Wednesday, August 26, 2015



avargal unmaigal
வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவும் அதில் உள்ள மிகப் பெரிய குறையும்


தமிழில் வலைத்தளம் நடத்தி அதில்  தங்களது எண்ணங்களை எழுத்துகளாக்கி அதை  இணையத்தில் பதிவுகளாக பதிந்து வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள். இப்படி இணையத்தில் இணைந்து செயல்படும் உங்களை இணையத்தில் இருந்து இதயங்களால் இணைக்க உங்களுக்கு மிக அறிய வாய்ப்பை இந்த வருடம் முத்துநிலவன் அவர்கள் பல பதிவர்களுடன் இணைந்து உங்களுக்கு ஏற்படுத்தி தந்து இருக்கிறார்.


அதுதாங்க இணையத்தில் உலா வரும் உங்களை மற்றவர்களுடன் நேரில் பார்த்து பழக கருத்துகள் பறிமாற நட்பு கொள்ள வருகிற அக்டோபர் 11 2015 ல் புதுக்கோட்டையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை   முத்துநிலவன் தலைமையில் தனபாலன் மற்றும் பலரின் உதவியோடு நடை பெற ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

tamil bloggers meet

இந்த நாளை உங்கள் காலண்டரில் குறிச்சு வைத்துக் கொள்ளுங்கள்.. ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்கப் போவது நிச்சயம்.

உங்களது பதிவுகளை படித்துவிட்டு உங்களோடு ஆக்ரோஷமாக வாதித்து கருத்து சொன்ன பதிவர் உங்களை நேரில் பார்த்ததும் அணைத்து கை குலுக்கி சந்தோஷப்படுவார் இப்படிதான் வேறுபட்ட கருத்துகளோடும் சிந்தனைகளோடும் இணையத்தில் உலாவி வந்த பலர் இங்கே வரும் போது ஒரே எண்ணத்துடன் அதாவது நட்பு எண்ணத்துடன் மட்டுமே வருவார்கள்


இது மிக அறிய வாய்ப்பு குறிஞ்சி மலர் 12 வருடத்திற்கு ஒரு முறை மலர்வது போல இந்த சந்திப்பு 12 மாதங்களுக்கு ஒரு முறை மலர்கிறது.. அதனால் இதை தவறவிடாதீர்கள்.

வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015 மேலதிக விபரங்களை அறிய முத்துநிலவன் http://valarumkavithai.blogspot.com/2015/08/2015_12.html மற்றும் தனபாலன் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html அவர்களின் வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.


என்னடா விழா பற்றி நல்ல தகவலை சொன்ன இவன் இன்னும் குறையைப் பற்றி சொல்லவில்லை என நினைக்கிறீர்களா?

இந்த விழாவில் உள்ள குறை என்னவென்றால் பூரிக்கட்டையால் அடிவாங்கும் இந்த மதுரைத்தமிழனை யாரும் பார்க்க முடியாது என்பது மட்டும்தான்.


டிஸ்கி :இது வரை என்னை எந்த பதிவர்களும் சந்தித்தது இல்லை.. அப்ப விசுவின் புத்தக வெளியிட்டு விழாவில் நாங்கள் உங்களை சந்தித்து இருக்கிறோம் உங்களின் புகைப்படங்களை நாங்கள் வைத்திருக்கிறோம் என்பவர்களுக்கு எனது பதில் அங்கே வந்து கலந்து கொண்டது உண்மையான மதுரைத்தமிழனா என்பதுதான்.( அங்கே வந்து கலந்து கொண்டது மதுரைத்தமிழன் அனுப்பிவைத்த வலையுலகைப் பற்றி அறிந்த அவரின் நண்பராக கூட இருக்கலாம் அல்லவா?)

பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் பண்பாடு அற்ற பதிவர்களா?
பதிவர் திருவிழா நடத்தப்பட்டால் நாம் செய்யவேண்டியது என்ன?


