Thursday, September 5, 2013
73 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
ReplyDelete-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களுடைய பிரார்த்தனைக்கு நன்றி... எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் எதற்கு நன்றி என்று எழுதி இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. இனிமேல் பதிவு ஏதும் வராது என்று அட்வான்ஸாக நன்றி சொல்லி விட்டீர்களோ என்னவோ
Deleteஎன்னங்க இது உண்மையா...?
ReplyDeleteஎன்னங்க நீங்க உண்மை என்று நம்பிவீட்டிர்களா என்ன? நீங்கள் என் பதிவுகளை எல்லாம் படிக்காமல் இருக்க விட்டுவிடுவேனா என்ன ?நான் உங்களை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் சந்தோஷமாக இருக்க விடுவேனா என்ன
Deleteரொம்ப தப்பு நண்பா.... எனக்கு அவ்வப்போது பின்னூட்டம் இட்டு ஊக்குவிப்பவர்கள் நீங்கள்.உங்களுக்காக ஒரு இரங்கல் பதிவு தயார் செய்து வைத்திருந்தேன்... ஏற்கனவே பதிவுலகை விட்டு போகிறேன் என்ற ரீதியில் ஒரு பதிவு போட்டீங்க... பதிவ படிச்சப்புறம் சொல்ல வந்த செய்தி வேறனு புரிஞ்சிகிட்டேன்.... அதிர்ச்சியான தலைப்பு வைக்க வேண்டியதுதான்... அதற்காக இந்த அளவுக்கு போகவேண்டாம்...
Deleteநண்பரே தவறாஅக நினைக்கவில்லையென்றால் அந்த இரங்கல்பதிவை வெளியிடுங்களேன் அல்லது இங்கு பின்னுட்டமாகவோ அல்லது எனக்கு மெயிலாகவோ அனுப்பி வையிங்களேன்.
Deleteநீங்கள் இப்படி எல்லாம் இரங்கல்பா எழுதுவீர்கள் என்று எனக்கு தெரிந்து இருந்தால் ஒரு மாதம் கழித்து தலையை வெளிக்காட்டி இருப்பேன், இப்ப வடை போச்சே
தயவு செய்து இப்படியெல்லாம்
ReplyDeleteவிளையாட்டுத்தனம் வேண்டாம்
இந்தப் பதிவை நீக்கவும்
ஹீ.ஹீ ஒருதடவை பப்ளிஷ் பண்ணிடேன்னா என் பதிவை நானே தொட மாட்டேன்.
Deleteவிளையாடாதீர்கள் மதுரைத்தமிழன்.... ஒழுங்கா நல்ல பதிவா போடுங்க... வெள்ளிக்கிழமையும் அதுவுமாக இப்படியெல்லாம் செய்யாதீர்கள்...
ReplyDeleteவெள்ளிக்கிழமை நல்ல நாள்தானுங்க சனிதான் நல்ல நாள் இல்லை
Deleteஎதுக்குங்க இந்த விளையாட்டு..... பதிவுலகை விட்டு நீங்கப் போறீங்களா?
ReplyDeleteபதிவுலகத்தை இப்போதைக்கு விடுவதாக இல்லை.... சும்ம்மா ஒரு வார்த்தை விளையாட்டுக்குதான்
Deleteவேண்டாம்... இந்தப் பதிவை நீக்கவும்...
ReplyDeleteஹீ.ஹீ ஹீ.ஹீ ஹீ.ஹீ ஹீ.ஹீ ஒருதடவை பப்ளிஷ் பண்ணிடேன்னா என் பதிவை நானே தொட மாட்டேன்.
Delete#அவர் மனம் சாந்தி அடைய பிரார்த்திக்கவும் # இதில் இருந்தே தெரிகிறதே ,அவர்கள் உண்மைகள் சொல்லவில்லை என்று !
ReplyDeleteஅவர்கள் உண்மைகள் சொல்லவில்லை அவரது நண்பர்கள்தான் சொல்லி இருக்காங்க ஹீ.ஹீ
Deleteமதுரைத் தமிழன் மதுரத் தமிழ் சாகாது. ஒரு அதிர்ச்சி அதிருதல்ல.விளையாட்டுப் pillai.;விளையாட இது வேண்டாமே.
ReplyDeleteரமணி சார் மற்றும் உங்களை போன்ற பெரியோர் ஆசிகள் இருக்கும் வரை இந்த மதுரைத்தமிழனுக்கு ஒன்றும் நேராது
Deletenam avarai thedi kandupidipom
ReplyDeleteநீங்க தேடி கண்டுபிடிக்கிற வரைக்கும் என்னால் ஒழிந்து இருக்க முடியாதுங்க அதனால நானே வந்துட்டேன்
Deleteபதிவர் என்று தான் எல்லோரும் சொல்வோம், பதிவாளர் என்ற வார்த்தையை பயன்படுத்துவது மதுரை தமிழன் மட்டுமே!!
ReplyDeleteஎன்ன புரியலையா!! இந்தப் பதிவை மதுரைத் தமிழனைத் தவிர வேறு யாரும் போட்டிருக்க முடியாது!! ஹெ ..........ஹே ......ஹெ ..........ஹெ ..........ஹெ ..........ஹே .
நல்லா கிளப்புறாய்ங்கையா பீதிய............
IIT ல படிச்சவர் என்பதை நிருபித்துவிட்டீர்கள் சபாஷ்
Deleteஹையோ ஹையோ
ReplyDeleteஎன்ன ஜாலியா குதிக்க ஆரம்பிச்சிட்டீங்களா?
Deleteஇதெல்லாம் ஓவர்..
ReplyDeleteஉங்க மேல எனக்கு கோபம் ஒரு நல்ல இரங்கற்பா கவிதை எழுதாமா ஹும்ம்ம்ம்
Deleteஇப்ப எதுக்கு இந்த பதிவு??
ReplyDeleteஒரேமாதிரி பதிவு போடக் கூடாது என்ப்தால் தானுங்க
Deleteஆண்டவன் சொல்றான். பதிவு எழுதி முடிக்கிறான். இந்த மதுரைத்தமிழன்
Deleteஏன் இந்தக் கொலை வெறி??????????????????????????????????????????
ReplyDeleteநாலு பேருக்கு பொழுதுபோகலைன்னா எந்த மாதிரி பதிவு போட்டாலும் தப்பில்லை
Deleteஇவருக்கு கமென்ட் போட்டால் அவர் ஒப்புதலுக்குப் பிறகே வெளியிடப் படும். இப்போது தானாகவே கமென்ட் வெளியிடப்படுகிறது, அவர் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல், அவர் மனம் சாந்தியடையட்டும்...
ReplyDeleteநம்ம தலையை சுத்தி ஒரு தேவதை பறந்துக்கிட்டு இருக்குமாம். நாம எது சொன்னாலும், அந்த தேவதை அப்படியே ஆகட்டும்ன்னு வாழ்த்துமாம். நாம நல்ல வார்த்தை சொன்னால் நல்லது நடக்கும். கெட்ட விதமா கெட்டது நடகும்ன்னு நான் சொல்லலீங்கோ!! டணால் தங்கவேலு ஐயா ஒரு முறை டிடி ல பேசினார். அதனால, எப்பவும் நல்ல வார்த்தைகளையே பேசவும். ப்ளீஸ்
ReplyDeleteதலையை சுற்றி தேவதை பறக்காதுங்க பூரிக்கட்டைதான் பறக்குமுங்க
Deleteஉசுரு விசயத்துலலாம் வெளையாடாதீங்கயா.. எரிச்சலா வருது..
ReplyDeleteஉசிரு விஷயத்தில் நாம் விளையாட முடியாதுங்க அந்த விளையாட்டை விளையாடுபவர் கடவுள் ஒருத்தர் மட்டும்தானுங்க
Deleteபதிவை பார்த்ததும் அதிர்ச்சி அளித்தது நம்ப முடியவில்லை! விளையாட்டு வேண்டாம் நண்பரே!
ReplyDeleteஅறிவில்லையா உங்களுக்கு?? ஏற்கனவே ஜி பிளஸ் ல போன வருஷம் ஒருத்தர் இப்படி விளையாண்டதா ஞாபகம்...இந்த வருஷம் நீங்களா...ரைட்டு !! நடத்துங்க...அப்புறம்...கொண்டை எப்படியோ வெளிய தெரியற மாதிரி இந்த மாதிரி விஷயங்கள் பண்ண கூடாது...தமிழ்மணத்தில் இணைச்சதை சொன்னேன் :-) இது சும்மா வெள்ளாண்டேன் நு அடுத்து ஒரு பதிவு வந்தால்... அடுத்த முறை நீங்கள் நம்ம (மதுரை) ஊருக்கு வரும்போது உங்கள் பதிவு நிஜமாக்கபடும்...யோவ்...லூசாயா...நீ :-(
ReplyDeleteஅறிவு இருந்தா ஏன் பதிவுகள் எழுதி போடுறோம் அது இருந்தா வெட்டியா இப்படி நேரத்தை விணாக்குவதற்கு பதிலாக நாலு காசு சம்பாதிக்கும் வழியை பார்த்து இருப்போம்ல
Deleteஎன் வலைத்தளத்தில் என் நண்பர்கள் என்னைப்பற்றி பதிவு இடும்போது அவர்களுக்கு அதை தமிழ்மனத்தில் இணைக்க தெரியாதா என்ன
Deleteஊருக்கு வருவதில்லை என்பதை முடிவு பண்ணி பல ஆண்டுகள் ஆகிவிட்டதே
Deleteஎதேச்சையாக இந்த பதிவினை படிக்க நேர்ந்தது.ஆனந்தியின் ஆத்திரத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள்.
Deleteநீங்கள் செய்தது சுத்த சிறுபிள்ளைதனம்... இல்லை மகா கிறுக்குத்தனம் ஆங்கிலத்தில் சற்று நாசுக்காக சொல்லவேண்டுமெனில் Highly stupidity. வேண்டாமே இந்த விளையாட்டு.
நம்ப முடியவில்லை.
ReplyDeleteஇப்படிப்பட்ட பதிவுகள்...கூடாது; கூடவே கூடாது.
மன அமைதிக்காக வீக் என்ட் பிரயாணம் போறீங்க என்பது விளங்குகிறது ...
ReplyDeleteஅதற்க்கு இப்படி போஸ்ட் போடுவதா வலி துயரம் ..பிரிவு மறைவு ..இதெல்லாம் அனுபவித்தொருக்குதான் புரியும் ..தயவுசெய்து
இம்மாதிரி இனி செய்யாதீங்க சகோ ..
Angelin.
நான் மன அமைதியை தேடி பயணம் செய்யவில்லை .... சம்மர் வேகஷனுக்கு குழந்தையை கூப்பிட்டு என் மைச்சினிச்சி வீட்டிற்குதான் சென்றேன் .மரணம் எப்போதும் வலியை தருவதில்லை மரணிக்கும் முறைகள்தான் வலியை தரும்.
Deleteகவலை கொள்ளாதீர்கள் இனிமேல் செய்யமாட்டேன்
//மறைந்துவிட்டார்// என்றுதான் இருக்கிறது. ‘காலமாகிவிட்டார்’ என்று குறிப்பிடப்படவில்லை.
ReplyDeleteஒருவர் இறந்துவிட்டால், ‘ஆத்மா’ சாந்தியடையட்டும் என்றுதான் இரங்கல் தெரிவிப்பார்கள். இங்கே, ‘மனம்’ சாந்தியடைய என்றிருக்கிறது.
ஆக, மதுரைத் தமிழன் எங்கோ ‘ஓடிப்போய்’ மறைதிருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
100% மீண்டும் பதிவு போடுவார்...ஒரு மனிதனாக; ஆவியாக அல்ல.
வந்துட்டேன்வந்துட்டேன்வந்துட்டேன்வந்துட்டேன்வந்துட்டேன்
Deleteநம்ப முடியவில்லை!!.
ReplyDeleteஒருவேளை உண்மை எனில் பதிவிட்டு தமிழ்மணத்தில் இணைத்த சகோ விளக்கம் அளித்தால் நன்று;
உண்மையல்ல சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு
Deleteகலாய்த்த மதுரை தமிழன் மறைந்துவிட்டார். இனி கலாய்க்காத சீரியசான மதுரை தமிழனை காணலாம்
ReplyDeleteமறைந்திருந்து விளையாடியது போதும் வெளியே வாருங்கள்.
நமக்கு சீரியஸாக எழுத தெரியாதுங்க
Deleteவிளையாடுவதற்கு எல்லையே இல்லையா?
ReplyDeleteஇந்தப் பதிவை நீக்கி விடுங்களேன். ப்ளீஸ்
.....
படிக்க கஷ்டமாக இருக்கிறது.
Deleteநெருப்பு என்றால் வாய் வெந்துவிடாதுங்க....
இந்தப் பொழப்புக்கு ....தூத்தேரி...
ReplyDeleteஎன் பதிவு... தனி பதிவு.... சீண்டாத தாங்கமாட்ட
Deleteஆமாம் நானே ஒரு லூசு உனது சம்பந்தமில்லாத கருத்தை படிச்சா நீ என்னவிட மகா லூசா இருப்பே போலிருக்குதே
Deleteமதுரை தமிழன் குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவிக்கிறேன்.
ReplyDelete
Deleteஎனது குடும்பத்தாரிடம் சொல்லிவிடுகிறேன்
இப்படியும் ஒரு விளையட்டா, நல்ல விளையாட்டாகத் தெரியவில்லையே
ReplyDeleteநான் ஒரு விளையாட்டு பிள்ளைங்க அதனால சீரியஸா எடுத்துகாதீங்க
Deleteநான் இப்பத்தான் இதை பார்த்தேன்... விளையாடவும் ஒரு அளவில்லையா? வார்த்தை விளையாட்டாக கூட இருக்கட்டும்... படிக்கிற மத்தவங்களுக்கே இப்படி வருத்தம் தருதுன்னா... உங்களை சார்ந்தவங்களுக்கு எவ்வளவு வருத்தம் தரும்... இதெல்லாம் வேண்டாம்... !
ReplyDeleteவெகேஷன் லீவில் உங்க பதிவை பார்க்க முடியலையே எப்ப வருவீங்கன்னு நினைச்சிட்டே இருந்தேன்... இப்படியா வருவீங்க... பூரிகட்டை எடுத்து கொடுக்க வேண்டியதுதான்...
Deleteஎன்னை சார்ந்த யாரும் இங்கு வருவதில்லைங்க......
பூரிக்கட்டையை இப்படி எடுத்து கொடுத்துகிட்டே இருந்ததால்தான் மண்டையில் அடிபட்டு இப்படி மூளை குழம்பி போய் பதிவு போடும் நிலை வந்துருச்சு
"என்னைத்தானே நான் இறக்கிக்கிறேன். மற்றவர்களை இல்லையே?" என்று நீங்க நியாயப்படுத்தலாம். உங்களுக்கு என்ன புரியலைனா, வாழ்க்கை எனப்டு நீங்கள் நினைப்பதுபோல் என்றுமே இன்றுபோல் இருக்காது. எப்படி வேணா எந்த நிமிடம் வேணுமானாலும் மாறலாம். அதனால நீங்க செய்ற கூத்தையெல்லாம் எனபதே உண்மை! "உங்க பதிவை சரியாகப் புரிந்து கொள்ளாதது வாசகர்கள் அறியாமை" என்கிற வாதமெல்லாம் அர்த்தமற்ற ஒண்ணு. அது உங்க அறியாமைதான்.
ReplyDeleteஆமா, "புலி வருது! புலி வருது" ஒருத்தன் சொல்லி விளையாடுவதாக ஒரு கதை இருக்குமே? அதை நீங்க சிறு வயதில் படித்ததில்லையா?
I don't feel sorry for you. I only feel sorry for people those who care about you. Unfortunately you don't seem to understand those who care about you!
BTW, I did ignore your post. But people like Murali was SERIOUSLY wondering whether I can check out the "real situation" of yours as THEY ARE GENUINELY WORRIED about YOU. That's why I am responding here! Take care.
அன்புள்ள வருண் இப்படி ஒரு பதிவு போடலாம் என்று என் மனசு எண்ணியது மரணம் பற்றி நீங்கள் பதிவிட்டு மிக நன்றாக எழுதிய பதிவைபடித்ததால் என்ற உண்மை உங்களுக்கு தெரியாது.
Deleteமரணம் வந்தால் தெரிந்துவிடும்! http://timeforsomelove.blogspot.com/2008/08/blog-post_31.html
நான் வெளியிட்ட இந்த பதிவினால் யார் மனமும் "உண்மையாக காயப்பட்டு இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
சமீபகாலமாக மரணம் பற்றிய எண்ணங்களே என் மனதில் வந்து உதிக்கின்றன. அப்படி உதித்த நேரத்தில்தான் மரணம் பற்றிய செய்தியை தேடி படித்த போது உங்கள் பதிவு என் கண்ணில் பட்டது
வருண் மரணம் வந்தால் தெரிந்துவிடும்! என்ற பதிவு என்னை மிகவும் கவர்ந்தது பாராட்டுக்கள்
ஆக, உங்க இந்தப் பதிவுக்குக் "காரணகர்த்தா" வருணும், அவனோட "மரணம் வந்தால் தெரிந்து விடும்" பதிவும்தானா?! நாசமாப்போச்சு போங்க! :-) Well, I am not going to blame or give credit for KaNNadasan for my post. I take the "deserved credit" for that! In any case, that's my observation and personal experience in the internet world. Seems like you proved that as correct once again! :) BTW, I am glad that "that post" helps you now to justify your post! :)
DeleteLet me repeat, நான் உங்க அப்பதிவைப் பார்த்து உணர்ச்சிவசப்படவில்லை, கலங்கவில்லை! ஆனால் அதைப்பார்த்து கலங்கிய குழம்பிய வருந்திய உங்க தோழ தோழியர்களைப் பார்த்துத்தான் வருந்தினேன்! ஏன் அவங்களை எல்லாம் இப்படிப்போட்டு குழப்பி கஷ்டப்படுத்துறாருனு.. இப்போ எல்லாத்துக்கும் காரணம் வருண் மற்றும் அவன் பதிவுதான் சொல்லி முடிச்சுட்டு பயணத்தை தொடருங்கள்! நான் இதை "ஜாலி"யாத்தான் சொல்றேன். சீரியஸா இல்லை!
கல்யாணத்திற்கு அப்புறம் நான் எதையும் சீரியஸா எடுத்து கொள்வதில்லை வருண்.
Deleteநான் பதிவு எழுதியதற்கு உங்கள் பதிவுதான் என்று குற்றம் சொல்லவில்லை. அதைபடித்த பின் என் கிறுக்கு மூளையில் தோன்றிய லூசுத்தனமான எண்ணங்கள்தான் காரணம்.
Deleteஎப்போதும் நான் செய்த குற்றத்திற்காக அடுத்தவர்கள் மேல் பழி சுமத்துவதில்லை
Deleteவிபரீத விளையாட்டு. பின்னூட்டங்கள் எல்லாம் கவலையையும் அக்கறையையும் தெரிவிக்கின்றன.
ReplyDeleteஇப்போது தான் படித்தேன்... எட்வின் சாரின் மரணம் பற்றிய பதிவை...நெருப்பென்றால் சுடுவதில்லை என்றாலும் நெருங்கிய நட்பு வட்டங்கள் கலங்கித்தான் போகும்... மரணத்தை அறிவிக்க ஒருவர்க்கு அசாத்திய தைரியம் வேண்டும் அது உங்களுக்கு இருக்கிறதோ?
ReplyDeleteமரணத்தை அறிவிக்க அல்ல அதை எந்த நேரத்திலும் எதிர் கொள்ள எனக்கு அளவிற்கு அதிகமான அசாத்தியமான தைரியம் உண்டுங்க
Deleteமரணம் பற்றிய ஒரு கருத்து. மனித இனத்தில் யாருமே ஒருவன் இறந்துவிட்டான் என்று வருத்தப்படுவது இல்லை அவன் வருத்தப்படுவது அந்த இறந்தவரால் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களை சந்தோசங்களை லாபங்களை நாம் இனிமேல் பெற இயலாது என்று கருதுவதால்தான் நாம் வருந்துகிறோம். எங்கோ ஒருவன் செத்துவிட்டால் என்றால் நாம் கவலைப்படுவதில்லை ஆனால் அவன் ஏதாவது ஒரு வழியில் தெரிந்து இருந்தால் மட்டுமே கவலைக் கொள்கிறோம் எனப்துதான் உண்மைங்க
ஏன்யா..ஏன்..
ReplyDeleteஇந்த மாதிரி மொக்கைபதிவு போடறதுக்கு பேசாம போய் சேர்ந்து இருக்கலாம்..
என் பிளாக் என் பதிவு என்ன வேனாலும் எழுதுவேன் அப்படின்னு சொன்னா இதை விட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை..
உங்க மேல கொஞ்சம் மரியாதை இருந்துச்சு..அதை நீங்களே கெடுத்துக்கிட்டீங்க...ஹிட்ஸ்க்காக எப்படி வேணாலும் டைட்டில் வைப்பீங்களா..
