Thursday, September 26, 2013

மோடியின் திருச்சி பேச்சிற்கு கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் பதில்




ஊழல் பண்ணுவதில் காங்கிரஸ் அரசு தோல்வியே அடையவேவில்லை என்பதை மோடி கவனிக்க தவறிவிட்டார் போலிருக்கே



""சில நாட்களுக்கு முன், கென்யாவில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் கொல்லப் பட்டுள்ளனர். அவர்களுக்கும், நமது எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும், 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்,'' என்றார் மோடி. அவரது வேண்டுகோளை ஏற்று, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்படியே குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம்களுக்கும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சொல்ல மறந்தது ஏனோ?


போரால் உயிரிழந்த ராணுவத்தினரின் எண்ணிக்கையை விட, பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்த வீரர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்பதை உணரும்போது, கோபம் தான் வருகிறது

எங்களுக்கெல்லாம் உங்களை போல அரசியல் வாதிகளின் பேச்சுகளை கேட்கும் போதுதான் கோபம் வருகிறது


தன்னை, அமெரிக்கா கண்காணிக்கிறது என்று அறிந்த பிரேசில் நாடு, அமெரிக்க பிரதிநிதிகள் குழு, தன் நாட்டுக்குள் நுழைய, எதிர்ப்பு தெரிவித்தது.தன்மானத்தை காக்க, பிரேசில் எடுத்த நடவடிக்கையை, பாராட்ட வேண்டும்

இதை தன்மானம் இல்லாத மோடி சொல்வதுதான் சிரிக்க வைக்கிறது ( அமெரிக்கா விசா தர மறுத்தும் மீண்டும் மீண்டும் தன்மானத்தை அடகு வைத்து விண்ணபிக்கும் போது எங்கே போயிற்று அந்த தன்மானம்


அமெரிக்க உளவுத் துறையில் பணியாற்றிய ஸ்னோடென், அந்நாடு, மற்ற நாடுகளை உளவு பார்த்த விஷயத்தை வெளியிட்டார். அவரை கைது செய்ய, அமெரிக்கா முயற்சித்தது. அவர், ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார். அந்நாடு அவருக்கு, புகலிடம் கொடுத்தது. இதனால், அமெரிக்க அதிபர் ஒபாமா, "ரஷ்யா மண்ணில் கால் வைக்க மாட்டேன்' என்று கூறினார். இது தான் நாட்டுப்பற்று!

அமெரிக்கா மற்ற நாடுகளை உளவு பார்த்த விஷயத்தை கண்டிக்காமல் அதற்கு ஆதரவு தருவது போல இருக்கிறது இவரின் இந்த பேச்சு. பிரதமர் ஆவதற்கு முன்பே இந்த பேச்சு என்றால் பிரதமர் ஆனால் அமெரிக்காவிற்கு மன்மோகன் போல அடிமை ஆகிவிடுவாறே...அப்புறம் எதற்கு மன்மோகனை இயவர் குறை சொல்ல வேண்டும்

சிறியதோ, பெரியதோ, ஒரு நாட்டின் தன்மானத்துக்கும், சுய கவுரவத்துக்கும் இழுக்கு ஏற்படுமானால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், சூழல் பற்றியும் கவலைப்படாமல், தன் நாட்டின் சுயகவுரவம், தன்மானத்தை காப்பாற்ற, தலைவர்கள், வீறு கொண்டு எழுந்து நிற்பது வழக்கம்

வயசானவர்களை எல்லாம் தலைவாரக தேர்ந்தெடுத்தால் அவர்கள் எப்படி வீறு கொண்டு எழுவார்கள் வேணும் என்றால் வயகரா வாங்கி கொடுத்து பாருங்கள்


மக்களிடம் பிளவை ஏற்படுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் ஆட்சியை நீடிக்க காங்கிரஸ் விரும்புகிறது

மதங்களிடையே பிரச்சனைகளை உருவாக்கி மோடி தலைமையிலான கட்சி ஆட்சியை பிடிக்க விரும்புகிறது


காங்கிரஸ் தான். நாட்டின் நதிநீர் பிரச்னையில் மாநிலங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்திய பாவத்தையும் காங்கிரஸ் செய்துள்ளது.


ஐயா கர்னாடாகவில் பிஜேபி ஆண்ட போது தமிழக கர்நாடக நதிநீர் பிரச்னையை சுமுகமாக பேசி நீங்கள் தீர்த்து வைத்திருக்கலாமே அதை விட்டு விட்டு காங்கிரஸை மட்டும் குறை சொல்லவது எந்த விதத்தில் நியாயம்


கடந்த, 1857ல் இந்துக்களும், முஸ்லிம்களும் சுதந்திரத்துக்காக போராடியபோது, மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்தியது காங்கிரஸ். ஓட்டு வங்கிக்காக இந்த பாவத்தை காங்கிரஸ் செய்கிறது

காங்கிரஸ். அன்று செய்த தவறை நீங்கள் இப்போது பின்பற்றிதானே ஓட்டு வங்கிக்காக இந்த பாவத்தை நீங்கள் செய்ய ஆரம்பித்து இருக்கிறீர்கள்


நாட்டை காப்பற்ற வேண்டுமானால், காங்கிரஸ் கட்சியிடமிருந்தும், அதனுடன் இணைந்து செயல்படும் கட்சிகளிடமிருந்தும், அக்கட்சிக்கு தரகு வேலை பார்க்கும் சக்திகளிடமிருந்தும், நாட்டை விடுவிக்க வேண்டும்.

அப்ப திமுக மற்றும் அதை போன்ற கட்சிகளின் ஆதரவு எனக்கு பிரதமராக தேவையில்லை என்று தைரியமாக அறைகூவல் விடுவிக்க முடியுமா?


தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படுகின்றனர்.

ஆமாங்கய்யா இப்பதான் இது அவருக்கு தெரிஞ்சுதா என்ன?


தமிழக நிலையைப் பற்றிப் பேசும்போது, மின் வெட்டு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை, சிறுதொழில்கள் நசிவு ஆகிய பிரச்னைகளைப் பற்றி, மோடி குறிப்பிட்டார். ஆனால், அவற்றுக்கெல்லாம், மத்திய அரசே காரணம் எனவும் குற்றம் சாட்டினார்


ஆஹா என்ன தைரியம் என்ன தைரியம் ரொம்ப புல்லரிக்குதே ஜெயலலிதாவின் ஆட்சியை பற்றி தைரியமாக விமர்சிக்க தைரியம் இல்லாத மோடிதான் நாளை பிரதமாரக வந்து சீனா பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளை தைரியமாக விமர்சிக்கப் போறாராம். ஹஹஹஹஹஹா


தமிழகத்தில் உள்ள் பிரதான கட்சிகளான, தி.மு.., .தி.மு.., ஆகியவற்றை விமர்சிப்பதை தவிர்த்தார். இதன் மூலம், லோக்சபா தேர்தலில், ஏதாவது ஒரு கட்சியின் கூட்டணி ஏற்படுத்த, அடித்தளம் அமைக்கும் முயற்சியில் மோடி ஈடுபடத் துவங்கியது, வெளிப்படையாகத் தெரிந்தது


மோடி சரியான கில்லாடி அய்யா


அன்புடன்
மதுரைத்தமிழன்

17 comments:

  1. நச்சு கேள்விகள்

    ReplyDelete
  2. கேள்வியும் பதிலும்
    கலைஞர் பாணியில் மிக அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. படித்து மகிழந்ததற்கு மிகவும் நன்றி

      Delete
  3. சிவப்பு எழுத்துகள் ரொம்ப காரமாதான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. சிவப்பு மிளகாய் காரமாகத்தானே இருக்கும்

      Delete
  4. தமிழ்நாட்டில் முன்பதிவு செய்து பணம் கட்டி கலந்து கொண்ட கூட்டத்தைப் பற்றி உங்கள் கருத்து?

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு டிராமா? நான் படித்த வரையில் யாரும் க்யூவில் நின்று முன்பதிவு செய்து சென்றாதாக படிக்கவில்லை & பார்க்கவில்லை. 2 . ஒரு வேளை அவர்கள் ஆன்லைனில் மூலமாக பதிவு செய்து கொண்டார்கள் என்றால் அதனை முழுவதும் நம்ப் முடியவில்லை. காரணம் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் க்ரெடிட் கார்டு இருக்க வாய்ப்பில்லை. இது ஒரு கட்சிகாரர்கள் நடத்திய ஒரு ஸ்டண்டாகத்தான் எனக்கு தெரிகிறது

      அது ஒரு டிராமா? நான் படித்த வரையில் யாரும் க்யூவில் நின்று முன்பதிவு செய்து சென்றாதாக படிக்கவில்லை & பார்க்கவில்லை. 2 . ஒரு வேளை அவர்கள் ஆன்லைனில் மூலமாக பதிவு செய்து கொண்டார்கள் என்றால் அதனை முழுவதும் நம்ப் முடியவில்லை. காரணம் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் க்ரெடிட் கார்டு இருக்க வாய்ப்பில்லை. இது ஒரு கட்சிகாரர்கள் நடத்திய ஒரு ஸ்டண்டாகத்தான் எனக்கு தெரிகிறது


      உங்களுக்கு இது பற்றி மேலும் அதிக தகவல்கள் தெரிந்தால் இங்கு பகிரவும் நன்றி

      Delete
  5. அண்ணாத்தை என்ன குடியரசு கட்சிக்காரவுகளோ?
    இல்ல உங்க மண்ணை மிதிக்க மாட்டேன் எனவெல்லாம் டயலாக் பேச, ஒபாமாதான் என்ன தமிழ் சினிமாவுல வர்ற பஞ்சாயித்து தலைவரா? இந்த மாதம் ஆரம்பத்தில்தான் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் புட்டினுடன் கை குலுக்கி விட்டு 2 நாள் ரஷ்யாவில் கூத்தடித்தார் உங்க தலிவர்! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

    ReplyDelete
    Replies
    1. ஐயா அதை நான் சொல்லவில்லை ஒபாமா அப்படி சபதம் போட்டதாக நமது வருங்கால பிரதமர் மோடி பேசியதாக செய்தியில் படித்தேன்.


      நான் சோத்துகட்சியை சேர்ந்தவனுங்க்

      Delete
  6. எப்பவுமே மதுரை தமிழன் பதிவு
    நடுநிலமையோடு இருப்பது தான் சிறப்பு !
    உங்களை போன்றவர்கள் சரியாக எழுதுவதனால் இந்த நாடு இன்னும்
    பல் வேறு இனத்தவர்கள் வாழும் ஜன நாயக நாடாக உள்ளது ! நன்றி !

    ReplyDelete
    Replies
    1. யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால்தான் இப்படி இருக்க முடிகிறது & இது லாப நோக்கில் நடத்தப்படும் தளமும் அல்ல அதனால் தான் இந்திய செய்திகளை படிக்கும் போது நடுநிலைமையோடு விமரிசிக்க முடிகிறது. அடுத்தாக பேச்சுரிமை எழுத்துரிமை கருத்துரிமை உள்ள நாட்டின் குடிமகனாக இருப்பதாலும் மிக தைரியமாக சொல்லுமுடிகிறது என நினைக்கிறேன் அது மட்டுமல்லாமல் எனக்கு எதிலும் அதிக பற்றுகள் ஆசைகள் கிடையாதுங்க்

      Delete
  7. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். முதலில் சுயநலம், அப்புறம் சுயநலம், அதன் பின்னர் சுயநலம். இதுதான் அரசியல்

    ReplyDelete
  8. கேள்வியும் பதிலும் அருமை!
    நானும் ஒரு கேள்வி கேட்கிறேன்! நான உங்கள் வலைப் பக்கம் பல முறை வந்தும், தாங்கள், என் வலை வழி ஒரு முறைகூட வரவில்லையே! !!!? அமெரிக்கா தூரமென்பதாலா!

    ReplyDelete
  9. கேள்வியும் பதிலும் அருமை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.