தமிழர்களுக்காக குரல் கொடுப்பது தேசவிரோதமே
ஊழல் குற்றசாட்டு இல்லாத தலைவரைதான் ராசியில்லாத தலைவர் என்று தமிழக மக்கள் கேலி செய்கின்றனர்
தன் பதவியை தக்கவைக்கவும் தான் செய்த ஊழல்களில் இருந்து தப்பித்து கொள்ளவும் கலைஞர் மாறி மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டால் அது சாணக்கியம். ஆனால் எந்த வித ஊழல் குற்றசாட்டுமின்றி மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து அதற்காக மட்டும் கூட்டணி வைத்து கொண்டால் அவர் ராசியில்லாத தலைவர் என்று கேலி செய்யும் மனநிலையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவும் கலைஞரும் எங்கே நம்மைவிட ஒரு நல்ல தலைவன் மக்களுக்கு கிடைத்துவிடுவானே என்று அவர்கள் பகடைகாயாக வைகோவை பயன்படுத்தி ஒரு கேலிக்குறியவராக மாற்றிவிட்டார்கள் கலைஞரும் ஜெயலலிதாவும் தமிழர்களுக்கு செய்த தீங்கைவிடவா வைகோ மட்டுமல்ல மற்ற தலைவர்கள் செய்து இருப்பார்கள் நன்றாக யோசிங்கள் மக்களே
திமுகவிலும் அதிமுகவிலும் எத்தனை எம்பிக்கள் தமிழகம் சார்பாக தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்காக அனுப்பட்டு இருக்கிறார்கள் . தமிழர்களுக்கு பிரச்சனைகள் என்று வரும் போது இந்த எம்பிக்கள் குரல் கொடுக்காமல் அடங்கி கிடக்கிறார்கள் இன்று வரை. ஆனால் வைகோவை பாருங்கள் அவரை எம்பியாக தேர்தெடுத்த போது எப்படி எல்லாம் குரல் கொடுத்தார் என்பதை படித்தவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள், பாராளுமன்றத்தில் வைகோவின் பேச்சை கேட்டு ஒடிய ராஜிவ் காந்தியின் செயல் பாராளுமன்ற வரலாற்றில் உண்டு அது போல வாஜ்பாய் போன்ற தலைவர்களாலும் பாராட்டுபட்டு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயரை பெற்றவர்தான் வைகோ இப்படி மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவரை மீண்டும் வெற்றி பெற செய்து அனுப்பாமல் அவரை படுகுழியில் தள்ளிவிட்டு அவரை ராசியில்லாதா தலைவர் என்று கேலி செய்கின்றது தமிழ் சமுதாயம்.
நமது தமிழ் விவசாயிகள் டில்லியில் 20 நாட்களுக்கு மேல் போராடுகிறார்கள் ஆனால் நம்மால் தேர்தெடுக்கப்பட்ட 50 க்க்கும் மேற்பட்ட எம்பிக்களில் ஒருவர் கூட அவர்களுடன் உட்கார்ந்து போராடவில்லை அனாதையாக அந்த விவசாயிகள் போராடுகிறார்கள் ஆனால் இந்த 50க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு பதில் வைகோவை தேர்ந்தெடுத்து அனுப்பி இருந்தால் இப்போது நிலைமையே வேறாக இருக்கும்,
விடுதலை புலிகளுக்காக குரல் கொடுத்தால் தேசவிரோதி என்று வைகோவை சொன்னால் இன்று தமிழகத்தில் இருக்கும் 20 25 வயதிற்கு மேல் உள்ள அனைத்து தமிழ் மக்களும் தேசவிரோதிகள்தான்
ஊழல் செய்த தலைவர்கள் ஜெயிலுக்கு செல்ல வேண்டியதற்கு பதிலாக கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு குரல் கொடுத்த காரணதிற்காக தேசவிரோத குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்று இருக்கிறார்...
ஆமாம் இந்திய தேசத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் அது தேசவிரோதம்தான் அது தெரியாத வைகோவை நாம் எப்படி தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும்
அதனால் சொல்லுகிறேன் தமிழர்களுக்கு தேவை ஹெச்.ராஜா போன்ற தலைவர்களே தவிர வைகோ அல்ல
அன்புடன்
மதுரைத்தமிழன்
நண்பரே வைகோ திறமையானவரே, தைரியமாக கேள்வி கேட்க கூடியவரே ஆனால் அவரே திராவிடக் கட்சிகளில் மாறி, மாறி சேர்ந்து தன்னை டம்மி பீஸாக்கி கொண்டாரே...
ReplyDeleteஅவர் டம்மி பீஸ் அல்ல அவருக்கு முழு ஆதரவு தராமல் நாம்தான் அவரை டம்மி பீஸ் என்று சொல்லி, நாம் டம்மி பீஸாக ஆகி இருக்கிறோம். ஆனால் என்ன நாம் அதை ஒத்துக் கொள்வதில்லை அவ்வளவுதாங்க
Deleteஇரண்டு கட்சிகளைப்பற்றி அறிந்திருந்தும் அதில் போய் சேர்ந்தது தவறுதானே ?
ReplyDeleteநியாயமானதை எழுதியிருக்கீங்க. வைகோ நல்லவர்தான். அவருக்கு உரிய இடத்தைத் தமிழக மக்கள் கொடுக்கவில்லை.
ReplyDelete