ஒத்த பைசா பிரயோசனம் இல்லதான்.வருமானம் இல்லதான்.அதுக்குன்னு என்ன எழவு வேணுமினாலும் எழுதலாமா..?
அனுதாபம் தேடறீங்களோ...அசிங்கமா இருக்கு...
///
இதெல்லாம் உங்க மனசுல பட்ட மாற்றுகருத்துகளை தாரளமா பகிரலாம்.அப்ப்டின்னு சொன்னதால் நாசுக்காக எழுதி இருக்கேன்...
மொக்கை பதிவு போடுறது என் இஷ்டமுங்க & போய் சேர நான் ரெடி ஆனா கடவுள்தான் என்னை அழைக்கப் பயப்படுகிறார். காரணம் நான் போடும் மொக்கைகளை கண்டு அவருக்கும் பயமுங்க
Deleteஎன் பிளாக் நான் என்ன பதிவு வேணும்னாலும் எழுதுவேன் அது முட்டாள்தனமாக இருந்தால் அதை படிக்க புத்திசாலிங்க யாரும் வரக் கூடாதுல்ல அது கூட தெரியாத புத்திசாலிங்க நாட்டுல நிறைய பேரு இருக்காங்க போல இருக்கே
ஆமாங்க நான் என் மரியாதையை கெடுத்துட்டேன் இல்லைன்னா நாட்டுல பல பேர் எனக்கு சிலை வைச்சுருப்பாங்கல
இது ஹிட்சாக்கா எழுதியதா? அப்படின்னா இந்த பதிவுக்கு ரொம்ப ஹிட்சு கிடைச்சுருக்கனுமே? ஆனா கிடைக்கலேயே தலைப்பு சரி இல்லை போலிருக்கு
நான் ஒன்றும் அப்படி மோசமாக ஒன்றும் எழுதவில்லைங்க.... நெட்டுல பாருங்க அம்மா என்று தேடினால் அசிங்கம் அசிங்கமா எழுதுனதுதான் வருது சாதி மதம் பற்றி எழுதி அடிச்சுகிறாங்க கலாச்சராம் பண்பாடு என்று தான் கடைபிடிக்காத விஷயமா எழுதிவிட்டு அதற்கு எதிராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள் அதை எல்லாம் விட்டு இங்க வந்து அழுகுறீங்க நான் என்னமோ மோசமாக எழுதி விட்டேன் என்று.
ஆமாம் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் நான் எத்தனையோ நல்ல பதிவுகள் எழுதி இருக்கிறேன் அதைபற்றி நீங்கள் ஏதாவது ஒரு வரி பாராட்டி எழுதியதுண்டா ? நீங்கள் மட்டுமல்ல வேறு யாரும் ஒரு வார்த்தை பாராட்டியோ வாழ்த்தியோ எழுதவில்லை
ஆனா இங்க வந்து இந்த பதிவிற்கு பொங்க வைக்கிறீங்க
ஆமாங்க நான் அனுதாபம் தேடுறேனுங்க காரணம் நான் வரும் தேர்தலில் நிக்க போறேன் அல்லது என் குடும்பம் வாழ வழியில்லாம தெருவுல நிக்குது அதனால் இப்படி அனுதாபம் தேடி அலைகிறேனுங்க.....
நான் உங்க கருத்தை படிச்சிட்டு என் மனசுல பட்டதை நாசுக்காக எழுதி இருக்கிறேன் அதனால தப்பா எடுத்துக்காதீங்க
இறுதியாக உங்களுக்கு மட்டுமில்லை இங்கே வந்து படிப்பவர்கள் அனைவருக்கும் ஒன்று சொல்லவிரும்புகிறேன். நான் இங்கு மரியாதை, ஒட்டு, பின்னுட்டம்,மற்றும் வேறு ஏதும் எதிர்பார்த்து எழுதவில்லை எனது பொழுது போக்கிற்காக அன்று அன்று என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் எழுதுகிறேன். சமுகத்தை சீர்திருத்தவோ அல்லது தமிழை வளர்க்கவோ எழுதவில்லை. அப்படி எதையும் எதிரப்பார்த்து இங்கே வர வேண்டாம்
இப்பவாது என்னைப்பற்றி கொஞ்சம் புரிஞ்சுகோங்கப்பா
ஆளை விடுங்கப்பா