உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, September 9, 2013

பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் பண்பாடு அற்ற பதிவர்களா?பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் பண்பாடு அற்ற பதிவர்களா?


சென்னை பதிவர் திருவிழாவும் எனது கருத்தும்.

நான் இந்தியாவிற்கு வெளியே வசிப்பதால் என்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை மேலும் விழா நடக்கும் நேரத்தில் நான் டிராவலில் இருந்ததால் என்னால் அந்த நிகழ்ச்சியை ஆன்லைனிலும் பார்க்க முடியவில்லை. அதனால் விழா முடிந்ததும் விழாவில் கலந்து கொண்டவர்கள் பதிந்தது என்ன என்று படித்து பார்த்தேன். அதன் மூலம் நான் அறிந்ததை வைத்து இந்த பதிவு எழுதப்படுகிறது.இந்த பதிவர் திருவிழா மிக சிறப்பாக நடை பெற்று இருக்கிறது. அதை நடத்திய விழாக் குழுவினர் அனைவருக்கும் மற்றும் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


எனக்கு தெரிந்த வரையில் இந்த விழாவில் குறைகள் ஏதும் இல்லை சில கஷ்டங்கள்தான் இருந்தன. இந்த கஷ்டத்தை சிலர் குறை கூறி இருக்கிறார்கள். அப்படி குறை கூறியவரை நாம் மேலும் குறை கூறாமல் அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று விட்டுஸ்  செல்ல வேண்டும்.


பாரட்டுகளை எல்லோர் முன்னிலையிலும் குறையை தனிப்பட்ட முறையிலும் கூறுவதுதான் பண்பாளர்களின் பழக்கம். அப்படி செய்யாதவர்களை நான் பண்பு அற்றவர்கள் என்று நான் கூறவில்லை அவர்கள் படித்து அறிந்தது & புரிந்தது மிக குறைவே என்றுதான் சொல்லுகிறேன்இந்த விழாவில் விழா நடந்த ஹால்தான் மிக ஹீட்டாக இருந்ததது என்று பலரும் கூறி இருந்தனர். நன்றாக கவனிக்கவும் பலரும் இதை பற்றி கஷ்டமாக இருந்தது சொன்னார்களே தவிர அதை குறையாக் கூறவில்லை. அதற்கான விளக்கத்தையும் விழா குழுவினர் எடுத்துரைத்தனர் அதுவும் பலரால் ஏற்றுக் கொள்ளபட்ட விளக்கம்தான்.


சரி வருங்காலத்தில் பதிவர் திருவிழா நடத்தப்பட்டால் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்பதை நான் சொல்லுகிறேன். அதி சரியென்று உங்களுக்கு தோன்றினால் பின்பற்றுங்கள்.


1. விழா ஏற்பாடுகளை மிக குறுகிய காலத்திற்குள் செய்யாதீர்கள்.

2. விழாவை எந்த  ஊரில்  நடத்துவது என்பதை முதலில் வாக்குவாதம் இல்லாமல் தீர்மானித்து கொள்ளுங்கள்.

3. வெளிநாட்டு பதிவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால்  ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வைத்து கொள்ளுங்கள்.

4. இதையெல்லாம்  ஜனவரி மாதத்தில் முடிவு செய்து விழா ஏற்பாடுகளை ஆரம்பியுங்கள்.

5. விழா நடத்துவதற்கு தேவையான பணத்தை உங்களால் முடிந்த அளவில் சீக்கிரமாக விழாக் குழுவினருக்கு  அனுப்பி வையுங்கள் அது மிக சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை.

6. மேலும் பதிவாளர்கள் தங்கள் சொந்த செல்வாக்கை பயன்படுத்தி அல்லது பெரிய நிறுவனங்களிடம் பேசி அவர்களை ஸ்பான்சர் பண்ண வேண்டுகோள் விடுவிக்கலாம். அதற்கு கைமாறாக ஸ்பான்சர் செய்யும் நிறுவனத்தை பற்றிய விளம்பர பேனரை விழாவில் கலந்து கொள்ளும் மற்றும் ஆதரவு தரும் அனைவரும் தங்கள் தளத்தில் இணைத்து வெளியிடலாம். இப்படி செய்வதால் பல நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய முன்வரலாம். இந்த முயற்சிக்கு மிக பலன் கிடைக்கும் என்பது என் கருத்து. காரணம் நமது பதிவுகள் தினசரி பல ஆயிரக்கணக்கான  மக்களால் கவனிக்கபடுகிறது. விழா நடத்த ஊர் செலக்ட் செய்த நாளில் இருந்து விழா முடியும் நாள் வரை அவர்கள் பேனரை நம் தளத்தில் இணைக்கலாம். இதற்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கும்.


7. விழா நடக்க இடம் பார்க்கும் போது அருகில் உள்ள பிரபல பள்ளி நிறுவனங்களிடம் இடம் கேட்கலாம்  சில நிறுவனங்கள் இலவசமாகவோ அல்லது சிறிய தொகையினை பெற்றோ அனுமதி தர முன்வரலாம். அல்லது மேலே சொன்னபடி அந்த பள்ளியை பற்றிய விளம்பர பேனரை நமது தளங்களில் இட்டு அவர்களிடம் அதற்கு கைமாறாக இடம் கேட்கலாம்.


8. விழா நடத்தும் இடத்தில் பெரிய மேடை ஏதும் தேவையில்லை. அதிகபட்சம் 2 நபர்கள் நின்று பேசக் கூடிய ஸ்டேஜ் இருந்தால் போதும். முதிய பதிவர்களானாலும் சரி இளைய பதிவரானலும் சரி எல்லோரும் சரிசமமாக பார்வையாளர்கள் இடத்தில் சரிக்கு சமமாக உட்காரப்பட வைக்க வேண்டும். இது அரசியல் கூட்டம் அல்ல செல்வாக்கனவர்கள் மட்டும் மேடையில் இருப்பதற்கு..

9. விழா நடப்பதற்கு 2 மாதங்கள் முன்பே அங்கு வரும் விழா பதிவர்கள் மற்றும் அவர்கள் வலைத்தளம் பற்றிய விபரங்கள் சேர்த்து அதை பவர்பாயிண்ட் உபயோகித்து அழகாக தயாரித்து விழா நடக்கும் நேரத்தில் மேடையில் அமைக்கப்பட்ட திரையில் தோன்றச் செய்யலாம். திரையில் பதிவர்கள் பற்றிய விபரம் வரும் போது அந்த பதிவர் மட்டும் அந்த கூட்டத்தில் எழுந்து அவர் இருக்கும் இடத்தில் இருந்தே நின்று பேச வாய்ப்பு அளிக்கலாம் .இதற்காக பார்வையாளர்கள் உட்காரும் சீட்டுகளை பா வடிவத்தில் அமைக்கலாம்.

10. பள்ளிகளில் இயர் புக் தயாரித்து வெளியிடுவது போல பதிவர்கள் பற்றிய இயர் புக் தயாரித்து இந்த விழாவின் போது வெளியிடலாம். இந்த புக்கில் தங்களது பெயர், போட்டோ மற்றும் வலைத்தள முகவரி வெளியிட விரும்புவர்களிடம் இருந்து ஒரு தொகையை வசூலிக்கலாம் மற்றும் அந்த புக்கை வாங்க விரும்புவர்களிடம் இருந்து ஒரு புத்தகத்திற்காக விலையையும் அட்வாண்ஸாக வசூலிக்கலாம். அதற்கென ஒரு கால கட்டத்தை நிர்ணயித்து கொள்ள வேண்டும். புத்தகத்தின் பின் புற அட்டையில் விளம்பரம் செய்ய விரும்புபவர்களிடம் இருந்தும் ஒரு கட்டணம் வசூலிக்கலாம். இப்படி செய்வதன் மூலம் வரும் அதிகபட்ச வருமானத்தை விழா நடக்க உபயோகிக்கலாம்..தங்கள் வலைத்தளத்தை பற்றிய விபரங்களை முழுபக்க அளவில் வெளியிட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கலாம். மேலும் பதிவர்கள் வெளியிடும் புத்தக விளம்பரங்களையும் வெளியிடலாம்

11. மேலும் நிகழ்ச்சி கலகலப்பாக இருக்க பதிவாளர்களை சீனியர் அன்டு ஜூனியர் பதிவராக பிரித்து அவர்களின் பெயர்களை ஒரு ஜாரில் போட்டு குலுக்கல் முறையில் எடுத்து அவர்களை பேசவிடலாம் அந்த பேச்சு எதிர் தர பதிவாளரை பற்றி பாராட்டாகவோ அல்லது கலாய்த்தோ அல்லது அவர்களை பற்றிய விபரங்களை கேட்டோ அல்லது அவர்கள் எழுதிய கதை கவிதை மற்றும் பதிவுகளைப் பற்றிய பேச்சாகவோ இருக்கும் படி செய்யலாம்

12. பதிவர்கள் வர வர அடையாள அட்டை எழுதி வழங்குவதற்கு பதிலாக  வருபவர்களை பற்றிய  விபரங்களை முதலில் சேகரித்து அதன் அடிப்படையில் முதலிலே எழுதி அகர வரிசைப்படி வைத்துவிட்டால்  பங்கு பெறுபவர்களே  எடுத்து கொள்ளலாம்
.


இன்னும் நிறைய சொல்லலாம் பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்து கொள்கிறேன். மீதியை நீங்கள் பின்னுட்டத்தில் தொடருங்கள். நன்றி

டிஸ்கி :பதிவர் திருவிழா மிக சிறப்பாக நடை பெற அதை நடத்திய விழாக் குழுவினர் அனைவருக்கும்  எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். எதையும் சொல்வது எளிது ஆனால் அதை செயல்படுத்தி காட்டுவது எளிதல்ல அதையும் நீங்கள் செய்து காட்டி இருக்கிறீர்கள் அதற்கு உங்களுக்கு சல்யூட். குறை கூறுபவர்களை பற்றி சட்டை செய்யாமல் உங்கள் பயணத்தை தொடருங்கள்

 

அன்புடன்
மதுரைத்தமிழன்

22 comments :

 1. ஆறாவதாக சொன்ன யோசனை மிக அருமை அண்ணே

  ReplyDelete
 2. அருமையான யோசனைகள். கையேடாக பயன்படுதிக்கொள்ளலாம்.

  உள்ளூர்வாசிகளுக்கான விழா மட்டும்தான் இது இல்லை என்பதை முதலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைவில் கொள்ளல் வேண்டும். உலகம் முழுக்க பதிவர்கள் இருக்கிறார்கள், அவர்களின் ஆர்வத்தை கணக்கில் கொண்டால் விளம்பரங்களும், நன்கொடைகளும் இன்னும் சுலபம். மேலும், வெளியூரில் வாழும் பதிவர்கள், கலந்துகொள்ள முடியாதவர்களுக்காக Online Streaming வசதியைச் செய்யலாம். முடியாவிட்டால் காணொளியாக யூட்யூபில் காணச் செய்யலாம், விழா என்பது பல வருடங்களுக்கு பின்னும் நினைவு கூறும்பொழுது இனிமையானதாக இருக்க வேண்டும் அல்லவா.

  ReplyDelete
 3. எங்குயார்நடத்தினாலும்உங்கள்கருத்தைகவனத்தில்கொள்ளவேண்டும்

  ReplyDelete
 4. மிக அருமையான யோசனை! வரும் ஜனவரியிலிருந்தே விழா ஏற்பாடுகள் தொடங்கவேண்டும். என்னைப் போன்ற வெளி மாநிலத்தில் உள்ளவர்கள்கூட இரயில் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

  ReplyDelete
 5. பதிவர்கள் சுதந்திரப் பறவைகள். பதிவர்கள் மாநாடு ஒரு நாள் வேடந்தாங்கல்.பல என்ன வண்ணப்பறவைகள்
  அதில் என்னைப்போன்ற ஓய்வுபெற்றவர்கள் மனமகிழ் மையம்.அவர்கள் ஒருநாள் இன்றைய தலைமுறை பதிவர்கள் சந்திக்கலாம். ஒரு மகிழ்ச்சி.இந்த மாநாடு சந்திப்புகள் நட்புறவு வளரஇதில் குறைசொல்ல என்ன இருக்கிறது. ஆண்டுமலர் வெளியிடலாம்.அதில் விளம்பரம் போன்ற வருமானம்.தரமிக்க கதை,கட்டுரை வெளியிட்டதை ஒரு குழுதேர்ந்தெடுத்து வெளியிடலாம். இது எல்லாமே இலவச சேவை.யாருக்கும் இது தொழில் அல்ல. இதைப் புரிந்தால் குறையே இல்லை. நிறைதான்.

  ReplyDelete
 6. நல்ல யோசனைகள்... அடுத்த முறை "நம்ம" ஊரில் தான்...

  ReplyDelete
  Replies
  1. நம்ம மாவட்டம். வருபவர்களுக்கு தாடிக்கொம்பு,பழனி,திண்டுக்கல் கொடை வைகை அணை/திருமூர்த்திமலை வரை சிறு சுற்றுலா செல்ல வசதி.அதற்கும் திட்டமிடலாம்.

   Delete
 7. அருமையாக ஆலோசனைகள்
  திண்டுக்கல் தன்பாலன் சொல்வதுபோல
  அடுத்த சந்திப்பு நம்ம ஊரில்தான்
  இருக்கும் போலிருக்கு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. கவனத்தில் கொள்ள வேண்டிய ஐடியாக்கள்தான். அடுத்த விழா இதை விட சிறப்பாக நடக்கும் என்பதில் ஐயம இல்லை.

  ReplyDelete
 9. அடேங்கப்பா ,பேசாமல் உங்கள் தலைமையில் அடுத்த சந்திப்பை நடத்தலாம் போலிருக்கே ..நல்ல யோசனைகள்!
  த.ம.3

  ReplyDelete
 10. நீங்க இன்னும் உயிரோடதான் இருக்கீங்களா? எதுக்கு இந்த தேவையில்லாத விளம்பரம்... போன பதிவில் நேற்று உங்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் போட்டுருந்தீங்க... இந்த அஞ்சி காசுக்கு புரயோசனம் இல்லாத இந்த வீணாப்போன விளம்பரம் எதுக்கு....

  ReplyDelete
  Replies
  1. நண்பரே பதிவை படிக்கும் போது கவனித்து படிக்கவும். மேலோட்டமாக படித்து அரைகுறையாக கருத்து சொல்ல வேண்டாம். நான் கண்ணிர் அஞ்சலி என்று எந்த பதிவும் போடவில்லை. விளம்பரமா? உங்கள் கண்ணிற்கு எனது பதிவு விளம்பரமாக பட்டால் அதற்கு நான் என்ன சொல்ல சிரிக்கதான் என்னால் முடிகிறது.

   எனது தளம் பதிவுலகத்தில் யாருக்குமே தெரியாது என்பதால் இப்படி நான் செய்தேன் ஒத்துக் கொள்கிறேன். இப்போது உங்களுக்கு சந்தோஷம்தானே...


   பாஸ் நாம் இங்க எழுதுவது ஏதும் அஞ்சி காசுக்கு மட்டுமல்ல ஒரு சல்லிகாசுக்கும் பிரயோசனம் இல்லை என்பது எனக்கு தெரியும்.

   நான் எனது டைம் பாஸிற்கு மட்டுமே இங்கே கிறுக்கி கொண்டு இருக்கிறேன்..... இந்த சமுகத்தை மாற்றவோ சீர்திருத்தவோ அல்லது தமிழை வளர்க்கவோ எழுதவில்லை. அது போல இங்கு வருபவர்களுக்கும் பொழுது போக்கிற்காக படிப்பதற்காகவே வருகிறார்கள் என நான் நினைக்கிறேன் அவ்வளவுதானுங்க

   Delete
 11. மிகச் சிறப்பான யோசனைகளும் உள்ளடக்கப் பட்ட பகிர்வு .இதனைப்
  பரிசீலித்துப் பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே .நீங்கள் உங்கள்
  மனதிற்குப் பட்டதை நல்லதோர் நோக்கத்துடன் பதிவு செய்துள்ளீர்கள் சகோ
  உங்களின் கடமை உணர்வைப் பாராட்டுகின்றேன் .ஏனைய பதிவர்களும்
  இது போன்ற எண்ணக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் போதும் விழா
  சிறப்பாக நடைபெற வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன .மிக்க நன்றி சகோதரா
  சிறப்பான பகிர்வுக்கு .என் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உங்களுக்கு .

  ReplyDelete
 12. அருமையான யோசனைகள். பத்தாவது கருத்து என்னை மிகவும் கவர்ந்தது

  ReplyDelete
 13. அனைத்து யோசனைகளும் அருமை.

  ReplyDelete
 14. நல்ல ஆலோசனைகள்!

  ReplyDelete
 15. நல்ல ஆலோசனைகள்!

  ReplyDelete
 16. சிறப்பான ஆலோசனைகள்! அடுத்த விழாவிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்! விழாமலர் கூட வெளியிடலாம் நன்றி!

  ReplyDelete
 17. சில யோசனைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும் பல கருத்தில் கொள்ள வேண்டிய யோசனைகள்

  ReplyDelete
 18. கருத்து எண் (10) – வலைப்பதிவர்களின் ‘இயர்புக்’ வெளியிடுவது நிச்சயம் செய்யப்படவேண்டியது தான். பதிவர்களுக்குள் தோழமையை வளர்க்கவும் அவர்தம் படைப்புகளை வெளியுலகுக்குக் கொண்டுசெல்லவும் இது மிகவும் பயன்படும். இதற்கு அடித்தளமாகப் ‘பதிவர் சங்கம்’ ஒன்று உரியமுறையில் பதிவுசெய்யப்படவேண்டியது முதல் தேவை. – கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்).

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog