Monday, September 30, 2013

மோடி Vs ராஜபட்சே  கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் நக்கல் பதில்கள்
மோடியையும் ராஜபட்சே வையும் உங்களால் ஒப்பிட முடியுமா?

மோடி கையில் எடுத்தது மதம் ராஜபட்சே எடுத்தது இனம் மோடிக்கு கோத்ரா படுகொலை ராஜபட்சேவுக்கு முள்ளிவாய்க்கால் படுகொலை




மோடிக்கு இப்போது "செல்வாக்கு" அதிகம் இருப்பதாக ஊடகங்கள் கூறுகிறதே ?

தேர்தலுக்கு அப்புறம் அவருக்கு கிடைத்த "செல்லாத வாக்குகளை" பற்றி அதிகம் பேசும் இந்த ஊடகங்கள்


மன்மோகன்சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் அரசு சீன இந்திய எல்லைப் பிரச்சனையை எப்படி தீர்ப்பார்கள்?

சீன ராணுவத்தினர் இனிமேல் இந்திய எல்லைக்கருகில் உள்ள மாநிலங்களுக்கு விசா இல்லாமல் வந்து தங்கி செல்லாம் என்ற மிகப் பிரமாதமான திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் எளிதாக தீர்ப்பார்கள்


தமிழக் மீனவர் Vs இலங்கை ராணுவத்தினர்?

தமிழக மீனவர் மீன் பிடிக்க கடலுக்கு செல்லுகின்றனர் இலங்கை ராணுவத்தினர் மீனவர்களை பிடிக்க கடலுக்கு செல்லுகின்றனர்



ரஜினி கமல் போன்ற பிரபலங்கள் சினிமா விழாவில் அவமானப்படுத்தபட்டதாக கலைஞர் வெளியிட்ட அறிக்கை பற்றி?

பத்த வைச்சிட்டேயே பரட்டை



நடிகர் விஜய்க்கு ரஜினிக்கு கமலுக்கு முதல் வரிசையில் சிட்டு தராதது பற்றி?
கடைசியிலாவது சீட்டு தந்தாங்களே என்று சந்தோஷப்படுங்கள் வைகோ போன்றவர்களுக்கு கடைசிவரையில் சீட்டு தரவில்லை என்பதை நினைவு கூறுங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்
30 Sep 2013

4 comments:

  1. ரைட்டு... கலக்குங்க...

    வைகோவுக்கு இந்தவாட்டியாவது சீட்டு தருவாங்களா....?

    ReplyDelete
  2. கலைஞரின் வாய்ஸ் சூப்பருய்யா....

    ReplyDelete
  3. கலக்கல் பதில்கள்! அசத்தி விட்டீர்கள்! நன்றி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.