உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, July 15, 2012

முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வைத்து தொடர்ந்து வளர்ந்து வரும் வலைத்தளம்
முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வைத்து தொடர்ந்து வளர்ந்து வரும் வலைத்தளம்

இந்த வலைப்பதிவு துவங்கி இரண்டு ஆண்டி நிறைவடைந்து மூன்றால் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.இது மைல் கல்லோ சாதனையோ அல்ல என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வலைப்பதிவை வாசித்து ஆதரவளித்த இணையதளவாசிகளுக்கு ன்றி தெரிவித்து கொள்வதற்காக எழுதப்படும் பதிவு இது.


இரண்டாண்டுகளிலும் நிறைவான அனுபவமே ஏற்பட்டுள்ளது. பல தொடர் வாசகர்களும் மிக அதிக அளவு சைலண்ட் வாசகர்களும் கிடைத்திருக்கிறார்கள் நல்ல பதிவுகளை பலர் மனம் திறந்து பாராட்டியதோடு பின்னுட்டங்கள்& இமெயில் வழியே ஊக்குவித்துள்ளனர்.சிலர் உரிமையோடு தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்..

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எனது வலைத்தளத்திற்கு இது வரை ஆதரவு தந்த அனைத்து வலைதள நண்பர்களுக்கும் சைலண்ட் ரீடராக வந்தவர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியும் வாழ்த்துக்களும். உங்களது ஆதரவும் ஊக்கமும்  இல்லாமல் நான் இதனை தொடர்ந்து இருக்க முடியாது. எனது தளத்திற்கு இணைப்பு வழங்கி என் தளத்தை மென்மேலும் பலரது பார்வைக்கு கொண்டு செல்ல உதவிய திரட்டிகள் தமிழ்மணம், இண்டலி மற்றும் சக வலைத்தளப்பதிவர்கள், இணையத்தளங்கள்போன்றவற்றிற்கு எனது மனமார்ந்த  நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


எனது வலைத்தளத்தில் நீங்கள் படித்த பதிவு உங்கள் மனதில் தவறாக பட்டு மனதை புண்படுத்தி இருக்கலாம்,அதே சமயத்தில் அந்த பதிவு மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து இருக்காலாம் அல்லது மிகவும் நகைச்சுவையாகவும் சில பேருக்கு இருந்திருக்கலாம்.மேலும் சில பேருக்கு போரடித்து இருக்கலாம் அல்லது ஒரு பயனில்லாத பதிவாக கூட இருந்திருக்கலாம். மற்றும் சில பேருக்கு இன்ஸ்பயரெஷனாக இருந்துக்காலாம். இன்னும் சில பேர் முகத்தில் புன்னகையை தந்து இருக்கலாம்.


ஆனால் என்னால் எல்லாரையும் எல்லா நேரத்திலும் & எல்லா பதிவுகளிலும் திருப்திபடுத்த முடியாது என்ற உண்மையை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்


அதே நேரத்தில் நான் நம்புகிறேன் நீங்கள் எனது வலைத்தளத்திற்கு  வரும் போது சில பதிவுகளாவது உங்களை திருப்திபடுத்தி இருக்கும் என நம்புகிறேன்.


நாம் சாதாரண மனிதர்கள் அதனால் மனிதருக்கு மனிதர் கருத்து வேறுபாடு இருக்கலாம்.ஆனால் நாம் தமிழர்கள் என்ற உணர்வில்  மட்டும் வேறுபாடுகள் இல்லை. அதனால் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் காட்டும் அன்பில் வேறுபாடு இல்லாமல் ஒரு குடும்பமாக பழகிவருவோம்.


என் வலைத்தளத்தில் தொடர்ந்து மிக நல்ல பதிவுகள்  வரும் என உறுதியளிக்கிறேன். மீண்டும் எனது நன்றியை கூறி உங்களை எனது அடுத்த பதிவில் சந்திக்கிறேன். வணக்கம்...

அன்புடன்
உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கும்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

33 comments :

 1. பல அரிய அக்கரைச் செய்திகள்
  ரசித்து மகிழத்தக்க நகைச் சுவைத் துணுக்கள்
  சமுக அவலங்களின் மீதான அதீதக் கோபம்
  சம கால நிகழ்வுகள் குறித்தச் சரியான விமர்சனம் என
  பன் முகம் கொண்ட தங்கள் எழுத்துக்களின்
  ரசிகன் நான்.
  இரண்டாம் ஆண்டு முடித்து மூன்றில்
  அடியெடுத்துவைக்கும் தங்களுக்கு
  என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. எனது வலைத்தள வளர்ச்சிக்கு நீங்கள் இடும் தரமான கருத்துக்களும் உதவி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு எனது இதய பூர்வமான நன்றிகள்

   Delete
 2. தொடர்ந்து வாசித்தாலும் பின்னூட்டமிட்டது குறைவு என நினைக்கிறேன். அதிகம் ரசிப்பது உங்கள் நகைச்சுவைப் பதிவுகள் தான். தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள். :)

  ReplyDelete
  Replies
  1. உங்களை போல உள்ளவர்களைத்தான் நான் "சைலண்ட் ரீடர்" என கூறிப்பிட்டுள்ளேன். இந்த அவசர கால உலகில் நாம் படிக்கும் செய்திகள் அனைத்திற்கும் பின்னுட்டம் இட நேரம் இருக்காது என்பது நான் அறிந்துள்ளதுதான். அதனால்தான் நான் ஆரம்ப காலம் முதல் நான் சொல்வது உங்களுக்கு(ரீடர்களுக்கு) எனது பதிவை படித்து நீங்கள் ரசித்து அதன் பிறகு "நேரம் இருந்தால் மட்டும்" பதில் எழுதுங்கள் என்று பல முறை கூறிப்பிட்டுள்ளேன்,

   இன்று வந்து எனது பதிவை படித்து கருத்துக்கள் சொன்னதுமட்டுமல்லாமல் வாழ்த்தியதற்கும்

   அதற்கு எனது இதய பூர்வமான நன்றிகள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

   Delete
 3. வாழ்த்துக்கள் நண்பரே!தொடர்ந்து சுவையான பதிவுகளை அளிப்பீர்.நாங்கள் வரவேற்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. இன்று வந்து எனது பதிவை படித்து கருத்துக்கள் சொன்னதுமட்டுமல்லாமல் வாழ்த்தியதற்கும் எனது இதய பூர்வமான நன்றிகள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

   Delete
 4. வாழ்த்துக்கள்

  தொடருங்கள் தொடர்கிறேன்

  ReplyDelete
 5. எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது இதய பூர்வமான நன்றிகள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 6. தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள். உங்கள் சில பதிவுகளின் நகைச்சுவை உணர்வு அழகு. சிரிக்க வைத்ததுண்டு.

  ReplyDelete
  Replies
  1. எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது இதய பூர்வமான நன்றிகள் ரதி. உங்கள் எழுத்துகளை ஒப்பிட்டுபார்க்கும் போது எனது எழுத்துக்கள் நத்திங்க். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

   Delete
 7. மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு திடங்கொண்டு போரடுவின் மனமார்ந்த நல வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
  Replies
  1. எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது இதய பூர்வமான நன்றிகள் சீனு. . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

   Delete
 8. வாழ்த்துக்கள் சார்!!!!!

  #ஒன் ஆப் தி சைலன்ட் ரீடர்!

  ReplyDelete
  Replies
  1. ஒன் ஆப் தி சைலன்ட் ரீடர் எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது இதய பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

   Delete
 9. வாழ்த்துக்கள் for 2nd year anniversary

  ReplyDelete
  Replies
  1. மோகன் குமார் எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

   Delete
 10. வாழ்த்துக்கள் நண்பரே.., தொடர்ந்து தங்குதடையின்றி பயணம் தொடரட்டும் :)

  ReplyDelete
  Replies
  1. வரலாற்று சுவடுகள் நண்பரே எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நல்ல பதிவுகளோடு நானும் தொடருகிறேன்

   Delete
 11. ஆஹா... மூன்றாம் ஆண்டு துவங்குகிறதா...? எனக்கு அரசியலில் சிறிதேனும் ஈடுபாடு காட்ட வைத்தது உமது எழுத்துக்கள்தான் நண்பா. உங்களின் நகைச்சுவை உணர்வும் எனக்கு மிகமிகப் பிடிக்கும. எல்லாவற்றையும் விட ஓராண்டையும் முடித்திராத இந்தச் சின்னவனுக்கு நீங்கள் தரும் ஆதரவு மிகமிகப் பிடிக்கும. இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் எங்களுடன் தொடர்ந்து இருந்து மகிழ்வித்திட என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ் ///இந்தச் சின்னவனுக்கு/// உங்களின் இந்த அடக்க உணர்வும் பண்பும்தான் உங்களை நான் தொடர்வதன் காரணம். அதுமட்டுமல்ல நீங்கள் ஒளித்து வைத்த பொக்கிஷங்களில் இருந்து சிதறும் பதிவுளை பசியில் வாடி இருக்கும் சிறுவன் எப்படி குப்பைதொட்டியில் விழும் எச்சில் இலைகளுக்காக பரப்பானோ அது மாதிரிதான் நானும் உங்கள் பதிவுகளை தேடி வருகின்றேன்

   எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். .

   Delete
 12. மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  நாம் காட்டும் அன்பில் வேறுபாடு இல்லாமல்
  ஒரு குடும்பமாக பழகிவருவோம்.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
  Replies
  1. நமது வலைத்தள குடும்பம் மிகப் பெரியது ஐயா. அந்த குடும்பத்தில் மிகப் பெரியவரான நீங்கள் எனை வாழ்த்துவது மிக மகழ்ச்சியை தருகிறது. எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

   Delete
 13. மூன்றாம் ஆண்டு வாழ்த்துகள் நண்பரே.... மேன் மேலும் வளர வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. இரவின் புன்னகை உங்கள் வாழ்த்து எனக்கு இரவில் மட்டுமல்ல பகலிலும் புன்னகையை தருகிறது. எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். .

   Delete
 14. பெயருக்கு தகுந்த பதிவுகளைத் தந்து அசத்தும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கவிதை உலகின் அரசியே எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். .

   Delete
 15. மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்...
  மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன், எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். .வாழ்த்துக்கள் மட்டும்தானா உங்கள் ஊர் பிரியாணியை பரிசாக அனுப்ப மாட்டீர்களா?

   Delete
 16. வாழ்த்துகள் வாழ்த்துகள் மக்கா....!

  ReplyDelete
  Replies
  1. பாரில் அல்ல பேஸ்புக்கில் கலக்கும் மனோ எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். .

   Delete
 17. தங்கள் பணி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...
  BTW,அதுல தொங்குறது நீங்க தானே...-:)

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் நண்பரே! சிறப்பான பதிவுகள் தொடரட்டும்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog