அன்னையர் தினம் அன்று அம்மாவை மறந்த அதிமுக தலைவர்கள்
அயோக்கிய அன்னையின் அயோக்கிய பிள்ளைகள்தான் இன்று இருக்கும் அதிமுக தலைவர்கள்.
தன் அம்மாவை அம்மா என்று வாய் நிறைய அழைக்காமல் ஜெயலலிதாவை மட்டும் அம்மா அம்மா என்று அழைத்த அதிமுகதலைவர்களில் ஒரு நாய் கூட அன்னையர் தின நாள் அன்று நினைவு கூர்ந்து ஒரு வார்த்தைகள் கூட பேசவில்லை..
இவர்கள்தான் தங்களை வருங்கால தலைவர்களாக கருதி வலம் வருகிறார்கள்... தேர்தல் கூடிய விரைவில் வரலாம் ஆனால் இந்த அயோக்கியதலைவர்கள் மீண்டும் வலம் வர வேண்டுமா இல்லையா என்பதை மக்களாகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்
டிஸ்கி : சின்னம்மா என்று வாய் நிறைய சசிகலாவை அழைத்தவர்களில் யாரேனும் ஒருவர் நேற்றோ இன்றோ அவரை சந்தித்து வாழ்த்து சொல்லி ஒரு நல்ல சாப்பாட்டிற்காவது ஏற்பாடு செய்து இருப்பார்களா என்ன?
அன்புடன்
மதுரைத்தமிழன்
கொசுறு
பேஸ்புக்கில் செல்லி ஸ்ரீனிவாசன் : தன் அம்மாவை மதிக்கும், மரியாதை செய்யும் ஆண்மகன்கள் சக பெண்களை என்றும் மட்டம் தட்டி இழிவு படுத்த மாட்டார்கள் !
மதுரைத்தமிழன் :தன் அம்மாவை மதிக்கும், மரியாதை செய்யும் பெண்கள் தன் மாமியார் மற்றும் நாத்தானர்களை என்றும் மட்டம் தட்டி இழிவு படுத்த மாட்டார்கள்
நோ! கர்ர்ர் பைரவர்கள் நம் உற்ற நட்பு
ReplyDeleteஇந்த அரசியல்வாதிகலை அந்த பேர் சொல்ல கூடாது
கொசுரு செம .உண்மை தானே.respect every one ,love every one unconditionally .உறவை விடுங்கள் ஒர் பெண் அவமதிக்க படரான்னா பின்னணி யில் ஒரு பெண் இருப்பார்
ReplyDeleteபெண்ணை அவமதிக்கபடுகிறார் என்றால் பின்னால் ஒரு பெண்ணும் இருக்கலாம் ஆணும் இருக்கலாம் அடுத்தவர் செய்யும் தப்பை சரி செய்ய நாம் வழி சொல்லாமே தவிர யாரை யாரும் அவமதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை
Deleteபல சமயங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரி! :(
ReplyDeleteஅரசியலில் மறப்பதும் மன்னிப்பதும் சகஜம் ஆயிற்றே! அதனால் அம்மாவை மறந்து விட்டனர் போலும்!
நீங்கள் சொல்வது சரிதான்
Deleteஉங்க பதிவு எனக்குப் பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுடுவேன். இன்னைக்கு த.ம. என்னோடது.
ReplyDeleteஇந்த தளத்தில் மட்டும் தம வோட்டு போட வேண்டும் என்று அவசியமே இல்லை . கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் அதுவும் நேரம் இருந்தால் மட்டும் சொல்லி செல்லலாம்...... எதுவும் இங்கு அவசியம் இல்லை ப்ரியாக வந்து படித்து மகிழ்ந்து செல்லலாம்
Deleteஅம்மா ஜெ அன்னை இந்திரா என்றெல்லாம் கூறி தாய்மையின் புனிதத்தையே மாற்றுகிறார்கள் அம்மா என்னும் வார்த்தை இப்போது has become synonimous with jayalalithaa
ReplyDeleteசரியாக சொல்லி சென்று இருக்கிறீங்க உங்கள் கருத்தை ரசித்தேன்
Deleteநண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்கள் எழுதிய ’அம்மா என்ற மம்மி’ என்ற பதிவினில், நான் எழுதிய கருத்துரை இங்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
ReplyDelete/// அந்த அம்மணியை, அவர் உயிரோடு இருந்தவரை அம்மா என்று அவரது கட்சியினர் அழைத்த பவ்யத்திற்கும், இப்போது மற்றவர்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டலாக அம்மா என்று அழைப்பதிலும் வெவ்வேறு தொனி இருக்கிறது. இப்போது அந்த கட்சிகாரர்களின் பலருடைய கார்களில் ஜெயலலிதா படமும் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை.
நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கோபம் நியாயமான ஒன்று.
// இனிமேலாவது அம்மா என்ற வார்த்தையைக் கவனமாகப் பயன்படுத்துவோம். //
என்ற அவரது யோசனையை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். அம்மா என்றால் நமது அம்மாதான். இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது அம்மா இறந்தபோது நான் எழுதிய ஒரு பதிவின் தலைப்பு ‘எனது அம்மா – என்று காண்பேன் இனி? ///
சரியாக சொல்லி இருக்கிறீங்க உங்கள் கருத்தை அங்கும் பார்த்தேன்... பேசாமல் மம்மி என்பதை தமிழ் வார்த்தையாக த்த்து எடுத்து கொள்ள் வேண்டியதுதான்
Deleteசகோ! அரசியல்வியாதிகளை நாலுகால் செல்லங்களைச் சொல்லி திட்டிட்டீங்களே....நாலுகால் செல்லங்கள் எல்லாம் உங்க ஊர்ப்பக்கத்தில இருக்கற ஹட்சன் நதிக்கரையில் போராட்டமாம்..அதுக்குத் தலைவர் கூட உங்கள் செல்லம் சன்னியாமே ஹிஹிஹி
ReplyDeleteகீதா
கொசுறு சூப்பர்! ஆனால் பாருங்கள் சகோ....இருவரது கருத்திலும் விதிவிலக்குகள் உண்டு! தங்கள் பெற்றொரை மட்டும் உயர்த்திக் கொண்டு ஸ்பௌசின் பெற்றோரை மரியாதை இல்லாமல் நடத்துவது....அதுவும் ஏஞ்சல் சொன்னதை வழி மொழிகிறேன்...ஒரு பெண் அவமதிக்கப்படறார்னா ஒரு பெண் இருப்பார் என்பதை...
ReplyDeleteகீதா