Rajini Politics |
ரஜினியின் அரசியல் நாடகம் வெற்றி அடையுமா?
ஒருத்தன் சிறந்த நடிகர் ஆக வேண்டுமென்றால் அவனுக்கு நடிக்க தெரிந்து இருக்க வேண்டும் டாக்டராக வேண்டுமென்றால் எஞ்சினியர் அல்ல்து ஐஏஎஸ் அதிகாரியாக அதற்கு தகுந்த படிப்பை படித்து தேற வேண்டும் அப்போதுதான் அவர் அந்த துறையில் நுழைய முடியும் ஆனால் அரசியலுக்கு யார் வேண்டுமானலும் வரலாம் அதற்கு எந்த படிப்பும் தகுதியும் தேவை இல்லை... ஆனால் அர்சியலில் சிறந்து விளங்க மக்களிடம் உண்மையாக நடிக்கவும் பொய் சொல்லுவும் முன்னுக்கு பின் முரணாகவும் பேசவும் தெரிந்து இருக்க வேண்டும்... அந்த தகுதி ரஜினியிடம் இருப்பதாக தெரிகிறது. அதனால் அவர் தாராளமாக வரலாம்...
அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று சொல்வது ரஜினிக்கு தெரியாதா என்ன அதில் மூழ்க அவர் ஆசைப்படுகிறார் என்றால் அவர் முழ்கட்டுமே.ரஜினி ஒரு படத்தில் சிங்கம் தனியாகத்தான் வரும் ஆனால் பன்னிதான் கூட்டமாக வரும் என்று சொல்லுவார். அப்படி சொல்லும் அவருக்கு சிங்கத்திற்கு தாகம் எடுத்தால் தண்ணீர் நிலைகளை தேடித்தான் வரும் ஆனால் அது ஒரு போது சாக்கடையை நோக்கி செல்லாது ஆனால் பன்னி மட்டும்தான் சாக்கடையை நோக்கி செல்லும் என்பது அவருக்கு தெரியாமல் போயிற்றா?
அய்யா ரஜினி நீங்கள் அரசியலுக்கு வரவும் முதலமைச்சராகவும் வர எந்த ஆட்சபணையும் இல்லை ஆனால் அதை தைரியமாக அரசியலுக்கு வந்தே தீருவேன் என்று சொல்லவேண்டும் இல்லையென்றால் எக்காலத்திலும் வரவேமாட்டேன். அரசியலுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என செவிட்டில் அறைந்தாற்போல சொல்லவேண்டும்.. ஆனால் அப்படி சொல்லமால் ஆண்டவன் போடும் உத்தரவில்தான் இருக்கிறது என்று பம்முவது எதற்கு.....இப்படி செய்வதினால்தானே பொது மக்களாகிய நாம் அவரை விமர்சிக்க நேர்கிறது
ரஜினி குடும்பத்தார் நடத்தும் சென்னை ஆஷ்ரம் பள்ளியில் பணி புரியும் ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பது ஐந்து மாதத்துக்கு முந்தைய செய்தி. இன்னமும் நிலைமை மாறவில்லை... தமிழக அரசியல் நிலமை மோசமாக இருக்கிறது என்று சொல்லுபவர் மனத்தூய்மை, லஞ்சம் இன்மை என்பது குறித்தெல்லாம் பேசும் அவர், தான் நடத்தும் பள்ளியில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் கவனம் செலுத்தி ச்சிர் திருத்திவிட்டு அதன் பின் தமிழ்நாட்டை சீர்திருத்தம் செய்ய வரலாமே என்று பொது மக்கள் கேட்கிறார்கள் அதற்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்
இன்று ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசிய போது மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த நிர்வாகி. அன்புமணி ராமதாஸ் படித்தவர். விஷயம் தெரிந்தவர். நவீனமாக சிந்திக்கக்கூடியவர். திருமாவளவன் தலித்துகளுக்காக உழைப்பவர். சீமான் ஒரு போராளி. அவரது கருத்துகளைக் கேட்டு நான் பிரமித்துப் போய் இருக்கிறேன்.இத்தனை பேரும் இருக்கிறார்கள். ஆனால், இங்குள்ள அரசியல் நிலவரம் சரியில்லை ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறதே. மக்களின் சிந்தனையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மக்கள் மத்தியில் மாற்றத்தை உண்டாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும் என்று சொல்லியது உண்மை என்றால் மேலே சொன்ன அனைவரையும் கூட்டி பேச்சு நடத்தி நாட்டை முன்னேற்ற அவர்களை ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை அல்லவா வைத்திருக்க வேண்டும் ஆனால் அதற்கு பதிலாக காவி உடை அணிந்த காலிகளிடம் ரகசியமாக பேசிக் கொண்டு அவர்கள் சொன்னபடி நடிக்கலாமா?
இன்றைய பேச்சில்ல தமிழகத்தில் அரசியல் மிகவும் மோசமாக இருக்கிறது என்று பேசுகிறார் அவர் அப்படி பேசுவது தவறு இல்லை ஆனால் அதை அவர்கள் ரசிகர்களை கூட்டி வைத்து கட்டி பிடித்து நாடகமாடும் இடத்தில் எதற்கு அரசியல் பேச்சு நான் அரசியலில் வருவதற்குதான் என் ரசிகர்களை கூட்டி ஆலோசிக்கிறேன் என்று கூட சொல்ல தைரியம் இல்லாமல் இருந்து கொண்டு ஏன் வெட்டி அரசியல் பேச்சு
அரசியலுக்கு வர ஆசைப்படும் ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிக்கும் முன் காவிரி பிரச்சனைக்கு கர்நாடாகவிற்கு ஆதரவாக குரல் கொடுப்பாரா அல்லது தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பாரா அவர் என்ன செய்வார் என்பதை தெளிவாக முதலில் சொல்லிவிட்டு அதன் பின் அரசியலுக்கு வரட்டும் அப்ப்டி சொல்லும் ஆண்மை அவருக்கு இருக்கிறதா என்பதை அவரை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் எவரும் ரஜினியிடம் கேட்டு சொல்லுங்களேன்
தமிழக அரசியல் நிலவரம் சரியில்லை என்று சொல்லுபவர் இந்திய அரசியலையும் கொஞ்சம் கவனித்து அதற்கும் குரல் கொடுக்க தயாரா?
சமுக வலைத்தளங்களில் பல ஆண்கள் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று வர வேண்டாம் என்றும் வார்த்தைப் போர் நடத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் பல பெண்கள் ரஜினியின் அரசியல் பிரவேஷத்தை வரவேற்கவில்லை என்பதை அவர்கள் எழுத்தின் மூலம் தெரிய வருகிறது
புதியமாதவி என்ற பதிவர் சொன்னது மிக சரியாகத்தான் இருக்கிறது என எனக்கு தோன்றுகிறது
அவர் சொன்னது ரஜினியின் அரசியல் வருகைக்கு பின் தமிழ்ச் சினிமாவின் கதாநாயகர்களின் கனவுகள் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
கொசுறு :
ரஜினி தமிழக முதல்வாரக வந்து அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் அவருக்கு அப்போலாவில் சிகிச்சை அளிக்கப்படுமா? அளிக்கப்படும் என்றால் அவர் முதல்வராக வர எனக்கு ஆட்சேபணை இல்லை ஹீஹீ
ரசிகர்களை கூப்பிட்டு கட்டி பிடி வைத்தியம் பார்த்த ரஜினிக்கு ஒரு ரசிகை கூட வந்து பார்த்து கட்டிபிடி வைத்தியம் பார்க்க வாராதது ஏன்
மக்கள் சிந்திக்க :
மக்களே சகாயம் அவர்கள் கூட நின்று போட்டோ எடுத்து கொண்டாலாவது அதில் பெருமை உண்டு. காரணம் கஷ்டப்பட்டு படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று நேர்மையற்ற ஆளுங்கட்சிக்கு ஆட்டத்திற்கு எதிராக நேர்மையாக போராடிக் கொண்டிருப்பவர். ஆனால் ரஜினி நன்றாக நடித்து நேர்மையற்ற அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா தட்டி வாழ்ந்து வருபவட் அவருடன் போட்டோ எடுத்து பெருமைபடுவதில் என்ன பெருமை இருக்க முடியும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
எதைத் தின்னால் பித்தம் தெளியும்
ReplyDeleteஎன்கிற நிலையில் தமிழக அரசியல்
சூழல் உள்ள நிலையில்
இவர்கள் எல்லாம் வந்து விடுவார்களோ என
யார் யாருக்கோ எல்லாம் பயப்படுகிற சூழலில்
இவர் வந்தால் வரட்டுமே எனத் தான் படுகிறது
எனக்கு...
நீங்கள் சொல்லும் அந்த யார் யாரோ லிஸ்டில்தான் இவரும் இருக்கிறார் அதுதான் இப்போது உள்ள பிரச்சனையே
Deleteதமிழன் என்றும் சினிமா நடிகனின் அடிவருடிகளாக வாழவேண்டும் என்பது சாபக்கேடு.
ReplyDeleteசினிமாக்காரர்களும் மனிதர்கள்தான் அவர்கள் வருவதில் தவரே இல்லை ஆனால் அவர்கள் நல்லவர்தானா என்பதில்தான் பிரச்சனை
Deleteஅவரை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அவருக்கும் ஆசை இருக்கிறது . ஆனால் தைரியம் இல்லை.இந்த வயதில் அரசியல் பிரவேசம் தேவையற்றது.70 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்த வயதுகளில் சிந்தனைத் திறநனும் முடிவெடுக்கும் திறனும் மங்கத் தொடங்கும். அரசியல் பதவிகளுக்கு உச்ச பட்ச வயது நிர்ணயமும் அவசியம்
ReplyDeleteதனிமனிதாராக வாழும் வாஜ்பாய் இந்த வயதில் கல்யாணம் செய்து குழந்தைகள் பெற்று நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படிதான் ரஜினியின் அரசியல் பிரவேஷ ஆசையும்.
Deleteஇந்த வயதில் இவர்கள் நாட்டிற்கு சேவை செய்வது என்பது இல்லாமல் போய் இவர்களுக்கு நாடு சேவை செய்ய வேண்டிய நிலமைக்கு ஆகிவிடும்
Deleteஅரசியலுக்கு புதிய கோமாளி ஒன்று இனி பதிவர்களுக்கு கொண்டாட்டம்.
ReplyDelete
Deleteபதிவர்களுக்கு கொண்டாட்டம் சரிதான் ஆனால் தமிழர்களுக்கு திண்டாட்டம்தானே
நேற்று ஒன்று இன்று ஒன்று நாளை வேறு இதுதானே இவர் இத்தனை வருஷமா செய்றார் ..
ReplyDeleteசுயமாக 21 வருடங்கள்முடிவு எதையும் தெளிவாக தெரிந்தெடுக்க முடியாமல் தவிப்பவர் நாட்டை ஆளப்போகிறாரா
மக்கள் இப்போ விழிப்பா இருக்காங்க .மாறிமாறி பேசினா யாருக்கும் பிடிக்காது .
புதிய மாதவி சொன்னது நடந்தாதான் இனிமே யாரும் ஒரு படம் வெற்றி பெற்றதும் வருங்கால விடிவிளக்கே பிரதமர்னு எல்லாம் கடவுட் வைக்க யோசிப்பாங்க
இத்தனை வருடமாக ரஜினி வர ஆசைப்பட்டார் ஆனால் அவர் மனைவி அதற்கு தடை போட்டார். காரணம் ஜெயலலிதா. ஆனால் மோடியின் மந்திரத்தால் வசிகரிக்கப்பட்ட ரஜினி மனைவி ஆசைப்படுகிறார் ஆனால் ரஜினி யோசிக்கிறார் அதுதனால்தான் இன்னும் தயங்கி கொண்டிருக்கிறார்
Deleteஅட போங்கப்பா. பல வருஷமா முடிவே எடுக்கத் தெரியாதவர் இப்போ மட்டும் சரியா முடிவு எடுத்திடுவாரா..என்ன....ரெண்டாவது நல்ல உடல்நலம் அற்ற ஒருவர் எதற்கு இப்படி வீணாக அரசியலுக்கு வருவதைப் பற்றி அதுவும் வரும் வராதுன்ற மாதிரி....இப்படி ஒரு முடிவு எடுக்கவே தைரியமற்றுக் குழம்பி நிற்கும் ஒருவர் முதல்வர் நாற்காலிக்கு எப்படி வர முடியும்? அப்படியெ வந்தால் தமிழ்நாட்டின் முடிவு ஒவ்வொன்றும், அதுவும் டக்கென்று முடிவு எடுக்க வேண்டிய விஷயம் எல்லாம் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஆண்டவன் இன்னும் உத்தரவு கொடுக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பாரா? நல்ல தலைவர் ஹும்...முடிவு எடுக்கத் தயங்கும் ஒருவர் ஒரு மாநிலத்தில் எப்படித் தலைவராக முடியும்?
ReplyDeleteமிகத் தேவையான முதல் அடிப்படைக் க்வாலிட்டியே இல்லாதபோது??!!
கீதா
அரசு செலவில் வயதான காலத்தில் சிகிச்சை பெறவும் இவ்வளவு சாம்பாதித்து சொந்த செலவில் ஆறு அடி இடம் ஒதுக்க மனமில்லாததால் அவரின் குடும்பத்தார் இப்படி ஆசை படுகிறார்களோ என்னவோ ,,ஹும்ம்ம்ம்ம்
Delete