Tuesday, September 17, 2013


உங்களது பொன்னான வாக்குகளை மேலேயுள்ள Poll ல் அளித்து விட்டு செல்லவும். நன்றி

தி ஹிந்து -பழைய வடையை தயிர் வடையாக மாற்றி தரும் நாளிதழ்


தமிழனுக்கு சிந்திக்கவும் தமிழை கற்றுக் கொடுக்கவும் வந்த புதுமை நாளிதழ்



சொன்னது சொன்னபடி செப்டம்பர் 16, 2013 அந்த தி இந்து  தினசரியும் வந்து விட்டது. நாலே ருபாய்க்கு நாற்பது பக்கங்கள். ஹிந்து பதிப்பகத்தாரிடம் இருந்து வருகிறது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் நினைத்தால் விஜய் நடித்த தலைவா படம் எப்படி கமல் & ரஜினி படத்தை கலந்து கொடுத்ததோ அதே மாதிரி இது திணமணி & தினமலரை கலந்து கொடுத்தது போல இருக்கிறது அதனால் இந்த தமிழ் இந்து நாளிதழ் தலைவா படம் போல ஊத்திக் கொள்ளும்


ஒரு செய்தி நாளிதழ் என்பது உலகெங்கிலும் நடக்கும் செய்திகளை நடந்தது நடந்தபடி உண்மையாகவும் விளக்கமாகவும் தகுந்த ஆதாரத்துடனும் தருவதாக இருக்க வேண்டும். ஆனால் முதல் நாளில் இந்த நாளிதழில் நான் உலகச் செய்தியை படிக்கும் போது அது சிரியா பற்றி வெளியிட்ட செய்தியை படித்த போது  அது செய்தியாக இல்லாமல் அவர்கள் சொல்லும் கருத்தாகவே எனக்கு படிக்கும் போது தோன்றியது.

இந்த நாளிதழின் ஆசிரியர் குழு தமிழனுக்கு செய்தியை மட்டும் தந்தால் எங்கே அவன் நாலு பேரிடம் பேசி  தானாகவே சிந்திக்க தொடங்கி விடுவான் என்று கருதியதாலோ.  அல்லது அப்படி மக்கள் சிந்தித்து செயல்பட்டால் நாட்டுக்கு நல்லது நடந்துவிடும் என்று நினைத்து செய்தியை தருவதாக தங்களது கருத்தை மக்கள் மனதில் பதித்து மக்களை குழப்பம் அடையஸ் செய்ய வந்தது போலவே இருக்கிறது அவர்கள் தரும் செய்திகளைப் படிக்கும் போது..


இந்த செய்தி நாளிதழ் வரவால் பதிக்கப்படுவது தினதந்தி அல்லது தினகரன் இல்லை. காரணம் அதற்கென இருக்கும் வாசகர்கள்தான் ஆனால் பாதிக்கபடுவது திணமணி அல்லது தினமலர்தான் காரணம் இந்த பத்திரிக்கைகளை படிப்பது ஹை மிடில் வகுப்பை சார்ந்தவர்கள்தான் இந்த குருப்பினரில் உள்ள ஒரு பகுதியினர்தான் தி ஹிந்துவை வாங்கி படிக்கப் போகின்றனர்

 ஒரு மிகப் பெரிய பழமையான பத்திரிக்கை குழுமத்தில் இருந்து வருவதால் மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த நாளிதழ் நிறைவேற்றவில்லை. முதன் முதலாக வரும் அந்த நாளிதழில் வரும் செய்தி மீடியா துறைகளில்  ஒரு பர பரப்பை ஏற்படுத்தி கொள்ளும் வண்ணம் வெளியிட்டு இருக்க வேண்டாமா? இதற்கு என்னிடமே பல அடியாக்கள் இருக்கும் போது இந்த நாள்தழின் ஆசிரியர் குழுக்களிடம் இல்லாது போனது மிக ஆச்சிரியத்தி உண்டாக்கிறது எனக்கு.

தமிழால் இணைவோம் என்று கூறிக் கொள்ளும் இந்த நாளிதழுக்கு தமிழில் ஒரு பெயர் கூட கிடைக்கவில்லையா என்ன?
அது மட்டுமல்லாமல் அவர்கள் தரும் செய்திக்கு எப்படி கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று சொல்லும் பாயிண்ட்க்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அதனை ஒருத்தர் கூட கவனிக்கவில்லையா என்ன?



  நாலே ருபாய்க்கு நாற்பது பக்கங்கள்.  செய்தி வெளிடும் அவர்களுக்கு செய்தி பஞ்சமா என்ன ஒரே செய்தியை தலைப்பை மாற்றியும் செய்தியையும் தலை கீழாக மாற்றி செய்திகளை தருகிறார்கள்



நிறைய செய்திகள்(பக்கங்கள்) சாக்கடை போல இருப்பதைவிட குறைய செய்திகள் இட்டாலும் சந்தனத்தை போல இருக்க வேண்டாமா என்ன?

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டுப் போகலாம் ஆனால் இதோடு இன்று நிறுத்திக் கொள்கிறேன்.


அன்புடன்
மதுரைதமிழன்



17 Sep 2013

6 comments:

  1. தினமணிக்கு தினமலருக்கு
    இது தேவலாம் போலத்தான் எனக்குப் படுகிறது
    பார்ப்போம்

    ReplyDelete
  2. ஒரு எதிர்பார்ப்பு இருந்தது இந்த நாளிதழைப் பற்றி! உங்கள் கருத்துக்கள் ஏமாற்றம் அடைய செய்தன!

    ReplyDelete
  3. மொத்ததில் புதிதாக வந்த ஒரு பத்திரிக்கைக்கு நம்ப முடியாத அளவுக்கு இணைய தளத்தில் விளம்பரம் கிடைத்து விட்டது.

    ReplyDelete
  4. hereafter no problem for toilet tissue papers:In India toilet tissue papaer is(printed) available for Rs 4/ oven fresh!

    ReplyDelete
  5. குறைவான செய்தி, செய்தியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. செய்தியைப் பற்றி நாம் யோசிப்பது அதிகமாகிறது. அதைப் பற்றிய நம் கருத்து ஒரு சரடுபோல மாறி, பிற செய்திகளைக் கோத்து ஒரு பெரிய வாழ்க்கை நோக்காகத் தொகுக்கப்படுகிறது. ஆனால், இன்று நாம் செய்திப் பிரளயத்தின் நடுவில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். இருபத்துநான்கு மணி நேர செய்தி ஓடைகள். அவற்றின் முடிவேயில்லாத விவாதங்கள். எதையும் எவரும் சொல்லிவிட்டுச் செல்லக்கூடிய இணையதள விவாதங்கள். ஒட்டுமொத்தமாக, செய்தி என்பது நம் வாழ்க்கையை வைரஸ்போலச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. நாம் விரும்பினாலும் இல்லை என்றாலும் அது நம்மில் புகுந்து நம் மூச்சில், ரத்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

    ஆம், செய்தி பிரமாண்டமானதாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், தனிச்செய்திக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமலாகிவிட்டது. செய்திகளுக்கு மேல் செய்திகள் விழுகின்றன, செய்திகள் செய்திகளை மறைக்கின்றன. கருத்துகள் செய்திகளை அழிக்கின்றன. கருத்துகளைப் பிற கருத்துகள் அழிக்கின்றன. எதையும் நாம் கவனிப்பதில்லை. எதுவும் நம்மில் நீடிப்பதில்லை.

    ஒருமுறை பிஜப்பூரின் ஜும்மா மசூதியின் பிரமாண்டமான கும்மட்டத்தின் உட்குடைவுக்குள் ஏறி நின்றுகொண்டிருந்தேன். கீழே நூற்றுக்கணக்கானோர் பேசிக்கொண்டிருந்தனர். கும்மட்டத்தின் உச்சிக்குழிவில் அந்தப் பேச்சொலிகள் அனைத்தும் கலந்து ஓர் ஓங்காரம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. சமகாலச் செய்திகளில் இருந்து நான் பெற்றுக்கொள்வது வெறும் ஓர் ஓலத்தை மட்டுமே.
    nanri தி இந்து

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.