உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, September 1, 2014

தலைவர்கள் செய்ய வேண்டியதை தனி மனிதனாக செய்யும் ஒரு உயர்ந்த மனிதன்


avargal unmaigalநல்ல செயலை நம்மால் செய்ய முடிகிறதோ இல்லையோ ஆனால் நல்ல செயல்களை செய்யும் ஒருவரை நாம் அட்லீஸ்ட் பாராட்டாவது செய்யலாம் அல்லவா அது போல அந்த செய்திகளை மற்றவர்களுக்கும் பகிரவும் செய்யலாம் அல்லவாநான் படித்த ஒரு நல்ல தகவலை நாலு பேருக்கு பகிரச் செய்யவே இந்த பதிவு. இது நல்ல பதிவாக இருக்கும் என்று உங்கள் மனதிற்கு தோன்றினால் தயங்காமல் ஷேர் செய்யவும்


இந்த தகவலை நான் Vaanam.Mrp என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் பார்த்தேன். அவரின் அனுமதியுடன் இதை இங்கு பதிகிறேன்


மிக நல்ல பதிவு. பகிர்வது நம் கடமை.
அன்புடன்
மதுரைத்தமிழன்.....


நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கோவை சிங்கா நல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரியாமல் இருக்காது. அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே .


கோவையில் எவ்வளவோ வழிகளில் பொதுமக்களின் பணத்தைப் பல வழிகளில் , தொழில் தர்மத்துக்குப் புறம்பாக அபகரிக்கும் பல நிறுவனங்கள், தனி நபர்கள் , மருத்துவர்கள், உணவகங்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியவர்களுக்கு இடையே, தான் சம்பாதித்த பணம் முழுக்க பொது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படும் சில நம்பிக்கை மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் இன்று நாம் பார்க்கப் போவது , சாந்தி கியர்ஸ் திரு பி.பழனிசாமி அவர்கள். தன் மனைவியின் நினைவாக "சாந்தி சோஷியல் செர்வீசெஸ்"  என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர்.


அவர்கள் மேற்கொண்டிருக்கும் நற்காரியங்களில் சில :


1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.)


2. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். நம்பினால் நம்புங்கள், எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. (மேலும் விற்பனை விலை மீதான அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, 15 முதல் 20 கிலோமீற்றுக்கு உள்ளாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.)


3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் , எக்ஸ்.ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.


4. சாந்தி மருத்துவமனை - மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் என்பதில் இருந்து, இவர்களின் லாப நோக்கமற்ற சமூக சேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.மற்ற விவரகங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க.


5.டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே, ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய்.


மேலும், 750 ரூபாய்க்கு மின் மயானம், ஒரு நாளிக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி செண்டர் ,


ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சாந்தி சோஷியல் செர்வீசெஸ் அறக்கட்டளைக்கும், அதை நிறுவியவர்களுக்கும் கோவை மக்களின் சார்பாக ஒரு ராயல் சல்யூட்.


இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்

13 comments :

 1. வணக்கம்
  இப்படியான புண்ணியவான்கள் இந்த உலகில் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்.... தகவல் தேடி பதிவாக வெளியிட்டமைக்கு பாராட்டுகள் அண்ணா.


  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:

  வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. பயனளிக்கும் தகவல்கள் ..பகிர்வுகளுக்கு நன்றிகள்.!

  ReplyDelete
 3. வாழ்க! அவர்! வளமுடன் பல்லாண்டு!

  ReplyDelete
 4. இப்படி சில நல்லவர்கள் இருப்பதால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது! சீரிய பணியை சிறப்பாக செய்து வரும் திரு பழனிச்சாமி அவர்களுக்கு பாராட்டுக்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 5. மிக நல்ல பகிர்வு! திரு பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 7. நல்ல மனம் வாழ்க.... நாடு போற்ற வாழ்க.

  தகவல்களுக்கு நன்றி மதுரைத் தமிழன்.

  ReplyDelete
 8. நல்ல விசயங்களை பாராட்டும் குணத்தில் தமிழன் தமிழன் தான்:))
  அட! பழனிச்சாமி சார் வெற்று கிரகவாசியா இருக்கபோறார்!!!

  ReplyDelete
 9. பாஸிட்டிவ் மனிதர் பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கங்களுடன் பாராட்டுகள். இந்த செய்தியை உங்கள் அனுமதியுடன் எங்கள் பாஸிட்டிவ் செய்திகள் பகிர்வுக்கு எடுத்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 10. பழனிச்சாமி அவர்களின் படம் கிடைக்கவில்லையே...

  ReplyDelete
 11. இந்த மாதிரி நல்ல விஷயங்களை நடத்துபவர்களை கண்டிப்பாக வெளியுலகத்துக்கு காட்ட வேண்டும்.

  திரு. பலனிச்சாமி அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரை எங்களுக்கு அடையாளம் காட்டியமைக்காக உங்களுக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. நானும் ஒரு லேப் X - RAY & ECG வைத்து நடத்திகொண்டிருக்கிறேன் . என்னால் குறைந்த விலைக்கு செய்ய முடியாத டெஸ்டுகளை அங்கே குறைந்த விலையில் செய்வதை FACEBOOKIL பதிவு செய்துள்ளேன், ஏனென்றால் நிறைய நோயாளிகளுக்கு தகவல் சொல்லி , அவர்களை நான் சாந்தி மருத்துவ ஆய்வு கூடம் மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளேன்

  இப்படிக்கு
  I.P.VICTOR
  ULTRA DIAGNOSTIC CENTRE
  KAMATCHI PILLAI COMPLEX
  DHARAPURAM ROAD,
  ODDANCHATRAM -624619
  CELL - +919942830117

  ReplyDelete
 13. சிறந்தசேவை. வாழ்த்துவோம்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog