ளேன். அது மிகவும் தவறு என்பதை நான் உணர்ந்ததால் நான் அதற்காக மிகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நாம் பதிவர்கள் தான் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் சிலநேரங்களில் பதிவிடுகிறோம். ஆனால் இந்த தமிழக பத்திரிக்கை உலகம் இந்த மாதிரி செய்திகளை உண்மை என்று ஆராயாமல் செய்திகளை வெளியிடுவது வெட்ககேடே.


இந்த செய்தி கனகா என்ற தனிப்பட்ட நபரை மட்டும் மிகவும் பாதித்து இருக்கும். ஆனால்  செய்திகளை உறுதி செய்யாமல் ரூமர் செய்திகளுக்கு இந்திய பத்திரிக்கை முக்கியதுவம் கொடுத்தால் அதனால் விளையும் கெடுதலை அளவிட முடியாது. உதாரணமாக கோவிலை மசூதியை அல்லது சர்ச்சை மாற்று மதத்தினர் இடித்துவிட்டனர் அல்லது மாற்று மதத்தினரை கண்மூடித்தனமாக அடித்து கொல்லுகின்றனர் என்ரு செய்தி இது போல வந்தால் நடக்கும் வீபரிதத்தை கொஞ்சம் நினைத்து பாருங்கள்

தமிழக காவல்துறை இப்படி  ஒரு தவறான தகவலை ஊடங்களுக்கு பரவ விட்டது யாரு என்று கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி இந்திய ஊடங்களில் வரும் செய்தியை எப்படி உண்மை என்று நம்புவது என்று எனக்கு தெரியவில்லை

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: நான் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வெளியிட்டது போல இந்த தமிழக ஊடகங்கள் ஏதும் இந்த நிமிஷம் வரை வெளியிடவில்லை என்பது மிகவும் வருந்தக்கது.
  
அன்புடன்
மதுரைத்தமிழன்
07/30/2103

12 comments :

 1. முக நூலில் பல பேர்... உங்களின் மன்னிப்புக்கு பாராட்டுக்கள்...

  டிஸ்கி :உங்கள் பாணி ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. எனது தவறை மன்னித்து நீங்கள் என்னை பாரட்டியது பதிவுலகமே என்னை மன்னித்தது போல இருந்தது நன்றி

   Delete
 2. நானும் இச்செய்தியை என் பதிவில் பகிர்ந்திருந்தேன்... தினமலரில் பார்த்து...

  இன்னைக்கு அந்த செய்தி பொய் என தினமலரே வெளியிட்டுள்ளது.

  எதை நம்ப????? ஊடகங்கள் தீர ஆராய்ந்து செய்திகள் போட வேண்டும்...

  பதிவர்களாகிய நாம் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை வைத்து சில சமயம் பதிவுகளில் பதிவெழுதுகிறோம். அந்த செய்தி பொய் என அறிய நேர்ந்தால் மிகவும் வேதனையடைய வேண்டி உள்ளது.

  நானும் நண்பரின் இந்த பதிவு வாயிலாக மன்னிப்பு கோருகிறேன்....

  ReplyDelete
  Replies
  1. பிரகாஷ் , தினமலர் தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக இன்று எப்படி செய்தி திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள் பாருங்கள், அவர்களும் தவறான செய்தியை விசாரிக்கமல்தானே வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி எல்லாம் செய்திகள் வேளியிடாததுமாதிரியும் டிவி சேனல்கள் மட்டும் தவறான செய்தி வெளியிட்டு இருப்பதாக உண்மையின் உரைகல் செய்தி வெளியிட்டு இருக்கிரது இன்று

   இறந்துவிட்டாரா நடிகை கனகா? வீண் பரபரப்பை ஏற்படுத்திய "டிவி' சேனல்கள்
   ------------------------------------------------------
   சென்னை: "புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார்' என்று, "டிவி' சேனல்கள், நேற்று பிற்பகல் வெளியிட்ட தகவல், தமிழகம் முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், உயிருடன் உள்ள நடிகை கனகா, ""நான் நலமுடன் உள்ளேன். ஆண்களை பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல், தனிமையில் வசித்து வருகிறேன். எனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார்,'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

   இந்நிலையில், "நடிகை கனகா புற்றுநோயால் அவதிப்படுகிறார். கேரளா மாநிலம், ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்' என, இரண்டு தினங்களுக்கு முன், தகவல் வெளியானது. இதுகுறித்து, ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது, தகவல் உறுதியாகவில்லை. இதனால், நடிகை கனகா எங்கு இருக்கிறார் என, இரண்டு நாட்களாக பரபரப்பு காணப்பட்டது.


