உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, July 27, 2013

அமெரிக்கா பள்ளிகள் செயல்படும் விதம் பற்றி சிறு சிறு தகவல்கள்





 
என் குழந்தையின் பள்ளிக்கூடத்தின் ஒரு புறத் தோற்றம்
அமெரிக்கா பள்ளிகள் செயல்படும் விதம் பற்றி சிறு சிறு தகவல்கள்

இந்தியாவில்  நீ எந்த வகுப்பு படிக்கிறீர்கள் என்று கேட்டால் 1 standard , 2nd standard என்று சொல்லுவார்கள் ஆனால் அமெரிக்க மாணவர்களிடம் கேட்டால்  1 Grade, 2nd Grade என்று சொல்லுவார்கள்

 1-ல் இருந்து 5 ஆம் Grade வரை உள்ள வகுப்பு நடக்கும் இடம் Elementary ஸ்கூல் என்றும் 6 லிருந்து 8 வரை உள்ள வகுப்பு நடக்கும் இடத்தை Middle ஸ்கூல் என்றும் 9 லிருந்து 12 வரை High ஸ்கூல் என்றும் அழைக்கப்புடும்.

மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு டவுனிலும் குறைந்தது 4 லிருந்து 5 வரை Elementary ஸ்கூல் இருக்கும் அது போல ஒன்றோ இரண்டோ Middle, High ஸ்கூல் இருக்கும்.


அந்த அந்த டவுன் ஷிப்பில் இருப்பவர்கள் மட்டுமே அந்த அந்த டவுன்ஷிப் பள்ளிகளில் சேர முடியும். மற்ற டவுன்ஷிப்பில் உள்ளவர்கள் வந்து சேர முடியாது. நமக்கு மற்ற டவுன் ஷிப்பில் உள்ள ஸ்கூல் நன்றாக இருக்கிறது என்று தெரிந்தால் நாம் அந்த டவுன்ஷிப்பிற்கு குடி ஏற வேண்டியது தவிர வேறு வழியில்லை சில பேர்கள் தாங்கள் புத்திசாலிதனமாக செயல்படுவதாக நினைத்து தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் விலாசம் கொடுத்து சேர்ப்பாரகள். ஆனால் அநேக நேரத்தில் குழந்தைகள் அதை மறந்து உளறிவிடுவார்கள். அதன் பின் அதற்காக அபராதம் கட்ட போக வேண்டிய நிலை ஏற்படும். குழந்தைகளை உடனடியாக அந்த பள்ளிக் கூடத்தில் இருந்து நீக்கி விடுவார்கள்.


குழந்தைகள் பள்ளிக்கு 2 மைல் தூரத்தில் இருந்தால் பெற்றோர்கள்தான் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வந்து விட வேண்டும்.  மற்ற மாணவர்கள் பள்ளி அனுப்பும் இலவச பஸ்ஸில்தான் வர வேண்டும் அல்லது பெற்றோர்கள் கொண்டு வந்து விட வேண்டும்.


பள்ளி பஸ் வீட்டிற்கு மிக அருகில் வந்து ஒரு பொது இடத்தில் வந்து நின்று அழைத்து போகும் பஸ் வரும் நேரத்திற்கு 5 நிமிடம் முன்னால் அனைவரும் வந்து விடுவார்கள் ஒரு வேளை பஸ் கொஞ்சம் சீக்கிரம் வந்துவிட்டாலும் இருக்கும் மாணவர்களை மட்டும் அழைத்து சென்று விடமாட்டார்கள். நின்று பொறுமையாக கூப்பிட்டு செல்வார்கள். பஸ் கிளம்பும் நேரத்தில் ஒரு பையன் லேட்டாக வந்தாலும் அவன் வருவதை பஸ்  டிரைவர் பார்த்துவிட்டால் அந்த  பஸ் டிரைவர் நின்று அவனை ஏற்றிக் கொண்டுதான் செல்வார். சில சமயங்களில் லேட்டாக வரும் குழந்தை பஸ்ஸை பார்த்தால் ஓடி வரமாட்டார்கள் ஆடி அசைந்து வருவார்கள் ஆதை பார்த்தும் பஸ் டிரைவர்கள் சாந்தமாகவே இருப்பார்கள்.


