பருவப் பெண்கள் சாப்பிடச் சுவையான சத்தான உணவு ( ஆண்களும் சாப்பிடலாம் )
சிறுவயதில்
அம்மா தனியாகக் கஷ்டப்பட்டுச் சமைப்பார்கள் அந்த சமயங்களில் அம்மாவிற்கு
உதவியாக எடுபிடியாக உதவிகள் செய்வதுண்டு. அப்படிச் செய்யும் போது கண்ணால்
பார்த்து கற்றுக் கொண்டதுதான் என் சமையல். ஒரு சமயம் அம்மா உடல் நிலை
சரியில்லாததால் ஹாஸ்பிடலில் இரண்டு வாரம் அட்மிட் பண்ணியதால் அந்த நேரத்தில்
ஹோட்டலில் வாங்கி சாப்பிட தொடங்கினோம் எத்தனை வேளைதான் ஒட்டலில் சாப்பிடுவது
பணமும் கரையத் தொடங்கியது. அதனால் நானே சமைக்கிறேன் என்று சமைக்க
ஆரம்பித்தேன் அப்போது எனக்கு வயது 13 அல்லது 14 இருக்கும். அப்படி
ஆரம்பித்ததுதான் என் சமையல் அனுபவம்.. அம்மாவிற்கு உதவி செய்ததால் பல
விசயங்கள் ஞாபகத்திற்கு வந்து அதன்படியே செய்ய ஆரம்பித்தேன் வீட்டில் உள்ள
எல்லோருக்கும் என் சமையல் பிடித்து விட்டது
அப்படி
நான் கற்ற சமையலிலிருந்து இன்று உங்களுக்காக ஒரு சமையல். அதுதான்
உளுந்து சாதமும் மீன் குழம்பும். இந்த உணவு பருவ வயதில் இருக்கும்
பெண்களுக்கு மிகவும் நல்லது. என் வீட்டுக்கு அருகில் உள்ள சிறு பெண்கள்
வயசுக்கு வரும் போது என் அம்மா அவர்களுக்கு உளுந்து சாதம், உளுந்த வடை,
உளுந்து களி என்று ஒவ்வொரு நாளும் செய்து கொடுப்பார்கள். இப்படி பக்கத்து
வீட்டுக்காரர்களுடன் சாதி மதம் பாராமல் பழகி வந்ததது அந்தகாலம் .
உளுந்து சாதமும் மீன் குழம்பும் செய்யும் முறையைப் பார்க்கும் முன் அதனால் கிடைக்கும் பயன் கள் என்ன வென்று பார்ப்போம்
உளுந்து
சாப்பிட்டால் மருந்து வேண்டாம் என்று சொல்லுவார்கள். அதனால் உளுந்தால்
தாயரிக்கப்படும் உணவைச் சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் வலிமை பெறும் உடல்
குளிர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உளுந்து நல்ல ஒரு
உணவு. அதுமட்டுமில்லாமல் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கவும்
பெண்களின் இடுப்பு வலிமை பெறவும் பக்கபலமா இருக்கிறது குழந்தை பெற்ற
பெண்ணுக்குப் பால் சுரப்பை அதிகமாக்குகிறது. தினமும் நாம உளுந்த உணவில் சேர்த்தா
மலச்சிக்கல், வயிறு உப்புசம் மாதிரியான பிரச்சனையெல்லாம் தீரும். அப்புறம்…
இரத்தத்துல கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதயத்தை பலப்படுத்துதும் உளுந்தை
காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது
விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
இப்போது மதுரைத்தமிழன் பாணியில் உளுந்து சாதம் செய்வது எப்படி?
2 கப் ரைஸ்
1 கப் உளுந்து
3 அல்லது 4 பச்சை மிளகாய்
3 அல்லது 4 உரித்த வெள்ளைப்பூண்டு
ஒரு ஸ்பூன் மிளகு தூள் (கொர கொர என்று இருக்கவேண்டும் ) அல்லது முழு மிளகைப் பயன்படுத்தலாம்
தேவையான அளவு உப்பு.
இவை
எல்லாவற்றையும் குக்கரில் போட்டு மூன்று விசில் வந்ததும் இறக்கி அதை
மிக்ஸ் செய்யவும் எனக்கு இந்த சாதம் சற்று அதிகமாகக் குழைந்து இருக்க
வேண்டும் என்பதால் மேலும் சில விசில் சத்தம் வரும் வரை காத்து இருந்து
இறக்குவேன்.
இந்த
சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள மீன் குழம்பு அல்லது கருவாட்டுக் குழம்பு அல்லது
எள்ளு துவையல் அல்லது புளிக் குழம்பு மிகவும் நன்றாக இருக்கும்.
எனது அடுத்த பதிவில் சுவையான மேல் சொன்ன குழம்பு வகைகளை வெஜ் மற்றும் நான் வெஜ் காரர்களுக்காகத் தருகிறேன்.
என்னடா
தீடிர் என்று இந்த மதுரைத்தமிழன் இந்த பதிவைப் போடுகிறான் என்று
நினைப்பவர்களுக்கு. குழந்தைக்கு ஸ்பிரிங்க் விடுமுறை விட்டு இருப்பதால்
மாமி அலுவலகத்துக்கு போனவுடன் அவளுக்குத் தெரியாமல் இந்த மீன் குழம்பு பண்ணி
உளுந்து சாதம் பண்ணினேன். மாமி ஈவினிங்க் வீட்டுக்கு வந்து பார்த்தால்
இப்படிச் சமைத்த தடமே இல்லாமல் சாப்பீட்டுவிட்டு மீதி இருப்பவற்றை காராஜ்ஜில்
உள்ள ப்ரிட்ஜில் ஒழித்து வைத்து விட்டோம்
அதிரா
ஏஞ்சல் கீதா நிஷா உங்களுக்கு மாமியிடம் இதைச் சொல்லவில்லை என்றால் மண்டை
உடைந்துவிடும் என்று எனக்கு தெரியும் ஆனால் நீங்கள் சொன்னால் என் மண்டை
உடைந்துவிடும்... நல்ல வேளை மாமியின் போன் நம்பரை உங்களுக்குத் தராததால்
எவ்வளவு நன்மைகள் ஈஹீஹீ
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்ல வேளை, நான் 'பருவ' வயதில் இல்லை. மேலும், நான் அசைவம் உண்பதில்லை. எனவே இந்தப் பதிவிற்கு கமென்ட் போட இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDelete- இராய செல்லப்பா (சுற்றுப்பயணத்தில்) நியூ ஆர்லியன்ஸ்
Deleteஇன்றும் இளமையாகத்தான் இருக்கீறீர்கள் மேலும் உளுந்து சாதம் சைவ வகையை சார்ந்ததுதான் அதனால நீங்க தைரியமாக சாப்பிடலாம் இதை சாப்ப்பிட்டு பலம் பெற்று அப்படியே நீயூயாரக் பெண்களை கவர்ந்து இழுக்கலாமே
மனுஷன் நல்லா இருப்பது பிடிக்கலையா மதுரைத் தமிழன். அவர் பாட்டுக்கு சுற்றுப்பயணத்தில் ஜாலியா இருக்கிறார்.
Deleteஎனக்கும் தலைப்பைப் பார்த்தவுடனேயே, உளுந்தம் சாதமே, அசைவமான ஃபீலிங்... என்ன செய்ய.
இந்த பச்சப்பிள்ளையை அப்படியா நாக்குச்செத்துப் போக உங்காத்து மாமி ஆக்கிஅவிச்சு போடாமல் கொடுமைப்படுத்துவாள். மீன்கொழம்பு வாசனை மாமி மூக்கில் படல்ல எனில் என்ன அடுத்த வாட்டி நல்ல கருவாட்டுக்கொழம்பா வைச்சி கராஜில் இருக்கும் பிரிஜ்ஜில் ஒளிச்சி வையுங்க. அப்பயாச்சும் மாமி வாய்க்கு உருசியா உப்பு உறைப்பா சமைச்சு போடுவாங்களான்னு பார்க்கலாம்.
ReplyDeleteஉழுந்துடன் அரிசி சேர்ந்து சோறு சமைக்கலாம் என்பதை இந்த பதிவில் அறியத்தந்தமைக்கு நன்றி. எனக்கு உழுந்து சேர்ந்த எல்லா சாப்பாடும் பிடிக்கும், அதிலும் உழுந்தங்களி எனில் நானும் மகளும் விரும்பி உண்போம்.
அதெல்லாம் இருக்கட்டும், என்னாச்சு? எல்லோரும் தீடிரென கரண்டியும் சட்டியுமா பதிவு போட்டுகொண்டிருக்கிங்க. ஏஞ்சல் அவியல் அவிக்க நீங்கள் பொங்கல் பொங்குகின்றீர்கள்?
உங்கள மாதிரி அவர்கள் ட்ரூத் அமெரிக்காவிலும் நான் லண்டனிலும் ரெஸ்டாரண்ட் கேட்டரிங் துவங்க இப்போலிருந்து பிராக்டிஸ் செய்றோம்பா நிஷா :) நீங்கதான் எங்களுக்கு inspiration ஹா ஹா :)
Deleteநான் பிராக்டிஸ் எல்லாம் செஞ்சு முடிச்சுட்ட்டேன் நிஷா மனுசு வைச்சு பணம் உதவி செஞ்சால் உடனே ரெஸ்டராண்ட் அவர்கள் பெயரில் ஆரம்பித்துவிடலாம்
Deleteஎனக்கு சமைக்கவும் தெரியும் என்று நான் பதிவு போடுவதை பார்த்த ஏஞ்சல் மற்றும் அதிரா. நாங்களும் கிச்சன் உள்ளே போவோம் என்று காட்டி கொள்வதற்காக இப்படி கரண்டியும் சட்டியுமாக பதிவு போடுகிறார்கள்
Deleteமாமி உப்பு உரப்பாக நன்றாக சமைப்பார்கள் எனக்கு நான் நான்வெஜ் சாப்பிட மாட்டேன் எப்பாவது நான் வைக்கும் மீன் குழம்பும் மூட்டையும் மட்டும் சாப்பிடுவேன் எனக்கு பிடித்தது எல்லாம் சைவம் மட்டுமே நான் மாமிக்காக என்னை மாற்றிக் கொள்ளவில்லை சிறு வயதில் இருந்து நான் இப்படிதான்
Deleteமாமி வத்தல் குழம்பு மிகவும் அருமையாக வைப்பார்கள் சில நாட்களுக்கு முன்னால் அவர்கள் செய்தார்கள் அது மிக மிக நன்றாக இருந்ததினால் பல முறை சாப்பிட்டுக் கொண்டே நன்றி சொன்னேன் அதற்கு அவர்கள் என்ன உங்களுக்கு லூசாயிடுச்சா எதற்கு நன்றி எல்லாம் என்று என்னை கிண்டல் பண்ணினார்கள் பாராட்டி நன்றி சொன்னாலும் தப்பா இருக்குங்க
Deleteஏஞ்சல் நான் சமையல் பதிவு போடுவதில்லை அவ்வளவுதான் உங்க ஹோட்டல் பிசினஸ்ல என்னையும் சேருத்துக்கங்க...ஹஹஹ். சரி சரி ஏஞ்சலும், அதிராவும் சமையல் பதிவு போடும் போதே அவங்க கிச்சன் பக்கம் போகவே இல்லைனு மதுரை சொல்லுறாரு..நிஷா இந்த லிஸ்ட்ல இல்ல அவங்க அல்ரெடி ரெஸ்டரன்ட் வைச்சுருக்காங்க....அப்ப நான் போடறதே இல்லை ஸோ மதுரை எனக்குச் சமைக்கவே தெரியாதுனு சொல்லுவாரு ஹிஹிஹிஹிஹி....
Deleteகண்டிப்பா உங்காத்து மாமிக்கிட்ட போட்டுக் கொடுத்தாச்சு....அது எப்படினு எல்லாம் கேக்கக் கூடாது ஹஹஹ
கீதா
ஹையோ எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை ..மாமி ப்ளீஸ் வேலைலருந்து வந்ததும் அந்த கராஜுக்கு போய் பாருங்களேன்
ReplyDeleteஇருங்க நான் கண்ணை மூடி தியானம் பண்ணப்போறேன் அப்போதான் அவங்களுக்கு இந்த வேவ்ஸ் காதுக்கு கேக்கும்
அட ஆமாம்ல போன் நம்பர் இல்லன்னால் என்ன? தியானம் என ஒன்று இருக்கில்லையா? நானும் ஏஞ்சலும்தியானம் செய்ய ஆரம்பித்து விட்டோம். மாமீஈஈஈஈஈஈஈகாராஜை எட்டி பாருங்கோ... உங்காத்து மாமாவின் தில்லாலங்கடி வேலையை என்னான்னு தட்டிக்கொட்டி கேளுங்கோஓஓஓஓஓஒ மாமீஈஈஈஈஈ
Deleteஏஞ்சலோ ஏஞ்சல் எனக்கொரு டவுட்டு. அதை கிளியர் செய்தே ஆகணும். எல்லார் காலும் தானே ஓடும், அதெப்படி உங்க கை ஓடும். ஓடிய கை எப்போருந்து ஓடாமல் இருந்தது?
Deleteஹாஹா ஹா நிஷா நம்ம ஏஞ்சல் எப்பவுமே பூனைக்குட்டியோட அதிகம் இருப்பதால் பூணை மாதரி நாலு காலில் நடக்க பயிற்சி பெற்றுள்ளார்கள் அதனால்தான் அவர்கள் கையும் காலு மாதிரிதான் அதனாலதான் கையும் ஒடல காலும் ஒடல என்று சொல்லுறாங்க
Deleteநிஷா அது ஒரு flow வில் வந்துருச்சிப்பா.
Deleteஏஞ்சல் நானும் போட்டுக் கொடுத்துட்டேன்..ஹஹஹ்
Deleteகீதா
அயோ ஏஞ்சல் நிஷா ஹைஃபைவ்....நான் இப்பதான் மதுரைக்கு சொல்லிட்டு வந்தேன் மெயில் இல்லனா எனன் ஃபோன் இலலினா என்ன நாங்க சொல்ல முடியும்னு இதத்தான் எழுதணும்னு வந்தா நீங்களே சொல்லிட்டீங்க...
Deleteகீதா
எல்லா வீட்லயும் இந்த அப்பா பொண்ணுங்க கூட்டு களவாணிங்க :) என் பொண்ணும் லேசில் அவங்கப்பாவை காட்டி கொடுக்க மாட்டா :)
ReplyDeleteஇப்போ புரியுது நீங்க பூனை ஏன் வளர்க்கலன்னு :) அது மாமியை நேர கராஜுக்கு கூட்டிப்போய் காட்டியிருக்கும்
அதெல்லாம் எங்க வீட்டிலும் இதே கதைதான்பா.ரெண்டு பேரும் அடிச்சிக்குவினம் அப்பா திட்டினால் அழுதுட்டு வருவாள். இடையில் நான் போயிட்டேன்னு வையுங்க நான் தான் சம்பல்.அப்பான்னால் இந்த பெண்ணுங்கள் எப்படித்தான் கூட்டுகளவாணித்தனம் செய்ய ஒத்துக்கின்றார்களோ?
