ச்சீ இப்படியும் ஒரு ஆண்மகனா? The Affair
நேற்று ஒரு குறும்படம் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது... அந்த படத்தை பாதிவரை பார்க்கும் போது ச்சீசீசீ இப்படியும் ஒரு ஆண்மகனா என்று நினைத்து மனன் கூனி குறுகியது ஆனால் அந்த படத்தை பார்த்து முடித்த பின் ஆஹா இப்படியும் ஒரு ஆண்மகனா என்று மனம் குதுகலித்து பெருமை அடைந்தது. இன்னும் இப்படிபட்ட ஆண்கள் இந்த சமுகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
அந்த காணொளி இதுதான்
The Affair - New Tamil Short Film 2017 | Se Pictures | Surrya M. Narayanan https://www.youtube.com/watch?v=C_mVB6ng5lU
எடுத்தவிதம் கொண்டு சென்றவிதம் & முடித்த விதம் மிக அருமை....அதை எடுத்தவர்களுக்கு பாராட்டுக்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
பிறகு கணினியில் காண்கிறேன் நண்பரே
ReplyDeleteமனசை என்னமோ செய்தது மிகவும் நெகிழவைத்த கதை . லிவிங்ஸ்டன் மிக பொருத்தம் அந்த கதாபாத்திரத்துக்கு .இப்படியும் பலர் இருக்குகிறாரகள் ..
ReplyDeleteஇந்த வீடியோ எனக்கும் கிடைத்தது, பார்த்தேன், மிக அருமையாக எடுத்திருக்கிறார்கள், ஆனா என் கணிப்பின்படி, எதையும் வீட்டில் சொல்லி வெளிப்படையாக இருந்திருக்கலாம், இப்படியான விசயங்களில் சேபிறைஸ் எல்லாம் எதுக்கு, கலந்து பேசி வீட்டில் சொல்லியிருந்தால், பிள்ளைகள் மனதில் தப்பு எண்ணம் வர வாய்ப்பில்லையே. பிள்ளைகள் அப்படி எண்ணுவதும் சகஜம்தான். குடும்பத்தில் கொமினிகேஷன் குறைபாடு இருப்பின் இப்படித்தான் ஆகும்.
ReplyDeleteமியாவ் ..இந்த புரிதல் நிறைய பேருக்கு இல்லை ..பிள்ளைகளுக்கு பெற்றோர் மேலே ஒரு பொஸசிவ்னஸ் குறிப்பா நம் நாட்டு மக்கள் எல்லாருமே ஆண்பெண் நட்பையே தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள் .அதுவும் அம்மாவின் முதல் கணவர் மகள் எனும்போது இன்னும் எகத்தாளம் வெறுப்பு கூடும் அந்த காணொளியில் பாருங்க தாயின் potty யைக்கூட வேலைக்காரியை விட்டு எடுக்கச்சொல்லும் மகன் ..நான் கேட்கிறேன் எல்லா நாளும் நாம எதற்கு நமது நிலையை அனைவரிடமும் விளக்க வேண்டும் ..அதுவும் கொஞ்சமும் பரந்த மனப்பான்மையில்லா மனிதர்கள் எதையும் குறுகிய மனப்பாங்குடன் பார்ப்பவர்கள் தான் இங்கு அதிகம் :( ..இங்கு என்று சொல்வது உலகில்
Deleteகுழந்தைகள் பெற்றோர்களிடையே கம்யூனிகேசன் மிக முக்கியம் அப்படி நடந்து இருந்தால் இப்படி தவறான எண்ணம் ஏற்பட்டு இருக்காது. இந்த மூவியில் வரும் லிவிங்க்ஸ்டன் இந்த அளவிற்கு நல்ல மனதுடையவனாக இருக்கும் போது அவன் சொந்த குழந்தைகளிடம் மிகவும் அன்பாகவே இருந்திருக்க வாய்ப்பு அதிகம் அப்படி இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டு இருக்காது என்பது உண்மையே...
Deleteஇங்கேதான் இதை இயக்கிய இயக்கியவர்கள் கோட்டைவிட்டு இருக்கிறார்கள்
இந்த காணொளியில் பெற்றோர்களின் பிரச்சனையில் தலையிடும் குழந்தைகள் கடைசியில் யார் அம்மாவ வைத்து கொள்வது என்று வரும் போது நீ முதலில் ஆறு மாதம் வைத்து கொள் என்று இருவரும் ஒருவரை ஒருவர் சொல்லும் போது அவர்கள் இருவருக்கும் பிரச்சனையை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. இவர்களை நம்பி அந்த அம்மா போவதை விட கணவண் தவறான உறவில் இருந்தாலும் தனக்கு முடியவில்லை என்ற போதும் தன்னை அக்கறையுடன் கவனித்து கொள்பவனுடன் வாழலாம் என்றுதான் நான் சொல்வேன்
Deleteஎனக்கென்னமோ இதில் தந்தையாக வருபவர் நடந்தமுறை சரி எனத் தோணவே இல்லை, என்னதான் இருந்தாலும் வயதுக்கு வந்த ஒரு பெண்பிள்ளையை இப்படி தன் பாட்டுக்கு கூட்டிப் போவது , வாயைத் துடைத்து விடுவது இதெல்லாம் ஓவராகவே இருக்கு.
