Tuesday, September 10, 2013



தினமலரில் செய்திகள் தப்பும் தவறுமாக வெளியிடப்படுகின்றன
 
சமீபகாலங்களில் தினமலரில் செய்திகள் மிகவும் அவசரக் கோலமாக  தப்பும் தவறுமாக அள்ளித் தெளிக்கப்படுகின்றன. இன்று நான் சுட்டிக்காட்டுவது ரொம்ப சென்ஸிடிவ் நீயூஸ் அல்ல அதனால் பாதிக்கப்படுவது யாரும் அல்ல. ஆனால் அது முக்கிய செய்திதான்.இப்படிபட்ட செய்திகளை தரும் போது  தவறுகள் இல்லாமல் தருவதுதான் ஒரு பெரிய செய்தி நிறுவனத்தின் வேலை ஆகும். அப்படி இல்லை என்றால் பொதுக் கழிப்பிடங்களில் சுவரில் கிறுக்கி இருக்கும் தகவலுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.





இதை இங்கே சுட்டிக்காட்டுவதன் காரணம் ஏதாவது சென்சிடிவ் செய்திகளை பகிரும் போது அதில் தவறு ஏற்பட்டு அதனால் பெரிய இழப்பு  அல்லது  பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு பொறுப்பை ஏற்பது யாரு? உதாரணமாக நம் நாட்டில் சாதி மத மற்றும் சமுக பிரச்சனைகள் ஏற்படும் போது அதை செய்தியாக வெளியிடும் போது அதில் தவறுகள் நேர்ந்தால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை சற்று யோசித்து பாருங்கள்.

சமீபகாலத்தில் கூட நடிகை கனகா பற்றிய தவறான தகவலை அவசரக் கோலமாக வெளியிட்டது எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம். அந்த செய்தி தவறு என்றி தெரிந்த பின் தவறுக்கு மன்னிப்பு இதுவரை கேட்காமல் செய்தி வெளியிட்ட அடுத்த நாள் டிவிக்களில் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று செய்தியை திரித்து போட்டது.

தினமலரில் இன்றைய செய்தியை பார்க்கும் போது என் கண்ணில் பட்ட தலைப்பு இதுதான் உலகளவில், "டாப்' பல்கலை பட்டியல் வெளியீடு: 200க்குள் இந்திய பல்கலைக்கு இடம் இல்லை http://www.dinamalar.com/news_detail.asp?id=800518 அதில் வந்த  செய்தியின் ஒரு பகுதியை இங்கே காணலாம்.


உலகளவில், தரம் வாய்ந்த பல்கலைகளின் பட்டியலை, அமெரிக்க நிறுவனம், நேற்று வெளியிட்டது. இதில், முதல், 200 இடங்களில், இந்திய பல்கலைகள் எதுவும் இடம்பெறவில்லை. டில்லி ..டி.,க்கு, 222வது, "ரேங்க்' கிடைத்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், "குவாகுரேலி சைமண்ட்ஸ்' என்ற நிறுவனம், கடந்த, 2004ல் இருந்து, உலகளாவிய அளவில் உள்ள பல்கலைகளை ஆய்வு செய்து, ஆண்டுதோறும், தர வரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 10வது ஆண்டாக, நேற்று, பல்கலைகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டது.

-----------------
சரியான தகவல்:
Quacquarelli Symonds is a British company specialising in education and study abroad. The company was founded in 1990 by Nunzio Quacquarelli.

London Main Office
1 Tranley Mews, Fleet Road,
London, NW3 2DG.
+44 (0) 207 284 7200



அன்புடன்
தவறுகளை சுட்டிக்காட்டும் வலையுலக நக்கீரன்
மதுரைத்தமிழன்

16 comments:

  1. வருகிற 16 முதல் ஹிந்து நாளிதழ்
    தமிழ்ப் பதிப்பைக் கொணர இருக்கிறது
    அது நிச்சயம் நல்ல தமிழ் நாளிதழாக
    இருக்கும் என்கிற நம்பிக்கையில்
    தின மலரை நிறுத்திவிட்டோம்
    பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. தமிழில் என்ன பெயரில் வெளி வரப் போகிறது?

      Delete
  2. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே! நக்கீரனாக மாறிய மதுரைத் தமிழன்.
    நாளைய தினமலர் செய்தி இதுதான்

    ReplyDelete
  3. அதெல்லாம் சரி... என்ன சொல்ல வர்றீங்க...?

    குவாகுரேலி சைமண்ட்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்...








    போதுமா...?

    ReplyDelete
    Replies
    1. அது அமெரிக்க நிறுவனம் இல்லை என்று சொல்ல வருகிறேன். அது ஒன்றும் பெரிய தவறு இல்லைதான். அதன் மூலம் சொல்ல வருவது செய்திதாள்கள் செய்திகள் இடம் போது மிக கவனத்துடன் இட வேண்டும் என சொல்ல வருகிறேன் உதாரணமாக நடிகை கனகா பற்றி செய்தி கனகாவிற்கு செல்வாக்கு இல்லை அதனால் அது அமுங்கி போனது ஆனால் மத சாதி கலவரங்கள் போது இடும் சிறு தவறுகளினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்படக் கூடும் அல்லவா?

      Delete
  4. தினமலர் சுதி இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது நக்கீரா....!

    இப்ப வந்து நக்கீரன்னு சொன்னா கொன்னேப்புடுவேன் ஆமா ஹி ஹி....

    ReplyDelete
    Replies
    1. அண்ணே நாம் ரெண்டு பேரும் ஒரு நாள் சந்தித்து சேர்ந்து சரக்கு அடிச்ச பின் கொன்னுடுங்க அது வரை என்னை விட்டுங்க

      Delete
  5. எப்போ நடிகைகளை முன்னிறுத்தி கல்லா கட்ட ஆரம்பிச்சாங்களோ! அப்பவே அதோட மவுசு போய்டுச்சு!!

    ReplyDelete
  6. தினமலரை நான் படிப்பதே இல்லை! வரவர நாளிதழ்கள் நாளுக்கு நாள் தரமிழந்தே வருகின்றன தவறு காணின் திருத்தும் தங்கள் பண்பு பாராட்டத் தக்கது!

    ReplyDelete
  7. உண்மை தான்.
    இது மட்டுமல்ல செய்தியை செய்தியாக சொல்லாமல் தன் சொந்த கருத்தையும் செய்தி மாதிரி சொல்லுகிற பேப்பர் தான் இது.

    ReplyDelete
    Replies
    1. தினமலர் மட்டுமல்ல....அநேகமாக அனைத்து நாளிதழ்களும் இந்த வேலையைத்தான் தற்பொழுது செய்துக் கொண்டிருக்கின்றன. செய்தித்தாள்கள் செய்திகளை மட்டும் தான் வெளியிடவேண்டும்...தங்களது ஊகங்களையோ எண்ணங்களையே வெளியிடவேண்டுமெனில் சஞ்சிகைகளில் எழுதலாம்....

      நாகு
      www.tngovernmentjobs.in

      Delete
  8. தினமலம் (மலர்) பேப்பரை நடுநிலை பத்திரிக்கை என்று இன்னுமா நம்புறேங்கள் சாமி. ஐய்யோ ஐய்யோ அதன் தரம் தாழ்ந்து பலவருடங்கள் ஆகிறது.

    மகாராஜா

    ReplyDelete
  9. உண்மைதான்! தினமலர் முன்பு போல இல்லை!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.