Sunday, September 14, 2014




beauty vs healthy avargal unmaigal
அழகா ஆரோக்கியமா?( நீயா நானா) விஜய்டிவி



அழகா ஆரோக்கியமா என்ற தலைப்பில் வந்த நீயா நானா ஷோவை பார்த்த பின் வலைத்தள பெண் பதிவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்



மைதிலி : உங்களுக்கு அழகு பிடிக்குமா ஆரோக்கியம் பிடிக்குமா?

மதுரைத்தமிழன் : ஆரோக்கியமான அழகு பிடிக்கும்




உஷா அன்பரசு :ஆரோக்கியமான அழகு என்றால் என்ன?

மதுரைத்தமிழன் : எதுவும் அளவுக்கு அதிகமாக இல்லாமல் இருப்பதை ஆரோக்கியமான அழகு என்கிறேன்



சாகம்பரி :எதற்கு முதலிடம் அழகுக்கா ஆரோக்கியத்திற்கா?

மதுரைத்தமிழன் :ஆரோக்கியமாக இருந்தால்தான் அழகாவே இருக்க முடியும் அதனால் ஆரோக்கியம்



சசிகலா :அழகான பெண்கள் அழகில்லாத பெண்கள் இதில் யாரை உங்களுக்கு பிடிக்கும்?

மதுரைத்தமிழன் :அழகான பெண்களை பார்த்தவுடன் பிடிக்கும் அழகில்லாத பெண்களிடம் பேசப் பேச அவர்களை பிடித்து போகும்



அருணா செல்வம் :அம்மா அழகாக பொண்டாட்டி அழகா?

மதுரைத்தமிழன் :அம்மாதான் அழகு என்று சொல்லி பூரிக்கட்டையால் அடிவாங்க தெம்பு இல்லாததால் பொண்டாட்டிதான் அழகு என்று சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன்



இனியா :உலகிலேயே மிக சிறந்த அழகியாக நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்?

மதுரைத்தமிழன் :எனது மகளைத்தான்



ஏஞ்சல்(angel.fish) :உங்களை கவர்ந்த அழகான ஒன்று?

மதுரைத்தமிழன் :எனது நாய்க்குட்டி




ராஜி :கடவுளுக்கு அழகு பிடிக்குமா ஆரோக்கியம் பிடிக்குமா?

மதுரைத்தமிழன் : கடவுளுக்கு பிடித்தது ஆரோக்கியம்தான் அதனால்தான் அழகிய பூமாலைகளையும்,பட்டு சேலையையும் ,தங்க வைர நகைகளையும் ஏற்றுக் கொண்டு பால் பழம் தேங்காய் போன்ற ஆரோக்கியமான பொருட்களை தன்னை நம்பி வரும் பக்தனுக்கு திருப்பி கொடுத்துவிடுகிறார்




தேன்மதுரத்தமிழ்கிரேஸ் :பெண்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நீங்கள் சொல்லும் அறிவுரை?

மதுரைத்தமிழன் :அழகாக இருக்க சேலை அணியுங்கள் .

ஆரோக்கியமாக இருக்க:
சமைக்கும் போது டேஸ்ட் பண்ணுகிறேன் என்று பாதி உணவை வயிற்றுக்குள் போடாதீர்கள் உணவுகள் வீணாக போய்விடும் என்று நினைத்து குப்பை தொட்டிக்குள் போட வேண்டியதை வயிற்றுக்குள் போடாதீர்கள்



ஆச்சி ஆச்சி :அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க டிப்ஸ் தரமுடியாமா?



மதுரைத்தமிழன் :உணவில் மஞ்சள் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

காலையில் வேலைக்கு செல்லும்முன் மோரில் லென்மன் பிழிந்து குடித்து செல்லுங்கள்.
முடிந்தால் கேரட், பீட்ரூட், பேரிச்சம்பழம், வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்
முகம் அழாக இருக்க கண்ட கண்ட கீரிம் பூசாமல் காலையில் குளிக்க போகும் முன் ஒரு பச்சை எலுமிச்சம் பழத்தை பாதியாக கட் பண்ணி முகம் முழுவதும் பூசி அரைமணிநேரம் கழித்து குளியுங்கள் அல்லது முகம் கழுவுங்கள் அதே போல இரவு படுக்க போகும் போது செய்யுங்கள் அதன் பின் உங்கள் முகம் கண்ணாடி போல பள பளக்கும்
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.




நீங்கள் அழகானவரா ஆரோக்கியம் ஆனவரா?
கல்யாணத்திற்கு முன்பு அழகாக இருந்தேன் ஆனால் பூரிக்கட்டை வரவிற்கு பின்பு ஹும்ம்ம்ம்ம்ம்ம்



அன்புடன்
மதுரைத்தமிழன்


9 comments:

  1. கருத்துகளோடு காமெடியா...

    ReplyDelete
  2. என்னாது... பால்-பலம்-தேங்காய் எல்லாம் ஆரோக்கியமானதா? எப்ப இருந்து... உனக்கு எல்லாமே ஆபத்து ஆனாதுன்னு சொல்லி தினமும் புள் வகைகளை மேசையில் வைத்து விடுகிறார்கள்.. அது சரி... உங்களுக்கும் விஜய் டிவி க்கும் என்ன அப்படி ஒரு பங்காளி பிரச்சனை?

    ReplyDelete
  3. தமிழா! மிக மிக ரசித்தோம்....அதுவும் சகோதரி ராஜி, சகோதரி தேன்மதுரத்தமிழ்க்ரேஸ் அவர்களுக்குக் கொடுத்த பதில் சூப்பர்! தோழி கீதா திடீரென்று காணவில்லை என்று அவரது கணவர் தேட...கீதா தாங்கள் கடைசியில் ஆச்சி ஆச்சிக்குக் கொடுத்த டிப்ஸ் குறித்து குறிப்பெடுத்துக் கொண்டு இருக்கிறாரான்.. ஏற்கனவே செய்திருப்பது என்றாலும்...மதுரைத் தமிழன் சொன்னால் விட முடியுமா என்று முயற்சியாம்...

    ReplyDelete
  4. அனைத்து கேள்விகளும் உங்கள் பதில்களும் அழகோ அழகு :)

    உங்கள் நாய்க்குட்டி அழகான ஒரு ஹான்ட்சம் பையன் தான் :)

    அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நீங்க சொன்ன டிப்ஸ் ஆஹா!! சரியா சொல்லி இருக்கீங்க ..

    ReplyDelete
  5. அட்டகாசமான பதில்கள்! அவசியமான குறிப்புக்கள்! வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  6. அருமையான கேள்விகள். அட்டகாசமான பதில்கள்! :)

    ReplyDelete
  7. இனியாவிற்கு கொடுத்த பதில் தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. எல்லா அப்பாக்களுக்கும் இந்த ஒரு கருத்தில் ஒற்றுமை இருக்கும் இல்லையா சகா? ஆமா award எங்க ? எடைக்குப்போட்டு பேரிச்சம்பழம் வாங்கி அழகையும், ஆரோக்கியத்தையும் காப்பாற்றுகிரீர்களோ??

    ReplyDelete
  8. என்னவொரு ஊகம்... ஆரோக்கியம்தான் என்னுடைய பதிலாக இருக்கும். கடைசி பதிலினால், உலகத்திலேயே சிறந்த அழகி அவர் அம்மாவைப்போல இருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

    அப்புறம், அழகாக இருக்க சிரித்த முகமாக இருக்க வேண்டும் மதுரை தமிழன் சார். நன்றி.

    ReplyDelete
  9. சிறந்த கருத்து மேடை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.