உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, February 9, 2014

02. ஓ.....அமெரிக்கா! ( பகுதி 2 )

முந்தையை பதிவு: 01. ஓ.....அமெரிக்கா! ( பகுதி 1 )

அமெரிக்கா....பலரின் வாழ்க்கையில் கனவாகவும் சிலரின் வாழ்க்கையில் அது நிஜமாகவும் ஆகிவிட்டது. சில நேரங்களில் நிஜம் சுடவும் செய்யும். ஆம் அமெரிக்கா என்பது நெருப்பை போல பார்க்க அழகாகவே இருக்கிறது அதை மிகவும் நெருங்கினால் சில சமயங்களில் சுடவும்தான் செய்கிறது


அமெரிக்கா வாழ்க்கை என்பது ஒரு ஏழ்மையான கிராமத்து இளைஞன் மிக அழகான மிக அதிக வசதி உள்ள நகரத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது போலத்தான். கல்யாணம் ஆன புதிதில் மிகவும் சந்தோஷமாகவும் அழகான பெண் கிடைத்த கர்வமும் இருக்கும் அதே நேரத்தில் தீடிரென கிடைத்த வசதி வாய்ப்புகளும் நம் கண்ணை மறைத்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆனால் போகப் போகத்தான் புரியும் நாம் கிராமத்தில் நாம் அனுபவத்த சந்தோஷங்கள் என்றும் நீங்காதவைகளாக நம் மனதில் ஆழ்ந்து ஒரு ஏக்கத்தை தந்து கொண்டிருக்கும் என்பது.

கிராமத்தில் இருந்த போது கூழோ கஞ்சியோ கிடைத்தாலும் அதை சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கலாம்.சொந்த பந்தங்கள் வீட்டிற்கு எந்நேரமும் செல்லாம். பண்டிகை நாட்களில் ஒன்று கூடி மகிழாம்.கல்யாணம் , காது குத்தல், சடங்கு சாவு, கோவில்கள் மற்றும் விஷேச தின கொண்டாட்டங்களில் ஆடி பாடி மகிழலாம்.


ஆனால் இது எல்லாம் வசதியான வீட்டு மாப்பிள்ளையாகி போன போது நம்மை விட்டு விலகிவிடும். வசதியான வீட்டு மாப்பிள்ளையாகி போனது போது சுத்தம் மிகுந்த, வசதிகள் நிறைந்த பங்களாவில் வசிக்கலாம் விலை உயர்ந்த காரில் செல்லலாம். அழகான மனைவி வாய்க்கலாம் ஆனால் அவள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்த உங்களை மதிக்காமல் இருக்கலாம். உங்களுக்கு அந்த வீட்டில் முழு உரிமை இருந்தாலும் அதை எதிர்த்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. என்னடா இந்த வசதியான வாழ்க்கை நாம் கிராமத்தில் வசித்த போது நண்பர்களின் தோளின் மீது கைபோட்டு ஒரு டீயை வாங்கி இருவரும் குடித்து ஒரு தட்டில் உள்ளதை இருவரும் பங்கிட்டு சாப்பிட்டு கயிற்று கட்டிலில் வெயில் காலங்களில் வீட்டிற்கு வெளியே படுத்து உறங்கிய போது உள்ள சந்தோஷம் இப்போது இல்லையே என்று நினைக்க தோன்றும் .. அதன் நினைவாக நம் மனதில் ஏக்கமும் உருவாகும். ஆனால் இப்போது உள்ள நிலைமையில் நாம் இருக்கும் நிலமையை விட்டு வெளி வரமுடியாமல் இரு தலை கொள்ளியாக தவித்து தவித்து நம் வாழ்க்கை முடிந்து போய்விடும்.

அது போலத்தான் அமெரிக்க வாழ்வும்.. இப்படி பட்ட வாழ்க்கையைதான் நானும் என்னைப் போல பலரும் அமெரிக்கா வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு எந்த வாழ்க்கை முக்கியம்...


நீங்கள் ஏன் அமெரிக்க வந்தீர்கள் என்பவர்களுக்காக .... எனது திருமணம் காதல் திருமணம் இரு வேரு மதங்களை சார்ந்தவர்கள். நாங்கள் எங்கள் வீட்டவர்கள் சப்போர்ட் இல்லாமல் ரிஜஸ்டர் ஆபிஸில் 5 நண்பர்கள் உதவியுடன் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வை தொடங்கினோம், வேறு மதத்தவர்கள் காதல் திருமணம் என்பதால் சென்னையில் வீடு வாடகைக்கு கொடுக்க தரமறுத்தவர்கள் அநேகம் அந்த நேரத்தில் நண்பர் ஒருவர் தன் வீட்டில் வசித்தவரை காலி செய்துவிட்டு அந்த வீட்டை வாடகைக்கு தந்தார் வாடகை சற்று அதிகம்தான் ஆனால் அந்த கால கட்டத்தில் சென்னையில் கம்பெனிகளில் சம்பளம் அதிகம் தருவதில்லை. எனவே நாங்கள் வெளிநாடு சென்று சம்பாதிக்க முடிவு செய்தோம் பல நாடுகளுக்கு போக முயற்சி செய்து (நாங்கள் செளத் ஆப்ப்ரிக்காவிற்கும் முயற்சி செய்தோம் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம் )இறுதியில் அமெரிக்க வாய்ப்பு கிடைத்தது அதை நாங்கள் உபயோகித்து இன்று அங்கு வசித்து வருகிறோம். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போல அமெரிக்காவும் இதுவரை எங்களை வாழ வைத்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிமிடம் வரை இந்தியாவை நேசிக்கும் அமெரிக்க சிட்டிசன்தானுங்க இதுதானுங்க நான் அமெரிக்க வந்த கதைங்க..வசிக்கும் கதைங்க


சரி மேலும் இதை சொல்லி போரடிக்காமல் விஷயத்திற்கு போவோம்...

நண்பர்களே உங்களிடம் பணம் இருக்கிறதா அப்படியென்றால் இந்தியாவிலேயே இருங்கள் பல நிறை குறைகள் இருந்தாலும் அங்குள்ளது போல ஒரு உயிரோட்டமுள்ள வாழ்க்கை உங்களுக்கு எங்கும் கிடைக்காது. என்னிடம் பணம் இல்லை (Scratch )ஸ்க்ராச்சில் இருந்துதான் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் அதே நேரத்தில் வசதியானவர்கள் வாழும் வாழ்க்கையும் வாழவும் வேண்டுமென்று நினைத்தால், அமெரிக்கா வர வாய்ப்புகள் கிடைத்தால் தாராளமாக வரலாம், மக்கள் அனைத்து இடங்களிலும் ஒன்று போலத்தான் இருக்கிரார்கள் அதாவது நல்லவர்களும் உள்ளனர் கெட்டவர்களும் உள்ளனர். நாம்தான் அவர்களோடு கலந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நண்பர்களே இந்தியாவில் மிடில் க்ளாஸில் உள்ள தம்பதிகள் 2 பேர் நல்ல வேலையில் இருந்து ஒர் அளவிற்கு நல்ல சம்பளம் பெறுபவர்களாக இருந்தால் நன்றாக ப்ளான் பண்ணினால் நீங்கள் நன்றாக சேமித்து வீடு வாசல் கார் சேமிப்பு என்று நன்றாக வாழமுடியும் வயசான காலத்தில் வேலை ஏதும் செய்யாமால் ஹாய்யாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க வாழ்க்கையில் சேமிப்பது என்பது மிக அதிகம் இருக்க வாய்ப்பில்லை அது மட்டுமல்லாமல் வயதானலும் நாம் உழைக்க வேண்டிருக்கும்.. இங்கு வாழ்வதற்கு மட்டுமல்ல நாம் செத்தால் அதற்கு ஏற்படும் செலவுகளுக்காகவும் நாமே சம்பாத்தித்து வைக்க வேண்டும்.

பார்த்து ரசிக்க பெருமை பட ஒரு விடியோ

இன்னும் வரும் ........ நிறைய வரும்...


நண்பர்களே இது என்னுடைய வாழ்வில் பார்த்தது கேட்டது அறிந்தது அனுபவித்ததும் ஆகும், நபருக்கு நபர் வாழும் இடத்திற்கு ஏற்ப அனுபவங்களும் மாறுபடும் இந்த பதிவிற்கு நிறைய பேர் ஆதரவு தந்து இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று எனக்கு இமெயிலில் தெரிவித்து இருக்கிறார்கள் அவர்கள் மிக அதிகம் எதிர் பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்பை என்னால் முடிந்த அளவில் நிறைவேற்றுகிறேன். ஆனால் நான் ஒன்ரு சொல்ல விரும்புகிறேன். நான் எழுத்தாளனும் அல்ல அறிவு ஜீவியும் அல்ல. அதனால் மிக அதிகம் எதிர்பார்க்காதீர்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி: உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிந்து உங்கள் (Foot Prints )தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள்


27 comments :

 1. வெளிப்படையாக சொல்வதற்கு (ஒரு) சபாஷ்...!

  ReplyDelete
 2. அருமை நண்பா அருமை ...நாங்களும் தெரிந்து கொள்வோம் us பற்றி

  ReplyDelete
 3. ஆண் பெண் இருவரும் ஒன்றாகச் சிந்தித்து ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும்போது காதல் திருமணம் மிக உயர்ந்தது. நமது நாட்டில் காதல் திருமணங்கள் திரைப்படத்தைப் பார்த்துத்தான் வளர்கின்றன.

  இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் என்னைத்தவிர மற்றவன் எல்லோரும் அயோக்கியன் என்று சொல்லிக்கொண்டு வாழ்கிறார்கள்.