Deleteஇல்ல அஞ்சு ட்றுத் க்கு பூனை எண்டாலே பயம்:).. பப்பியை தன்னோடயே கூட வச்சு தனக்கு சப்போர்ட்டாப் பழக்கி வச்சிருக்கிறார் கர்:).. வழமைக்கு மாறா.. இண்டைக்கு மாமி.. நேரே கராஜ் பிரிஜ்ஜைத்தான் திறக்கப்போறா:)... ட்றுத் பப்பியோட கராஜ்லதான் நைட் அவுட்.. ஹ ஹா ஹா :)
Deleteஅப்பாவும் பிள்ளையும் கூட்டுகளவாணித்தனம் பண்ணுறாங்க என்று சொல்லுபவர்கள் எல்லாம் அப்பாவுடன் சேர்ந்து கூட்டு களவானித்தனம் செய்த பெண்களாகவே இருக்கிறார்களே
Deleteஅதிரா மாமி காராஜுக்கு போகவே மாட்டார்கள் காரணம் இங்கு காராஜில் கார் வைப்பதில்லை யாரும் டிரைவ்வேயில்தான் காரை நிறுத்துவோம் காராஜ் என்பது இங்குள்ளவர்களை பொறுத்த வரை கொடோவுன்தான் அதில் பல பொருட்களை இங்கும் அங்குமாக போட்டு அடைத்து வைப்பதால் மாமி அந்த பக்கம் போகமாட்டார்கள் காரணம் அப்ப்டி போய் கால் தடுக்கி ஏதுமேலாவது உழுந்து வைத்து கை காலை உடைத்து கொள்வார்கள்....
Deleteஅப்படி போடுங்க ஏஞ்சல்....சன்னி மதுரை சகோ வுக்குத்தான் ஓட்டு போடும்பா...
Deleteகீதா
ஹஹஹஹ் அதிரா சூப்பர்...கைகொடுங்க....ஹஹஹ்
Deleteகீதா
ஏஞ்சல், நிஷா, அதிரா யோசிங்கப்பா மாமி காராஜ் பக்கம் போக மாட்டாங்களாம்..
Deleteஆமாம் :) அப்பாவோடு கூட்டு களவாணி வேலை நிறையவே செஞ்சிருக்கேன் நானும் :)
Deleteஎன்னதான் நாள் முழுக்க கூட இருந்து கவனிச்சாலும் இந்த பொண்ணுங்க அவங்கப்பா கூட தான் அதிக பாசம் :)
மகள்களை பெற்ற அப்பாக்களுக்குன்னு ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சேன் :)
அப்பா மகள் பாசப்பிணைப்பு எனக்கு கிடைக்கவில்லையப்பா. ஆனால் அப்பாஎன்றால் எல்லா பெண்களைப்போலவும் எனக்கு பிடிக்கும்.
Deleteஇந்த உளுந்து கஞ்சி சாதம்லாம் வாரமொருமுறை செய்வேன் நான் கருப்பு உளுந்து தோலோட இருக்கும் அதை போட்டு செய்வேன் . காரக்குழம்பு வற்றல் குழம்பு கூட நல்லா இருக்கும்
ReplyDeleteசெய்வீங்க சரி .. நீங்க சாப்பிடுவீங்களா?:).. சாப்பிடுவதென்னமோ ரெண்டு அப்பாவிகள் மட்டும்தானே?:)
Deleteஏஞ்சல் டயட்டில் இருப்பதால் அவர்கள் பூனைக்கு வைக்கும் பால் வைக்கும் போது அந்த பூனையோட சேர்ந்து பாலை மட்டும் குடிப்பார்கள் அவ்வளவுதான் அவர்களுக்கு கொடுத்து வைச்சிருக்கு
Deleteமதுரை சகோ நானும் கறுப்பு, உளுந்து, உடைத்தது அதைப் போட்டு இதே முறையில் தான்..எள்ளுத்துவையல்....வற்றல் குழ்மம்பு டன்...அடிக்கடி செய்வதுண்டு
Deleteகீதா
நாளைக்கி தமிழ் நியூ இயர் கராஜை க்ளீன் பண்ணுங்க மாமி :)
Deleteஒருமுறை ஜெர்மன் க்ளாசில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் உளுந்து வடையும் எள் பூரணம் வைத்த ஒரு ஸ்வீட்ட்டும் கொண்டாந்தார் அந்த ஜெர்மன் அக்காவுக்கு நான் உளுந்தின் அருமை பெருமைகளை விலாவாரியா சொன்னேன் ..ஆன்னு வாய் மூடாம ஆச்சர்யமா கேட்டார் .
ReplyDeleteஎதுக்கு சொல்றேன்னா ,,நம் நாட்டு மக்களுக்குத்தான் இந்த மாதிரி உணவைக்கூட உடல் நலத்துக்கு ஸ்பெஷலா செய்ய முடியும்
தமிழர்களின் பழையகால உணவு முறைகள் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தை சார்ந்தே இருக்கும் என்பது உண்மை ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு நார்த் இண்டியன் மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளை சாப்பிடுவதே பெருமை என்று கருதி வருகிறார்கள்
Deleteஆமாம் சகோ.. பெண்கள் வயதுக்கு வந்தால் உளுந்துகஞ்சி, உளுந்துகளி நல்லெண்ணையுடன் செய்து கொடுப்பார்கள். நிறைய நம் உணவு வகைகள் அருமையானவை மட்டுமல்ல உடல் நலன் சார்ந்ததுதான்...
Deleteஇந்த உளுந்து கஞ்சி இன்னும் நீர்க்க வைத்து செய்வாங்க அம்மா குட் ப்ரைடே முழுநாள் FASTING இருந்து ஈவ்னிங் சர்ச் சர்வீஸ் முடிஞ்சதும் டம்ளரில் ஊத்தி கொடுப்பாங்க நினைவுக்கு வருது
ReplyDeleteஎங்க அம்மா உளுந்தில் குழம்பு வைப்பார்கள் அதை சின்ன வயதில் திங்க பிடிக்காது
Deleteமதுரை சகோ உளுந்து குழம்பா? நார்த்தில் கூட தால் மக்கனி என்று கறுப்பு உளுந்தில் பஞ்சாபிஸ் செய்வார்கள். நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் அம்மா செய்யும் உளுந்து குழம்பு ரெசிப்பி நினைவு இருந்தால் பதிவாகப் போடுங்கள் சகோ..
Deleteகீதா.
வாயுத்தொந்தரவுக்கும் நல்லது என்பதாலே
ReplyDeleteஇது அனைத்துப்பருவத்தினருக்கும்
ஏற்ற உணவு போலத்தான் படுகிறது
ந்ல்ல ரெஸிபி
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
உடலுக்கு மிகவும் பலத்தையும் மிக என்ர்ஜியையும் கொடுக்க கூடியது என்னைகேட்டால் பள்ளிக் கூடங்களில் மதிய உணவு தரும் போது இந்த சாதத்தை கொடுத்தால் குழந்தைகள் சோர்வு இல்லாமல் நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருப்ப்பார்கள்
Deleteஆஹா உழுந்து சாதம்.. இன்றுதான் கேள்விப்படுறேன், நல்லாத்தான் இருக்கும்போல இருக்கு.. ஒரு தடவை செய்து பார்த்திடுறேன்.
ReplyDeleteஉளுந்தில் கொலஸ்ரோல் இல்லை என்கிறீங்க? LDL இருக்கு என்கிறார்கள்... அதிலிருந்து நான் உளுந்தைக் குறைத்து விட்டேன், வடைதான் எல்லோருக்கும் பிடிக்கும் வீட்டில்.. களி வகை கிட்டவும் எடுக்கமாட்டோம்ம்.. யாருக்குமே பிடிக்காது.
ட்றுத்... உங்களுக்குத்தான் மாமியிடம் அடி வாங்குவதென்பது அல்வா சாப்பிடுவதுபோல பழகிவிட்டதே.. அடிச்சாலும் பறவாயில்லை மாமிக்கும் கொஞ்சம் கொஞ்சமா பழக்குங்கோ.. இப்படி ஒளிச்சு விளையாடினால் அவ எப்படிப் பழகுவா?:)
அதிர கண்டிப்பாக செஞ்சு சாப்பிடுங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கலாம், தொட்டு கொள்ள புளியினால் செய்த எந்த குழம்பும் நன்றாக இருக்கும்
Deleteஅட போங்க அமெரிக்கா வந்து 20 வருசங்ககளுக்கு மேல் ஆகிவிட்டது இப்பதான் மாமி கேக் சாப்பிட ஆரம்பிச்சு இருக்காங்க இந்த ரேட்ல போனால் அடுத்த ஜன்மத்தில்தான் மற்றது சாப்பிட ஆர்ம்பிப்பாங்க.... அடுத்த ஜென்மத்தில்லாவது நயன் தாராவிற்கு கணவனாக வர ஆசைப்படுகிறேன் அதையும் கெடுத்துடாதீங்க
க்ர்ர்ர்ர்ர்ர் யார் அது தியானத்த கலைக்குரது வேவ்ச டைவர்ட் செய்ய கூடாது ..குறுக்குல நயன் க்ராசிங்.
Deleteஇந்த நயன் பெண்களையும் ஒழுங்காக தியானம் பண்ணவிடாமல் கலைக்கிறார்கள் என்றால் ஆண்களின் மனதை எந்த அளவு டேமேஜ் செய்து இருப்பார்கள் ஹும்ம்ம்ம்ம்
Deleteநர நர நர கர்ர்ர்ர்ர்ர்ர் ..ஒண்ணுமில்ல பல்ல கடிச்சென்
Deleteஎன்ன ஏஞ்சல் மதுரைக்கு கொஞ்சம் ஓவராயிடுச்சு நயன் பேச்சு அஹஹஹ்ஹ மாமியிடம் அதையும் சேர்த்து போட்டுக் கொடுத்துர வேண்டியயதுதான்...
Deleteகீதா
எனக்கொரு டவுட் ட்றுத்... அதென்ன பருவ பெண்கள் சாப்பிடும் உணவு.. ஆனா ஆண்களும் சாப்பிடலாம்ம்ம்.. அப்போ ஆண்கள் எல்லோரும் எப்பவும் பருவ ஆண்களோ?:)).. விளக்கம் பிளீஸ்ஸ்:).. இல்ல பருவம் இல்லாத பெண்கள் சாப்பிட்டால் சொர்க்கம் போயிடுவினமோ? கர்ர்ர்ர்ர்ர்?:)
ReplyDeleteஹலோ உளுந்து சாதம் செய்வது எப்படி என்று போட்டால் எண்ணி நாலு பேர்தான் படிக்க வருவாங்க அந்த நாலு பேர் நீங்க ஏஞ்சல் கீதா நிஷா என்ற வாலுங்க மட்டும்தான் ஆனால் மற்றவர்களையும் இங்கு வந்து படிக்க செய்ய இப்படி தலைப்பு வைச்சால்தான் இங்கே வருவாங்க இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லிடாதீங்க
Deleteஹேய் என்ன ஃப்ரென்ட்ஸ் ஏஞ்சல், நிஷா, அதிரா நம்மள வாலுங்கன்றாரு!!! ஹஹஹ்ஹ் கேளுங்க! ஹலோ மதுர உங்களுக்கு இல்லையாக்கும்...ஓ சரி சரி அந்த வாலைத்தான் மாமி அப்பப வெட்டி விட்டிருவாங்களே அஹஹஹ்ஹ்
Deleteகீதா
உளுந்தை அதிகம் உண்டால் கீழ் சுவாசம் அதிகம் பிரியுமாமே இப்போதெல்லாம் பின்னூட்டமிட்டால் அஞ்சல் பெட்டியில் டெலிவெரி ஃபெயில்ட் என்றுவருவதில்லையே
ReplyDeleteஉளுந்து சாதம் செய்யலாம். தொட்டுக்கொள்ள வெங்காயம் பூண்டுக்குழம்பு செய்தால் மீன் குழம்பை ஒத்திருக்கும்! ஒருமுறை எங்கள் வீட்டில் இந்த வெங்காயம் பூண்டு வெந்தயக்குழம்பைச் செய்திருந்தபோது சாப்பிட்டுப்பார்த்த நண்பர் சொன்ன கமெண்ட் அது!
ReplyDeleteஎப்பவுமே சமையல் பதிவு சூப்பர்ஹிட்தான் இல்லை?!!
கருத்து இட்ட அனைவருக்கும் நன்றி கொஞ்சம் பிஸியாக இருப்பதால் ஈவினிங்க் வந்து பதில் தருகிறேன்
ReplyDelete