மோடியை ஒரங்கட்ட வந்திருக்கும் யோகி
உ.பி.,யில், முதல்வர் #Yogi யோகி ஆதித்ய நாத்தின் உத்தரவுகளால், அரசு அலுவலகங்களில் எப்போதும் இல்லாத வகையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிகாரிகள்,ஊழியர்கள்,அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதோடு, எந்த கோப்பு களும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தேக்கம் அடையாத வகையில் பணியாற்ற துவங்கியுள்ளனர்.
இது மிக நல்ல தொடக்கமே. அதற்காக நாம் கண்டிப்பாக அவரை பாராட்ட வேண்டும். அதைவிட்டு விட்டு புது துடைப்பம் நன்றாகத்தான் பெருக்குகிறது என்பது போன்ற விவாதங்கள் செய்வது ஏற்புடையதல்ல. அப்படி செய்தால் அது நல்லது செய்பவர்களையும் சோர்வடையவே செய்யும். நல்லது செய்யும் போது தட்டிக் கொடுத்தால் அது அவர்களை மேலும் உற்சாகமடைய செய்து மேலூம் மேலும் நல்லது செய்யவே தூண்டும் அதைவிட்டுவிட்டு அதற்கு வேறு அர்த்தம் காண்பித்தால் நல்லது செய்பவர்களையும் அதை செய்யவிடாமல் செய்துவிடும்.
#Modi மோடி க்ளின் இண்டியா என்று சொல்லி மாடல் மட்டும் செய்தார் ஆனால் யோகி அப்ப்டி சொல்லாமல் செயலில் காண்பிக்க ஆரம்பித்து இருக்கிறார் .அப்படி செய்ய ஆரம்பிததற்கு பாராட்டுக்கள் .
ஆனால் யோகி வருங்காலங்களில் மத துஷ்பிரயோகம் செய்யாமல் அல்லது எவரும் செய்யாமல் இருக்கும் விதத்தில் ஆட்சி நடத்தினால் இந்தியா நிச்சயம் தழைத்தோங்குவதோடு பார் புகழும் நாடாக ஆகிவிடும்
அதை அவர் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணதோடு நாம் நம்பிக்கையாய் இருப்போம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
நிச்சயம் பாராட்டப்பட வேண்டும் நண்பரே.
ReplyDeleteஅவசரத்தில் "மோடியை ஓரங்கட்ட வந்திருக்கும் துரோகி" என்று படித்து விட்டேன் Sorry
நல்லது அது சிறிய விஷயமாக இருந்தாலும் அதை செய்யும் போது தோளில் தட்டியும் தவறு செய்தால் தலையில் கொட்டவும் செய்ய வேண்டும்
Deleteஎனக்கு தெரிந்த வரை , மோடி வெகு சாமர்த்தியமான , சூப்பர் மூளை உள்ள , நல்ல ஆரோக்கியம் உடைய , நிறைய வேலை செய்ய கூடிய ஒரு பெருந் தலைவர் . அவர் மட்டும் நல்லாட்சி புரிந்தால் போதாதே , கிழ IAS அதிகாரிகள் , இதுவரை ஊழலில் திளைத்த பெரும் முதலைகள் ..இவர்கள் மூலம் தான் ஆட்சி புரியனும் , ரகசியம் காப்பாற்றப்படனும் , நல்ல திட்டங்களை நாலா பக்கமும் எடுத்துக்கொண்டு போகணும் . நாலாவது தூண் என்கிற , பத்திரிக்கை மற்றும் தொலை காட்சி நிறுவனங்கள் எல்லாருமே அரசுக்கு எதிர் ( இதில் இவர்கள் அரசு மூலமாக விளம்பரங்கள் வேறு ) , முக்கியமான தூண் ஆன , நீதி சுத்தமாக அசுத்தம் . பணம் கட்டாத பணக்கார முதலாளிகளுக்கு தடை ( கைது செய்ய தடை ) , பெயில் , முதல் வகுப்பு சிறை , சிறையில் மொபைல் போன் .. அந்த மாதிரி நீதி கிடைக்க நிறைய மெத்தப்படித்த வக்கீல்கள் ...என்ன செய்வார் மோடி தனியாக . ஒரு சில நல்ல அமைச்சர்கள் - நிறைய கிராமங்களுக்கு மின் இணைப்பு, நல்ல சாலை , சுத்தமாக ஊழல் கிடையாது , வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் , அரசு நிறுவனங்கள் நல்ல செயல் திறன் ... வாராக்கடன் ( NPA ) ஒன்றும் இந்த ஆட்சியில் கொடுத்தது கிடையாது , இது இந்த அரசுக்கு விட்டு சென்ற காங்கிரசின் டைம் பாம் . ( அந்த பெப்பர் ஸ்ப்ரே ரெட்டி நினைவில் இருக்கா ..அவர் ஒரு 10,000 கோடி NPA என அந்த சமயத்தில் கேள்வி ) ... பூஷன் ஸ்டீல் 90,000 கோடியாம் ...யார் இந்த பூஷன் ஸ்டீல் இது வரை இந்த பத்திரிக்கை உலகமோ அல்லது தொலை காட்சியோ இது போன்ற ஆட்களை பின் தெடர்ந்து ...யார் இவர்கள் , எங்க போச்சு காசு ....என்ற கேள்விகளை எழுப்பவே இல்லை .
ReplyDeleteஇருந்தாலும் மோடி அவர்கள் சில கண்டிப்பான முடிவை எடுக்க வேண்டிய நேரம் ... சிதம்பரம் , மாறன் , ஜகன் ரெட்டி , NSEL ஜிக்னேஷ் ஷா , ஷரத் பவார் ( பத்ம பூஷன் கொடுத்தாச்சு) ..இவர்களை எல்லாம் உலுக்கும் நேரம் வந்தாச்சு . தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்குனும் ...TINA factor ரொம்ப நாளைக்கு ஒடாது . தைரியத்தை ஏற்படுத்தி கொண்டு , உடனடி நடவடிக்கை தேவை .
ஆம்,நல்லது நடக்கும்போது பாராட்ட வேண்டும். பாராட்டுவோம்.
ReplyDeleteம்ம்ம்... பொறுத்திருந்து பார்ப்போம். உத்திரப் பிரதேசம் இன்னும் பல விஷயங்களில் கற்காலத்திலேயே இருக்கிறது. மாற்றம் நிச்சயம் தேவை.
ReplyDeleteஇது ஆரம்பம்தான். பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDeleteபார்ப்போம் மதுரை சகோ! நல்லது நடந்தால் நல்லதே! பாராட்டுவோம்...நிலைக்க வேண்டும் என்ற கவலையும், நீங்கள் சொல்லியிருப்பது போல் மதத்வேஷமும் வராமல் இருக்க வேண்டும்...உபி, பிஹார் போன்ற மாநிலங்கள் இன்னும் பல வகையில் முன்னேற வேண்டும்....மிகவும் மோசமான மாநிலங்கள்..அதாவது வளர்ச்சியில்..
ReplyDeleteகீதா