எனது முந்தைய பதிவு வார்த்தைகளை வைத்து விளையாடிய ஒரு பரீட்சார்த்த பதிவு அதனை புரிந்து பதில் அளித்தவர்கள் சிலரே மற்றவர்கள் எல்லாம் முதலில் சொல்பவர்களின் கருத்தை ஒட்டியே தங்களது கருத்தை வெளியிடுகிறார்கள். எப்படியும் இருந்துவிட்டு போகட்டும் . ஆனால் வந்து கருத்து சொன்னபவர்களுக்கும் இமெயில் அனுப்பியவர்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்
நவீன கால பிள்ளையார்கள்
 |
எனது மெளஸை தொலைத்து விட்டேன். கண்டுபிடித்து தாருங்களேன். நானும் பதிவு போடனும் |
தைரிய பிள்ளையார் : (ஜெயலலிதா ) இந்த பிள்ளையாரை புகழ்ந்துபாடி இதன் காலில் விழுந்து வணங்கினால் நீங்கள் கேட்டது எல்லாம் கிடைக்கும்;
மானம் காக்கும் பிள்ளையார் : (கலைஞர்) குடும்ப மானம் காக்கும் பிள்ளையார். குடும்ப மானம் காக்க தன்மானத்தை பறக்கவிடும் பிள்ளையார்.
மெளன பிள்ளையார் : (மன்மோகன்சிங் ) இந்த பிள்ளையாரை வணங்கினால்
பிரச்சனைகள் உங்களை இடிபோல தாக்கினாலும் நீங்கள் கவலை ஏதும் கொள்ளாமல் உங்கள் முகம் புன்னகையுடன் இருக்கும்
வாய்ச் சவுடால் பிள்ளையார் ; (விஜயகாந்து ) நல்ல நிலையில் உள்ளவர்கள் வீணாகப் போக இந்த் கடவுளை வணங்கலாம் அது போல வீணாப் போனவர்கள் இந்த கடவுள் சிலையை பக்கத்தில் வைத்து கொண்டு தைரியப் பிள்ளையாரை வணங்கினால் செல்வம் கூரையை பிய்த்து கொண்டு வரும். இந்த பிள்ளையாருக்கு கொழுக்கட்டை தேவையில்லை சரக்கு மட்டும் தேவை.
நடராஜா பிள்ளையார் : (வைகோ ) . சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த பிள்ளையாரை வணங்கி வந்தால் இவர் ஆசிர்வதத்தால் நடைபயணம் மேற்கொண்டு சுகர் பாதி அளவு குறைந்துவிடும்
காப்பி பேஸ்ட் பிள்ளையார் :(கமல் ); காப்பி பேஸ்ட் விஸ்வரூப பிள்ளையார். உங்களிடம் சரக்கு இல்லையென்றாலும் சரக்கு உள்ளவனைப்பார்த்து காப்பி அடித்து தன் சரக்கு போல காட்டி வெற்றி பெற வைக்கும் பிள்ளையார்.
வாய்ஸ் பிள்ளையார். (ரஜினி) இந்த பிள்ளையார் மிக புகழ் பெற்ற பிள்ளையார். இந்த பிள்ளையாரை இளம் வயதில் வணங்கி வந்தால் சீறும் பாம்பாகவும் வயதான நேரத்தில் செத்த பாம்பு போல அமைதியாக இருக்கலாம்.
பிள்ளையாராக தன்னை நினைத்து கொள்ளும் மூஞ்சுரு (எலி) விஜய். இந்த எலி, பிள்ளையாரை நோக்கி வணங்குபவர் எல்லோரையும்
தன்னை நோக்கி எல்லோரும் வணங்குவதாக நினைத்து கொண்டு தனக்கு தானே சூடு போட்டு ஒழிந்து கொள்ளும்.
அன்புடன்
மதுரைதமிழன்
இந்த பதிவு மத உணர்வு கொண்டவர்களை காயப்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டடது. அதுமட்டுமல்ல யாரையும் புண்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் பதியப்பட்டது அல்ல. வழக்கமாக கிராபிக்ஸ் டிசைன் செய்து பதிவிற்கு ஏற்ற படங்கள் இடுவேன். அது போல மேலே குறிப்பட்ட தலைவர்களின் முகத்தை வைத்து பிள்ளையார் போல டிசைன் செய்து இருந்தேன். அதன் பின் யோசித்து பார்த்ததில் அது பிள்ளையாரை வழிபடுபவர்களின் மனத்தை காயப்படுத்தி விடலாம் என்று உணர்ந்ததால் அதை டெலீட் செய்துவிட்டேன்.
முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்=
உச்சிட்ட கணபதி
உத்தண்ட கணபதி
ஊர்த்துவ கணபதி
ஏகதந்த கணபதி
ஏகாட்சர கணபதி
ஏரம்ப கணபதி
சக்தி கணபதி
சங்கடஹர கணபதி
சிங்க கணபதி
சித்தி கணபதி
சிருஷ்டி கணபதி
தருண கணபதி
திரயாக்ஷர கணபதி
துண்டி கணபதி
துர்க்கா கணபதி
துவிமுக கணபதி
துவிஜ கணபதி
நிருத்த கணபதி
பக்தி கணபதி
பால கணபதி
மஹா கணபதி
மும்முக கணபதி
யோக கணபதி
ரணமோசன கணபதி
லட்சுமி கணபதி
வர கணபதி
விக்ன கணபதி
விஜய கணபதி
வீர கணபதி
ஹரித்திரா கணபதி
க்ஷிப்ர கணபதி
க்ஷிப்ரபிரசாத கணபதி
சென்ற பதிவு உங்கள் பதிவை வாசித்தவர்களை காயப்படுத்தியது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் மதுரை...
ReplyDeleteமேலோட்டமாக படித்தவர்கள் மட்டுமே காயப்பட்டு இருப்பார்கள் என நினைக்கிறேன். ஆழ்ந்து படிப்பவர்கள் நகைத்துவிட்டு போய் இருப்பாரகள்
Deleteஇல்லை மேலோட்டமான ஆழ்ந்த வாசிப்பு என்பது உறவின் நிலையில் இல்லை.. எடுத்த உடன் ஆழ்ந்த வாசிப்பில் யாரும் ஈடுபடுவதில்லை.. முதல் இருவரிகள் மேலோட்டத்தில் இருந்து தொடங்குகிறது... பின்பு தான் ஆழ்ந்த வாசிப்பு அழைத்து செல்கிறது.. சுஜாதா சொல்வார் ஒரு பதிவில் முதல் இருவரிகள் தான் முக்கியம் என்று...
Deleteமேலும் மறைந்து விட்டார், மனம் சாந்தியடையட்டும் போன்ற பின்நவீனத்துவ வரிகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு ஞானம் எனக்கு வளரவில்லை என்றே எடுத்துக் கொள்ளுங்கள்..
அன்றைய தினத்தில் நான் முதலில் படித்த பதிவும் உங்களுடையது தான்.. விளையாட்டுக்குச் சொன்னாலும் ஆழ்மனதோடு விளையாடுவதை தவிர்க்கலாம்.. ஒருவேளை ஒருவேளை ஒருவேளை என்ற என்ன ஓட்டத்தை எங்களால் தவிர்க்க முடியவில்லை என்ற வருத்தத்தில் சொல்கிறேன்..
காயபடுத்தி இருந்தால் மன்னிக்கவும்...
மற்றபடி LET'S ROCK
என்ன சீனு காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள் என்று பெரிய வார்த்தைகளை எழுதி இருக்கிறீர்கள். டேக் இட் ஈஸிம்மா. அந்த ஒரு வேளை ஒரு வேளை எப்போதும் எப்படியும் வரலாம். அதற்கு நான் இந்த நொடியில் கூட தயார்தான். காரணம் நான் எதிலும் அதிக அளவு பற்று வைத்து கொள்வதில்லை என்பதுதான் உண்மை
Delete32-க்கு நன்றி...
ReplyDeleteஎனது அன்பு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
Deleteவாழ்த்தை மட்டும் சொல்லிவிட்டு போகாதீர்கள் ஏற்கனவே உங்கள் அக்கவுண்டில் பிரியாணி இருக்கிறது அதோடு கொளக்கட்டையையும் சேர்த்து கொள்ளுங்கள் ஊர் வரும் போது வாங்கி கொள்கிறேன்
பிள்ளையாரின் தாண்டவம் அற்புதம்
ReplyDeleteவாழ்த்துக்களுடன்...
tha.ma 2
ReplyDeleteமிக ரசித்தேன். என்ன தான் பூஜை முடித்தாலும் அவரவர்
ReplyDeleteபண்டிகை மற்றும் பண்டிகை கால சிறப்புப் பதிவுகளை
படிக்கா விட்டால் தலை வெடித்து விடும் போலுள்ளது.
நீங்கள் எடுத்த முடிவே சரி.
ஹா...ஹா.. !
ReplyDeleteவினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!... கொழுக்கட்டை வேண்டுமா... அதான் தினம் வீட்ல கிடைக்குதே.. ஹா...ஹா.
மௌனப் பிள்ளையார். அருமை. கிட்டத்தட்ட நான்கைந்து நாட்கள் நீங்களும் மவுனப் பிள்ளையார்தான்.
ReplyDeleteகலாய்த்தல் மதுரைத் தமிழன் போய் சீரியசான M.T வருவார் என்று நினைத்தால் மீண்டும் அவரே வந்ததற்கு மகிழ்ச்சி.
அழுவுற பிள்ளையாருக்கு மவுஸ் நான் வாங்கி தரேன்/ ஆனா, எனக்கு கமெண்டும், ஓட்டும் தவறாம போடனும். அடுத்த வருசம் பதிவர் சந்திப்புக்கு வர்றாரான்னு கேட்டு சொல்லுங்க!
ReplyDelete