உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, April 24, 2017

அப்படி என்ன நான் பெரிசா சொல்லிட்டேன்

tamil bloger top hit post
 அப்படி என்ன நான் பெரிசா சொல்லிட்டேன்.


சனிக்கிழமை இரவு 1:30 அளவில் நான் ஒரு ப்திவு இட்டேன். ( தமிழக மக்களே உங்களின் கிண்டல்களுக்கும் ஒரு  அளவு இல்லையா? )அது ஒன்றும் பெரிய விஷ்யம் இல்லை.... தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு  தமிழக அரசே முடங்கி கிடக்கும் போது   மக்கள் நலன் கருதி ஒரு சிறு முயற்சி ஒன்றை மேற் கொண்டார். அதை பொது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துதான் செய்தார். ஆனால் என்ன அது தோல்வியில் முடிந்தது. இந்த தமிழக அமைச்சருக்கு இதன் பலன் முழுமையாக தெரிந்திருக்க நியாயமில்லை. யாரோ ஒரு அதிகாரிதான் இந்த ஆலோசனையைக் கொடுத்திருக்க வேண்டும் அதை நம்பி அசிங்கப்பட்டது மட்டுமே அமைச்சரின் தவறே தவிர  அந்தச் செயலின் நோக்கம் தவறானதல்ல. .ஆனால் அது புரியாமல்  உடனே நம்ம பொது ஜனங்கள் அவரை கிண்டல் கேலி செய்து சமுகவலைதளங்களில் இருந்து மீடியாக்கள் வரை எடுத்து சென்றனர். அப்படி கிண்டல் கேலி செய்தவர்களில் ஒருவர் கூட நீர் சேமிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்புக்கு அல்லது இந்த் திட்டத்தில்  இருந்த குறைகளை சுட்டிக்காட்டி மாற்று வழிகள் குறித்த விவாதங்கள் ஆலோசனைகள் என்று அடுத்த ஸ்டெப்பிற்கு எடுத்து செல்லாமல் க்லாய்த்து மட்டும் சென்று கொண்டிருப்பவர்கள் தான் மிக வடிகட்டின முட்டாள்கள்..


இந்த தகவலை என்னுடைய ஆதங்கமாக் பதிவு எழுதி வெளியிட்டேன். வெளியிட்ட உடன் அதனை தமிழ் மணத்தில் இணைத்தவுடன் என்னுடை லேப் டாப் ஃப்ரீஸ் ஆகிவிட்டது. அதனால் அதை  மறுபடியும் restart  பண்ணினேன்.. ஆனால் அது அப்படி  restart ஆகாமல் சுற்றிக் கொண்டே இருந்தது அதனால் உடனே சட்டவுன் பண்ணி மீண்டும் கணணியை ஆன் செய்து பார்த்த போது இந்த பதிவை பார்த்தவர்களின் எண்ணிக்கை 900  என்று காண்பித்தது எனக்கோ ஒரே ஷாக் எப்படி இவ்வளவு பேர் இதனை 30 நிமிடங்களுக்குள் இத்தனை பேர் பார்த்து இருக்க முடியும் என்று நினைத்து மீண்டும் refresh செய்து பார்த்த போது அதன் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிக் கொண்டிருந்தது.

tamil bloger top hit post - avargal unmaigal

tamil bloger top hit post

tamil bloger top hit post
நேற்று அந்த பதிவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 5600 என்று இருந்தது.. இன்று அது ஏழாயிரத்தை தொட்டுவிட்டது.அதன் பிந்தான் எனக்கு புரிந்தது இந்த உலகத்திற்கு நாம் ஏதோ நல்லது சொல்லி இருக்கிறோம் (ஹீஹீஹீ)அதனாலதான் இத்தனை பார்வையாளர்கள் வந்து படித்து இருக்கிறார்கள் என்று புரிந்தது.


என்னவோ போங்க நீங்கள் என் தளத்திற்கு வந்து நான் மனதில்பட்டதை  எழுதி பதிவதற்கு நீங்கள் தரும் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்


அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : நான் பல சமயங்களில் மற்றவர்கள் மிக அருமையாக எழுதி இருப்பதை இங்கு நான் ஷேர் பண்ணும் போது அது அதிக அளவில் பார்வையாளர்களை கவருவதில்லை. ஆனால் நான் என் மனதில்பட்டதை அப்படியே எழுதி பதிவதை அது ஒரு மிகப் பெரிய விஷயமாக இல்லாதிருந்தும் அதற்கு நீங்கள் மிகப் பெரிய ஆதரவை தருகிறீர்கள். இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வேளை உங்களுக்கு இதற்கு காரணம் தெரிந்தால் கிழே  சொல்லி  செல்லுங்கள். நன்றி

6 comments :

 1. தமிழகமே ஒரு திசையில் போய்க்கொண்டிருக்க
  நீங்கள் ஒருவர் மட்டும் எதிர்திசையில்
  வந்ததால் இருக்குமோ ?

  நமக்கும் ஒருஆதரவிருக்கிருது என
  எங்கள் மதுரை மந்திரியே கூட
  அப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கலாமோ ?

  ReplyDelete
 2. எங்கடா இருந்தீங்க இத்தனை நாளான்னு உள்மனசு கேக்குதா

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு.
  Tamil News

  ReplyDelete
 4. வலைத் தளங்களிலும் முகப் புத்தகத்திலும் எழுதியவற்றை ஒரு பொழுது போக்காகவே பார்க்கிறார்கள் எல்லாமே நகைச் சுவைதான் கலாய்ப்புதான் நோ சீரியஸ்நெஸ்

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா.. சில நேரங்களில் இப்படித்தான் இன்ப அதிர்ச்சி கிடைப்பதுண்டு.. உங்கள் தலைப்புத்தான் காரணம்... நானும் வந்து படிச்சனே.. அப்படி என்ன கிண்டல் என, பின்பு அரசியல் என்றதும் போயிட்டேன்:).

  ReplyDelete
 6. மே பி உங்கள் தலைப்பு கவர்ந்திருக்கும். எல்லோரும் கலாய்க்க... இப்படி ஒருத்தர்...மாற்றுக் சிந்தனையில் எழுதிருக்கறேன்னு இருக்கலாம்..என்னவாக இருந்தால் என்ன எப்போதுமே....உங்களுக்கு ரசிகர்கள்...அதில் ரசிகைக ள் அதிகமாக இருக்குமோ...ஹிஹிஹி. .மனமார்ந்த
  வாழ்த்துகள் சகோ...

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog