Sunday, September 7, 2014



அமெரிக்கா ஒன்றும் சொர்க்கமல்ல......



சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்டைப் போல வருமா என்று தம் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் பாடுகிறார்கள் ஆனால் அப்படி நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் அயல்நாட்டை அதுவும் குறிப்பாக அமெரிக்காவை சொர்க்கமாக கருதுபவர்கள் பலர் உண்டு.



ஆனால் அமெரிக்காவில் வாழ்பவர்கள் சொர்க்கத்தை பார்க்காமலே சொர்க்கத்திற்கு செல்கிறார்கள் என்பது உண்மையாகி கொண்டிருக்கிறது.


2 நாட்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் என் மனதை பாதித்தது.


NEWARK N.J. (Reuters) - Maria Fernandes, a New Jersey woman with three part-time jobs who died while sleeping in her car between shifts,


இந்த மரியா பெர்ணாண்டஸுக்கு வயது 32 இவர் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே மூன்று வேலைகள் பார்க்க வேண்டிய நிலமை..இந்த பெண்மணி மூன்று வெவ்வேறு சிட்டிகளில் உள்ள Dunkin' Donuts என்ற பாஸ்ட்புட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு சில நாட்களில் மட்டும் ஒரு சில மணிநேரங்கள் மட்டும் வீட்டில் தூங்குவதற்கு அவளுக்கு நேரம் கிடைக்கும் . சில நாட்களில் ஒரு வேலை செய்யும் இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு வேலை செய்ய போகும் போது அருகில் உள்ள இடத்தில் உள்ள பார்க்கிங்க் செய்யும் இடத்தில் காரை பார்க் செய்துவிட்டு காரிலே தூங்குவார், இவர் 2 இடங்களுக்கு மேல் வேலைபார்ப்பதால் பாதிவழியில் பெட்ரோல் இல்லாமல் கார் நின்று போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்து காரிலே எப்போதும் கொஞ்சம் எகஸ்ட்ரா பெட்ரோலை வாங்கி ஸ்டாக் வைத்திருப்பார். அந்த பெட் ரோலை அவருக்கு எமனாக மாறிவிட்டது. ஆமாம் அந்த பெட் ரோல் காரின் உள்ளே சிந்தி இருக்கிறது. அவள் காரில் தூங்கும் போது அந்த பெட் ரோல் மூலம் வெளிவந்த fume மே அவரை கொன்றுவிட்டது. இப்படி குறைந்த வருமானம் & கடின உழைப்பு மக்களை இங்கே கஷ்டத்தில்தான் கொண்டு தள்ளுகிறது.


இன்னொரு பெண்மணியோ தன் குழந்தைகளை பார்த்து கொள்ள ஆல் இல்லாததால் வேலைக்கான இண்டர்வியுக்கு போகும் போது தன் 2 குழந்தைகளையும் அங்கு அழைத்து சென்று அவர்களை காரில் இருத்திவிட்டு அந்த கம்பெனியில் இஇண்டர்வியூ அட்டெண்ட் செய்டுவிட்டு வெளியே வரும் போது போலிசாரல் அரஸ்ட் செய்யப்பட்டார். இன்னொரு பெண்மணியோ தன் வேலை பார்க்கு இடத்தின் அருகே உள்ள பார்க்கில் தனது 9 வயதுபிள்ளையை விளையாட வைத்துவிட்டு அருகிலேயே இருக்கும் கடையில் வேலை பார்க்கும் போலிஸாரால் கைது செய்யப்பட்டார். இப்படி குறைந்த வருமானத்தில் கஷ்டப்படும் பெண்கள் மட்டும் அமெரிக்காவில் 3.3 மில்லியன் பேருக்கு மேல் இருக்கிறார்கள் என்று புள்ளிவிபரக் கணக்கு ஒன்று சொல்லுகிறது. இதே போல ஆண்களும் கஷ்டப்படுகிறார்கள் இங்கு காரணம் அவர்களுக்கு கிடைப்பது மணிக்கு 8 டாலர்களுக்கும் மிக குறைவே......

A New Jersey woman died earlier this week trying to catch a few hours of sleep between jobs, a chilling reminder of the struggle low-wage workers, particularly women, face making ends meet.



Police found Maria Fernandes dead in her car on Monday night, parked in a convenience-store parking lot in Elizabeth, N.J., according to a police press release. Fernandes, 32, was wearing a Dunkin’ Donuts uniform when she was found. A friend and fellow employees told officials she worked as many as four jobs, said Lt. Daniel Saulnier, a spokesman for the Elizabeth police department.



Authorities are waiting on a toxicology report to determine the exact cause of death, but Hazmat investigators found that fumes in Fernandes’ car were caused by a gasoline can that had spilled in the back, according to the release. Friends told police that Fernandes kept gas in her car to avoid running out of gas when traveling between jobs. And she often slept in parking lots to get a few hours of rest between jobs, authorities said.

இவர்கள் இப்படி என்றால் நம்மவர்கள் போல படித்து பட்டம் பெற்று அதிக அளவில் சம்பாதிப்பவர்களும் கஷ்டம்தான் படுகிறார்கள் இப்படி அதிக அளவு சம்பாதிப்பவர்களும் மிக அதிக நேரம் வேலைபார்க்கிறார்கள் என்பதும் உண்மையே....உதாரணமாக என் வீட்டுக்கு அருகில் வசிக்கும் அநேக இந்தியர்களை பார்க்கும் போது நேரம் என்படே அவர்களுக்கு கிடைக்கவில்லை அவர்கள் குடும்பதினருடன் செலவு செய்யும் நேரம் மிக குறைவே வார இறுதி நாட்களில் நாங்கள் அவர்களை விருந்துக்கு கூப்பிட்டலோ அல்லது அவர்கள் எங்களை கூப்பிட்டாலோ கண்டிப்பாக நாங்கள் பார்ப்பது விருந்தில் இருக்கும் போதே அவர்களுக்கு ஆபிஸில் இருந்து போன் வந்து அங்கு வரும் பிரச்சனைகளை சமாளித்து கொண்டு, பார்டிகளில் கூட சிறிது நேரம் ஒதுக்கமுடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இப்படி கஷ்டப்பட்டு அதிக அளவில் சம்பாதித்து கார் பணம் பதவி நல்ல வீடு வசதிகள் இருந்து அதை அனுபவிக்க முடியாமல் அவதிதான் படுகிறார்கள் இறுதியில் பல நோய்வாய்க்களுக்கு ஆட்பட்டு இறந்து போகிறார்கள்


இப்படிதான் பலரும் சொர்க்கமாக நினைக்கும் அமெரிக்காவில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.


 படிக்காதவர்கள் படிக்க

01..ஓ...அமெரிக்கா http://avargal-unmaigal.blogspot.com/2014/02/01-ohhhamerica.html
02.ஓ...அமெரிக்கா http://avargal-unmaigal.blogspot.com/2014/02/02-2-ohh-america-2.html

அன்புடன்
மதுரைதமிழன்

17 comments:

  1. பல விஷயங்களைப் பார்க்கும் போது இந்தியா சொர்க்கம்தான்!! சொர்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா!! உரிமையுடன் வாழ்வதற்கும், உரிமைகள் நிறைந்த என்று சொல்லும் நாட்டில் உரிமை பெற விழைந்து வாழ்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது!

    ReplyDelete
  2. இக்கரைக்கு அக்கரை பச்சை..!

    ReplyDelete
  3. எல்லா ஊரிலும் கஷ்டங்கள் உண்டு! இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை தெளிவு படுத்தியது கட்டுரை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. என்னவோ போங்க எத்தனை சொன்னாலும் வெளி நாட்டு மோகம் இங்கு குறைவதேயில்லை...

    ReplyDelete
  5. பிரச்சனை இல்லாத இடமே இல்லை..... :((((

    ஒவ்வொரு இடத்திலும் பிரச்சனைகளும் மட்டுமே இருப்பது போல ஒரு உணர்வு.

    ReplyDelete
  6. என்ன மாதிரியான வேலையை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் எல்லாம் அடங்கியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? நான் வங்கி அதிகாரியாக இருந்த 36 வருடங்களில் ஞாயிறு தவிர மற்றநாட்களில் இரவு எட்டு மணிக்கு முன் வீடு திரும்ப முடிந்ததில்லை. காலையில் ஏழரைக்கு மேல் வீட்டில் இருக்க முடிந்ததில்லை. அமெரிக்காவிலும் இதே நிலைதான். எனவே அதிர்ச்சி அடைவதற்கு ஏதுமில்லை. இங்கிருந்து போனவர்கள், அமெரிக்காவில் நிலைமை சரியில்லை என்றால் இங்கே திரும்பிவிட வேண்டியதுதானே! (2) எந்தத் தொழிலிலும் திறமையும் சாமர்த்தியமும் தான் முக்கியம். அது இல்லாதவர்கள் எங்குபோனாலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பது உறுதி.

    ReplyDelete
  7. நல்ல விழிப்புணர்வான பதிவு தான். ஆனால் நாளைக்கே அமெரிக்கா விசா என்றால் கிளம்புவதற்கு ஆட்கள் வரிசையில் நிற்பார்கள். அங்கே போன உடன் சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா பாட்டு, இந்தியா இந்தியா தான் என்பதைப் புரிந்து கொள்ள நிறைய பட்டுக்கோட்டையார்கள் வேண்டும் போல....

    ReplyDelete
  8. பிழைக்கத் தெரிந்தவன் எங்கே இருந்தாலும் பிழைப்பான்.

    ஆமாம்..... நீங்கள் சொன்ன பெண்களுக்குத் துணை என்று யாரும் இல்லையா.....(((

    ReplyDelete
  9. Sir, I am Senthilkumar, jus i want to know.In US residents are use to drink water by govt supplied or using any purifier like RO system in home.Thanks.

    ReplyDelete
    Replies
    1. செந்தில் கவெர்மெண்ட் சப்ளை செய்யும் வாட்டர் குடிக்க சமைக்க தகுந்த வாட்டர்தான் சிலர் தங்கள் வீடுகளில் வாட்டர் ப்யூரிபையர் சிஸ்டம் இணைத்துள்ளனர். சிலர் பாட்டில் வாட்டரை குடிக்க யூஸ் பண்ணுகிறார்கள். நான் எங்கு சென்றாலும் வீட்டு குழாய்களில் வரும் தண்ணிரைத்தான் குடிக்கிறேன் ஆனால் என் மனைவி பாட்டில் வாட்டரைதான் உபயோகிக்கிறார். நீங்கள் அமெரிக்கா வந்தால் எந்த ஹோட்டலிலும் இந்தியாவில் உள்ள ஹோட்டலில் ஒரு ஜக் வைத்து வாட்டர் வைப்து போல எல்லாம் இங்கு வைத்திருக்க மாட்டார்கள்.பாத்ரூமில் 2 யூஸ் & த்ரோ க்ளாஸ் மட்டும் வைத்திருப்பார்கள் சில ஹோட்டல்களில் சின்ன ப்ரிஜ் வைத்திருப்பார்கள் அதில் வாட்டர் பாட்டில் பீர் மற்ரும் கோக் வைத்திருப்பார்கள் அதை நாம் உபயோகித்தால் எக்ஸ்ட் ராவாக பணம் வசூலிப்பார்கள்/

      சரி மீண்டும் உங்கல் கேள்விக்கு வருகிறேன். இங்குள்ள வாட்டர் குவாலிட்டி பற்றி அறிய வேண்டும் என்றால் ந்த லிங்குக்கு சென்று பார்க்கவும் இது நான் வசிக்கும் டவுன் சிப் தரும் வாட்டர் ரிப்போர்ட் http://thecityofnewbrunswick.org/assets/Water-Quality-Report-2013-2012-Data-CCR.pdf படித்து பாருங்கள்

      Delete
  10. சரியாக சொன்னீர்கள் சகோ.! அர்த்தமே இல்லாத ஒரு ஓட்டம் ஆற அமர முடியாமல், இருந்த இடத்திலேயே சொகுசையும் சொந்தங்களையும் தொலைத்து விட்டு பேருக்குத் தான் வாழ்கிறார்கள். படித்த வர்களுக்கும் சரி படிக்காதவர்களுக்கும் அதே நிலை தான். நம்ம ஊரு எப்பவும் சொர்க்கம் தான்.

    ReplyDelete
  11. தங்கள் பதிவு மிகவும் சரியே! நான் அறிவேன் ! என் மூத்த மகள் அங்குதானே இருக்கிறாள்!

    ReplyDelete
  12. உழைக்கும் எண்ணமும், செய்யும் தொழிலில் திறமையும் கூடவே கொஞ்சம் சமயோசிதமாக செயல்படும் அறிவும் இருந்தால் உலகின் எந்த நாட்டிலும் நிம்மதியாக இருக்கலாம்.

    ReplyDelete
  13. மூன்று மாதம் முன்பாக் நார்த் கரோலினா போயிருக்கும் என் தம்பி(சித்தி பையன்) தங்கியிருக்கும் வீட்டில் மூட்டை பூச்சி கடியால் ஒரு மாதம் தூக்கம் இல்லாமல் மிக அவஸ்தை பட்டான். ஒசாமாவை ஒழித்த அரசு மூட்டை பூச்சிக்கிட்ட மாட்டிகிச்சே..

    ReplyDelete
  14. வணக்கம் தோழர்
    ஒரு பக்கத்தை மட்டும் சொல்லாமல்
    haves and havenot குறித்து முழுமையாக பதிவு செய்திருப்பது முழுமை...
    நிறைய உண்மைகளை யோசிக்க வைக்கும் பதிவு
    தொடர்க

    ReplyDelete
  15. எல்லோரும் அது சொர்கமேன்றே சொல்லிகொண்டிருந்தால் எப்படி??
    அதன் இன்னொரு முகத்தை அழகா சொல்லிருகீங்க சகா! கஷ்டமும், இன்பமும் எல்லா இடத்திலும் நம்ம மனதை பொறுத்தது தான் இலையா? ஸ்ரேயா எப்டி இருக்காங்க? போஸ்டையே காணோமே??

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.