ஸ்கூல் பஸ் நின்று குழந்தைகளை ஏற்றும் போது, அந்த பஸ்ஸில் உள்ள ரெட் லைட் அணைந்தது அணைந்து ஏரியும் போது அந்த பஸ் போகும் திசையாகட்டும் அல்லது எதிர் திசையாகட்டும் அனைத்து வாகனங்களும் 50 அடி தூரத்தில் நின்றுவிடும் யாரும் அதை மீற மாட்டார்கள்.

ஈவினிங்க் பஸ் குழந்தைகளை விடும் போது முதல் இரண்டு வகுப்பில் உள்ள குழந்தைகளை தெருவில் விட்டு விட்டு செல்ல மாட்டார்கள் அந்த குழந்தையின் பெற்றோர்கள் வரும் வரை நின்று அனுப்பிவிட்டுச் செல்லுவார்கள். குழந்தைகளின் பெற்றோர்கள் அன்று வந்து பிக்கப் பண்ண முடியாத சூழ்நிலை இருந்தால் காலையில் விடும் போது யார் வந்து பிக்கப் பண்ணுவார்கள் என்பதை அந்த டிரைவருக்கு எழுதி கையெழுது போட்டு கொடுக்க வேண்டும்.

வருமானம் குறைந்த அளவு இருக்கும் பெற்றோரின் குழந்தைகளளுக்கு காலை உணவும் மதிய உணவும் இலவசமாக கொடுக்கப்படும் அதை வாங்கி சாப்பிடும் குழந்தைகளாக இருக்கட்டும் மற்ற குழந்தைகளாக இருக்கட்டும் அவர்களுக்கு அது இலவசம் என்று தெரியாத அளவிற்கு வழங்கப்படும்.

ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் குழந்தையின் பேரில் லஞ்ச் மணி என்று ஒரு தொகையை ஆன்லைன் மூலம் கட்டி இருப்பாரகள் சில குழந்தைகள் டெய்லி ஸ்கூலில் வாங்கி சாப்பிடுவார்கள் சில குழந்தைகள் ஒரு வேளை வீட்டில் இருந்து எடுத்து போக மறந்து விட்டால் ஸ்கூலில் வாங்கி சாப்பிடுவார்கள்.

நம்ம ஊரைப் போல எல்லா வகுப்புகளுக்கும் ஒரே நேரத்தில் லஞ்ச் டைம் விடுவது கிடையாது. உதாரணமாக எனது பெண் படிக்கும் Elementary ஸ்கூல்  வகுப்புகள் காலை 8.50 க்கு ஆரம்பிக்கும் 2ம் கிரேடு குழந்தைகளின் லஞ் டைம் 10 மணியளவிலும்  3 ஆம் கிரேடுக்கு 11.00 மணியளவிலும், 4 ஆம் கிரேடுக்கு 12.00 மணியளவிலும் 5 ஆம் கிரேடுக்கு 1.00 மணியளவிலும் 1 ஆம் & கிண்டர்கார்டனுக்கு  கிரேடுக்கு 2.00 மணியளவிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்ன குழந்தைகள் லேட்டாக சாப்பிடுவதால்  அவர்களுக்கு காலையில் ஸ்நாக் டைமும் சிக்கிரமாக சாப்பிடும் குழந்தைகளுக்கு லேட்டாக ஸ்நாக் டைம் ஒதுக்கப்படும். பள்ளிகளுக்கு குழந்தைகள் ஸ்நாக் எடுத்து வரும் போது நட்ஸ் கண்டிப்பாக எடுத்து வரக் கூடாது அதிலும் மிக மிக கண்டிப்பாக நிலக்கடலை எடுத்து வரக் கூடாது அது பல குழந்தைகக்கும் மிகவும் அலர்ஜியாக இருப்பதுதான் காரணம்.


ஒவ்வொரு வகுப்பிலும் 15ல் இருந்து 20 மாணவர்கள் மட்டும் உண்டு. ஒரே கிரேடில் பல வகுப்புக்கள் உண்டு. பள்ளியின் உள்ளே ஆனால் வகுப்புகளுக்கு வெளியே உள்ள சுவர்களில் ஒவ்வொரு வர்ணம் பூசி இருப்பார்கள். அது போல ஒவ்வொரு வரண்டாவில்லும் தெருவுக்கு பெயர் வைப்பது போல பெயர் வைத்திருப்பார்கள் அதனால் குழந்தைகள் வகுப்புகள் எங்கே இருக்கின்றன என தேடி அலைவதில்லை.

குழந்தைகள் மிடில் ஸ்கூலுக்கு போன பின் மாணவர்களை நோக்கி டீச்சர்கள் வரமாட்டார்கள். மாணவர்கள் தான் பாடப் பிரிவுகளுக்கு தகுந்தவாறு டீச்சருக்கு ஒதுக்கிய அறையை நோக்கி செல்ல வேண்டும். ஒவ்வொரு ஸ்கூலிலும் பெரிய சினிமா தியோட்டர் போன்ற ஆடிட்டோரியம் இருக்கும். இண்ட்டோர் பேஸ்கட்பால் விளையாட்டு மைதானமும் இருக்கும்.

குழந்தைகளை பள்ளிக்கு வெளியில் டிரிப் அழைத்து செல்லுவார்கள். அப்படி செல்லும் போது சில பெற்றோர்களையும் உதவுவதற்காக உடன் அழௌத்து செல்வார்கள் அப்படி அழைத்து செல்லும் போது வர விருப்பபடும் பெற்றோர்களின் விருப்த்தை கேட்டு அதில் சில பேரை மட்டுமே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அழைத்து செல்லுவார்கள். 5 ஆம் கிரேடு வந்தததும் மூன்று நாள் கேம்ப் கூட்டிச் செல்வார்கள். அதற்கு மிக சிறிய தொகை வசூலிக்கபடும் அந்த தொகையை கொடுக்க முடியவில்லை ஆனால் செல்வதற்கு விருப்பம் இருந்தால் பள்ளி செலவிலே அந்த குழந்தை அனுப்பபடும் .5 ஆம் கிரேடில் செக்ஸ் கல்வி கற்றுக் கொடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாகவே தரப்படும். அதை குழந்தைகள் வீட்டிற்கு எடுத்து வரத் தேவையில்லை. 1 ல் இருந்து 5 வரை படிப்பும் சரி ஹோம் வொர்க்காட்டும் சரி மிக குறைந்த அளவே ஆனால்  6 ஆம் வகுப்பில் இருந்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பிக்கும். மனப்பாடம் செய்யும் முறை இங்கு கிடையாது. ஒவ்வொரு காலாண்டும் அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என்று ரிப்போர்ட் மூடிய கவரில் வைத்து அனுப்புவார்கள் அவர்கள் அந்த ரிப்போர்டில் என்ன கிரேடு எடுத்து இருக்கிறார்கள் என்பது பெற்றொருக்கும் ஆசிரியருக்கும் மட்டும்தான் தெரியும் வீட்டிற்கு வந்த பின்தான் நாம் பார்க்கும் போதுதான் குழந்தைக்கே தெரியும்

முதல் காலாண்டு ரிப்போர்ட் வந்ததும் டீச்சர் பெற்றோர் மீட்டிங்க் தனி தனியாக நடை பெறும் அப்போது பள்ளி அரைநாள் மட்டும் செயல்படும் அப்போது நாம் குழந்தைகளை வீட்டில் விட்டு டீச்சரை சந்திக்க வேண்டும் எந்த நிலையிலும் குழந்தைகள் முன்னால் அவர்கள் நன்றாக படிப்பதில்லை என்று கூறுவது கிடையாது. குழந்தைகளை அடிப்பது என்பதை கனவிலும் நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நர்ஸ் இருப்ப்பார். எந்த குழந்தைக்காகவது பள்ளி நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்றால் அவர் முதலில் பரிசோதித்துவிட்டு அதற்கு தகுந்தவாறு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிப்பார். நிலைமை மிக சீரியஸாக இருந்தால் அந்த குழந்தையின் பேமிலி டாக்டரிடம் அழைத்து செல்வதோ அல்லது ஹாஸ்பிடலில் நடக்கும். பள்ளி ஆரம்பித்த முதல் நாளே எமர்ஜன்ஸி என்றால் யாரை எந்த நம்பரில் கூப்பிட வேண்டும் ஒரு வேளை பெற்றோர்களை தொடர்பு கொள்ள முடியவில்லையென்றால் வேறு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் எந்த டாக்டர் & என்ன இன்ஸ்ரென்ஸ் என்பது பற்றி அனைத்து விபரங்களும் கொடுக்கப்பட வேண்டும்.

குழந்தைகள் கண்டிப்பாக பள்ளிக்கு அனுப்ப வேண்டும் அப்படி அனுப்பாமல் வீட்டில் வைத்து இருப்பது தெரியவந்தால் பெற்றோர்கள் கோர்ட்படி ஏறியாக வேண்டும்.

இந்த பதிவு சின்ன சின்ன தகவல்களை கொண்டிருந்தாலும் அது பெரிய பதிவாக போய்விட்டதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்

இந்த தகவல்கள் பல பேருக்கு தெரிந்து இருக்கலாம் ஆனால் இது அப்படி தெரியாதவர்களுக்காக இடப்பட்டு இருக்கிறது



 


அன்புடன்
மதுரைத்தமிழன்

34 comments :

 1. தேவையான பதிவு. இதுபோல ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் பதிவர்கள் தங்கள் ஊரில்உள்ள கல்விச்சூழலை பதிவுசெய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்னும் பாடத்திட்டம், ஆசிரியர் பாடம் நடத்தும் முறை, மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்கங்களையும் தொடர்ந்து எழுதவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. குணசீலன் உங்கள் வருகைக்கும் தரமான கருத்து பதிவிட்டிற்கும் மிகவும் நன்றி

   உங்களது வேண்டுகோளை ஏற்று பல நாடுகளில் இருக்கும் பதிவாளர்கள் இதைப்பற்றி எழுத நானும் வேண்டுகோள் விடுவிக்கிறேன்.

   Delete
 2. நிலக்கடலை நல்ல சத்து ஆயிற்றே...!
  கோர்ட்படி ஏறுவது இங்கு வந்தால் நல்லது...

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் உங்கள் வருகைக்கும் தரமான கருத்து பதிவிட்டிற்கும் மிகவும் நன்றி

   நிலக்கடலை மிகவும் சத்தானதுதான். ஆனால் இங்கு பலருக்கு அது மிகவும் அலர்ஜி. அதை பக்கதில் உள்ளவர்கள் வைத்து இருந்தாலோ அதை பக்கத்தில் உள்ளவர்கள் சாப்பிட்டலோ கூட அலர்ஜியால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையை அடைந்தவர்களை பற்றியும் செய்திகள் படித்து இருக்கிறேன். அதனால்தான் தொடக்கப்பள்ளியில் அதை தடை செய்து இருக்கிறார்கள்

   Delete
 3. இது பெரிய பதிவா? ரொம்ப நல்லாயிருக்கு. வேண்டுகோளை நிறைவேற்றியமைக்கு நன்றி. கனவு லோகத்தில் இருப்பதைப் போலவே படிக்கும் போது தோன்றுகின்றது.

  ReplyDelete
  Replies
  1. ஜோதிஜி உங்களிடம் பேசியபின் தான் இதை எழுத ஆரம்பித்தேன் ஆனால் எழுதி 2 நாள் ஆன பின்பும் வெளியிடவில்லை காரணம் நான் கேட்டது என்ன நீங்கள் எழுதியது என்ன என்று காரித் துப்பிவிடுவீர்களோ என்று நான் நினைத்ததால்தான் சிறிது லேட்டாகியது. ஆனால் இப்போது சந்தோஷமாக இருக்கிறது அட்லீஸ்ட் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதால்தான்

   Delete
  2. உங்களிடம் பேசிய பின்பு நான் என் மகளிடம் உன் ஸ்கூல் எப்படி செயல்படுகிறது என்று தமிழகத்தில் உள்ளவர் ஒருத்தர் கேட்கிறார் என்று சொல்லி அவளிடம் பேட்டி கண்டுதான் இந்த பதிவு எழுதப்பட்டத்து இந்த பதிவிற்கு எனது மகள்தான் பலதகவல்களை தந்தது . அவளுக்கு நன்றி தமிழ் கொஞ்சம் பேச தெரிந்த அவள் ஒரு நாள் கண்டிப்பாக எனது பதிவை படிப்பாள் என்பதால் அவளுக்கும் இங்கே என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

   Delete
  3. பதிவு என்பது இதுதான் தெரியாததை பகிர்ந்து கொள்வது .புதிய விசயங்களை கொண்டுவருவது

   Delete
 4. அருமையான பகிர்வு.....

  முனைவர் சொல்லியிருப்பது போல எல்லா நாட்டு பாடத் திட்டங்களும் முறைகளும் தெரிந்தால் நல்லது....

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் உங்கள் வருகைக்கும் தரமான கருத்து பதிவிற்கும் மிகவும் நன்றி


   பல முறைகளை நாம் அறிந்து கொண்டால் நாம் வருங்கால சந்ததியினருக்கு சிறந்த நல்ல கல்வியை எப்படி நாம் அளிக்கலாம் என்று அறிந்து கொள்ள முடியும்

   Delete
 5. ஹ்ஹீம்...
  அமேரிக்கா போய் மீண்டும் பள்ளிலியில் படிக்கவேண்டும் போல ஒரு எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது உங்களின் இந்த பதிவு நண்பா!

  ReplyDelete
  Replies
  1. அஜீஸ் உங்கள் வருகைக்கும் தரமான கருத்து பதிவிற்கும் மிகவும் நன்றி

   உங்களுக்கு மட்டுமா எனக்கும்தான் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் படிக்க ஆர்வமாக இருக்கிறது.
   காரணம் இந்தியாவில் சிறிது படிக்கவில்லையென்றாலும் நீ மாடு மேய்க்கதான் லாய்க்கு என்று சொல்லி நாம் படிக்கும் ஆர்வத்திற்கும் தடையை ஏற்படுத்துவிடுவார்கள் ஆனால் இங்கு நாம் மோசமாக படித்தாலும் எந்த டீச்சரிடம் இருந்து இப்படிபட்ட வார்த்தைகள் வாயில் இருந்து வராது என்பதுதான் இங்கு மிகவும் சிறப்பு


   சுமாராக படிக்கும் மாணவர்கள் கூட பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் முதலில் அம்மாவிடம் சொல்வது அம்மா இன்று நான் மிகவும் நன்றாக படித்தாக என் டீச்சர் கூறினார் என்று சந்தோஷமாக சொல்லுவார்கள்

   Delete
 6. பதிவு பெருசா இருந்தாலும் அவசியமான பதிவு சகோ! நம்ம ஊரு பிள்ளைகளை நினைச்சா ஏக்க பெருமூச்சுதான் வருது.எது இல்லாவிட்டாலும், ஸ்கூல் பஸ் இருக்கும்போது மற்ற வ?ண்டிகள் நின்றுவிடுவது மட்டுமாவது நம்ம ஊருக்கு வந்தால் நல்லது!!

  ReplyDelete
  Replies
  1. சகோ ராஜி உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி


   என்ன இப்படியெல்லாம வீண்பெருமை அடிக்கிறீர்களோ என்று கிண்டல் பண்ணுவிர்களோ என நினைத்தேன்

   Delete
 7. சீரியசான பதிவு.
  திட்டமிட்ட செயல் பாடுகள் ஆச்சர்யப் பட வைக்கின்றன
  இந்த விஷயத்தில் இந்தியா எவ்வளவு பின்னிலையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பலமுறை சிரிக்க வைத்த மதுரை தமிழன் சிந்திக்கவும் வைத்தது குறிப்பிடத் தக்கது.

  ReplyDelete
  Replies
  1. முரளி உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி

   என் பதிவுகள் சிந்திக்க வைத்தனவா? அப்படியென்றால் இப்படிபட்ட பதிவுகளை எழுதிவிட வேண்டியதுதான்

   Delete
 8. It is informative to the grandparents whose grand children are studying in U.S.A

  ReplyDelete
  Replies
  1. கணேஷ் வருகைக்கும் ஆதரவிற்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி

   தாத்தா பாட்டிகளுக்கு மட்டுமல்ல இங்குள்ள பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன என தெரிய விரும்பும் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் தகவல்தான்

   Delete
 9. இதெல்லாம் நம்ம நாட்டில நடக்கிற வாய்ப்பு சாத்தியம் இல்லை. நமமளோட வீக் பாயிண்ட் மக்கள் தொகை நெருக்கடி.

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் தலைவர்கள் நினைத்தால் , மக்கள் முயற்சித்தால் நடக்க கூடியதுதான்

   Delete
 10. //அந்த அந்த டவுன் ஷிப்பில் இருப்பவர்கள் மட்டுமே அந்த அந்த டவுன்ஷிப் பள்ளிகளில் சேர முடியும். மற்ற டவுன்ஷிப்பில் உள்ளவர்கள் வந்து சேர முடியாது. நமக்கு மற்ற டவுன் ஷிப்பில் உள்ள ஸ்கூல் நன்றாக இருக்கிறது என்று தெரிந்தால் நாம் அந்த டவுன்ஷிப்பிற்கு குடி ஏற வேண்டியது தவிர வேறு வழியில்லை //
  நமது நாட்டிலும் இதுமாதிரி இருந்தால் போக்குவரத்து நெரிசல், திடீர் ஸ்ட்ரைக் சமயத்தில் பிள்ளைகளைப் பற்றிய அதிக கவலை இன்னும் சில தொந்தரவுகள் இல்லாமல் இருக்கலாம்.

  ஓ! அமெரிக்கா! அமெரிக்கப் பள்ளிகளைப் பற்றி எழுதியதைப் போன்று மற்ற விஷயங்களையும் எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இளங்கோ சார் உங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி

   நிச்சயம் மற்ற விஷயங்களைப் பற்றியும் எழுதுகிறேன்

   Delete
 11. I have been thinking for quite a while about writing about US school system. You have done a great job of explaining it. Thanks for sharing.

  ReplyDelete
  Replies
  1. நாடோடி பையன் உங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி

   எனக்கு தெரிந்ததை என் மகள் சொன்னதை வைத்து எழுதி இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாதது எவ்வளவோ இருக்கின்றன எனது பார்வைக்கும் உங்களது பார்வைக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும் அதனால் நீங்கள் அறிந்ததையும் எழுதி பதிவிடுங்கள்

   Delete
 12. இதை நம்ம ஊர்ல இருக்கும் எல்லா பள்ளியின் வாசலிலே கண்டிப்பாக எழுதி வைக்க வேண்டும் ....

  ReplyDelete
  Replies
  1. மஹா லிங்கம் உங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி

   இதை பள்ளியில் எழுதி வைக்க இது அற்புதமான விஷயம் அல்ல ஆனால் இதில் இருக்கும் நல்ல விஷயங்களை பள்ளி ஒனருக்கும் தலைமை ஆசிரியருக்கும் சொல்லி இதில் எதையெல்லாம் அவர்களால் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய வேண்டுகோள் வையுங்கள்

   Delete
 13. This is generally good and applicable. . however there is lot of "fine" differences between these schools (between schools in the same district)on "grades").
  1. The money to run these schools are paid only by the property taxes.So the schools in the wealthy area will be definitely "better" in terms of good teachers and Gifted and Talented / Magnet programs.
  2. Make sure you are aware of these GT programs in case it is available. What is good is -If the teacher finds you child has special skills, she may recommend. They admit only after an entrance test.-no recommendation and favoritism-only merit.
  3. The difference swill be more noticeable when they go a high school. The type of curriculum especially AP classes / honor classes (advanced placement classes), clubs like debate/ music are not available in many schools in many "poor" districts. if available there will be limits.
  4. most Indian parents will try especially to get to GOOD school districts (they will be paying more property taxes or RENTs....
  5. competition to get the school ranks (especially, the coveted top "5 to 10%" is extremely high.Getting into such rank has definite advantages for college admissions....

  ReplyDelete
  Replies
  1. இதைப்பற்றி நான் எனது வரும் பதிவுகளில் எழுதலாம் என நினைத்து இருந்தேன். நண்பரே நல்ல விஷயங்களைத்தான் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் UNKNOWN என்ற முகமூடி எதற்கு?

   Delete
 14. மாணவர்களை பற்றி எழுதிய நீங்கள் இங்கு உள்ள ஆசிரியர்கள் போல் அங்கு உள்ள ஆசிரியர்கள் திறமை சாலிகளா ? இவர்களை போல் அவர்களால் வேலை நேரத்தில்

  1.வட்டிக்கு பணம் கொடுதல்
  2.மாத சீட்டு , தீபாவளி சீட்டு
  3.ரீயல் எஸ்டேட் தொழில்
  4.புடவை வியபாரம்
  5.செல்லுக்கு ரீசார்ஜ் செய்தல்
  6.மாலை நேர டியுசன் ... etc

