Monday, May 8, 2017

#HindhiImposotion &  #NEET Exam harrassment @avargal_unmaigal
ரயில் டிக்கெட்டுகளில் காணாமல் போன தமிழ்! புதிய வடிவத்தில் தொடர்கிறதாஇந்தி திணிப்பு..?  HindhiImposotion



இந்த  இந்தி திணிப்பை பார்க்கும் போது நான் புரிந்து கொண்டது இதுதான் தமிழர்கள் புத்திசாலிகள் பயணச்சீட்டில் ஆங்கிலத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று படித்து புரிந்து கொள்வான் ஆனால்  ஹிந்தி மட்டும் தெரிந்து வடநாட்டில் இருந்து வந்தவனுக்கோ ஆங்கிலத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாத அறிவிலிகளாக இருப்பதால் அவர்களுக்காகவே இந்த அரசு அவர்களுக்கு ஹிந்தியிலும் இங்கு விபரங்களை பிரிண்ட் செய்து இருக்கிறது.



#HindhiImposotion @avargal_unmaigal


ஹிந்தியை திணிக்கும் மோடி அரசிற்கு திரணியிருந்தால் தங்கள் கட்சி அறிவிப்புகளை பேனர்களை விளம்பரங்களை தமிழகத்தில் தமிழில் வெளியிடாமல் ஹிந்தியில் மட்டுமே வெளியிடட்டுமே



#HindhiImposotion &   @avargal_unmaigal
ரயில் டிக்கெட்டுகளில் காணாமல் போன தமிழ்! புதிய வடிவத்தில் தொடர்கிறதா இந்தி திணிப்பு..? தமிழகத்தில் உள்ள பாஜக நாய்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்




#NEET Exam harrassment @avargal_unmaigal #dress code
நீட் தேர்வு எழுதுவதற்கான டிரெஸ் கோடு இதுதான்... இது தெரியாம போனது  நம்ம பிள்ளைங்கதான்..

முகம்மது பின் துக்ளக்  ஸாரி மோடி ஆட்சியில் நடத்தும் நீட் தேர்வு முட்டாபய  தேர்வு நடத்துவது போல இருக்கிறது  எக்ஸாம் நடத்துகிற ரூமிற்குள் செல்போன் ஹெட்போன் போன்றவைகள் அனுமதி கிடையாது என்று சொல்லி இருக்கலாம் அதைவிட்டு  பிரா ஹுக் ,தோடு, மூக்குத்தி, தண்ணி பாட்டில்ல என்னத்தடா எழுதி வைக்கமுடியும் பளளி எக்ஸாம்  போல பாடத்தில் இருந்தா கேள்வி கேட்கிறார்கள் அதனால் அதை பிட் எழுதி எடுத்து வருவதற்கு... இங்கு கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் அந்த சப்ஜெக்ட்லில் இருந்து பொது  அறிவு கேள்விகள் கேட்கபட்டு அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதுதானே இந்த எக்ஸாமின் நோக்கம். அதுவும் இது மத்திய அரசால் நடத்தப்படுவது.


அப்படி இருக்க ஏதோ தீவிரவாதிகள் நாட்டில் நுழைந்த செய்தி அறிந்து அவர்களை கண்டறிய சோதனை நடத்துவதை போல  சட்டை பாக்கெட்ல பேண்ட் பாக்கெட்டுல செக் பண்ற அளவுக்கு அப்படி என்னடா தேர்வு நடத்துறீங்க


கோமாளிப்ய ஆட்சியில் எல்லாம் கோமாளித்தனமகத்தான் இருக்கிறது





தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயக் கடனும் ரத்து செய்யப்படும்...” - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் @drtamilisaibjp


தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் மட்டுமல்ல மானமுள்ள தமிழர்கள் அனைவரும் தூக்கு போட்டு கொண்டு சாவத்தான் செய்வார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : நல்ல வேலை நான் ஹிந்தி படிககவில்லை அதனால்தான் அமெரிக்கவில் வசிக்கிறேன் ஹிந்தி படிச்சிருந்தால் ஒன்று தமிழ் நாட்டில் பானிப்பூரி வித்திட்டு இருப்பேன் அல்லது வடநாட்டில் இட்டிலி சுட்டு ஹிந்தியில் விற்று கொண்டிருப்பேன்
08 May 2017

20 comments:

  1. சரியான கருத்து நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சோமசுந்தரம் ஹரிகரன்

      Delete
  3. எக்ஸாம் டிரஸ் கோட் பற்றி முதலில் அப்ளிகேஷனில் சொன்னார்களா ....ஆடை/ பெல்ட்டில் ஜீன்ஸில் பட்டன்கள் பித்தளை மெட்டலில் இருக்கும் ..அதெல்லாம் ஏரோபிளேனில் பயணம் செயும்போதுதான் மெட்டல் டிடெக்டர்ல ஒலியெழுப்பும் அதுக்குதனே ஷூவை வாட்சை கழட்ட சொல்வாங்க ..நீட் எக்ஸாமுக்கு எதுக்கு ?? இவ்ளோ ரிஸ்ட்ரிக்ஷன்ஸ் அன்ட் ரூல்ஸ்

    ReplyDelete
    Replies
    1. டிரெஸ் கோட் பற்றி அப்பளிகேஷனில் சொல்லி இருக்கிறார்கள் போல ஆனால் தேவையில்லாத விஷயங்களுக்கு மத்திய அரசு விளம்பரம் கொடுக்கிறது ஆனால் மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு தேர்விற்கு இது பற்றி சரியான விளம்பரங்கள் விளக்கங்கள் கொடுக்காமல் இருந்ததில்தான் சந்தேகம். தமிழ் மாணவர்களின் மனநிலையை பாதிக்க வைத்து அவர்கள் தேர்வில் அதிகம் வெற்றி பெற்ருவிடக் கூடாது என்று கருத்தி செயல்பட்டதாகவே தோன்றுகிறது

      Delete
    2. ரூல்ஸ் எல்லாம் சொல்லியிருந்தார்கள் ஏஞ்சல். துளசியின் மகனும் எழுதியதால் தெரியும். ஃபுல் ஹேன்ட் ஷர்ட் கூடாது என்று போட்டிருந்தார்கள். பெல்ட் கூடாது என்று...அப்புறம் பெண்கள் ட்ரெஸ் கோட்....என்று போட்டிருந்தார்கள். பெரிய பட்டன்கள், பூக்கள், broocheS சட்டை ட்ரொசரில் கூடாது..சாண்டல்ஸ் சப்பல்ஸ்...ஷூ கூடாது ...பாக்ஸ், பென்சில் பென் எதுவும் கூடாது மெட்டல் உபகரணங்கள் எதுவும் கூடாது என்று...வாச்சும் கூடாது. பிட் பயம் தான்...ரிப்பீட்டட் கொவ்ஷன்ஸ் வரும் போல அதனால பிட் அடிச்சுருவாங்களோனும் பயம் போல...

      ரூல்ஸ் ஓகே...ஆனா செக்கிங்க் கொஞ்சம் ஓவர்னு தோணிச்சு...மெட்டல் டிடெக்டரரில் ஒலி எழுந்தால் உடன் அது எதனால் என்று அதை எடுத்தால்தான் உள்ளே அனுமதி என்றும் சொல்லப்பட்டதாம். துளசியின் மகன் எழுதிய சென்டரில் பிரச்சனைகள் எதுவும் இருந்ததாகச் சொல்லவில்லை. ஆனால் பிற செண்டர்களில் இருந்திருப்பதை அறிய முடிந்தது. இங்கும் தான்...மதுரை சகோ சொல்லியிருப்பது போல் வீடியோ காட்சிகள் கூட வெளியிட்டிருக்கலாம். எது ஓகே எது கூடாது என்று....விஷுவலாகச் சொல்லியிருந்தால் இன்னும் கவனமாக இருந்திருப்பார்கள் மாணவர்கள்.

      கீதா

      Delete
    3. நன்றி கீதா ஆனா இப்படித்தேர்வுகளுக்கு செல்லும்போது எண்ணெய் உணவுகளை கூட கொடுக்கக்கூடாது சில அழுத்தத்தை கூட்டும் என்பார்கள் மாணவர் முன் வாக்குவாதம்லாம் செய்யக்கூடாதென்று பேரண்ட்ஸுக்கு அட்வைஸ்லாம் உண்டு ..அப்படியிருக்கும்போது ..வீண் டென்க்ஷன்தானே . உள்ளாடை சம்பவம் சீ கேவலம் பிடித்த மாக்கள் என நினைத்தேன்

      Delete
    4. ஆம் ஏஞ்சல் ஆல் வெரி ட்ரூ...ரூல்ஸ் ஓகே ஆனா அதுக்காக உள்ளாடையில் உள்ள ஹூக் சத்தம் எழுப்பியது என்று..அதைப் அப்புறபப்டுத்தச் சொன்னது மகா கேவலம். உள்ளாடைகளில் ஹூக்ஸ் உண்டு என்பது தெரியாத விஷயமா என்ன..ரொம்ப அசிங்கமா இருக்கு..

      கீதா

      Delete
  4. ..இப்பவும் அவங்கதான் மத்தியில் ஆட்சி செய்றாங்க இப்பவே ரத்து செய்யலாமே விவசாயிகளின்கடன்களை

    ReplyDelete
    Replies

    1. மோடியின் வறட்டு கெளரம்தான் அதை தடுக்கிறது

      Delete
    2. முதல்ல விவசாயத்தை வளர்க்கும் நல்ல திட்டங்களைக் கொண்டு வரட்டும்..அதையே காணும். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்பதெல்லாம் ஏட்டளவு தான். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதே...
      கீதா

      Delete
  5. அரசியல் களம் தமிழகத்தில்
    மிகவும் பலவீனப்பட்ட நிலையில்
    இருக்கிறது

    இது தக்க தருணம் என அவர்களுக்குப்
    புரிந்திருக்கிறது

    நம் மக்களுக்குத்தான் புரியவில்லை

    அருமையான கொஞ்சம் உறைக்கும்படியான
    பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies

    1. நான் சோற்றில் கொஞ்சம் சற்று அதிகமாகவே உப்பு சேர்த்து கொள்கிறேன் போல அதனாலதான் உறைக்கும்படியாக எழுதிவிடுகிறேன் போல

      Delete
  6. ஆங்கிலப்பள்ளிகள் பட்டி தொட்டி எல்லாம் தமிழகத்தில்.
    அரசியல் தலைவர்கள் எல்லோரும் நடத்துவது ஆங்கிலப் பள்ளிகள்.
    தமிழ்வழி பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
    முதலில் தமிழ் நாட்டில் தமிழ் காக்கவில்லை. ஐ ஏ எஸ் தேர்வு கூட தமிழில் எழுதலாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொலவது உண்மைதான் நான் மறுக்கவில்லை தமிழ்வழிக் கல்வி முடப்படுகின்றன என்பதற்காக இந்தியை இங்கு கொண்டுவர வேண்டுமா என்ன அதற்கு பதில் தமிழை வளர்க்க முயற்சி செய்வதுதானே சரி....

      Delete
  7. வெட்கக்கேடு. இன்னும் என்ன நடக்கப்போகிறதோ?

    ReplyDelete
  8. மைல் கல்லில் ஹிந்தி ,இப்போ ரயில் டிக்கெட்டில் ஹிந்தி ,வங்கிகளுக்கு சென்றால் பெரும்பாலும் ஹிந்தி பேசும் மேலதிகாரிகள் ...நன்றாக ஹிந்தியைத் திணிக்கட்டும்!தமிழக மக்கள் தேர்தலின் போது பா ஜ காவை துடைத்து எறிவார்கள் !
    தேர்வின் போதுகூட மத்திய அரசின் கொடூர முகம் வெளிப் பட்டுள்ளது ,மக்கள் மறக்க மாட்டார்கள் ,பலனை அனுபவிப்பார்கள் :

    ReplyDelete
  9. நீட் எக்சாமுக்கு இப்படியாவது போகலாமா?!

    ReplyDelete
  10. //தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மானமுள்ள தமிழர்கள் தூக்குப்போட்டுச் சாவார்கள்//

    மானமிருந்தால் எதற்குத் தூக்குப்போட்டுச் சாகிறான்? போராடியல்லவா சாவான்.

    பார்ப்போம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.