Sunday, April 30, 2017

#modi #dawoo ibrahim
இப்படியெல்லாம் பயமுறுத்தலாமா?
மோடி போட்ட திட்டத்தால்தான் தாவூத் இப்ராஹிமுக்கு மாரடைப்பு ஏறபட்டதாமே?

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஆபத்தான நிலையில் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தார்.. மும்பை குண்டு வெடிப்பு உட்பட, பல்வேறு வழக்குகளிலும், இவர் தேடப்பட்டு வருகிறார்.இந்நிலையில், இதயநோய் காரணமாக, கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் அவரது உடல்நிலை உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்த தகவல்கள் உண்மைதானா என்று பாஜக தரப்பில் விசாரித்து போது அவர்கள் இந்த தகவல்கள் உண்மைதான் என்று கூறிய தோடு மேலும் ஒரு ரகசிய செய்தியையும் தெரிவித்தார்கள் அந்த செய்திகளின் படி இவருக்கு இப்படி மாரடைப்ப்பு ஏற்பட்டதற்கான காரணமே மோடிதான் என்று கூறினார்கள்


மேலும் அவர்கள் கூறியதாவது தாவூத் காரச்சியில் வாழ்ந்து வந்தாலும் அதனை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. தாவூத் இருக்கும் இடத்தில் சென்று சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ணாலாம் என்றாலும்  தாவூத் வீட்டின் அருகில் வசிக்கும் பல அப்பாவி குடும்பத்தினர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் கருணை மனம் கொண்ட மோடி ஒரு புதிய திட்டத்தை வகுத்தார். அந்த திட்டத்தின்படி தாவூத் இப்ராஹிமிம் இமெயிலுக்கு தினமும் மோடியின் 56 இஞ்ச்  போட்டோவை தினமும் அனுப்பி அவரை பயமுறுத்தியது அல்லாமல் அவரை பிடித்து மாட்டுக் கறிக்கு தடைவிதிக்க்பப்பட்ட உபி ஜெயிலில் அடைத்து விடுவதாகவும் தகவல் அனுப்பினார்கள். இப்படி பட்ட கொடுமையான ஜெயியில் மாட்டிக் கொண்டால் என்னாவது என்று தினம் தினமும் பயந்து வாழ்க்கை நடத்தியதால் அவருக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும் அதனால் அவர் அதிககாலம் வாழ மாட்டார் என்றும் சொன்னார்கள். மோடியை பலரும் பலவாராக பேசிக் கொண்டிருந்தாலும் மோடி தன் திறமையால்  தேசவிரோத செயலை செய்பவர்களுக்கு இப்படி மறைமுக பல திட்டங்களை தீட்டி தண்டனை கொடுத்து வருகிறார்

இதெல்லாம் தெரியாத தமிழர்கள் அவரை கண்மூடி தனமாக  எதிர்க்கிறார்க என்று பாஜகவினர் வருத்ததுடன் சொன்னார்கள். அதனால் மக்கலே இன்னும் மோடி சொன்ன வாக்கை காப்பாற்றாமல் இருக்கிறார் என்று எண்ணாமல் அவருக்கு நம் ஆதரவை கண்டிப்பாக தர வேண்டும்..


அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : ஒரு வேளை  உடல் நலக் கோளாறினால் தாவூத் இப்ராஹிம் இறக்க நேரிட்டால் அதன் பின் இந்திய அரசு இறந்த ஒருவரின் மீது குற்றம் சுமத்த முடியாது என்பதால் அவர் குற்ற்ற மற்றவர் என்று சொல்லி தீர்ப்பு அளித்து வழக்கை முடித்து கொள்ளும் அதன் பின் அவரும் ஜெயலலிதாம் மாதிரி தியாகி ஆகிவிடுவார் அதன் பின் மும்பையில் அவருக்கு ஒரு நினைவிடம் வைத்துவிடலாம்

10 comments:

  1. :)))))))))

    தாவோதுக்கு மாரடைப்பு என்பதையே நம்ப முடியவில்லை.

