பார்வைகள்
பலவிதம்.
(குழந்தைகளின்
நகைச்சுவைகள்)
பெரியவர்களாகிய
நாம் பார்க்கும் பார்வைக்கும்
குழந்தைகள் பார்க்கும்
பார்வைக்கும் வித்தியாசங்கள்
ஏராளம்.அதை
என் பார்வையில் இங்கு நகைச்சுவையாக
சொல்லி இருக்கிறேன்.
நிச்சயம்
இதை படிக்க உங்களுக்கு
பிடிக்கும்,
நிர்வாணம்
(
NUDITY ) :
கோடைகாலத்தில்
என் குழந்தையயும் என் நண்பர்களின்
குழந்தைகளையும் காரில் அழைத்து
சென்று கொண்டிருந்தேன்.
நான்
ஒட்டி சென்ற லேனுக்கு அடுத்த
லேனில் ஒரு கன்வெர்டபல் காரில்
ஒரு அமெரிக்க தம்பதியினர்
வந்து கொண்டிருந்தனர்.
அதில்
வந்த பெண் திடீர் என்று எழுந்து
நின்று கைகளை ஆட்டிக் கொண்டு
வந்தார்.
சற்று
நேரத்தில் அவளூக்கு என்ன
தோன்றியதோ தெரியவில்லை தான்
அணிந்த ஆடைகளை களையத் தொடங்கி
நிர்வாணமாகினார்.
அதை
பார்த்த எனக்கு ஷாக் அடித்தது
.குழந்தைகளும்
அவளை பார்த்து கொண்டிருந்ததார்கள்.
நான்
உடனே காரை வேகமாக ஓட்டத்
தொடங்கினேன்.
பின்
சீட்டில் இருந்த என் குழந்தை
சொன்னது டாடி டாடி அந்த காரில்
பார்த்தாயா அந்த லேடி சீட்
பெல்ட் அணியாமல் காரில் நின்று
கொண்டு போகிறாள் போலிஸ்
பார்த்தால் டிக்கெட் கொடுக்க
போகிறான் என்றாள்.
அதன்
பின் தான் நிம்மதி &
புத்தி
வந்தது.
நாம்
பார்க்கும் பார்வைக்கும்
குழந்தைகள் பார்க்கும்
பார்வைக்கும் உள்ள வேறுபாடு.
நேர்மை
(
HONESTY ) :
ஒரு
நாள் என் குழந்தை அவளின்
பாத்ருமிலிருந்து டாடி என்று
கத்தினாள் .
நான்
ஒடிச் சென்று என்னவென்று
பார்த்தேன்.
அவளின்
டூத் பிரஸ் டாய்லெட்டில்
விழுந்து விட்டது .
நானும்
அதை எடுத்து அது யக்கி என்று
சொல்லி குப்பை கூடையில் போட்டு
விட்டு புதியது ஓன்று தருகிறேன்
என்று சொன்னேன்.
அவள்
அதற்கு சரி என்று தலையாட்டிவிட்டு
சில நிமிஷம் யோசித்து என்னை
பார்த்து சிரித்து கொண்டே
சொன்னாள் உன் பிரஸையும்
தூக்கி குப்பை கூடையில் போடு
டாடி.
ஏனென்றால்
இரண்டு நாளைக்கு முன்னாள்
உன் டூத் பிரஸும் டாய்லெட்டிற்குள்
விழுந்து விட்டது என்று
சொன்னாளே பார்க்கலாம்.
டிரெஸ்
அப் (DRESS-UP
)
ஒரு
குழந்தை தன் அப்பா பார்ட்டிக்கு
போவதற்க்காக டிரெஸ் அணிந்து
கொண்டிருப்பதை பார்த்து
கொண்டிருந்தான் அப்போது அவன்
டாடி டக்சிடோ (
tuxedo ) அணிந்து
கொண்டிருப்பதை பார்த்த குழந்தை
டாடியைப் பார்த்து அதை அணியாதை
என வார்னிங் செய்தது .
அதற்கு
டாடி ஏன் என்றுகேட்டார் .
அதற்கு
அந்த பையன் நீ எப்போது எல்லாம்
அதை அணிந்து கொண்டு பார்ட்டிக்கு
போகிறாயோ அடுத்த நாள் காலையில்
தலை வலிக்கு என்று நீ கம்பெளையண்ட்
பண்ணுகிறாய் என்றான்.
நிர்வாணம்
(MORE
NUDITY:
YMCA-யில்
ஒரு சின்ன பையன் வழி தவறி
பெண்களின் லாக்கர் ருமிற்குள்
நுழைத்து விட்டான்.
அங்குள்ள
பெண்கள் கூச்சலிட்ட வண்னம்
அருகில் உள்ள துண்டை எடுத்து
நிர்வாணமான உடம்பை மறைத்தனர்.
அதை
ஆச்சிரியாமாக பார்த்த் சிறுவன்
அவர்களை பார்த்து என்ன நீங்கள்
இதற்கு முன் நீங்கள் சிறுவனையே
முன்னே பின்னே பார்த்தது
கிடையாதா ஏன் கத்தி கூச்சலிடுகிறீர்கள்
என்று கேட்டான்.
ஸ்கூல்
(SCHOOL)
ஒரு
சின்ன பொண்ணு ஒருவாரமாக
ஸ்கூலுக்கு போய்விட்டு வார
இறுதியில் அவள் அம்மாவிடம்
நான் என் நேரத்தை வேஸ்டிங்க்
பண்ணுகிறேன் என்றாள்.
எண்டி
அப்படி சொல்லுற என்று அம்மா
கேட்டதற்கு .
எனக்கு
வாசிக்க தெரியலை ,
எழுத
தெரியல ஆனா எனக்கு நல்லா பேசத்
தெரியும்.
ஆனா
எங்க டீச்சர் எப்ப பார்த்தாலும்
என்னை பார்த்து பேசாத பேசாத
என்று சொல்லிக் கொண்டே
இருக்கிறாள் என்றாள்.
பைபிள்
(
BIBLE )
ஓரு
சின்ன பையன் வீட்டிலுள்ள
பைபிளை திறந்து பார்த்து
கொண்டிருந்த போது அதில்
இருந்து ஒரு காய்ந்த மர இலை
ஒன்று உள்ளே இருந்து வெளியே
விழுந்தது.
அதை
பார்த்த சிறுவன் அம்மா அம்மா
இங்கே பாருமா நான் பைபிளிலிருந்து
ஒன்றை கண்டு எடுத்து உள்ளேன்
என்று ஆச்சிரியமாக சொன்னான்.
அதை
கேட்ட அம்மா அது என்னவென்று
கேட்டதற்கு.
அம்மா
இது ஆடம்ஸின் அண்டர்வேர்
என்று நினைக்கிறேன் என்று
சொன்னான்
அன்புடன்
மதுரைததமிழன்
டிஸ்கி
: இது
ஒரு மீள் பதிவு 2011
ல்
வெளிவந்த பதிவு ஆரம்ப காலத்தில்
போட்ட பதிவு என்பதால் பலரும்
படித்து இருக்க மாட்டார்கள்
என்பதால் இங்கு மீள் பதிவு
செய்யப்படுகிறது.
நான்
ஆங்கிலத்தில் படித்த பல
ஜோக்குகளை கொஞ்சம் டிங்கரிங்க்
பண்ணி என் தளத்திற்கு ஏற்றவாரு
போட்டதுதான் இந்த பதிவு.....
அருமை!
ReplyDeleteஉண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்! எப்போது குழந்தைகளின் பார்வைகள் கள்ளங்கபடு இல்லாதவை, அறிவுப்பூர்வமானவை, வேறு உலகில் இருப்பவை!
Deleteஇந்த பதிவிற்கு முதலாவதாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ...முதலில் வந்தவர்களுக்கு வடைதான் கிடைக்கும் ஆனால் நான் அதை மாற்றி முதலாவதாக வருபவர்களுக்கு வைர நெக்ல்ஸ் பரிசாக தர ஏற்பாடு செய்து இருக்கிறேன், இந்த வைர நெக்லசை அதிராவிடம் கொடுத்து வைத்து இருக்கிறேன் அதை அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள் நன்றி
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மனோ அக்கா கேட்டாவா? கேட்டாவா?:).. உங்கட மேலே சொன்ன அந்தக் காரைக் கொடுக்கலாமெல்லோ:)
Deleteஓ அந்த கன்வெர்டபல் கார் உங்களுடையதா....சரி சரி அந்த காரை அவருக்கு பரிசாக அனுப்பிவிடுங்கள்
Deleteஓ. இன்னும் அதிரா அந்த வைர நெக்லச தன்னோட செக்ரட்டரிக்குக் கொடுத்துருக்கணுமே... கொடுக்கலையா...ஏஞ்சல்.. எங்க இருக்கீங்க....
Deleteகீதா
யூ ரூ கீதா?:) கர்ர்ர்ர்ர்:)
Deleteஇது தாங்கள் குழந்தையா இருந்தபோது நடந்ததா
ReplyDeleteஇதற்கு என்ன பதில் சொல்லாம்....யோசித்து கொண்டே இருக்கிறேன்
Deleteஹா ஹா ஹா கீழ்ப்பாக்க பஸ்ல ஏறியிருந்துகொண்டே ஓசிக்கலாமே:)
Deleteஹா ஹா ஹா அருமையான தகவல்கள். மிக சரியாக சொன்னீங்க, குழந்தைகள் அன்னம் போன்றவர்கள் நல்லதையே எடுத்துக்கொள்ளக் கற்றுக்கொள்கிறார்கள்.
ReplyDelete
Deleteகுழந்தைகள் மட்டும் அன்னம் போல அல்ல நானும்தான் அதனால் யார்வீட்டிற்கு போனாலும் அங்கு இருக்கும் நல்லதை நான் எடுத்து கொள்வேன் அதாகப்பட்டது நல்ல தங்கத்தினால் வைரத்தினால் ஆனா நெக்லஸை எடுத்து கொள்வேன்...என்னது நீங்க என்னை என் குடுமப்த்தோட உங்க வீட்டீற்கு வரணுமா? கண்டிப்பா வரேன்
மதுரை...அப்படி போடுங்க....இப்ப உடனே ஏஞ்சல் கு கொடுக்க வேண்டியது...அந்த வைரம் ஏஞ்சலு க்கு போயிடும்...பாருங்க...
Deleteகீதா
ஹா ஹா ஹா எனக்கொரு டவுட்டூ.. உங்கட பிரஸ் ஐ, யார் வெளியே எடுத்து வச்சிருப்பார்கள்???:) யாரோ கொலை வெறியோடு இருந்திருப்பார்களோ அந்நேரம் உங்களோடு:)..
ReplyDeleteஇப்படி எல்லாம் யாராவது செய்வார்கள் என்பதால்தான் நான் பிரஸ் வைத்து கொள்ளவில்லை அப்படியானல் எப்படி பல் தேய்கிறேன் என்கிறீர்களா ஹீஹீஹீ நான் பல்லே தேய்ப்பது இல்லை
Deleteஏன்னா பல்லே இல்லை ஹாஹாஆஆ
Deleteஇப்போ புரியுதோ அஞ்சு.. எதுக்கு இவருக்கு தனி ரூம் கொடுத்து சன்னியோடு நித்திரைகொள்ள விட்டிருக்கிறா மாமி என:) ஹையோ ஹையோ:)
Deleteஎனக்கு பல் இல்லையா அப்படி யாரு சொன்னது நம்பாதவங்க் நீயூஜெர்ஸி பொண்ணுங்ககிட்ட வந்து கேளுங்க் அவங்க சொல்லுவாங்க் இந்த மதுரைத்தமிழன் பொண்ணுங்களை பார்த்தால் இந்த வயதிலும் பல் முப்பத்திரெண்டும் தெரிகிறமாதிரி இளிச்சுகிட்டு பார்ப்பார் என்று சொல்லுவாங்க
Deleteவைர நெக்லஸிற்கு நன்றி! ஆனால் அதிராவிடமிருந்து அது பூனையாகவல்லவா மாறி வரும்?
ReplyDelete[பூனையென்றாலே எனக்கு அலர்ஜி]
அதிரா வைர நெக்லஸிற்கு பதிலாக கார் பரிசாக தருவதாக சொல்லி இருக்கிறார்
Deleteஅச்சச்சோஒ மனோ அக்கா அவசரப்பட்டு நன்றியும் சொல்லிட்டாவே.. இப்போ நான் என்ன பண்ணுவேன்ன் முருகா:).
Deleteகாரோ நெக்லஸோ அனுப்பி உங்க கெளரவத்தை காப்பாற்றி கொள்ளுங்கள் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது தேம்ஸ் நதி அதில் குதித்துவிடுங்கள்
Deleteரசிக்க வைத்தன. சில புன்னகைக்க வைத்தன. சில சிரிக்க வைத்தன.
ReplyDeleteஅப்பாடி எப்படியோ இந்த பதிவில் உங்களை ரசிக்க வைத்துவிட்டேன்.......
Deleteஐயையோ.. வைர நெக்லஸை நான் வாங்கி உங்களுக்குக் கொடுத்துவிடலாம் என்று நினைத்தேனே...
ReplyDeleteவைரம் என்ரால் எனக்கு அலர்ஜி.....அதனால் அதற்கு பதிலாக அதிரா இன்றைய தனது பதிவில் சொல்லி இருந்த குளூ குளு டிச்சரின் புகைப்படத்தை வாங்கி அனுப்புங்கள்
Deleteஆஹா..நெல்லை..இந்த வைர நெக்லஸ் படும் பாடு..அதிரா அதை ரகசியமா வைச்சுட்டாங்கலாமே..ஹஹஹ....
Deleteகீதா
ஹையோ கீதா பார்த்தீங்களோ என் வைர நெக்லஸை ஆசைக்கு ஒருநாள்கூட கழுத்தில் கட்ட வழியில்லாமல் கஸ்டப்படுறேன் நான்:).. நெல்லைத்தமிழன்கூடக் கண்போட்டு விட்டாரே என் நெல்லெஸ் ல:).
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 ட்றுத்:).... இந்த ரண களத்திலும் குளு..குளு கேட்குதோ?:).
குழந்தைகள் கள்ளம் கபடமில்லாதவர்கள் ,பிறகு வந்து விரிவாக எனது கருத்துக்களை பகிர்கிறேன்
ReplyDeleteவாங்க வாங்க மீண்டும் வாங்க
Deleteஉண்மையில் ஒவ்வொரு தலைப்பும் இப்பதிவில் எனக்கு பல நினைவுகளை நினைவுபடுத்திவிட்டது ஆகவே எனது பதில் பதிவாக வரும் :)))
Deleteகள்ளம் கபடமில்லா குழந்தை மனம் பெரியவங்களுக்கு தரணும் இறைவன் .நம்மால் .மீண்டும் பால்ய வயதுக்கு போக முடியாது ஆனா அந்த குணத்தை யாவது பெறலாம் இல்லையா
Deleteஎன்னாது இதுவும் பதிவாகவாஆஆஆஆஆஆ?:) ஹையோ ட்றுத், அடுத்து ஒரு பழைய பட ரிவியூ போடுங்கோ பார்ப்பம் என்ன பண்றா என:)
Deleteநீங்க வயசானவங்க் அதிரா அதனால் நீங்க ஒரு பழைய படம் ரிவ்யூ அனுப்புங்க என்ன்னிடம் கேட்டால் பழைய படம் என்றால் கபாலிதான் ஞாபகத்திற்கு வருது காரணம் நான் ரொம்ப யூத்தாக்கும்
Deleteஆஹா!எப்போதுமே குழந்தைகள் சிந்தனை வேறு தான் அல்லவா? எந்த விடயத்திலும் பிள்ளைகள் பார்வை ஆச்சரியப்படுத்தும் ஒன்றாகவே இருக்கும். பெரியவர்கள் ஆனபின் தான் கள்ளமும் கபடமும் உள் நுழைந்து விடுகின்றது.
ReplyDeleteகள்ளம் கபடமில்லாத குழந்தைகளை இந்த சமுகம் கள்ளம் கபடமுள்ள மனிதர்களாக ஆக்கிவிடுகிறது
Deleteஉங்கள் பிரஷ். .. யக்கி யா......ஹஹஹ....நிர்வாணம் இரண்டிலும் குழந்தைகளின் பாரவை ரசிக்க வைத்து. சிரிக்க வைத்தது....எல்லாமே குழந்தைகளின் களங்கமற்ற பார்வை...
Deleteகீதா
ட்றுத் இன் அனுபவம் இங்கு பேசியிருக்கிறது:) மேலே:).
Deleteஹையோ ட்றுத் எதுக்கு கொமெண்ட்டைக்கூட கொப்பி பண்ண முடியாமல் பண்ணியிருக்கிறீங்க கர்:) கொமெண்ட்டைக் களவெடுத்துப் போய் வைர நெக்லெஸ் ஆ வாங்கப்போகினம்:).. எடுத்தா எடுக்கட்டுமே.. லொக் எதுக்கு கர்ர்:) ஆசைக்கு கொப்பி பண்ணிப்போட்டு ஒரு வசனம் எழுத முடியாமல் இருக்கு.
நன்றி விஜய்
ReplyDeleteகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.....நீங்கள் சொல்லியிருக்கும் குழந்தைகள் அந்த வகை....இப்பல்லாம் இங்க குழந்தைகள் பிஞ்சிலே பழுத்தவையாக இருக்காங்க...சன், இன்னும் சில சானல்...குட்டீஸ் சுட்டீஸ்....நிகழ்ச்சி பார்த்தா..தெரியும் ..அதுக்கு காரணம்...தொலைக்காட்சிகள்....பெற்றோர்....
ReplyDeleteகீதா
நானும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன் எல்லாம் என்பேரனைப் பற்றியது இது வேறு எங்கோ படித்தது குழந்தை தன் தண்டையிடம் கேட்டானாம் நீங்கள் எப்படி பிறந்தீர்கள் அதற்கு தந்தை ஒரு ஸ்டார்க் கொண்டு வந்து என் தாயிடம் போட்டது என்றாராம் அம்மா எப்படி [பிறந்தார்கள் அவரையும் ஒரு ஸ்டார்க் அவள் அம்மாவிடம் கொண்டு போட்டது நான் எப்படிப் பிறந்தேன் என்றான் உன்னையும் ஒரு ஸ்டார்க் உன் அம்மாவிடம் கொண்டு போட்டது என்றார் மகன் முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு யாருக்குமே உடலுறவு தெரியாதா என்றானாம் .....!( உங்கள் பதிவுக்குஇந்தப் பின்னூட்டம் சரியாகாவிட்டால் நீக்கி விடலாம் )
ReplyDeleteமுன்பே இதை நான் படித்திருக்கிறேன் இந்த கருத்து இந்த பதிவீற்கு ஏற்றதுதான்
Delete