   இந்நிலையில், நேற்று பிற்பகல், "நடிகை கனகா இறந்துவிட்டார்' என, சில தமிழக, "டிவி' சேனல்களில், "பிளாஷ் நியூஸ்' வெளியானது. இது, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடிகை கனகா வீடு உள்ளது. அங்கு, பத்திரிகையாளர்கள் சென்றபோது, கனகா, அவர் வளர்க்கும் பூனைகளுக்கும்,கோழிகளுக்கும் நிதானமாக தீனி போட்டுக் கொண்டு இருந்தார். அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள், நடந்த விஷயம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது நடிகை கனகா கூறியதாவது: நான், ஆலப்புழாவில் சிகிச்சை பெற்று வந்தாக கூறப்பட்டது, தவறான தகவல். நான், சென்னை வீட்டில் தான் இருகிறேன். எனக்கு புற்றுநோய் என, வதந்தி பரவியிருக்கிறது. நல்ல வேளை, "எய்ட்ஸ்' என்று செய்தி வரவில்லை. இந்த வதந்திகளை, என் தந்தை என்று கூறிக் கொள்ளும், தேவதாஸ் என்பவர் தான் பரப்புகிறார். இதையே காரணமாக வைத்து, என்னை சந்தித்து பேசி, என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார். பத்திரிகைகளில் செய்தி வந்ததும், என்னை தேடி ஆலப்புழாவுக்கு அவர் செல்லாமல், என் சென்னை வீட்டிற்கு வர முயன்றதை வைத்து பார்க்கும் போது, அவர் தான் என்னை பற்றி தவறான செய்தி பரப்பியிருக்கலாம் என, சந்தேகப்படுகிறேன். என் அம்மாவுக்கு ஒரு நல்ல கணவனாக, எனக்கு நல்ல தந்தையாக அவர், எந்நாளும் நடந்து கொண்டதில்லை. அம்மா இறந்த பின், எனக்கு பல சிரமங்கள் வந்தன. அவற்றை சமாளித்து, அமைதியாக வாழ்ந்து வருகிறேன். அப்பா என்று சொல்லிக் கொண்டவருக்கு, என்னைவிட, என் சொத்து மீது தான் அதிக கவனம். இதனால் தான், எனக்கு ஆண்களை பிடிக்காமல் போனது; "இனி திருமணம் வேண்டாம்' என, முடிவெடுத்து தனிமையில் வாழ்ந்து வருகிறேன். என் வீட்டில், வேலைக்காரி மட்டுமே உடன் இருக்கிறார். எக்காரணத்தை கொண்டும் என் தந்தை என, கூறிக் கொண்டிருக்கும் தேவதாசை, என் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவிற்கு அவர் செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன். சில நடிகர், நடிகைகளிடம் பேச முயற்சித்தேன். அவர்கள் பேச விரும்பவில்லை; பரவாயில்லை. பத்திரிகைகளில் எனக்கு புற்றுநோய் என செய்தி வந்தது, வருத்தமாக இருக்கிறது. தற்போது, நான் இறந்துவிட்டதாக செய்தி வந்து இருப்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், உங்களின் (பத்திரிகையாளர்கள்) சந்திப்பால், நான் நல்லபடியாக இருப்பது, மக்களுக்கு தெரிந்துவிடும்; இது சந்தோஷமாக இருக்கிறது; யார் மீதும் நான் வருத்தப்பட்டு என்னவாகப் போகிறது. இவ்வாறு, நடிகை கனகா கூறினார்.

   Delete
 3. பல சமயங்களில் இந்த மாதிரி தவறான செய்திகள் பதட்டத்தினை உண்டுபடுத்திவிடும்......

  ReplyDelete
 4. ஏற்கனவே நடிகர் ”மைக்” மோகன் இறந்துட்டார். ராஜ் கிரண் இறந்துட்டார்ன்னும் புரளி கிளப்பி இருக்காங்க. இதுப்போல ஒரு தனி மனிதர் இறந்துட்டார்ன்னு வெத்து வதந்தியால சாதிக்க போவது என்ன?ன்னு தான் எனக்கு தெரியலை.

