மோடியின் செயல்பாடுகளை பொறுக்க முடியாமல் பொங்கிய கல்கி வார இதழ்
வளர்ச்சி நல்லதுதான் ஆனால் கருவேல மரத்தின் வளர்ச்ச்சி நல்லது அதுபோலத்தான் மோடியின் வளர்ச்சியும் கருவேல மரத்தின் வளர்ச்சியை போல இருக்கிறது. இதை ஆரம்பத்திலே கவனித்து வெட்டவில்லையென்றால் பாதிப்பு என்னவோ இந்தியாவிற்கு மட்டும்தான்... இதை உணர்ந்த கல்கி வார இதழ் பொறுக்க முடியாமல் தலையங்கமாக வெளியிட்டு இருக்கிறது.....
கிழ்கண்டவாறு தலையங்கம் தீட்டியிருப்பது ‘கல்கி’ வார இதழ் (14.5.2017) என்றால், எளிதாக நம்ப முடியாதுதான்!

‘‘உ.பி.யில் பா.ஜ.க. பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று எழுந்த முழக்கம் இப்போது மறுபடியும் ஒலித்து உடனடியாக ஓய்ந்தும் போயிற்று.
சங் பரிவார் சேனையில் வி.எச்.பி., பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ்., என்பன போன்று 36 அமைப்புகள் இருக்கின்றன! இந்த 36 அமைப்புகளில் எத்தனை தொண்டர்கள் இருப்பார்கள்? அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமையின் கட்டளைப்படி செயலாற்றுபவை. இவற்றை நிர்வகிக்க பண பலம், படை பலம், அதிகார பலம் என முப்பெரும் பலங்களும் பா.ஜ.க. கைவசம் இருக்கின்றன. ஆக, அசுர பலம் பொருந்தியதாக பா.ஜ.க. அரசு இருக்கிறது. போதாக் குறைக்கு மோடியின் காந்த சக்தி!
அபரிமித பலமும், நாடாளுமன்றப் பெரும்பான்மையும் ஒரே கட்சியிடம் குவிவது ஜனநாயகத்துக்கு உகந்த தல்ல. படிப்படியாக, ஒட்டுமொத்த இந்தியாவின் செயல் பாடுகளையும் மத்தியில் இருந்தே இயக்க நினைக்கிறார்கள். ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்... உறவுக்குக் கை கொடுப் போம்...’ என்ற நிலையிலுள்ள மாநிலங்களை நிலை குலைய வைக்கும் விதமாக மத்திய அரசே மொத்த அதிகாரம் செலுத்த நினைக்க ஆசைப்படுவது ஜனநாயகத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் ஆபத்தானது அல்லவா? இதனால் ஒவ்வொரு மாநிலத்திடமும் உள்ள தனித்தன்மை மறைந்து போய்விடாதா?
இது ஆரம்பக் கட்டம். மாநிலக் கட்சிகள் அனைத்தும் இப்போதே விழித்துக் கொண்டு, அதிகாரக் குவிப்பை மய்யப்படுத்தும் இந்தப் போக்கை எதிர்க்காமல் போனால், மதச்சார்பற்ற அரசு என்ற வார்த்தைகூட மறைந்து போய் மதச் சார்புள்ள அரசாக மத்திய அரசு மாறிவிடும் அபாயமும் இருக்கிறது. அப்படியொரு நிலை வந்தால், முன்காலத்தில் இருந்த சர்வாதிகார ஆட்சியாக மாறுவதற்கான சாவியை நாமே அவர்கள் கையில் தந்ததுபோல ஆகிவிடும்.
இப்போது இருக்கும் காலகட்டம் மிகச் சிக்கலானது. பதவி ஆசையைத் துறந்து, ஈகோவை விட்டொழித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும். பழைய தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கோரி, நேர்மையான ஆட்களை வேட்பாளராக நிறுத்தி வெற்றி களை ஈட்டவேண்டிய முக்கியமான காலகட்டம் இது. எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்தால்தான் இந்த மாற்றம் சாத்தியம். ‘விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை மனதில் பதித்துக் கொண்டு செயல் புயலாக எதிர்கட்சிகள் மாறினாலன்றி அவர்களுக்கும் எதிர்காலமில்லை; நாட்டுக்கும் நல்லதில்லை.’’
- இவ்வாறு தலையங்கம் தீட்டியிருப்பது ‘கல்கி’ வார இதழ் (14.5.2017) என்றால், எளிதாக நம்ப முடியாதுதான்!

ஆனந்த விகடனும் கல்கியும் அவ்வப்போது
ReplyDeleteநாங்கள் அப்படி இல்லையென
காட்டிக் கொள்வதற்காக
இப்படிச் செய்வார்கள்
அதில் இதுவும் ஒன்று என்பதே
என் கருத்து
கல்கியில் என்பது சற்று ஆச்சரியம் தான் அதுவும் தலையங்கம்!! தாங்கள் நடுநிலைமை என்பதை மறைமுகமாக??!!
ReplyDeleteஉண்மையிலேயே நம்புவது கடினமாகத் தான் உள்ளது
ReplyDeleteஇது இவர்கள் இப்படித்தான் என்று நினைப்பது சரியா நேராகச் சிந்திப்பவர்கள் நிச்சயம் பொங்குவார்கள்
ReplyDeleteதிருடின் போலீஸ் விளையாட்டாக இருக்கலாம் தலைவரே...
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteகல்கிக்கும் பாயாசம் வைத்து விட வேண்டியது என்று செயலில் (IT ரெய்டு )இறங்கிவிடப் போகிறார்கள் :)
ReplyDelete