Wednesday, May 3, 2017

#modi #tamilnadu #ops #eps @avargalunmaigal #india
குழந்தைகளை சிரிக்க வைக்கும் புதிய தலைமுறை டிவி ப்ளஸ் அரசியல்  நக்கல்கள்

எங்க வீட்டிற்கு நண்பர் ஒருவர் சிறு குழந்தையுடன் வந்தார் நாங்கள் பேசி கொண்டிருந்த பொது  அந்த குழந்தை அழுததால் கார்டூன் சேனலை போட்டேன் அதை பார்த்த குழந்தை மேலும் அழுதது உடனே நான் சேனலை மாற்றுவதாக  நினைத்து புதிய தலைமுறையின் நேர்பட பேசுவை தவறுதலாக மாற்றிவிட்டேன்  ஆனால் என்ன அதிசயம் அதில் அவர்கள் கத்தி கூச்சல் போடுவதை பார்த்த குழந்தை சிரிக்க ஆரம்பித்தது # என்ன கொடுமைடா சரவணா

 ப்ளஸ் அரசியல்  நக்கல்கள்



வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்று சொலவதன் மூலம் தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் நடை பெறுகிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது. அப்படி இருக்கும் போது பாஜக ஆட்சியில் அமர்ந்தால் நாடு தமிழகம் முன்னேறும் என்று சொல்வது மிகவும் கேலிகுறியதாகவே இருக்கிறது


'மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம்' என, அமைச்சர்களுக்கு, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

உண்மைதானே ஹெட் ஆபிஸை விமர்சிப்பது தவறுதானே



தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்


ஜெயலலிதா இறப்பிற்கு பின் ஏற்பட்ட அரசியல் இடைவெளியை பயன்படுத்தி கொள்ள அதிமுக பாஜக திமுக போன்ற எல்லா கட்சிகளும் தவறிவிட்டன



#mkstalin @avargalunmaigal
மத்திய அரசை ஸ்டாலின் திடீர் என்று எதிர்க்க காரணம் என்ன?

மத்திய அரசை எதிருங்கள் என்று துண்டுச் சீட்டில் எழுதி கொடுத்தவர்களைத்தான் கேட்க வேண்டும்


ஏழைகள் சாமியையும் சாமியார்களையும் நம்புவதில்லை அவர்கள் நம்புவது எல்லாம் உழைப்பை மட்டுமே


ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் பாஜகவில் உறுப்பினர்களாக சேர முடியும் என்று பாஜக வால் சொல்ல முடியுமா?



உழைப்பாளர் தினத்திற்கு  சமுக இணைய தளங்களில் வாழ்த்து சொல்பவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு உழைப்பாளியின் குடும்பத்திற்கு பரிசோ அல்லது அவ்ர்களுக்கு ஒரு வேளை நல்ல உணவை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாமே அதைவிட்டு விட்டு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் என்று சொல்வதில் என்ன ஆகிவிடப்  போகிறது.


அன்புடன்
மதுரைத்தமிழன்

24 comments:

  1. ஹாஹா.... நியூஸ் சேனல் பார்த்து சிரிக்கும் குழந்தை.... :) அப்படித்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகள் பார்த்து சிரிக்கின்றன ஆனால் அதை பார்க்கும் நாம் தலையில் அடித்து கொள்ள்த்தான் வேண்டி இருக்கிறது

      Delete
  2. பதிவின் இறுதியில் சொன்னது செம .

    ReplyDelete
    Replies
    1. கிட்னி நல்லா வேலை செய்வதால்தான் இப்படி எல்லாம் சொல்ல முடிகிறது

      Delete
  3. ஒரு குழந்தையே சிரிக்கிற அளவுக்கா காமெடி அந்த சானல் ..அப்படினா நானும் பார்க்கணும்

    ReplyDelete
    Replies
    1. ஹலோ அதை எல்லாம் கஷ்டப்பட்டு போய்பார்க்காதீங்க வேண்டும் என்றால் நீங்களுக் உங்க வூட்டுகாரரும் வாக்குவாதம் செய்யும் பொது அதை வீடியோவாக எடுத்து பாருங்கள் ஹீஹ்ஹீ

      Delete
  4. அருமை அனைத்தும் உண்மை.

    ReplyDelete
  5. நேக்குப் புரிஞ்சு போச்சூஊஊஊ:) ட்றுத்தைப் பார்த்ததால்தான் குழந்தை அழுதிருக்கிறது.. பின்பு கார்ட்டூன் சனலிலும் ட்றுத் தெரிஞ்சமையாலேயே குழந்தை பாவம்... கொடுமை கொடுமை எனக் கோயிலுக்குப் போன.. கதையா நினைச்சு அழுதிருக்கு..:)..

    ஹா ஹா ஹா .

    ReplyDelete
    Replies
    1. ட்ரூத்துவை பார்த்து அழுததும் உண்மைதான் காரணம் ட்ரூத் பூரிக்கட்டையால் அடி வாங்குவதை பார்த்து பயந்து போய் அழுததது

      Delete
  6. ஆதார்கார்ட் வைத்திருப்பவர்கள் கட்டாயம் பாஜக வில் இணைய வேண்டும் இல்லையென்றால் சலுகைகள் பறி போய்விடும் என்றும் சொல்லலாம்

    ReplyDelete
    Replies

    1. ஆஹா நீங்கள் மிக அருமையான ஐடியாவாக சொல்லுகீறீர்கள் மோடி காதில் இது விழுந்தால் அவ்வளவுதான்

      Delete
  7. மிஸ்டு காலுக்கு கட்சியில் சேராதவன் ,ஆதார் கார்டைக் காட்டி சேர ஈனா வானாவா:)

    (ஆம்பளை அழக்கூடாதாம், என்னால் அதிரா மாதிரி த ம வாக்குக்காக அழ முடியலே :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:).

      Delete

    2. ஜீ அதிரா தேம்ஸ் நதியில் விழுந்துவிடுவதாக மிரட்டுகிறார்கள் அதனாலதான் ஆனால் அவங்கமிரட்டுறாப்ப்ல நீங்கள் வைகையில் விழுவேன் என்ரு சொல்ல முடியாது காரணம் அங்கே தண்னி இல்லை என்பது எனக்கு தெரியும் ஹீஹீ

      Delete
  8. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
    நாங்களும் ரசித்தோம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வருகிறேன்.. உங்கள் பணி கல்லூரியில் முடிந்து இருக்கலாம் ஆனால் இங்கு என்றும் முடிவததே இல்லை

      Delete
  9. பி.ஜே.பில இனி மாடுகதான் இருக்கும்போல. ஏன்னா, மாடுகளுக்குதான் ஆதார் கார்ட் கொண்டு வர்றாங்களே

    ReplyDelete
    Replies
    1. பிஜேபியில் இருப்பது மாடுகள் அல்ல அனைத்து எருமை மாடுகள்

      Delete
  10. பதிவின் இறுதி வரி சஜஷன் செம சகோ!!
    பாஜக சொன்னாலும் சொல்லலாம்...

    அரசியல் செய்தி பச்ச புள்ளையையே சிரிக்க வைக்கிறது என்பது ஹஹஹஹ்.....அப்படித்தான் நடக்குது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்க சிரிப்பதை பார்த்தால் நீங்களும் அந்த நிக்ழச்சியை பார்த்து இருப்பீங்க போல இருக்கே

      Delete
  11. நன்றி அல்தாஃப்

    ReplyDelete
  12. நன்றி ஹென்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.