Sunday, May 28, 2017

avargal -unmaigal
மோடியின் ஆதரவு இதற்கு மட்டுமே

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிக்கும் மோடி மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கு முதலில் தடை போடட்டுமே...






அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : நாட்டு நடப்புகளை கிண்டல் கேலி செய்து இந்த தளத்தில் வரும் அரசியல் பதிவுகள் பிடிக்காதவர்கள் தயவு செய்து இங்கு வரவேண்டாம்... நான் தவறாக ஏதும் எடுத்து கொள்ள மாட்டேன். நன்றி .

12 comments:

  1. மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை செஞ்சிட்டா கல்லா கட்டாதே

    ReplyDelete
    Replies
    1. மோடி ஏற்ற்றுமதிக்கு நிச்சயம் தடை போடமாட்டார் அதுமட்டுமல்ல அப்படி ஏற்றுமதி செய்ததை ரீ பேக் செய்து திரும்பவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து அதை அதிகவிலைக்கு விற்க வழி வகைகள் செய்வார் எல்லாம் வருமானத்திற்காகத்தான் ஆனால் சொல்வது எல்லாம் இந்துமத பாரம்பரியத்தை கடை பிடிப்பதற்கு என்றுதான்

      Delete
  2. எனக்கு பிடிக்காது என்பதற்காக யாரும் சாப்பிடக்கூடாது என்பது அதி முட்டாள்த்தனம் ..
    நாட்டை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டியோர் இப்படி செய்வது வெறுப்பை மட்டுமே வளர்க்கும் .
    குட் பாயிண்ட் ..நானும் கேள்விப்பட்டேன் beef ஏற்றுமதி நம் நாட்டிலிருந்துதான் அதிகமாமே

    ReplyDelete
    Replies
    1. மோடியும் மற்ற அரசியல் வாதிகள் போலத்தான் இன்னும் சொல்லப்போனால் ம்ற்ற அரசியல்வாதிகளை விட மிக மோசமாகத்தான் மக்களை ஏமாற்றுகிறார். நாட்டை முன்னேற்றுவதாக சொல்லியும் இந்து மத பாரம்பரியத்தை காப்பாற்றுவதாகவும் சொல்லியும்தான் நாடகமாடிக் கொண்டிருக்கிறார். இன்னும் இவரை நம்பும் படித்த மக்கள் இருப்பதுதான் மிக அதியசமாக இருக்கிறது

      Delete
  3. நீங்க நேர்பட உண்மையை சொல்லியிருக்கீங்க ..நான் சுத்த சைவம் ஆனால் என் குடும்பத்தாரை சைவம் மட்டுமே சாப்பிடணும்னு நிர்பந்தித்தால் கூட பரவாயில்லை எனக்காக என் தெருவே என் ஊரே நாடே சாப்பிடக்கூடாதுன்னு சொல்வது நியாயமில்லை ..உணவும் உடையும் அவரவர் விருப்பம் எனது விருப்பத்தை பிறர்மேல் திணிப்பது தவறல்லவா .
    இன்னொன்றையும் சொல்லணும் போராட்டம் எதிர்ப்பு காட்டுவது என்பதற்கும் வரைமுறையுண்டு .இன்று ஓரூ கட்சியினர் அநாகரிகமான செயல் ஒன்றை செய்திருக்காங்க னு செய்தியில் பார்த்தேன் .இப்படிப்பட்ட விஷயங்கள் போராட்டத்துக்கு வலு சேர்க்காது என்பது அவர்களுக்கு புரியலை ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தலாம் ஆனால் அது அநாகரிகமான் முறையில் நடத்தினால் பொதுமக்களிடம் இருந்து ஆதரவு பெறுவது கடினம் என்று அவர்களுக்கு புரியவில்லை


      நான் மூட்டை மட்டும் மீன் மட்டும் எப்போதாவது சாப்பிடுவேன்....வேறு எந்த நான்வெஜ்யையும் சாப்பிடுவதில்லை அதற்காக யாரையும் அது சாப்பிடு இது சாப்பிடு என்று சொல்வதும் இல்லை

      Delete
  4. கலக்குங்க மாப்ஸ்

    ReplyDelete
    Replies


    1. உங்களின் இரண்டு வார்த்தைகள் மனதிற்கு உற்சாகம் அளிக்கும் டானிக் போல இருக்கிறது. நன்றி

      Delete
  5. மத்திய அரசின் இந்த முடிவில் ... கோர்ட்டுக்கு ஒரு செக் , மாடு பிடி விளையாட்டையே அது விலங்குகள் கொடுமை , அது இது ன்னு தடை செய்தார்கள் ( இன்னமும் தீர்ப்பு வெளியாகவில்லை) அதுவே கொடுமை என்றால் , மாட்டை , பசுவை ஒரு வரை முறை இல்லாமல் , எந்த இடத்தில வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், எப்படிப்பட்ட கால்நடைகளையும் அறுத்து உண்பேன் என சொல்வது கொடுமையிலும் கொடுமை ... கோர்ட் அதை சரி என்று சொல்ல முடியாது . ஆர்வ கோளாறில் , மக்களுக்கு மத்தியில் நடு சாலையில் ஒரு கன்றை அறுத்து , இளைஞர் காங்கிரஸ் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளார்கள் . அது ஏற்கனவே போட்டோவாகவும் , விடியோவாகவும் எடுத்தாச்சு , இனி அது நிறைய வெளிவரும் . தி.மு கவும் அந்த வழியில் , வலையில் விழுகிறது . கர்நாடக காங்கிரஸும் அதே வலைக்கு வருகிறது .

    ReplyDelete
    Replies
    1. தவறான போராட்டங்கள் வெற்றியை தருவதில்லை

      Delete
  6. மோடி அரசு சொல்வதே சட்டம் யார் எதைச் சாப்பிடலாம் சாப்பிடக் கூடாது என்று வரையறுப்பது நியாயமா. வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சிதான் பிரதான உண்வாமே அங்கு இது செல்லுபடியாகும் மோடி அரசின் நடவடிக்கைகள் நாட்டை எங்கோ எடுத்துச் செல்லும்

    ReplyDelete
    Replies
    1. அதிகாரம் இருக்கும் வரையில் எப்படி வேண்டுமானாலும் ஆடலாம் அதுவும் கொஞ்ச காலம் மட்டுமே.. அதன்பின் எல்லாம் தலைகிழாக மாறி விடும் இது வரலாறு நமக்கு கற்று தந்த பாடம் ஆனால் அரசியல் தலைவர்கள் பதிவியில் இருக்கும் போது இதை மட்டும் மறந்துவிடுகின்றனர்.
      அதற்கு மோடியும் விதிவிலக்கு அல்ல

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.