அன்புடன்
மதுரைத்தமிழன்
தமிழ் வலைப்பதிவர்களுக்கு மிக அறிய வாய்ப்பு தவறவிட்டுவிடாதீர்கள்

11 comments:

  1. நல்லவேளை, அங்கே எல்லாரும் சந்திச்சது வருண் என்னும் அடாவடிபதிவர்னு அந்த உண்மையைச் சொல்லாமல் விட்டீங்களே சாமி!

    ReplyDelete
    Replies
    1. உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

      Delete
    2. நான் அப்பவே யோசித்தேன். பூரிக்கட்டை அடி தழும்பு வீர புண் எதுவும் இல்லையேனு. அப்புறம் நண்பர் தனபாலன் தான் அது எல்லாம் உள்காயம்னு என் சந்தேகத்தை தவறாக தீர்த்து வைத்தார். அப்பவே யோசித்தேன் இது வருண் தான் என்று. இப்ப தான் சந்தேகம் தீர்ந்தது.

      Delete
    3. விசு சாருக்கே டவுட்டா?
      ஒரே confusion ஆ இருக்கே:))) அவ்வ்வ்.

      Delete
    4. விசு க்ளோனிங்க்ல வந்ததுநால்தான் அவரது உடம்புல வீரத் தழும்பு இல்லை அது தெரியாதா....

      கீதா

      Delete
  2. ஹஹஹஹஹ் இப்படித்தான் சொல்லுவீங்கனு எதிர்பார்த்ததுதான்....

    எங்களுக்கும் இருந்த ஒரே சந்தேகம் அதுதான் பூரிக்கட்டை தந்த வீரத் தழும்புகள் எதையும் காணவில்லையே என்று.....ஹஹஹ்ஹ்...நாங்கதான் நேர்லயே பேசினோமே...இல்லாம நீங்களே "சமீபத்து சென்னை விசிட் என்று சொல்லியிருந்தீங்களே....சரி சரி இதுலயும் லூப்ஹோல்ஸ் இருக்குதான்...சரிப்பா வந்தது மதுரைத் தமிழன் இல்லைதான்....ஆனால் எங்களுக்கு எங்களைப் பொருத்தவரைக்கும் மதுரைத் தமிழன்தான்....நண்பர அனுப்பி?!!! ஏர்போர்காரங்களையும் நம்பவைச்சு!ஹஹஹ

    கீதா: வாத்தியார் பாலகணேஷ் அண்ணாதான் என்னிடம் சொன்னார்..."நான் நாளைக்கு உன்னோடு வரல...பரமரகசியம்...மதுரைத் தமிழன் வந்துருக்காரு...தாம்பரத்துல இருக்காரு. எங்கிட்ட பேசுனாரு..நான் அவரோடதான் வருவேன்.." என்று சொன்னார். அண்ணா பொய்சொல்ல மாட்டாரு...ஹிஹிஹி.ஆனா எனக்கு அதுக்கு முன்னாடியே தெரியும் ஆனா நான் அந்த பரமரகசியத்தை அண்ணாகிட்ட சொல்லல....ரகசியம்னு சொல்லிக்கிட்டு வந்துட்டுப் போறவர்தான் மதுரைத் தமிழன்...சாரி க்ளோனிங்க்ல...வந்துட்டுப் போனாரு...ஹஹ்ஹ உலகத்திலேயே க்ளோனிங்க் வைச்சுருக்கற ஒரே ஆளு, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர் மதுரைத் தமிழன் தான் பேனர் போட்டுறலாமா...ஹஹஹஹ்

    ReplyDelete
  3. நான் கூட என்னமோன்னு நினைச்சேன்!

    ReplyDelete
  4. இதுதான் குறையா? நீங்கள் ஏதோ முக்கியமான ஒரு செய்தியைப் பகிரவருகின்றீர்கள் என நினைத்தேன். சரி. வராததும் குறையே.

    ReplyDelete
  5. நீங்க யாரு வெளியுலகத்துக்கு வாங்க... நீங்க உண்மையான மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  6. இந்த முறை கலந்து கொள்ள வேண்டுமென்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.... நீங்க வேலூருக்கு வந்த மாதிரியே இங்கேயும் வாங்க....

    ReplyDelete
  7. எல்லாரும் வந்தால் சந்திப்பு கலக்கலாக இருக்கும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.