ஒரு
சின்ன நாடு தைரியமாக எடுக்கும்
நடவடிக்கைகளை கூட இந்தியா
எடுக்க தவறுவது வெட்ககேடு
இந்தியர்கள்
தங்களுக்குள்ளே பெருமை பேசி
கொள்வதும் தாம்தான் மிக உலகில்
மிக புத்திசாலிகள் என்றும்
மிக தைரியசாலிகள் என்றும்,
இந்தியா
வல்லரசு நாடாகும் தூரம் அதிகம்
இல்லை என்று பெருமை பேசிக்
கொள்வதில் மட்டும் சளைத்தவர்கள்
இல்லை
அடே
தைரியசாலிகளே புத்திசாலிகளே
தமிழ கடற்கறையோராம் தமிழக
மீனவர்கள் சுடப்பட்டு இறப்பதும்
இலங்கை அரசாங்கத்தால் கைது
செய்யப்பபடுவதும் அன்றாட
நிகழ்ழ்சிகளில் ஒன்றாகிவிட்டது
இதை தட்டிக் கேட்க முதுகெலும்பு
இல்லாதவர்கள் தானே நீங்கள்.
கேட்டால்
நாங்கள் ஜனநாயகப்படி நடவடிக்கைகளை
எடுத்து வருகிறோம் நட்பு
நாடான இலங்கையுடன் பகையை
வளர்த்து கொள்ளாமல் ராஜரீக
நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்
என்று வீணாப்போன அறிக்கைகள
மட்டும் விட்டுக் கொண்டு
இருக்கிறீர்கள்
ஏண்டா
நான் உங்க கிட்ட ஒன்று நான்
கேட்கிறேன் உங்க வீட்டு
குழந்தைகளை பக்கத்துவீட்டுக்காரன்
துன்புருத்துகிறான் அல்லது
கொலை செய்கிறான் அவனை தட்டிக்
கேட்பதற்கு பதிலாக அவனை
தட்டிக் கேட்டால் அவனிடம்
நாம் கொண்ட உறவு பாழாகிவிடுமே
என்று கருதி சும்மா இருப்பீர்களா
என்ன?
அப்படி
சும்மா இருப்பது பொட்டைத்தனம்
அல்லவா?
அதுமாதிரிதானடா
இந்த மீனவ பிரச்சனைகள் அது
உங்களுக்கு புரியவில்லையா
என்ன?
இல்லை
நீங்கள் இப்படி இருப்பதுதான்
புத்திசாலிதனமா என்ன?
பாருங்கடா
ஒரு மீனவரை பறிகொடுத்த தைய்வான்
செய்த செயலை அந்த சிறிய
நாட்டிற்கு உள்ள தைரியம்
புத்திசாலிதனம் கூட இந்தியர்களுக்கு
இல்லையேடா?
(
இதையும்
க்ளிக் செய்து படிங்க )
கடந்த
மே மாதம் தைவான் -
ஃபிலிப்பைன்ஸ்
நாட்டின் கடல் எல்லையில்
தைவான் நாட்டு மீனவர் ஒருவர்
(வயது
65)
மீன்
பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது
அந்த வழியே ரோந்து வந்த
ஃபிலிப்பைன்ஸ் நாட்டின்
கடலோரக் காவல் படையினர் அந்த
மீனவரைச் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
'எங்கள்
நாட்டின் எல்லைப் பகுதிக்குள்
வந்ததால் பாதுகாப்பு கருதி
சுட்டதாக’ ஃபிலிப்பைன்ஸ்
கூறியது.
அதை
ஏற்க மறுத்த தைவான் அரசு,
ஃபிலிப்பைன்ஸ்
மீது 11
பொருளாதாரத்
தடைகளை விதிப்போம் என எச்சரித்து,
சுட்டவர்கள்
மீது நடவடிக்கையும் கோரியது.
ஃபிலிப்பைன்ஸ்
மக்கள் மீது விசா செயலாக்க
இடைநீக்கம்,
வர்த்தகப்
பரிமாற்றக் குறைப்பு...
என
தைவான் நடவடிக்கைகள் எடுத்தது.
சர்ச்சைக்குரிய
கடற்பகுதியில் ராணுவப்
பயிற்சிகளை தைவான் நடத்தியது.
இதையடுத்து
ஃபிலிப்பைன்ஸ் அதிபரின்
சிறப்புத் தூதர்,
சுட்டுக்
கொல்லப்பட்ட மீனவக் குடும்பத்தை
நேரில் சந்தித்து இரங்கலையும்
வருத்தத்தையும் தெரிவித்தார்.
தவறு
செய்தவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மீன்
பிடித்தல் தொடர்பான ஓர்
ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு
இடையில் மேற்கொள்ளப்படும்
என்றும் அறிவித்தார்.
இதனை
அடுத்து தைவான் அரசு,
விதித்திருந்த
தடைகளை நீக்கிக்கொண்டது.
இதுவும்
ராஜாங்க நடவடிக்கைதான்!''
( இதையும்
க்ளிக் செய்து படிங்க )
After arriving from the Philippines, Amadeo Perez, chairman of the Manila Economic and Culture Office (MECO) in Taiwan, right, apologizes to the family of a Taiwanese fisherman killed by Filipino coast guard officers in Pingtung, southern Taiwan, Aug. 8, |
சின்ன
குழந்தைகள் தவறுகள் செய்யும்
போது பெற்றோர்கள் பக்கத்துவீட்டு
குழந்தைகள சுட்டிக்காட்டி
நீங்க எல்லாம் அவங்க மூத்திரத்தை
குடிக்க கூட லாய்கில்லை என்று
சொல்வது போல இந்தியர்கள்
எல்லாம் தாய்வான் நாட்டினருடைய
மூத்திரத்தை குடிக்க கூட
லாய்க்கில்லை
இதுல
வேற மோடி வந்தா எல்லாம்
சரியாகிவிடும் என்று ஒரு
கூட்டம் உளறிக் கொண்டு
இருக்கிறது.
நான்
ஒன்று கேட்கிறேன் தமிழகத்தில்
திருச்சியில் நடந்த கூட்டத்தில்
மினவர்கள் பற்றி பேசும் போது
இந்த மஹாவீரர் மோடி இலங்கை
அதிபருக்கு ஒரு எச்சரிகை
தமிழர்களின் சார்பில் விட்டு
இருக்கலாமே இப்படி ஏய் இலங்கை
அதிபரே நான் பிரதமாரக வந்த
பின்னால் உங்களது கடற்கறை
ராணுவ வீரர்களால் எங்க இந்திய
மக்கள் ஒரு சொட்டு ரத்தம்
சிந்தினால் இலங்கை கடும்
விளைவை சந்திக்க நேரிடும்
என்று எச்சரிக்கை விடுவித்து
இருக்கலாமே அதை செய்ய மறந்து
போனது ஏனோ
ஒரு
குடும்பமாக பழகிவரும் இந்துகள்
முஸ்லிம்கள் இடையே சிறு தகராறு
வரும் போது அதை ஊதி பெரிசாக்கும்
மோடி இப்படி இந்திய மீனவர்கள்
இறக்கும் போது மவுனம் சாதிப்பது
ஏனோ
இந்திய
மக்களே தேர்தலுக்கு இன்னும்
ஒர் ஆண்டுகள் இருக்கிறது
அதனால் நிங்கள் நன்றாக
சிந்தியுங்கள் இந்த
சந்தர்ப்பவாதிகளான மன்மோகன்
சிங்க் மோடி இவர்களை விட ஒரு
நல்ல இந்திய தலைவர் இந்தியாவில்
பிறக்கவே இல்லையா என்ன?
நிச்சயம்
நல்ல தலைவர்கள் இருப்பார்கள்
அவர்களை கண்டு பிடித்து
தேர்ந்தெடுத்து உங்கள்
தன்மானத்தை காப்பாற்றி
இந்தியாவையும் உலகில் பெருமை
மிக்க நாடுகளாக மாற்றுங்கள்.
அப்படி
மாற்றுவது உங்கள் கையில்
மட்டுமே
அன்புடன்
மதுரைத்தமிழன்
காரம், மனம்....குணம் அதிகம். இதில் ஆதங்கம் அதிகம் தெரிகிறது. இயலாமை தெரிகிறது. மேலை நாடுகளுக்கு வந்த பின் தான் சுதந்திரம் என்றால் உரிமைகள் என்றால் என்ன என்று தெரிகிறது. இந்த இடுகையை சரியான முறையில் அணுகவும். இந்தியர்களை கிண்டல் செய்யும் எண்ணம் இதில் இல்லை எனபது என் அப்பிப்ராயம்.
ReplyDeleteத.ம. 1
//மேலை நாடுகளுக்கு வந்த பின் தான் சுதந்திரம் என்றால் உரிமைகள் என்றால் என்ன என்று தெரிகிறது.//
Deleteநம்பள்கி அவர்களே,
அந்த மேலை நாடுகளின் குடிமகன் சட்டத்தை எப்படி மதிக்கிறான் தெருவில் உள்ள வாகனங்களை கட்டுபடுத்தும்ஒரு பச்ச சிவப்பு விளக்கிற்கு கூட (traffic signal)அவர்கள் எவ்வளவு மதிப்பு கொடுக்கிறார்கள் என்பதை நீங்க கண்டிருப்பீங்க,அறிஞ்சிருப்பிங்க.சட்டத்தை மீறிவிட்டு வீர வசனமெல்லாம் அவர்கள் பேசமாட்டார்கள். தங்களுக்காக ஒரு அரசியல்வாதிவந்து வீர வசனம் பேசுவார் என்றும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
நம்பள்கி நான் சொல்ல வந்த விஷயத்தை புரிந்து கருத்து சொன்னதற்கு நன்றி. நாம் அமெரிக்காவில் இருந்து கருத்து சொன்னால் இந்தியாவில் உள்ளவர்கள் நினைப்பது நாம் அவர்களை கிண்டல் செய்கிறோம் என்று கருதுகிறார்கள் ஆனால் நாம் பெர்ஷனல் சூழ்நிலை காரணமாக இங்கு வசித்தாலும் நாம் நம் மண்ணை இன்னும் அவர்களைவிட மிக அதிகமாக நேசிப்பது அவர்களுக்கு புரியாது. நாம் இங்கு வந்தாலும் நமது கலாச்சார மொழி இன உணர்வுகளை இன்று வரை மறக்காமல் கடை ப்டித்து வருகிறோம் ஆனால் அவர்களோ இந்தியாவில் வசித்தாலும் அமெரிக்க கலாச்சாரத்தை கடை பிடித்து நம்மை குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள்
Delete@வேகநரி சிக்னல் இல்லாவிட்டாலும் நாலு முனை கொண்ட தெருவில் யார் முதலில் வருகிறார்கள் என்று கவனித்து அதன் படி ஒருவர் பின் ஒருவராக செல்லுகிறார்கள். அதை யாரும் மீறுவதில்லை . நான் இந்தியா வந்த போது என் சகோதரன் திருநெல்வேலில் உள்ள ரயில்வே ஸ்டேஷனிலிருந்து காலையில் அவனது வீட்டிற்கு அழைத்து செல்லும் போது ஒன்வேயில் சென்றான் நான் டேய் நீ தப்பாக ஒன்வேய் பாதையில் செல்லுகிறாய் என்று சுட்டிக் காட்டியதும் அவன் சொன்னது நீ என்ன இந்தியாவில் வாழ்ந்ததை மறந்துவிட்டாயா என்று என்னைப் பார்த்து கேலி செய்கிறான் என்ன சொல்வது என்று தெரியவில்லை
Deletevetkapada koodiya visayamthaan...
ReplyDeleteநாடு என்பது அதன் மக்கள்தான். மக்களிடமிருந்துதான் அதன் தலைவர்களை வருகிறார்கள். மக்கள் மனோநிலை எப்படியோ, அப்படியே அதன் தலைவனுகளும் இருப்பார்கள்.மக்கள் மானாடா மயிலாட பார்த்து நிலை மறந்தால், அவர்களின் தலைவர் நமிதாவை மேடையில் டான்ஸ் ஆடவிட்டு பொழுது போக்குவார். தெருவில் ஒருவன் அடிபட்டு கிடந்தால் 'உச்' கொட்டிவிட்டு நம் கண்டுக்காம போவார்கள், அதே போல நம் தலைவர்களும் மேடையில் கத்துவதோடு சரி, மீனவர் சாவதை கண்டு கொள்ளவதில்லை.
ReplyDeleteசொந்த நாட்டில் மட்டுமல்ல அந்நிய நாட்டிலும் இப்படியான பொறுப்பற்ற நிலைதான். அமெரிக்காவில் ஆயிரம் தமிழ் சங்கம் உண்டு. ஒரு அவசரம், தமிழனுக்கு பிரச்சனை எனில் தொடர்பு கொள்ள ஒரு தொலைபேசி எண் உண்டா எனில் எனக்கு தெரிந்தவரை இல்லை. ஆனால் அமெரிக்காவிலிருக்கும் நம்மாளுக ஒன்றாக சேர்த்து கூத்தாடிகளை வரவழைத்து ஆடவிட்டு கூத்தாடுவதில் மட்டும் எக்குறைவும் இல்லை!
நம்மைவிட ஏழ்மையாவர்கள் கொண்ட வங்களதேசத்தின் மக்கள் அமெரிக்காவில் சங்கம் வைத்திருக்கிறார்கள். அங்கு தொடர்பு கொண்டால் 200-300 ஆயிரம் டாலர் கடை வைக்க தந்து உதவுகிறார்களாம். பல இந்திய மார்கெட்டுகளை வங்காளதேச கடைகள் ஆக்கிரமித்து வருகின்றவாம்.
இதுதான் நமது மனோநிலை, அப்புறம் நாமிருக்கும் நாடு மாத்திரம் என்ன ம*ரை புடுங்கும்?
சகோ நந்தவனத்தான் மிக சரியா சொன்னீங்க .
Deleteஇந்தியன் மனநிலை அமெரிக்காவில் இருப்பவரானாலும் அதே தான்.
@ நந்தவனத்தான்
Deleteஇந்தியர்களிடம் அடுத்தவன் நம்மைவிட முன்னேறிவிடக் கூடாது என்ற எண்ணம் இருக்கிறது. அது மாறவேண்டும். நீங்கள் சொன்னபடி பங்களாதேஷ் மக்கள் தங்கள் நாட்டில் இருந்து வருபவர்களுக்கு உதவுகிறார்கள் என்பதும் உண்மையே. ஆனால் இது போன்றசிறு நாடுகளில் இருந்து வருபவர்கள் & ஒருத்தருக்கு ஒருத்தர் உதபுவர்கள் யார் என்று உற்று நோக்கினால் அவர்கள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை இஸ்லாமியர்களை பலவிதங்களில் குறை கூறினாலும் இந்த மாதிரி அவர்கள் ஒருவருக்கொருவர் உதவுவதை பாராட்டிதான் ஆக வேண்டும்.
அதே போல இப்போது இங்கு ஊருக்கு நாலு கோயில் கட்டி நல்ல வருமானத்தை ஈட்டினாலும் இங்கு வரும் அல்லது கஷ்டபடும் அல்லது பிரச்சனைகளில் தவிக்கும் இந்துகளுக்கு உதவ யாரும் வர முன்வர மாட்டேங்கிறார்கள்
முதல்ல தமிழனுக்கே ஒற்றுமை இல்லை, மாநில ஒற்றுமை பற்றி கேட்கவே வேண்டாம்...!
ReplyDeleteபஹ்ரைனில் தமிழ் சங்கம் இருக்குன்னு தெரியும், ஆனால் எங்கே யாரு எப்பிடின்னு ஒரு எழவும் தெரியாது...!
தமிழனுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு தம்மை சார்ந்தவர்களுக்கு உதவி அவனை தூக்கி விட்டுவிடக் கூடாது என்பதுதான்
Deleteஒவ்வொருத்தரும் தன் உரிம, கடமை பற்றி உணரனும். மக்கள்தான் மாறனும். தானா அரசியல்வாதிங்க மாறுவாங்க.
ReplyDeleteஅருமையான கருத்து
Deleteசகோ நீங்கள் மிக சரியாக நான் சொன்னதை புரிந்து கொண்டு பதில் அளித்து இருக்கிறீர்கள் இந்த பதிலைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். பாராட்டுக்கள்
Deleteஅமெரிக்க குடியுரிமையை பெற்று, இந்திய குடியுரிமையை தலை முழுகிய நீங்கள் இதைப் பற்றி பேச தகுதி இல்லாதவர்
ReplyDeleteநண்பரே கருத்து சொல்ல குடியுரிமை அவசியம் இல்லை. உங்கள் கருத்துப்படி நீங்கள் இந்திய குடியுரிமையை கொண்டு இருப்பதால் நீங்கள் மேலை நாடுகளைப் பற்றி கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என்று சொன்னால் அது தவறுதானே.
Deleteநண்பரே ஏதோ கருத்து சொல்லனும் என்று சொல்லாதீர்கள் கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்கள்
அமெரிக்க குடியுரிமைக்காக இந்திய குடியுரிமையை தலை முழுகிய நீங்கள் இந்த கேள்வியைக் கேட்க தகுதி இல்லாதவர்
ReplyDeleteத.ம. 1
ReplyDeleteExcellent Post.
குத்துங்க நல்லா குத்துங்க...
தம 1
DeleteExcellent Post
பாதாளத்துக்கு சறுக்கிட்டிங்க பகுத்தறிவாள நண்பரே.
2014 பிரதமர் தேர்தலில் உங்கள் வோட்டு யாருக்கு? பகுதியில் யாரையும் பிடிக்க வில்லை பகுதியை சேர்த்தால் தான் நான் வோட்டு போடுவேன்.
ReplyDeleteஇனிமேல் அந்த Poolலில் புதிதாக சேர்க்க இயலாது என நினைக்கிறேன் முடிந்தால் சேர்க்கிறேன்
Delete//2014 பிரதமர் தேர்தலில் உங்கள் வோட்டு யாருக்கு? பகுதியில் யாரையும் பிடிக்கவில்லை பகுதியை சேர்த்தால் தான் நான் வோட்டு போடுவேன்.//
ReplyDeleteஅட.....இது நல்லாயிருக்கே......நானும் உங்க கட்சி தான் Suresh.
மதுரை தமிழரே!!!! Could you please amend this?
இனிமேல் அந்த Poolலில் புதிதாக சேர்க்க இயலாது என நினைக்கிறேன் முடிந்தால் சேர்க்கிறேன்
Deleteசின்னசிறு நாட்டுக்கு தைரியம் சாஸ்திதான. ஆனால் பெரிய நாடு வல்லரசு இந்தியா, அந்த வல்லரசவின் தலைவர்களான.அம்பானி.,டாட்டா போன்ற இந்தியர்கள் பகக்கத்து நாட்டில் தொழிலில்கு முதலீடு செய்திருக்காக தலைவா, இந்திய நாடு இந்தியர்களுக்கே! தமிழருக்கு அல்ல...........
ReplyDeleteமக்கள் ஆட்சி என்று சொல்லும் நாட்டில் முதலாளி மறைமுகமாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே
Deleteஅளவுக்கதிமான மென்மைப் போக்கை கடை பிடிப்பது நல்லதல்ல என்பதை ஆள்பவர்கள் உணர வேண்டும்.
ReplyDeleteகடலோரக் காவல் படை என்று ஒன்று இருக்கிறதா என்பது தெரியவில்லை.
நீங்கள் சொல்வதும் உண்மைதான் மக்கள் மென்மையாக இருந்தது போதும் அவர்கள் மாறினால் தலைவர்கள் தன்னால் மாறுவார்கள் நாடும் மாறும்.
Delete