Deleteதன் மனைவியிடம், குழந்தைகளிடம் சொல்லி நேர்மையாக சேர்த்து வீட்டுக்குள் எடுத்திருக்கலாம், இது, தன் பிள்ளைகள் திட்டினாலும் ஓகே என, அவர்கள் கதறக் கதற இன்னொரு பிள்ளையை இப்படி அழைச்சுக்கொண்டு கோப்பிக்கடை எல்லாம் சுத்தியது பாராட்டத் தக்க செயல் அல்ல.
முடிவில்கூட என்ன பண்றார், தன் கண்ணையா கொடுக்கிறார்ர்.. மனைவி இறக்கப்போறாவே எனும் கவலைகூட இல்லாமல் மனைவியிடம் சொல்லாமல், பெர்மிசன் கேட்காமல், தானே முடிவெடுத்து, கண் தானத்துக்கு கையெழுத்து வாங்குறார்ர்.. இதெல்லாம் தப்பாகவே எனக்கு தோணுது.
ஐயோ சகோ அழுதுட்டேன் கடைசில!...
Deleteகீதா
அதிரா, ஏஞ்சல் கரெக்ட் புரிதல் வேண்டும் ஆனால் நம்மூரில் இது கொஞ்சம் குறைவுதான்...ஏஞ்சல் சொல்லியிருப்பது போல் ஒரு ஆண் பெண் நட்பை அப்படித்தான் பார்க்கிறது சமுதாயம். குழந்தைகள் அதுவும் வளர்ந்த குழந்தைகள், பெரிய குழந்தைகளே மெச்சூர்டாக இல்லாமல், யோசிக்காமல், தெரிந்துகொள்ளாமல் தங்கள் தந்தையை இப்படி நினைப்பது என்பது என்னைப் பொருத்தவரை கதையில் லூப் ஹோல்...மதுரைத் தமிழன் சொல்லியிருப்பது போல் தந்தையை நல்லவராகக் காட்டியிருப்பது அந்தக் குழந்தைகளுக்குத் தன் தந்தையைப் பற்றி இப்படி டக்கென்று யோசிக்காமல் நினைப்பது என்பது ஒரு சிறு சறுக்கலோ என்று எண்ண வைக்கிறது...அங்குதான் சகோ சொல்லியிருப்பது போல் சறுக்கல்..
Deleteகீதா
ஆனால் நல்லமேக்கிங்க்...இப்படி ஒரு ஆண் இருப்பாரா என்று எண்ண வைக்கிறது!!!
Deleteகீதா
இல்லை கீதா, இந்த சமுதாயத்தை விடுங்கோ அது காற்றடிக்கும் பக்கத்துக்கு சாயும் சமுதாயம்.. அதுக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை, நாம் மனதுக்கு நேர்மையா இருக்கோணும் அதுதான் தேவை.
Deleteஆனா இங்கு நட்பு என்பதை தாண்டி, மனைவிக்கு, பிள்ளைகளுக்கு தெரியாமல் இவருக்கு என்ன நட்பு வேண்டிக்கிடக்கு?, வீட்டில் சொல்லி விட்டு என்னவும் பண்ணலாமே.. பிள்ளைகள் இவ்ளோ தூரம் சண்டை பிடிக்கவும் சொல்லாமல் அப்படி என்ன அக்கறை?.. அதுவும் மனைவி ஒரு மாதம்தான் உயிரோடு இருப்பா எனில் அவவை சந்தோசப்படுத்த வேண்டாமோ? இப்படியா அழ வைப்பது....
சே..சே.. யார் என்ன சொன்னாலும் என் கையில் கிடைச்சார் எனில் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்...
தந்தையே ஏற்றுக் கொண்டால், தாயில் தவறில்லை என்பதை பிள்ளைகள் ஏற்றுக் கொள்வார்கள்.... இப்படி எல்லாம் ஒளிச்சு, தாய் இறந்த பின், உண்மை அறிந்து பிள்ளைகள் திட்ட மாட்டினமோ அப்போ?.. சரி சரி விடுங்கோ.. ஹா ஹா ஹா இதுவும் கடந்து போகும்:).
அற்புதமான காணொளி
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
என்னைப் பொருத்தவரை மகன் மகளிடம்
தெரிவிக்காததே சரியெனப்படுகிறது
மனைவியிடம் அதீத அன்பு கொண்டவன்
நிச்சயம்தன் மனைவி குறித்த பலவீனத்தை
மகன் மகளிடம் கூடத் தெரிவிக்காது இருக்கவே
அதிகச் சாத்தியம்
தெரிவித்து என்ன ஆகிவிடப் போகிறது
இப்போது தந்தையுடன் முரண்படுவதைப் போல
தாயுடன் முரண்படுவர் .அதுதானே நேரும் இல்லையா
நல்ல காணொளி. தளபதி, கர்ணன் ஏன், பழைய பட்டாக்கத்தி பைரவன் போன்ற படக்கதைகளின் உல்டா! இன்னும் சொல்லப் போனால் மகாபாரதக் கதை! மகாபாரதத்தில் இல்லாத கதைக்க கருவே இல்லை தெரியுமோ!
ReplyDeleteஅற்புதமான குறும்படம்... மனதை என்னவோ செய்து விட்டது மதுரைத் தமிழன்.
ReplyDeleteபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடு மிகவும் அருமை.
ReplyDelete