Tuesday, April 4, 2017

டெவில்ட் எக் How To Make Deviled Eggs

முட்டையை விரும்பாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் சிலருக்கு ஆம்லேட் பிடிக்கும் சிலருக்கு அவித்த மூட்டை பிடிக்கும் சிலருக்கு முட்டை மசாலா பிடிக்கும் சிலருக்கு முட்டை குருமா முட்டை பஜ்ஜி இப்படி பலவற்றை சொல்லிப் போகலாம். ஆனால் இங்கே நான் சொல்லப்போவது புதியவகையான ரெசிப்பி. இது ஸ்நாக் வகையை சார்ந்தது. சம்மர் டைம் நம்வீட்டில் நடக்கும் பார்ட்டிகளின் போது இதை செஞ்சு அசத்தலாம்  இது பொதுவாக அமெரிக்க குடும்பங்களில் பேக்யார்ட் பார்ட்டிகளின் போது செய்து வைப்பார்கள். இதனை Deviled Egg என்று அழைப்பார்கள் இதை செய்வது மிக எளிது
(Alternative names :    stuffed eggs, angel eggs, eggs mimosa, Russian eggs, dressed eggs, picnic eggs.)

தேவையானவை : Ingredients
6 முட்டைகள் ( eggs )
2 1/2  டேபிள் ஸ்பூன் மாயோனைஸ் ( mayonnaise )
2  டேபிள் ஸ்பூன் மஸ்டர்ட் பேஸ்ட்( yellow mustard )
2 ஸ்பூன் க்ரீக் யோகர்ட் **** புளிக்காத தயிர்

தேவையான அளவு
கார்னிஷிங்க்கு தேவையான அளவு பப்ரிக்கா தூள், 
Paprika for garnishing(சில்லி பவுடர்) &
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
உப்பு Salt



செய்முறை : முதலில் முட்டையை அவித்து அதன் ஒட்டை எடுக்கவும். அந்த முட்டையை நீளவாக்கில் கட் செய்து எடுத்து, அதில் உள்ள முட்டை கருவை தனியாக ஒரு பவுலில் போடவும்.

அதன் பின் அந்த மஞ்சள் முட்டை கருவை எடுத்து ,அதில் மாயோனைஸ், மஸ்டர்ட் பேஸ்ட், க்ரீக் யோகர்ட் மற்றும் உப்பை போட்டு நன்கு மிக்ஸ் செய்து பேஸ்டாக ஆக்கி அதை ஒரு பிளாஸ்டிக் பேக்கில் போட்டு அந்த பிளாஸ்டிக் பேக்கின் கார்னரில் சிறு துளை போட்டு ( அதாவது மருதாணி பேஸ்ட்டை எப்படி ஒரு கோனில் போட்டு கைகளில் டிசன் செய்வோமோ அது போல ) அதை அவித்து கட் செய்த முட்டையில் மேல் அழகாக பிதுக்கி வைக்கவும். அதன் பின் பப்ரிக்கா தூள் மற்றும் கொத்தமல்லி இலையை அதன் மேல் போட்டு கார்னிஷிங்க் செய்யவும்.

avargal unmaigal
இப்படி செய்ததை தட்டில் அடுக்கி அதை ப்ரிட்ஜில் வைத்து  சில்லென்று எடுத்து பறிமாறவும்..

என்ன ஸ்பீடாக வயிற்க்குள் போகும் என்பது உங்களுக்கே தெரியாது அது மட்டுமல்ல எத்தனை முட்டைகள் வயிற்றுகுள் போகும் என்பதற்கும் கணக்கு வைக்க முடியாது

அன்புடன்
மதுரைத்தமிழன்


அதிரா & ஏஞ்சல் எக் சாப்பிடுங்க ஹெல்தியா இருங்க......இங்குள்ள எக்கை சண்டை போடாமல் பிரித்து சாப்பிடுங்க


மாயோனைஸ் அண்ட் மஸ்டர்ட் இந்தியாவில் பெரிய ஸ்டோர்களில் கிடைக்கும் என நினைக்கிறேன். கிடைக்காதவர்கள் கீழ்க் கண்ட முறையில் தயாரிக்கலாம்
டிஸ்கி : மாயோனைஸ் ( mayonnaise) எப்படி செய்வது ?

Combine egg yolk, lemon juice, vinegar, mustard, and 1/2 teaspoon salt in medium bowl. Whisk until blended and bright yellow, about 30 seconds. Using 1/4 teaspoon measure and whisking constantly, add 1/4 cup oil to yolk mixture, a few drops at a time, about 4 minutes.
மஸ்டர்ட் பேஸ்ட்  yellow mustard recipe
Combine water, mustard powder, vinegar, flour, 1/4 teaspoon plus 1/8 teaspoon salt, turmeric, garlic powder, and paprika in a small saucepan over medium heat; whisk until smooth. Bring mixture to a boil, reduce heat to medium-low, and simmer, stirring often, until mustard is thickened, 5 to 10 minutes

13 comments:

