உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, April 4, 2017

ஹிந்தியை இப்படி எளிதாக தமிழர்கள் மீது திணிக்கலாம்

ஹிந்தியை இப்படி  எளிதாக தமிழர்கள் மீது  திணிக்கலாம்...


1. தமிழில் வரும் திரைப்படங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைத்தால் மத்திய அரசு வரி விலக்கு கொடுக்கலாம்.

2. டாஸ்மாக் கடைகளில் ஹிந்தியில் சரக்கு கேட்பவர்களுக்கு 10 சதவிகதம் தள்ளுபடி

3. கடைகளின் பெயர்களை ஹிந்தியில் வைத்தால் வரி விலக்கு

4. ஹிந்தி பேசும் மாநிலங்களில் கஷ்டப்படும் வெள்ளை நிறத்தில் இருக்கும் பெண்களை தமிழகத்திற்கு அனுப்பி தமிழ் ஆண்களை காதல் வலையில் விழ வைக்க செய்யலாம்.

5 மத்திய அரசு பதவிகளுக்கு தமிழ் ஆட்களை மட்டும் தேர்தெடுத்து அவர்களை வட மாநிலங்களில் மட்டும் வேலைக்கு வைக்க வேண்டும்.


6. வட நாட்டு தொழிலதிபர்கள் தங்கள் கம்பெனிகளுக்கு ஆட்களை எடுக்கும் போது தமிழர்களை மட்டும் எடுக்க வேண்டும் அப்படி சேர்பவர்களுக்கு ஹிந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் போனஸ் கொடுக்க வேண்டும்


7, பிரபல நடிகர் நடிகைகளை வைத்து டிவியில் ஹிந்தி க்ளாஸ் எடுக்கலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள் பிரபல நடிகர் நடிகை அமர்ந்து டின்னர் சாப்பிட வாய்ப்பு கொடுக்கலாம்..

8. மோடிஜி வெளிநாடுகளுக்கு டூர் போகும் போது கூடவே தமிழர்களை விமானத்தில் அழைத்து போய் ஹிந்தி கற்று கொடுக்கலாம்.


9. ஹிந்தி கற்றுக் கொண்ட தமிழர்களுக்கு பிரபல ஹிந்தி நடிகர் நடிகைகளுடன் நடிக்க வாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கலாம்

10 ஹிந்தி பேசும் தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டும் நாட்டின் உயர்ந்த விருதுகளை தரலாம்.


11. ஹிந்தி கற்றுக் கொள்ளும் தமிழ் பதிவர்களின் கதைகளையும் கவிதைகளையும் பிரபல நாளிதழ்களில் வெளியிட வாய்ப்புக்கள் கொடுக்கலாம் அல்லது அவர்களின் படைப்புகளை புத்தகமாக தமிழிலும் ஹிந்தியிலும் அரசாங்கம் இலவசமாக  பிரிண்ட் செய்து கொடுக்கலாம்..

இப்படி எல்லாம் அரசாங்கம் ஹிந்தி கற்றுக் கொடுத்தால் படிப்பது தப்பு இல்லை ஆனால் உன்னிடம் தமிழ் உண்ர்வு உண்மையாக இருந்தால் தமிழை நன்றாக கற்றுக் கொண்டு ஹிந்தி அல்லது இங்கிலீஸ் தெரிந்தாலும் தமிழர்களை பார்க்கும் போது தமிழில் மட்டும்தான் பேசுவோம் நாம் படைக்கும் படைப்புகளை தமிழில் மட்டுமே தருவோம். தமிழில் விஞ்ஞான மருத்துவ பொறியல் துறைகளை சார்ந்த மிக தரமான புத்தகங்கள் எல்லோருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்வோம் அப்ப்டி செய்தால் எந்த மொழி கற்றாலும் தமிழ் வருங்காலங்களில் தலை நிமிர்ந்து இருக்கும்


டிஸ்கி : ஹிந்தியை எதிர்க்கிறது தப்பு இல்லைதான் ஆனால் அதே நேரத்தில் தமிழை எழுத படிக்க உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொள்ளுங்கள் தமிழர்களே

அன்புடன்
மதுரைத்தமிழன்
#StopHindiChauvinism

9 comments :

 1. கோரிக்கை நன்று.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எந்த கோரிக்கை நன்று என்று சொல்லவில்லை அதனால் எல்லா கோரிக்கையும் நன்று என்று எடுத்து கொள்கிறேன்

   Delete
 2. ஹாஹா :) எனக்கு அங்கே முகப்புத்தகத்தில் நான் இல்லாததால் லேட்டஸ்ட் ட்ரெண்ட் டாபிக் என்னனு புரியலை .. ஹிந்தி ஜெர்மன் பிரென்ச் போல் ஒரு மொழி பல மொழிகளை கற்பதில் தவறில்லை ..சாப்பாட்டு இலையில் சாதம் தமிழ் குழம்பும் தமிழ் கூட்டு பொரியலா மற்ற மொழிகளை வைச்சுக்கலாம் ..கூட்டை மட்டும் சாப்பிட யாரும் சொல்ல கூடாது அது போல தான் ஹிந்தி
  ஆனா அதை .. வற்புறுத்த திணிக்க கூடாது ..அந்த நாலாவது பாயிண்ட் விழுந்து புரண்டு சிரிக்கிறேன் அதென்ன வெள்ளையான பெண்கள் கர்ர்ர்ர்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வீட்டு தரைக்கு சேதம் ஏதும் ஆகவில்லையே

   Delete
  2. யெஸ் ஏஞ்சல் உங்க கருத்து டிட்டோ..

   மதுரைத் தமிழன்..ஹஹஹ்...லொள்...!!!

   கீதா

   Delete
 3. உங்கள் கோரிக்கைகளில் எண் 4 ஐத்தான் தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் செயல்படுத்திக்கொண்டு வருகிறார்களே! Overall, உங்கள் திட்டம் எனக்கும் ஏற்றதுதான்!

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies


  1. நாலுவது திட்டம் உங்களுக்கு ஏற்றவை என்று சொல்கீறீர்களா? அப்ப சரி எங்க வீட்டு பக்கம் வாருங்கள் ஒன்றை பிடிச்சு கொள்ளலாம்

   Delete
 4. ஹஹஹஹஹ் இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் நீங்க தாங்கொடுப்பீங்க!!! மோடி பார்த்தார்னா கண்டிப்பா உங்கள அவருக்கு பெர்சனல் செக்ரட்டரியா போட்டுடுவாரு!!

  4 செம...அது போல 7, 9..

  4 அல்ரெடி இங்கு வட இந்திய குல்ஃபிக்கள் (அப்படித்தான் தமிழ் பத்திரிகைகள் இவர்களைச் சொல்லுது ஹிஹிஹி)திரை உலகில் சாம்ராஜ்யம் செய்கிறார்கள் தாங்க்ஸ் டு நம்ம டைரக்டர்ஸ் அண்ட் ப்ரொட்யூசர்ஸ்....9 இங்குள்ளவங்க கண்ணுல பட்டுச்சுனா கண்டிப்பா வொர்கவுட் ஆகும் ஹஹஹ்

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog