உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, July 13, 2012

உங்களுக்கு பிளட் பிரஷர் எப்படி அதிகரிக்கிறது? (டாக்டருக்கு கூட தெரியாத தகவல்)
உங்களுக்கு பிளட் பிரஷர் எப்படி அதிகரிக்கிறது? (டாக்டருக்கு கூட தெரியாத தகவல்)
நேற்று ரெகுலர் செக்கப்புக்காக டாக்டர் ஆபிஸ் சென்றேன். முதலில் நர்ஸ் வந்து எல்லா செக்கப் செய்து சார்ட்டில் எல்லாவற்றையும் எழுதி டாக்டரின் பார்வைக்காக வைத்து விட்டு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க டாக்டர் வந்துவிடுவார் என்று சொல்லி அந்த நர்ஸ் மறைந்து விட்டார்.

சிறிது நேரத்தில் டாக்டர் வந்து  அந்த சார்ட்டை பார்த்துவிட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது ஆனால் உங்கள் பிரஷர்தான் மிக அதிகமாக உள்ளது...என்ன ஆச்சு ஊறுகாய் மிக அதிகம் சாப்பிடுகிறிர்களோ? அப்படி இருந்தால் குறைத்து கொள்ளுங்கள்...டென்ஷன் ஆகாதீர்கள், ஒரு மாதம் கழித்து வாருங்கள் அப்போதும் இந்தளவு பிரஷர் இருந்தால் உங்களுக்கு மாத்திரை தான் எழுதி தரவேண்டும் என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்...


எனக்கு வந்ததே பாருங்கள் கோபம் அந்த டாக்டரின் மேலே இவனுக்கெல்லாம் எவன்டா டாக்டர்  பட்டம் கொடுத்தது என்று..

எனக்கு எதுக்கு அந்த டாக்டர் மேலே கோபம் வந்துச்சின்னு கேட்கிறிங்களா?

அது வந்துங்க....

நான் வந்தவுடன் என்னை பரிசோதித்த நர்ஸ் மிக மிக அழகானவர். அவர் மிக மென்மையானவர் சிரித்த முகத்துடன் நலம் விசாரிப்பவர். அப்படிபட்ட அழகு தேவதையான அந்த நர்ஸ் எனது கையை மென்மையாக பிடித்து சிரித்தபடி என் முகத்தை பார்த்தவாறே இருந்தால் யாருக்குதான் பிளட் பிரஷர் ஏறாதுங்க....
இப்படி செக்கப் பண்ணுணா பிளட் பிரசர் ஏறாம வேற என்ன பண்ணும் மக்கா

இது கூட தெரியாத அந்த டாக்டர் உப்பை குறை டென்ஷன் ஆகாதே என்று அட்வைஸ் சொன்னால் யாருக்குதான் கோபம் வராதுங்க.

நீங்களே ஒரு நியாம் சொல்லுங்க...நான் டாக்டர் மேல் கோபபட்டது தப்பா?????/


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

14 comments :

 1. இதை இங்கு படிக்கும் சிலருக்கு
  நாமும்தாம் அதிக பீஸ் கொடுத்து
  பரிசோதனை செய்து கொள்கிறோம்
  நமக்கு மட்டும் ஏன் வயதான நர்ஸ்களே
  வாய்க்கிறார்கள் என எண்ணியும்
  பிரஷர் கூட சந்தர்ப்பம் அளித்துவிட்டீர்களே
  வழக்கம்போல் சுவாரஸ்யமான பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உங்கள் கருத்தை படித்து வாய்விட்டு சிரித்துவிட்டேன். என் மனைவி என் பதிவை படிப்பதைவிட அதற்கு நீங்கள் என்ன கருத்து சொல்கீறிர்கள் என்பதைதான் முதலில் படித்துவிட்டு அதன் பிறகுதான் பதிவையே படிப்பாள்.

  ReplyDelete
 3. ஆஹா ஆஹா - இப்படி செக் அப் பண்னீனா பிரஷ சும்மா கும்முன்னு ஏறுமே

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா அதே நேரத்தில் டாக்டர் பில்லும் சும்மா கும்முனு ஏறும்ம்ம்ம் ஒகே தானா

   Delete
 4. சர்தான் உங்களின் கோபம்

  ReplyDelete
  Replies
  1. அட நீங்களாவது என் கோபத்தை புரிஞ்சுகிட்டத்தற்கு நன்றி

   Delete
 5. உங்க மனைவிடம் கொஞ்சம் பேச வேண்டுமே.

  ReplyDelete
  Replies
  1. பேச வேண்டுமா அல்லது போட்டுத்தரவேண்டுமா?

   Delete
 6. ஹா ஹா ஹா..

  முதல்ல போட்டுருந்த நர்ஸ் படத்தை பார்த்ததுமே நான் உசாராயிட்டேன் இப்பிடித்தான் ஏதாவது இருக்கும்னு கலக்குங்க :D

  ReplyDelete
  Replies
  1. அப்ப உங்களுக்கு பிரஷர் ஏறலையா?

   Delete
 7. வணக்கம் சார்,இந்த பதிவை படித்ததில் எனக்கும் பிரஷர் ஏறினது என்னவோ உண்மைதான்,நல்ல பதிவு வாழ்த்துக்கள்!


  உண்மைவிரும்பி.
  மும்பை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆமாம் என்ன சார் பதிவுகள் எழுதுறதை அப்படியே நிறுத்தீட்டீங்க

   Delete
 8. ப்ளட் ப்ர்ஷரை ஏத்தி ஃபீஸை புடுங்கறதுதானே டாக்டோரட ஐடியா. அதுக்கும்தானே அழகான நர்ஸ்

  ReplyDelete
  Replies
  1. சில இடத்திலே அழகாக போடாமலே அதிக அளவு கறக்கும் டாக்டர்கள் உண்டு

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog