Monday, May 22, 2017

 3 years of #Modi sarkar @avargal_unmaigal
G.M.BalaSubramaniam
ஒரு சாமான்ய 77 வயது இளைஞரின்  பார்வையில் பாஜக ஆட்சி


பெங்களுரில் வசிக்கும் 77 வயது தமிழ் இளையஞரான ஜி.எம் பால சுப்பிர மணியம் என்பவர் பாஜகவின் ஆட்சியை பற்றி தனது தளத்தில் எழுதி வெளியிட்ட பதிவு இது. அவரின் அனுமதியுடன் பலரும் படிக்க இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது, நன்றி பால சுப்பிரமணியம்


                                               பெர்செப்ஷனா  உண்மையா
                                              ----------------------------------------------
வாழ்க்கையில்  பல முடிவுகள் இம்மாதிரி அனுமானங்களின்  பேரிலேயே எடுக்கப் படுகின்றன இவை நல்லபடியும்  இருக்கலாம் தவறாகவும்   இருக்கலாம்  எதையோ எழுத நான்  பீடிகை போடுவது போல் இருக்கிறதா

சரி இத்தனை பீடிகைகளும் எதற்காக. சில விஷயங்களை முழுவதும்  தெரிந்து கொள்ள முடிவதில்லை. தெரிந்து கொள்ளவும் முடியாது/ஆனால் எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்துதானே நல்லதுஇது தவறுஇது என்று முடிவு செய்ய வேண்டி இருக்கிறது

இப்போது நடக்கும் பாஜகவின் ஆட்சி பற்றி எழுதத் தோன்றியது முந்தைய யுபிஎ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல நல்ல முடிவுகள் பலவற்றையும்  இவர்களே கொண்டு வந்ததுபோல் என்ன ஒரு பித்தலாட்டம்  ராஜிவ் காந்தியின்  முயற்சியால்  முன்னிறுத்தப்பட்ட  கணினி மூலம் எதையும் செய்யலாம் என்பதை இவர்களது முயற்சி போல்  காட்டிக் கொள்கிறார்கள் ஆதார் கார்ட் உபயோகப்படுத்துவது குறித்து நிறையவே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இப்போது எந்த ஒரு பணப் பரிவர்த்தனைக்கும்  ஆதாரை முன்னிறுத்துகிறர்கள்  ஜீஎஸ்டி என்று சொல்லப்படும்  கூட்ஸ் அண்ட் செர்விஸெஸ் வரி முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது  முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுஅன்றைய மோடியின் ஆட்சியில் இருந்த குஜராத் அரசுதான் இன்றைக்கு இவர்களால் கொண்டு வரப்பட்டு அமல் செய்வதாக ஒரு பிரமையை ஏற்படுத்துகிறார்கள் அன்னா ஹஜாரேயையும் அவரதுஜன் லோக் பால் மசோதாவையும்  பலர் மறந்து விட்டிருக்கலாம் 2013ம் ஆண்டு பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை இன்னும்  அமல் செய்யவில்லை. குறிப்பிட்டவர்களின்  ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் உத்தியோ    லோக்பாலின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்  பொறுப்பு பிரதமர்  உச்சநீதிமன்ற நீதிபதி. எதிர்கட்சித் தலைவர் மற்றும்    சிலர் அடங்கிய  ஒரு குழு தீர்மானிக்க வேண்டும்


இப்போது அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித்தலைவர் இல்லை என்னும்  காரணத்தால் லோக்பால் நியமனம்  செய்யப்படாமல் இருக்கிறது அந்த லோக் பாலின் முக்கிய பணியே ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளானவரை விசாரித்து நீதி வழங்குவதுதான்  இப்போது ஊழலில் பலரையும் குற்றம்சாட்டி சிபிஐ என்னும்  இயந்திரத்தை முடுக்கி விட்டு எல்லோர் பெயரையும் களங்கப்படுத்தும் காரியத்தை லோக்பால் மூலமே செய்ய முடியாதா  இவர்கள் ஏன்  லோக்பால் நியமனத்தின்  மூலம்  அதை செய்யக் கூடாது /


அப்போது இவர்களுக்கு ஏதுவாக செயல்படும் பல அமைப்புக்சள் மீது இவர்களதுஎண்ணங்களை  திணிக்கமுடியாது என்பதாக இருக்குமோ  நீதி  வழங்கும் நீதிபதிகள் மேலும் இவர்களதுமுடிவுகள் திணிக்கப் படுகிறதோ என்னும்  சந்தேகம் எழுகிறது ஆண்டுகள் பலவும் மாதங்கள் பலவும் கிடைப்பில்போட்டிருந்த வழக்குக்கள் இவர்கள் நினைக்கும் போது உயிர்பெறுகின்றன வழக்கு தொடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்று சொல்ல  வரவில்லை ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ்  டிலேய்ட்  இஸ்  ஜஸ்டிஸ் டினைட் என்பது போல் இருக்கிறது எத்தனையோ கேஸ்கள் நினைவுக்கு வந்தாலும்  போதுமான விஷயங்கள் நினைவுக்கு வராததால் கோட் செய்ய முடியவில்லை காவியுடை தரித்தவர்கள் எல்லாம் முதல் மந்திரியாகவும்   குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களாகவும் வெளியில் திரிகிறார்கள் நீதி மன்றம் ஏதோ சில கேஸ்களில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கினாலும் அதை எதிர்த்து அப்பீல் செய்யும்   சிபிஐ ஏனோ சில வழக்குகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது சுரங்கத் தில்லுமுல்லுகளில் விசாரிக்கப்பட்ட ரெட்டி சகோதரர்களுக்கு  விடுதலை கிடைத்ததை எதிர்த்து எந்த அப்பீலும்  இல்லை




முந்தைய அரசின் நல்ல முடிவுகள் பலவும் அவர்களால் கொண்டு வரப்பட்டது என்னும் காரணத்தால் செயல் படுவதில் பெரிய சுணக்கமே இருக்கிற்து மஹாத்மா காந்தி நேஷனல் ரூரல் எம்ப்லாய்மெண்ட் ஆக்ட் வேலை இல்லாத அன்ஸ்கில்ட் தொழிலாளர்களுக்கு  ஒரு ஆண்டில் குறைந்தது நூறு நாட்களுக்காவது வேலை கொடுத்து அதன் மூலம்  குறைந்தபட்சம்  ஒரு வருவாய்க்கு வழிசெய்யும் திட்டம் சோஷியல் செக்யூரிடி ஆக்ட் எனலாம்  ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே  முன்னுரிமை வழங்கப் படுவதாக  ஒரு பேச்சும்  இருக்கிறது  இதைச் செயல் படுத்த சில சுலபமான நம்பகமான வழிமுறைகளைக் கொண்டு வரவேண்டும்  இங்கு ஊழல் பெருக வாய்ப்புகள் இருப்பதால் இந்த எச்சரிக்கை

தகவல் அறியும் சட்டம் ரைட் டு எஜுகேஷன்  போன்ற முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களும் சரியாக செயல் படுத்தப்படாமால் திணறு கிறது ஒரு கட்சிக்கு  என்று கொள்கை ஏதாவது இருக்க வேண்டும்  அந்தக் கொள்கையின்  அடிப்படையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும்  இப்போது இருக்கும் அரசுக்கு காவிமயமாக்குதலே கொள்கை போல் தெரிகிறது அதைச் செயல் படுத்த  முக்கிய பதவிகளில் இவர்களின்  அடிவருடிகளே நியமிக்கப் படுகின்றனர்


காங்கிரசின் முக்கிய தலைவர்களை இவர்கள் அடாப்ட் செய்து சொந்தம் கொண்டாடுகின்றனர்எனக்கு இன்னும்  ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது  கடைசியாக இந்தித் திணிப்பு . அரசு பத்திரங்களில் இந்தியில் எழுதினால் அது தெரியாத மக்களை  இந்தி படிக்கக் கட்டாயப்படுத்தும் ஒரு உத்தியே இது

சரித்திரகாலங்கள் முதலே தமிழ்நாடு  ஆங்கிலேயர் ஆட்சி தவிர  எந்த ஆதிக்கத்துக்கும் கட்டுப்படவில்லை.  அசோகர் காலத்திலும்  சரி அக்பர் காலத்திலும்சரி அவர்களது ஆட்சிக்குக் கட்டுப்படவில்லை இந்திய நாட்டை ஒருங்கிணைப்பது  மதம்  ஒன்றே வடக்கு முதல் தெற்குவரையும்  கிழக்கு மேற்கிலும்  மதம்  ஒன்றுதான்  இந்தியாவை இணைக்கிறது அதையே ஒரு கருவியாகப் பயன் படுத்தி ஹிந்து ராஷ்ட்ரா  என்றெல்லாம்  பேச்சுகள் எழுகிறது

சாதாரணப்பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவது இல்லை  நரி வலம் ஓனால் என்ன இடம் போனால் என்ன  என்றுஇருப்பவர்கள் ஆனாலும் அவர்களின்  பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா
( புள்ளி விவரங்களுடன்  எழுத ஆசைதான்   ஆனால் ஒரு சாதாரணப் பிரஜையாக சில அனுமானங்களே துணை நிற்கிறது நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களையே அதன்படிதானே தேர்வு செய்கிறோம் மிகவும் அதிகமான நேரங்களில்  இந்த ஹன்ச் சரியாகவே இருப்பதும்  தெரிகிறது



அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. ஐயாவின் பதிவுகள் எப்பொழுதும் நறுக்கு தெறித்தாற்போல இருக்கும். அதனைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. முதலில் ஜிஎம்பி சார் உங்கள் கிராஃபிக்ஸில் ஸ்மார்ட்டாக மிளிர்கிறார்...

    அங்கும் இந்தக் கட்டுரையை வாசித்தேன். ஆனால் கருத்திட முடியவில்லை. அதாவது எனக்கு அத்தனை நுணுக்கமாக விலாவாரியாக அரசியல் பற்றிக் கருத்திடத் தெரியவில்லை. இப்போதும் இங்கும் அதே..

    பொதுவாகச் சொல்வதென்றால் என் சிற்றறிவிற்கு எட்டுவது.... நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில் பயணிப்பதகாகத் தெரியவில்லை.

    கீதா

    ReplyDelete
  3. நான் படித்த அளவிற்கு புரிந்து கொள்வது எனக்கு சிரமமாய் இருக்கிறது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.