  ReplyDelete
 5. செய்தி ஊடகங்கள் செய்கிற அஜாக்கிரதையின் காரணத்தால் எவ்வளவு பெரிய விளைவு பார்த்தீர்களா?. இது உலகமுழுக்கப் பரவியிருந்தது. பாவம் கனகா. நீண்ட நாள் வாழவேண்டும்.
  எங்களின் வானொலியில் இறந்த செய்தியினைச் சொல்லி, கனகா நடித்த படங்களின் பாடல்களை ஒலிபரப்பு செய்யத்துவங்கிவிட்டார்கள். கொடுமை கொடுமை.

  ReplyDelete
 6. பத்திரிக்கைத் தொழில் வேசித்தொழிலைவிட கேவலமாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டன என்பது என் கருத்து. பணம் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் செய்தியை திருத்தி வெளியிடமுடியும் என்பது பலரும் அறிந்ததே! இதில் பாதிப்பானவர்கள் பலருள்ளனர். அதனால் தான் ஒவ்வொரு கட்சியும் தனக்கென்று தனியாக ஒரு செய்தித்தாளையும் ஒரு தொலைக்காட்சி சானலையும் வைத்துக்கொண்டுள்ளனர். இனி நாமும் (தனி மனிதன்) ஆளுக்கொரு சானலை ஆரம்பித்தால் தான் முடியும் போல!
  முடியலடா சாமி!

  ReplyDelete
 7. அந்த செய்தியை படித்தது நான் உடனே thatstamil.com சைட் போயி பார்த்தேன். அப்பிடி ஏது அதில் உண்மையில்லைன்னு போட்டிருந்தார்கள். ஆகவே நான் அதை பெரிதாக கண்டுகொல்லவில்லை. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்.........

  ReplyDelete
 8. இறந்தவர்களின் மரண அத்தாட்சிப் பத்திரத்தைப் பெற்ற பின்னரோ
  அல்லது இறந்தார் என்ற தகவலை நேரில் கண்ட பின்னரோ தான்
  பத்திரிகையாளர்கள் இத் தகவலைப் பிரசுரிக்கலாம் என்ற வலுவான
  சட்டம் கொண்டுவரப் பட வேண்டும் .கடந்த சில வாரங்களுக்கு முன்னர்
  நான் கேள்வியுற்றதும் அனுபவப் பட்டதும் .வேண்டாத ஒருத்தர் இப்படித்தான்
  இறந்து விட்டார் என்ற தகவலைக் கொடுத்து மரண அறிவித்தல் பகுதியில்
  வெளியிட்டுள்ளார் .ஆனால் அந்த மனிதர் இறக்கவில்லை என்பது தான்
  உண்மை .கனகாவின் தரப்பிலும் இப்படியானதொரு சம்பவம் தான்
  நிகழ்ந்திருக்கக் கூடும் .பத்திரிகைகளில் நீங்கள் வாசித்த தகவலை வைத்துக் கொண்டு
  இட்ட கருத்துத் தவறு என்று உணர்ந்து கேட்ட மனிப்பு பாராட்டிற்குரிய செயல் .
  இந்த ஆக்கத்தினைப் படிக்கும் வலைத்தள உறவுகள் இன்று முதல் பத்திரிகைகளிலோ
  அல்லது முகநூலிலோ வரும் இது போன்ற செய்திகளை வெளியிடாமல் இருப்பதற்கு
  இன்றைய நிகழ்வு ஓர் அனுபவப் பாடமாகவே அமையட்டும் .மிக்க நன்றி சகோதரே
  பகிர்வுக்கு .

  ReplyDelete
 9. நாம் முதலில் தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக இது போன்ற செய்திகள் பகிரப்பட்டு விடுகின்றன.இதை தவிர்ப்பது நல்லது.
  மன்னிக்கிறவன் மனுஷன். மன்னிப்பு கேக்கறவன் பெரிய மனுஷன்.

  ReplyDelete
 10. தினமலரை பார்த்து நானும் அதை என் தளத்தில் பகிர்ந்து விட்டேன்! ஊடகங்களின் செய்திகளை நாம் பகிரும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடமாக அமைந்துவிட்டது!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog