Monday, April 3, 2017

இளம் பெண்களின் ஆசை இப்படியா இருக்க வேண்டும்


நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் என்னுடன் பணி புரியும் மூன்று இளம் பெண்கள் ரகசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.(அவர்கள் ரகசியம் பேசுகிறோம் என்று சத்தமாக பேசியதால்தான் அந்தவிசயம் என் காதில் விழுந்தது)..அந்த மூன்று பெண்க்ளும் அன்று மாலை நடக்கவிருக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரின் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு பங்கேற்க தத்தம் கணவருடன் செல்ல முடிவு எடுத்து இருந்தனர்.அதற்கு என்ன டிரெஸ் அணிவது என்று விவாதித்து கொண்டிருந்தனர்.


அதில் ஒரு பெண்  இன்று மாலை நடக்கும் நிகழ்விற்கு தன் கணவரின் தலை முடிக்கு மேட்சாக கருப்பு கலரில் ஆடை அணிவதாக சொன்னார் அதை கேட்ட மற்றொரு பெண் அப்படியானால் நான் என் கண்வரின் வெள்ளை தலை முடிக்கு ஏற்றுவாறு வெள்ளை நிறத்தில் அணிந்து வருவதாக சொன்னார் ஆனால் முன்றாவது பெண்ணோ அப்படியெல்லாம் வேண்டாம் என்று முகம் சிவக்க சொன்னார். அதற்கு காரணம் கேட்ட மற்ற பெண்ணிடம் என் கணவரின் தலை வழுக்கை அதற்காக  நான் நிர்வாணமாகவா வர முடியும் என்றார் அதை கேட்ட மற்ற பெண்களும் சிரித்தனர், ஆமாம் வழுக்கை என்றால் நிர்வாணமாகதான் வர வேண்டும் என்று ஏன் அந்த பெண் இவ்வளவு மோசமாக சிந்திக்கிறார். ஒரு வேளை நவீன கால பெண்கள் இப்படிதான் சிந்திப்பார்களோ என்னவோ? இப்படி அவர்கள் ரகசியமாக பேசி சிரித்தை நானும் கேட்டு சத்தமில்லாமல் சிரித்தேன் அதன் பின் என் அந்த பெண்னிடம் போய் உன் கணவரின் வழுக்கை தலை ப்ரெளனாகத்தானே இருக்கிறது அதற்கு மேட்சாக கலர் டிரெஸ்சை அணியலாமே என்று சொல்ல நினைத்தேன்....ஆனால் அதை எப்படி சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை .காரணம் அவர்கள் ரகசியமாக அல்லவா பேசிக் கொண்டிருந்தார்கள் அதற்கு நான் பதில் சொன்னால்  நான் ஒட்டுக் கேட்டதாக அல்லவா நினத்து கொள்வார்கள் இப்ப நான் என்ன செய்ய?


அன்புடன்
மதுரைத்தமிழன்
கொசுறு : சமையல் ஒரு கலை ஆனால் இன்று அது  நவீன கால பெண்களிடம் சிக்கி கொலையாக மாறிவிடுகிறது



03 Apr 2017

17 comments:

  1. உங்களிடம் இராணுவ ரகசியம் சொல்லி வைத்தால் நாட்டின் கதி ???

    ReplyDelete
    Replies
    1. ஹலோ இந்திய ராணுவ ரகசியம் எனக்கு தெரியும் சிலவற்றை உங்களிடம் சொல்லுகிறேன் ரகசியமாக வைத்திருங்கள் ஒகேவா

      1. இந்திய ராணுவத்திடம் உள்ள வெடி மருந்துக்கள் ஒரு நாளுக்கு கூட போதுமானது அல்ல

      2. இந்திய ராணுவத்தினருக்கு சரியான உணவு அளிக்கப்படாததால் அவர்கள் வலுவாக இல்லை.

      இன்னும் நிறைய சொல்லலாம்

      Delete
  2. போஸ்ட்டுக்கும் கொசுறுக்கும் சம்பந்தமே இல்லயே:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுறீங்க?:).

    என் கொம்பியூட்டருக்குள் வந்து புலலங்காய் குறிப்பு போடப்போகிறேன் என்பதை பார்த்தவராயிற்றே:).. ரகசியம் மட்டும் கேட்காமல் போயிடுமா என்ன?:)

    ReplyDelete
    Replies
    1. சரி சரி வெத்தலை பாக்கு பழம் எடுத்டுகிட்டு வாங்க சம்பந்தம் வைச்சுகலாம்

      Delete
  3. பொண்ணுங்க பேசறதை ஒட்டு கேட்டதே தப்பு கர்ர்ர்ர் .. :) எனக்கென்னவோ ஹிலாரி அக்கா பேசினதையெல்லாம் ஒட்டுக்கேட்டு ட்ரம்ப் அங்கிளை வின் பண்ண வச்சது இவர்தானோன்னு டவுட்டு

    ReplyDelete
    Replies

    1. சரி சரி இனிமேல் பொண்ணுங்க பேசும் போது அவர்கள் மடியில் உட்கார்ந்து கேட்டுவிட்டு பதிவு போடுறேன் ஒகேவா

      Delete
    2. என்னப்பா ஏஞ்சல் அதிரா கொசுருக்கு யாருமே சண்டை போடலை மதுரை தமிழனோடஹிஹி

      கீதா

      Delete
  4. ஏன், வழுக்கை மண்டை நிறம் கிடையாதா? லைட் பிரௌனில் அணியலாமே!!!!!

    ReplyDelete
    Replies
    1. அது உங்களுக்கும் எனக்கும் தெரியுது ஆனால் இந்த பொண்ணுங்களுக்கு தெரிய்லையே அவங்க அறிவை இன்னும் வளர்த்துகணும்

      Delete
    2. ஹாலோ....அதிரா ஏஞ்சல் கிட்ட போட்டு கொடுக்கறேன்...

      கீதா

      Delete
  5. ரகசியங்களை நம் காதில் விழ அனுமதிக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு பாடம்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீங்க ஆனால் அது நம் காதில் படனும் என்றுதானே அவர்கள் ரகசியமாக நாம் இருக்கும் இடம் வந்து பேசுகிறார்கள்

      Delete
  6. ஹாஹா.... உங்களுக்கும் ராஜா காது கழுதைக் காது பாதிப்பு வந்திடுச்சு!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அந்த் கதை உங்களுக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறதா?

      Delete
  7. எல்லாம் சரி, அன்றொருநாள் ஒருத்தி உங்களிடம் சத்தமாக ரகசியம் பேசினாளே, அதைப் பற்றி எப்போது எழுதுவீர்கள்? (என்று யாராவது கேட்க மாட்டார்களா?)

    - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    ReplyDelete
    Replies
    1. ஓ நீங்க என் மனைவி அமைதியாக பேசியதை சொல்லுறீங்களா? யோவ் மதுரைத்தமிழா அவங்க சத்தமாக பேசினாங்கய்யா..... அய்யா அது உங்களுக்கு வேணும் என்றால் சத்தமாக பேசுவதாக தோண்டி இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை அது மிக அமைதியாக பேசியதுதான் அவங்க சத்தமாக் பேசினால் தமிழ்னாட்டு வரைக்கும் கேட்கும் தெரியுமா

      Delete
    2. மதுரை சகோ முதல்ல ஹை five....வாசிக்கும் போதே...வழுக்கைன்னு வரும்...அந்த பொண்ணு அப்படி சொல்லும்.அதுக்கு ப்ரவுன் சொல்லல்லாமேன்னு நினைச்சா நீங்களு ம் அதே ஐடியா...கொடுக்க நினைச்சு......

      கீதா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.