Monday, April 17, 2017


avargal unmaigal
விவசாய அரசியலில் அறுவடை செய்யப் போவது யாரு?




டெல்லியில் போராடும் விவசாயிகள்  இந்துக்கள்தான் என்று மோடியிடம் யாரவது சொல்லுங்களேன். அப்போதாவது அவர் செவி சாய்க்கலாம்

செயல் தலைவர் இருந்தும் திமுககழகம் கலைஞர் மாதிரி இப்போது செயல்படாமல் இருக்கிற மாதிரி உள்ளதே இப்படி எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா அல்லது உங்களுக்கும் தோன்றுகிறதா?


ஸ்டாலின் செயல் தலைவராக பதிவு ஏற்றதில் இருந்து திமுக கழகம் செயல்படாத கழகம் ஆகிவிட்டதே

வட நாட்டில் இருக்கும் இந்துத்வா தலைவர்கள் தமிழர்களை மட்டுமல்ல தமிழக் கடவுள்களான முருகன் போன்ற கடவுகள்களையும் கண்டு கொள்வதில்லை


மோடி பக்தர்கள் என்னதான் பொது இடத்திலும் ஊடகங்களிலும் கம்பு எடுத்து சுற்றினாலும் மோடிக்கு  செல்வாக்கு இங்கு இல்லை என்பதை சின்ன குழந்தைகள் கூட சொல்லும். ஆனால் அப்படிப்பட்டவரை எதிர்க்க துணிவில்லாதவர்களாக தமிழகத் தலைவர்கள் பம்மிக் கொண்டி இருப்பதுதான் மிகவும் ஆச்ச்சிரியம் அளிக்கிறது இந்த தலைவர்களில் பெரிய கட்சி என சொல்லப்படும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் ஒருவர், ஸ்டாலினுக்க்கு யாரவது எடுத்து சொல்லுங்களேன் அவர் இனி எதிர் அரசியல் செய்ய வேண்டியது பாஜகவிற்கு எதிராகத்தான் ஒன்றுமில்லாத அதிமுகவை அல்ல


வோட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டு வயிற்றுக்காக போராடும் விவசாயிகளுக்கு பணம் உதவி செய்யலாமே தமிழக அரசியல் கட்சிகள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

17 Apr 2017

9 comments:

  1. எப்படியோ விவசாயிகளுக்கு நல்லது நடைந்தால் ச​ரி.
    Tamil News

    ReplyDelete
  2. உங்கள் கருத்தில் எந்த தவறும் இல்லை.

    ReplyDelete
  3. வோட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டு விவசாயிகளுக்கா... நல்லாச் சொன்னீங்க போங்க... நாங்க அரசியலில் தொடர் அறுபடை செய்ய நினைப்போமா... இல்லை....

    ReplyDelete
  4. இறுதியில் சொன்னிங்களே அது தான் மிக சரி ..

    கொள்ளையடிச்சத அவங்ககிட்ட கொடுத்தாவது பாவத்தை கழுவலாம்

    ReplyDelete
  5. எல்லாவற்றிலும் அரசியல். விவசாயிகள் போராட்டத்திலும்!

    ReplyDelete
  6. ஆளும்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஏதும் செய்யாமல், எதிர்க்கட்சியானவுடன் போராட்டங்களில் இறங்குவது நமது அரசியல்வாதிகளுக்குப் பழக்கமான விஷயமே.
    -இராய செல்லப்பா நியூஜெர்சி



    ReplyDelete
  7. நிச்சயமா செயல்தலைவரில்லை

    ReplyDelete
  8. யார் அறுவடை செய்தாலும் விவசாயிகள் பலனடைந்தால் நல்லது

    ReplyDelete
  9. ஸ்டாலின் டம்மி பீஸாக இருப்பது வியப்பாக இருக்கிறது....அப்பாவின் அரசியல் சாணக்கியத் தந்திரம் எதுவும் இல்லை போல தோன்றுகிறது.....

    இறுதியில் நீங்கள் சொன்ன கருத்து சூப்பர்...கடைசி வரி

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.