    ReplyDelete
  2. நான் நம்பிட்டேன் நண்பரே.

    ReplyDelete
  3. அருமையான தஹவல்

    ReplyDelete
  4. பாகிஸ்தானில் பின் லாடனையே யாருக்கும் சேதம் இல்லாமல் கொன்ற அமெரிக்காவிடம் மோடி பாடம் கற்க வேண்டும்

    ReplyDelete
  5. இப்படியும் நடக்கலாம்

    ReplyDelete
  6. நீங்களோ இந்தியாவை விட்டு விலகிப் போன ஒரு அமெரிக்கன். உங்களுக்கு எதற்கு இந்தியா பற்றிய நக்கல்? உங்களுக்கு இந்தியா (இந்தியர்) மீது இருப்பது அக்கறை இல்லை.. ஏளனம். This is some form of superiority complex.

    அந்நியர் வந்து கேலி செய்யும் அளவுக்கு இந்தியா (இந்தியர்) தாழவில்லை. உங்கள் விமர்சனங்களை Trump போன்ற தலைவர்களைப் பார்த்து செய்யாமல் இருப்பதற்கு காரணம் சொந்த நாட்டின் (அமெரிக்காவின்) மீது இருக்கும் விசுவாசமா.. இல்லை டாலர் தரும் ஆனந்தமா? எதுவோ இருந்துவிட்டுப் போகட்டும். பகடி என்ற பெயரில் நீங்கள் செய்யும் இது போன்ற விமர்சங்களை நிறுத்தவும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்கள் சொல்வது எப்படி இருக்கிரது என்றால் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தவன் கிராமத்தை பற்றி பேசினால் கிராமத்தை விட்டு சென்னைக்கு சென்ற உனக்கு கிராமத்தை பற்றி பேச தகுதி இல்லை அது போல தமிழகத்தை விட்டு கர்நாடகா ஆந்திரா டெல்லி சென்றவர்கள் தமிழகத்தை பற்றி பேசினால் தமிழகத்தை விட்டு வெளியே சென்ற உனக்கு தமிழகத்தை பற்றி பேச அருகதை இல்லை என்று சொலுவது போல இருக்கிறது.... நண்பரே நான் விமர்சிப்பது பகடி செய்வது எல்லாம் அனைத்து அரசியல்தலைவர்களைத்தான். யாரிடமும் எதையும் எதிர்பார்த்து எழுதுவதில்லை...ஒருவேளை நான் எழுதுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இங்கு வந்து படிக்க வேண்டாம் அதைவிட்டு விட்டு எதை எழுத வேண்டும் கூடாது என்று சொல்ல வேண்டாம்

      Delete
  7. ஹஹஹஹஹஹ் மதுரை சகோ உங்கள் மூளையில தனி ரூம் இருக்கு போல...எப்படி எல்லாம் மாரடைப்பு வர வைக்கறீங்கப்பா...அது சரி அப்ப பின்லேடன் சமயத்துல மோடி பிரதமரா இருந்திருந்தா அமெரிக்கா கஷ்டமே பட்டிருக்க வேண்டாமோ...??!!! மோடியே இது போல யாருக்கும் தெரியாம முடிச்சுருப்பாரோ ஹிஹிஹிஹி.

    கீதா

    ReplyDelete
  8. ஒரு வேளை மதுரைத் தமிழன் சகோ எழுதுவதை எல்லாம் யாரோ மோடிக்கு மொழிபெயர்த்துக் கொடுக்கிறார்கள் போலும் ஹஹஹ்...மட்டுமல்ல பின்லேடன் சமயத்துல கூட மோடி பிரதமரா இருந்திருந்தா மதுரை நிறைய ஐடியா ரகசியமா கொடுத்திருப்பீங்க போல ...என்ன நான் சொல்லுறது சரிதானே சகோ....

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.