  1. ரெசிப்பி நல்லாருக்கே எங்க வீட்ல ஒருத்தர் மட்டுமே சாப்பிட முடியும் :) செய்து கொடுக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஏன் அஞ்சு சமோசாவை ட்ரை பண்ணியதுபோல, இதையும் கொஞ்சம் ட்ரை பண்ணலாமே:) எதுக்கும் எனக்குச் சொல்லி அனுப்பிட்டு ட்ரை பண்ணுங்கோ.. நான் குல்ட்க்குள்ளயே ஒளிஞ்சிடுறேன்ன்ன்... ஸ்ஸ்ஸ்ஸ் ஐயா சாமீஈஈஈஈ பிறகு ஆர் திட்டு வாங்குறதாம்ம்ம்ம்:)

      Delete
    2. என்னது ஏஞ்சல் சமோசா செஞ்சாங்களா? அந்த கதை ஏன் இன்னும் வெளிவரவில்லை.. ஒருவேளை சாமோசாவிற்கு காரம் சேர்பதற்காக மோர் மிளகாயை அரைத்துவிட்டு இருப்பார்களே அல்லது எண்ணெய்யில் பொரித்து எடுப்பதற்கு பதிலாக இட்லி தடில் வைத்து அவித்து இருப்பார்களே

      Delete
  2. நான் முட்டை சாப்பிடுவதில்லை/

    ReplyDelete
    Replies
    1. ஒகே அடுத்த தடவை நீங்கள் சாப்பிடும்படி கத்தரிக்காயில் ஒரு டிஸ் போடுறேன் கத்தரிக்காயை அமெரிக்காவில் எக் ப்ளாண்ட் என்று சொல்லுவார்கள் பிரிட்டிஷ் மற்றும் பல நாடுகளில் பிரின்சால் என்று அழைப்பார்கள்

      Delete
    2. நானும் சாப்பிடுவதில்லை மதுரை சகோ...ஆனால் இது போன்று முட்டையில் செய்வதை உருளைக் கிழங்கில் இப்படியே மயோனைஸ் (வெஜ் மயோனைஸ் கிடைக்கிறது க்ரீன் டாட்...இல்லை என்றால் வீட்டில் செய்வதுண்டு க்ரீம் உபயோகித்து...) செய்ததுண்டு...இப்ப மகன் இங்கு இல்லாததால் வெரி ரேர் என்றாகிவிட்டது. அது போன்றுமுட்டை ஆம்லெட் கடலை மாவு + கொஞ்சம் அரிசி மாவு லகந்து மஞ்சள் தூள் கலந்து பெப்பர் இல்லைனா வெஜிட்டபிள் போட்டு செய்வதுண்டு நல்லாருக்கும்...

      கீதா

      Delete
    3. ஆஹா! எக் ப்ளான்ட் டிஷ் போடுங்கப்பா....வெயிட்டிங்க்...

      கீதா

      Delete
  3. ஹலோ எச்சூச்ச்மீஈஈஈ... நான் நித்திரையாகி கண் விழிப்பதுக்குள் ரெசிப்பியை போட்டு ஒரு ஓரமா விட்டுப்போட்டு, வீடியோவைப் போட்டிட்டீங்க:) இது என் கண்ணுக்கு தெரியவே இல்லை:) கர்ர்ர்ர்ர்ர்... ஒரு போஸ்ட்டுக்கும் அடுத்த போஸ்ட்டுக்கும் இடையில ஒரு 12 மணித்தியாலமாவது இடைவெளி விடுங்கோ சொல்லிட்டேன்ன்ன்:)

    ReplyDelete
    Replies
    1. இதென்ன குடும்பக்கட்டுபாடு மாதிரி ஒன்றுக்கு பின் இடைவெளி வேண்டும் என்று சொல்லுறீங்க எனக்கு ஒரு விஷயம் சொல்லனும் என்றால் அதை உடனே சொல்லிவிடுவேன் அதை மனசுக்குள்ளே வைத்து காத்திருக்க முடியாது

      Delete
  4. ஆவ்வ்வ்வ் அவித்த முட்டையில் ரெசிப்பி... இது இங்கே பல buffet களில் சாப்பிட்டிருக்கிறேன், எனக்கு ஏனோ இந்த ரேஸ்ட் பிடிக்கவில்லை. அவித்த முட்டையில் எனக்கு பிடித்ததே அந்த மஞ்சள் கருதான், அதன் சுவையே இது மாற்றிவிடும்.. ஆனா விருந்தினர் வரும்போது செய்து வைத்திருக்கிறேன், பார்வைக்கும் அழகாக இருக்கும்.

    நான் எதிர்பார்த்தது, ஏதும் உறைப்பான முட்டை குருமா இப்படி ஏதும் சொல்லப்போறீங்க என.. இப்பூடி ஏய்ச்சுப்போட்டீங்களே:(.

    ReplyDelete
    Replies
    1. இது சம்மர் டைம் சாப்பிடும் ஒரு ஸ்நாக்...... முட்டை குருமா எப்படி செய்வது என்பது பிறந்த குழந்தைக்கு கூட தெரியுமே...சரி சரி உங்களுக்கு உறைக்கிறமாதிரி ஒரு பதிவு போடுறேன்

      Delete
  5. படங்கள் நன்றாய் இருக்கின்றன. வித்தியாசமாய் செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

    ReplyDelete
  6. வித்தியாசமாக ஒரு ரெசிப்பி... பாராட்டுகள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.