  ReplyDelete
  Replies
  1. இங்குள்ள ஆசிரியர்களுக்கும் நம் ஆசிரியர்களுக்கும் உள்ள வேறுபாடு இங்குள்ளவர்கள் குழந்தைகளை அதிகம் நேசிப்பவர்களாகவும் அதே நேரத்தில் குழந்தைகளின் மனதை பாதிக்காத(HURT) வகையில் சொல்லி தருவதும்தான். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள் ஆனால் அது மிக மிக குறைந்த சதவிகதமே

   Delete
 15. பதிவு என்பது இதுதான் தெரியாததை பகிர்ந்து கொள்வது .புதிய விசயங்களை கொண்டுவருவது .
  ஆனால் அசம்பாவிதமாக திரை துறைக்கு இத்தனை பத்திரிக்கை ,தொலைகாட்சிகள் இருந்தும் தனது வாய்ப்புகளை பட்டத்து யானை ,சிங்கம் என தவறி வழிமாறி பல பதிவர்கள் போவது வருந்த வைக்கிறது .

  ReplyDelete
  Replies
  1. கிருஷண மூர்த்தி மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். நான் படித்த ரசித்த பயன் உள்ள பலவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து பலரையும் சென்று அடையவே இந்த பதிவுகளை வெளியிடுகிறேன் ஆனால் உபயோகமான பதிவுகள் வெளியிடும் அதே நேரத்தில் மற்ற பதிவுகளையும் வெளியிட்டு கொண்டு வருகிறேன் காரணம் அப்போதுதான் எல்லா வகையினரையும் கவர முடியும் அப்படி எல்லோறையும் கவரும் போது நாம் பயனுள்ள விஷயங்களை அவ்வப்போது வெளியிடும் போது அது எல்லோரையும் கண்டிப்பாக சென்று அடையும் என்பது என் கருத்து

   Delete
 16. சூப்பர்.அங்குள்ள ஸ்கூல்க பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இங்கு இருக்கும் ஜனத்தொகைக்கு இது எல்லாம் சிரமம் தான்.

  ReplyDelete
 17. I AM NEW TO YOUR BLOG. WANT TO SHARE MY PERSONAL EXPERIENCE. MY SON CURRENTLY STUDYING IN HIS PLUS TWO. HE IS BIT TALLER AND OFTEN TEASED BY A CLASS MATE WHICH END UP ONE DAY IN A CLASH ON THE WAY TO SCHOOL. BEING IN ABROAD I ASKED MY ELDER SON TO VOLUNTARILY TO INFORM THE MATTER TO THE PRINCIPAL TO WARN BOTH STUDENTS AND CORRECT THEM. RESULT THE INCIDENT WAS EXAGGERATED BY THE PRINCIPAL TO THE SCHOOL MANAGEMENT AND BOTH STUDENTS WERE PREVENTED FROM ATTENDING CLASSES. ME AND THE FATHER OF THE OTHER BOY WHO IS AN ENGINEER IN MIDDLE EAST RUSHED TO THE HOME COUNTRY FOR AN INQUIRY BY THE SCHOOL AND AT LAST WE PLACED OUR CHILDREN IN DIFFERENT SCHOOLS. THE MANAGEMENT IS RUTHLESS NOT EVEN CONSIDER THE EDUCATION OF TWO CHILDREN WILL BE SPOILED. MY SON STUDIED IN THAT SCHOOL FROM HIS LOWER KG TILL HIS 11TH STANDARD TILL THIS INCIDENT. THE PITY THING IS THAT THE SCHOOL IS RUN BY THE PATERNAL UNCLE OF MY WIFE WHO IS ALSO RUNNING AN ENGINEERING COLLEGE AND ANOTHER HIGHER SECONDARY SCHOOL WITH AN APPROVAL AS MINORITY EDUCATIONAL INSTITUTE LEAST BOTHERED ABOUT STUDENTS OF THEIR OWN COMMUNITY.

  THE FOUNDER RAISED FROM BOTTOM LEVEL. WHAT OFTEN COMES TO MY THOUGHT " PALAM KANCHI PACHAI MILAGAI KADITHA KAALM MARANTHU POCHAE, INDRU KALVI VIYABARIYAI MARIYATHUM URAVUGALM KASANTHU POCHAE.

  SHAHUL HAMEED
  YEMEN



  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 403 ) அரசியல் ( 263 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 52 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) நையாண்டி ( 44 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #india #political #satire ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) satire ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog