Thursday, April 20, 2017

avargal unmaigal
தமிழகத்தில் பாஜக காலுன்ற முடியுமா என்ன?

காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பு கொண்டு இருந்த நேரத்தில் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடிக்க ஐடி கம்பெனி உதவிகள் கொண்டு சமுக இணைய வளைதளங்களில் மோடிக்கு ஒரு செயற்கையான அலையை உருவாக்கி இந்தியா முழுவதும் பரவவிட்டார்கள் அந்த அலையை பல மாநிலங்கள் உண்மை என்று நம்பி மோடி இந்தியாவை காக்க வந்த ஒரு மகான் என்று கருதி அவருக்கு பெருமளவில் ஆதரவு தந்து வெற்றி மாலையை அவர் கழுத்தில் இட்டது. ஆனால் தமிழகத்திலோ நடந்தது அதற்கு நேர்மார் அதனால் இங்கே மோடியின் மூஞ்சியில் கரியை பூசிவிட்டார்கள் ஆனால் என்ன, வெற்றி களிப்பில் இருந்த மோடிக்கு அந்த கறை தெரியவில்லை.. சரி வெற்றி களிப்பில் இருப்பதால் தெரியவில்லை என்று வைத்து கொண்டாலும் அதன் பின் வந்த காலங்களில் மோடியும் சரி பாஜக தலைமையும் சரி தமிழகத்தில் நாம் தோற்க்க என்ன காரணம் என்பதை ஆராய்ந்ததாக தெரியவில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கு தமிழகத்தில் நடக்கும்  நிகழ்வுகளை எடுத்துரைக்கும் திறமை இல்லாத பாஜக தமிழக தலைவர்கள்தான்.  தேசியகட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தமிழகத்தில் எடுபடாமல் போவதற்கு காரணம் இங்குள்ள அந்த கட்சியின் லோக்கல் தலைவர்கள்தான் காரணம். இங்குள்ள லோக்கல் தலைவர்களிடையே கொஞ்சம் கூட ஒற்றுமை இல்லை . அது மட்டுமல்ல தேசியகட்சிகளில் இருந்தாலும் மாநில  மக்களின் உரிமைக்காக போராடாமல்  இருப்பதும் இவர்களின் பலவீனம்


பாராளு மன்ற தேர்தலின் போது தோல்வியுற்ற பாஜக அதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து அதற்கான முயற்சியில் இறங்கி இருந்தால் சட்டசபை தேர்தலின் போது கணிசமான இடங்களை பெற்று இருக்கும். அப்போது தமிழகத்தில் நடை பெற்ற ஜெயலலிதா அரசு செயல்படாத அரசாக இருந்தது. அதன் மீது மக்களுக்கு அதிகம் கோபம் இருந்த போதிலும் ஜெயலலிதா அரசு மீண்டும் வெற்றி பெறக்காரணம் மக்கள் திமுக அரசின் மீது கொண்ட வெறுப்பு மற்றும் பழியுணர்வு சிறிதும் மாறாமல் இருந்ததுதான்..  இப்படி இரண்டு கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பு கொண்டிருந்ததை பாஜக சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை ஆனால் இப்போது ஜெயலலிதாவும் கலைஞரும் இல்லாத நேரத்தில் கைப்பற்ற பல தந்திரங்களை மேற்கொள்கின்றார்கள் என்றாலும் அது முன்பைவிட மிக தோல்வியில்தான் அவர்களை கொண்டு போய் தள்ளும் என்று அடித்து சொல்ல முடியும்.


பாராளு மன்ற தேர்தலின் போது தமிழ் மக்கள் தன் முகம் மீது கரி பூசியதால் மத்திய அரசு தொடர்ந்து அதன் பின் தமிழகத்தை பல முறை வஞ்சித்து கொண்டுதான் இருக்கிறது அணு உலை தமிழகதிற்கு வேண்டாம் என்று போராட்டம் நடத்திய போது மக்களின் எண்ணத்தை மீறி செயல்பட்டது. சென்னையில் மிகப் பெரிய வெள்ளம் வந்த போது ஜெயலலிதா அரசு செயல்படாமல் இருந்த போது மத்திய அரசு உடனடியாக செயல்படாமல் வஞ்சித்தது கர்நாடக நதி நீர் விவகாரத்தில் நியாமாக நடக்க தவறியது..


ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் மருத்துவமனையின் உள்ளே என்ன நடந்தது என்பதை வெளிக் கொண்டுவர சிறிது முயற்சி எடுக்காதது மக்களுக்கு மிகவும் ஆச்சிரியத்தை அளிததது ஒரு மாநில முதலவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி அரசு செயல்படாமல் முடங்கிய போது கவர்னர் ஹாஸ்பிடல் சென்றும் ஜெயலலிதாவை நேரில் பார்க்காகூட முடியாமல் ஏனோதானோ என்று அறிக்கைவிட்ட போது இதில் மத்திய அரசிற்கும் பங்கு உள்ளது என்றுதான் பெரும்பாலனா நடுநிலை மக்கள் கருதினார்கள். மத்திய அரசின் நடவடிக்கையையும் தடுக்கும் அதிகாரம் ஹாஸ்பிடலில் தங்கி இருந்த யாரோ ஒருவருக்கு இருந்திருக்கிறது என்றால். ஒன்று அந்த சக்திக்கு மோடியின் ஆதரவு இருந்திருக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் அது  மோடியின் கையாலாகாத செயலாகத்தான் இருக்க முடியும் என்று மக்கள் நினைப்பதில் ஆச்சிரியம் ஏதுமில்லை.


சரி இவ்வளவு நடந்த பின்னுமாவது பாஜக தலைமை சுதாரிக்கவேண்டாமா? அதன் பின் நடந்ததை பார்த்தல் பாஜக சுதாரிக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

ஜெயலலிதா மரணத்தின் அன்று நிகழ்ந்தவைகளை பார்க்கும் போது அந்த சாவில் பல மர்மங்கள் இருப்பதாகவே படிக்காத பாமரனில் இருந்து படித்த பாமரன் வரை நினைத்தான். அந்த சாவிற்கு காரணம் சசிகலாதான் என்று நாடே கருதி தூற்றி சபித்து கொண்டிருந்த போது மரியாதை நிமித்தம் வந்த பிரதமர் மெளனமாக அஞ்சலி செலுத்திவிட்டு செல்லாமல் சசிகலாவை ஒரு சகோதரி போல  அணைத்து அவரை தேற்றியது மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை தரவில்லை


அதன்பின் சசிகலா அதிகாரத்தை கைபற்றிய போது தமிழகமே வெறுக்க கூடிய ஒருவராக அவர் வலம் வந்த வேளையில் மத்திய அரசு துணிச்சலாக ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தி இருந்தால் நிச்சயம் மோடிக்கு செல்வாக்கு கூடி இருக்கும் ஆனால் அப்படி செய்யாமல் இருந்ததுமட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டு விஷயத்தில் மிக மெத்தனமாக இருந்து தமிழக மக்களிடம் இருந்து மட்டுமல்லாமல் உலக தமிழர்களிடையேயும் அதிக வெறுப்பை சம்பாதித்தார்


இப்போது சசிகலாவை ஜெயில் அடைத்தபின் சனியன் ஒழிந்தது என்று மக்கள் அமைதியான தருணத்தில்  மத்திய அரசு தமிழர்களுக்காக ஏதாவது திட்டம் தீட்டி சாதனை செய்து இருந்தால் மக்கள் மனதில் எளிதாக இடம்பிடித்து இருக்கலாம் ஆனால் நடப்பதை பார்க்கும் போது தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிடக் கூடாது என்று பாஜகவினரே திட்டமிட்டு செயல்படுவது போல இருக்கிறது.. அதனால்தான் விவசாயிகள் போராட்டம் நெடுநெல்வாசல் போராட்டம் என்று மாறி மாறி வந்த போதிலும் அதில் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை கண்டு கொள்ளாமல் இருந்து, இருக்கும் பெயரையும் கெடுத்து கொள்கிறார்கள்

சரி இதையும் விட்டு தள்ளுவோம்

இப்போது அதிமுகவில் பிரிந்து கிடக்கும் கூட்டணியில் ஒரு பிரிவினரை தம் அதிகார வளையத்திற்குள் கொண்டு வந்து ஆட்சியை தொடர முயற்சிகிறது இதுவும் அவர்களுக்கு பாதகமாகவே முடியும் காரணம் பன்னீர் செல்வத்தை வைத்து செயல்படலாம் என்று நினைத்தால் அவரின் கரங்கள் ஊழலில் மிகவும் கரைபடிந்து இருக்கிறது இது போலத்தான் மாற்று அதிமுக பிரிவும் இருக்கிறது இவர்களில் யாரோ ஒருவருக்கு ஆதரவு அளித்தாலும் அது மோடிக்கு அசிங்கமாகவே இருக்கும்


எனக்கு மிகவும் ஆச்ச்சிரியமளிக்க கூடியது என்னவென்றால் மோடிக்கு செல்வாக்கு உயர்ந்து இருக்கிறது அவர் பல சாதனை நிகழ்த்தி வருகிறார் என்று அவரது கட்சியினரும், ஆதரவுவாளர்களும் சமுக வளைத்தளங்கள், ஊடகங்கள், மீடியாக்கள் போன்றவற்றில் தினமும் கூவோ கூவு என்று கூவி வருகிறார்கள் . ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் இந்துத்தாவகளின் வோட்டு அனைத்தும் அப்படியே மோடியின் பக்கம் வந்துவிட்டதாக சந்தோசப்படுகிறார்கள், உத்திர பிரதேசத்தில் பெற்ற வெற்றி மோடியின் சாதனைகளால் பெற்ற வெற்றி என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்... அப்படி மார்தட்டிக் கொள்வதோ சந்தோஷப்படுவதிலோ தப்பே இல்லை... ஆனால் அப்படி செய்பவர்களிடம் ஒரே ஒரு கேள்வி


நீங்கள் நினைப்பது எல்லாம் உண்மைதான் என்றால் இதற்கு பதில சொல்லுங்கள். உங்களுக்கு மனசாட்சி அல்லது மானம் மரியாதை சூடு சுரணை இருந்தால் மோடியின் செல்வாக்கை அல்லது சாதனைகளை சொல்லி ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யாமல் தமிழகத்தில் தங்கள் கட்சி காலுன்ற வேண்டுமென்பதற்காக மத்திய  அரசு தன் அதிகாரத்தை தவறான வழிகளில் கையாண்டு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்வது ஏன்?

மோடிக்கு மட்டுமல்ல பாஜக தலைவர்களுக்கும் ஆதரவளார்களுக்கும் ஒன்று சொல்லுகிறேன் தமிழக மக்கள் மிகவும் ஏமாளிகள் அவர்களை எளிதில் ஏமாற்றாலாம்  ஆனால் என்ன அவர்களை எப்படி ஏமாற்றுவது என்ற கலையை நீங்கள் இன்னும் அறியவில்லை அதை அறிந்தால் தமிழகத்தில் நீங்கள் மிக எளிதாக நீண்டகாலம் கால் ஊன்றி நிற்கலாம்.


மோடி வரவேற்பு பிரச்சார கூட்டத்திற்க்கு ஆட்கள் சேர்க்க என்னா குத்து டான்ஸ் பாருங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

15 comments:

  1. காலிருந்தால் ??? ஊன்றலாம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கில்லர்ஜி ஆனால் அது இல்லாததால் அதிமுக என்ற வீல் சேர் பாஜகவிற்கு தேவை படுகிறது

      Delete
  2. நல்ல விவரமான அலசல். நடிகர் சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரசில் இணைத்தது போல, தமிழகத்தில் அ.தி.மு.க.வை அப்படியே பா.ஜ.க வாக மாற்றி விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. திரு இளங்கோ நீங்கள் சொல்லுவதற்கு சற்று மாறாக தமிழக பாஜக இனிமேல் அதிமுக என்று அழைக்கப்படும் என்று திரு மோடிஜி அறிவித்து விடலாம்

      Delete
  3. குறுக்கு வழில ஜெயிக்க முடியுமா

    ReplyDelete
    Replies
    1. மோடி நிரூபித்து காட்டி இருக்கிறாரே ராஜி

      Delete
  4. குறுக்கு வழியில் கால் பதிக்க முடியுமா ?
    முடியும் - எந்த தொல்லைக் காட்சி பார்த்தாலும் பா ஜ க ஆட்கள் வந்து அமர்ந்து அலசுகிறார்கள் - அது சரியில்லை இது சரியில்லை ன்னு .

    கூடவே திமிர் வேற - நாங்க ஒண்ணும் பண்ணவில்லை - அது காங்கிரஸ் பண்ணியது - அப்ப ஏன் யாரும் ஒன்றும் சொல்லவில்லை ?

    இந்தி நாங்கள் திணிக்கவில்லை etc etc
    காவேரி so so
    மீனவர் பிரச்சினை அதே அதே .

