பாஜக தலைவர்களுக்கு ரஜினி ராமராக தெரிகிறாரா என்ன?
மோடி மீதும் நம்பிக்கை இல்லாததாலும் அவர் செய்த சாதனைகள் தந்திரங்கள் ஏதும் தமிழகத்தில் கை கொடுக்காததால் என்னவோ பாஜக தலைவர்களான அமித்ஷா ,வெங்கய்யா நாயுடு, கட்காரி தமிழிசை ஹெச் .ராஜா போன்றவர்கள் ரஜினியை வரவேற்று சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள்...காரணம் பாஜகவை காப்பாற்ற வந்த ராமராக ரஜினியை அவர்கள் கருதுவதுதான்
ரஜினி அரசியலுக்கு வருவது தப்பில்லை ஆனால் அவர் வரப் போவது யாருக்கா? தன் குடும்ப வளர்ச்சிக்காகவா அல்லது பாஜக வளர்ச்சிக்காகவா அல்லது தமிழர்களின் வளர்ச்சிக்காகவா என்பதை பொறுத்து அவரின் எதிர்காலம் இருக்கிறது. இன்றைய காலம் அன்றைய காலம் போல அல்ல வெகுவாக மாறி இருக்கிறது. அதனால் அரசியல் தலைவராக இருப்பவர்கள் அல்லது வருபவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும் அதுதான் ஜெயலலிதாவிற்கு நேர்ந்த கதி
அன்புடன்
மதுரைத்தமிழன்
கொசுறு : இனிமேல் எவனாவது தமிழகத்தில் ஆட்சி சரியில்லை அரசுசெயல்படாமல் இருக்கிறது அதனால் பாஜகவைத்தான் அடுத்த தேர்தலில் ஜெயிக்கவைக்கணும் என்று சொன்னீங்க உங்கலை செருப்பாலதான் அடிப்பேன் காரணம் இப்ப தமிழகத்தை ஆள்வது பாஜகத்தானே
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.