    யாரும் குறுக்கே கேள்வி கூட கேட்பதில்லை .
    சரி டிவி பயப்படுது - இங்கே உள்ள கட்சிகள் என்ன செய்கின்றன ?

    ஜெயா சாவில் மர்மம் - மத்திய அரசுதான் பொறுப்பு !
    இதை கொளுத்தி போட்டால் பாஜக காலி .

    ReplyDelete
    Replies
    1. திரு மெய்பொருள் ஜெயலலிதா சாவில் மர்மம் இருந்தாள் அதில் பத்தி பங்கு நிச்சயம் மத்திய அரசுக்கு உண்டு

      Delete
  5. குறுக்கு வழியில் கால் பதிக்க முடியுமா ?
    முடியும் - எந்த தொல்லைக் காட்சி பார்த்தாலும் பா ஜ க ஆட்கள் வந்து அமர்ந்து அலசுகிறார்கள் - அது சரியில்லை இது சரியில்லை ன்னு .

    கூடவே திமிர் வேற - நாங்க ஒண்ணும் பண்ணவில்லை - அது காங்கிரஸ் பண்ணியது - அப்ப ஏன் யாரும் ஒன்றும் சொல்லவில்லை ?

    இந்தி நாங்கள் திணிக்கவில்லை etc etc
    காவேரி so so
    மீனவர் பிரச்சினை அதே அதே .

    யாரும் குறுக்கே கேள்வி கூட கேட்பதில்லை .சரி டிவி பயப்படுது - இங்கே உள்ள கட்சிகள் என்ன செய்கின்றன ?

    ஜெயா சாவில் மர்மம் - மத்திய அரசுதான் பொறுப்பு !இதை கொளுத்தி போட்டால் பாஜக காலி .

    ReplyDelete
  6. Replies
    1. திரு ரவிக்குமார் அதை பாஜக தலைமையை வைத்து சொல்ல சொல்லுங்க

      Delete
  7. துளசி: பா.ஜ.க தலைமை நல்ல மார்க்கெட்டிங்க் விளம்பரம் செய்வதில் கில்லாடியாக இருக்கிறார்..அதுவும் ஹைடெக்காக

    கீதா: மேற்சொல்லப்பட்ட கருத்துடன். அரசியல் கூட்டத்திலுமா இப்படி குத்து டான்ஸ்??!! வியப்பாக இருக்கிறது...



    ReplyDelete
    Replies
    1. திரு துளசி நீங்கள் சொல்லுவது நூறுக்கு நூறு உண்மை கீதா மேம் கட்சியில் இருக்கும் சபல ஆட்களை கவர இப்படி குத்து டான்ஸ் அவசியமாக இருக்கிறது டான்ஸ் சரக்கு பிரியாணி பணம் இல்லாமல் எந்த கட்சிக்கும் கூட்டம் வராது இந்த காலத்தில்

      Delete
  8. பாஜக மட்டுமல்ல, காங்கிரசும் இங்கே வேரூன்ற முடியாதபடி இங்குள்ள கட்சிகள் மக்களைத் தங்கள்வசம் இழுத்துப் பிடித்துள்ளன. காசுக்கு விலைபோகும் மக்கள் இருக்கும்வரை தமிழகத்தில் தேசீயக் கட்சிகள் நேரடியாக வளரமுடியாது. இந்திர காந்தி இருந்தபோது MGR formula பின்பற்றினார். அதாவது சட்டசபையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும், பதிலுக்கு பாராளுமன்ற இடங்களில் மூன்றில் ஒரு பங்கு அதிமுக போட்டியிடும் என்று. இதுபோல, அதிமுக வுடன் பாஜக ஒப்பந்தம் செய்துகொண்டால் மட்டுமே அது இங்கே வளரமுடியும்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. திரு செல்லப்பா பாஜக தமிழகத்தில் நன்றாக காலை ஊன்ற ஒரு நல்ல தமிழக தலைவரும் தமிழக பிரச்சனையில் நல்ல அக்கறை எடுத்து செயல்படக் கூடிய தலைவரை மோடிஜி அறிவித்தால் வருங்க காலங்களில் பாஜக அசைக்க முடியாத கட்சியாக மாறும் அதைவிட்டு விட்டு குறுக்கு முயற்சியில் ஈடுபட்டால் வளரவே வாய்ப்புகள் இல்லை

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.