  ஒன்றுமில்லை, இங்குள்ள தொலைக்காட்சிகளில் இரு கட்சினர் பேசுவதைக் கேட்டால் இந்த நாட்டைவிட்டு வெளியேறினோமே என்று மகிழ்ச்சியடைவீர்கள்.

  நமது இடதுசாரித் தோழர்கள் இப்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள் - இங்குள்ள விலைவாசி உயர்வுக்கு அன்னிய முதலாளித் துவம்தான் காரணமாம்.
  முதல்வர் பெயரைக் கூட உச்சரிக்கத் தயங்கும் அமைச்சர்கள் உள்ள கட்சியுடன் இவர்கள் கூட்டணி சேரப் போகிறார்கள்.

  கோபாலன்

  ReplyDelete
 4. தயக்கதோடு எழுத வேண்டாம். தைரியமாகவே எழுதலாம். அப்புறம் மேல் நாட்டு தொலைக்காட்சிகளில் நான் எப்போதும் ரசிப்பது, இங்கேயிருப்பதைப் போல விறைப்பாக உட்கார்ந்து பேசாமல் இயல்பாக உரையாடுவது. ஜாலியாக பேசுவது. இந்த காணொளி மூலம் இந்தியர்களின் மாத வருமானம் உத்தேசமாக 7500 டாலர் என்கிறார்கள். பரவாயில்லை தானே. நந்தவனம் இது குறித்து நீங்க சொல்லுங்க. (வருவார் என்றே நினைக்கின்றேன்)

  ReplyDelete
  Replies
  1. ஜோதிஜி, நன்றி!
   அமெரிக்காவில் வாழும் இனத்தவரிடையே இந்தியர்கள் அதிகம் சம்பாதிப்பதற்கு காரணங்கள் பல. இந்தியர்கள் பெரும்பாலும் விவாகரத்து செய்வதில்லை, சின்ன குடும்பம் & பெண்களும் பெரும்பாலும் வேலை செய்கிறார்கள், ஆகவே இரட்டை வருமானம். நன்றாக படித்தவருக்கு மட்டும்தான் அமெரிக்க விசா கொடுக்கிறார்கள். விசா நேர்காணலில் ஆங்கிலம் பேசினால்தான் இந்திய professional-க்கு விசா கிடைக்கும்(சீனருக்கு இந்த கட்டுப்பாடு இல்லை). முன்பு அதிகம் நுழைந்தவர்கள் மருத்துவர்கள் தற்போது கணனி ஆட்கள். இவர்கள் அதிகம் சம்பளம் பெறும் துறையினர். அதிகம் படிக்காமல் நுழையும் குஜராத்திகள் உடனே வியாபாரிகளாகி விடுகிறார்கள். ஒப்பீடாக சீனர்களை எடுத்தால் அவர்கள் பரவலாக - குறைவாக பணம் வரும் கூலிவேலை முதல் எல்லாத் துறையிலும் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் சராசரி சம்பளம் குறைவுதான். ஆகவே இது இந்தியரின் திறமை & பெருமை என நான் கருதவில்லை. இந்நிகழ்வு இந்தியாவில் நிகழ்ந்தால் மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.

   ஆனால் இந்த மாதிரியான சர்வேக்கள் சின்ன சந்தோசத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். கிருத்தவர்கள்தான் உலகில் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு கருதுகோள் உண்டு. ஆனால் அமெரிக்காவில் இந்துக்கள்தான் அதிகம் பணம் சம்பாதிக்கும் மதத்தினராம்.http://blogs.wsj.com/indiarealtime/2012/08/14/survey-says-hindus-thrive-in-u-s/
   இந்த மாதிரி சர்வேயெல்லாம் சும்மா ஒரு கிளுகிளுப்பு அவ்வளவுதான்!:)

   Delete
 5. இலவசத்திற்கும் விலையில்லாப் பொருட்களுக்கும் என்ன வேறுபாடு என்று இன்றுவரை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.

  இங்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணிணியை கண்டால் நீங்கள் மயங்கி விழுந்து விடுவீர்கள். அது உள்ள பை முதல் கணிணியைத் திறந்த பின் வரும் திரையிலும் எங்கும் முதல்வர் படம்தான். மக்களின் பணத்திலிருந்துதானே வழங்கப் படுகிறது என்று கூட யாரும் சிந்திப்பதில்லை. எங்களைச் சிந்திக்க விடாமல் செய்தது ஒரு சாதியினர் என்றும் பலர் கூறுகிறார்கள்.

  கோபாலன்

  ReplyDelete
 6. "// நான் எழுத்தாளனும் அல்ல, அறிவு ஜீவியும் அல்ல//" - ஐ! தப்பிச்சுக்கிறதுக்கு எப்படி எல்லாம் யோசிச்சு எழுதுறீங்க. இப்படியெல்லாம் சொன்னா, நாங்க விட்டுடுவோமா என்னா????

  ReplyDelete
 7. "செத்தால் கூட நாம் தான் செலவு செய்ய வேண்டும்" - உண்மை, இங்கு ஆஸ்திரேலியாவிலும் அது தான் நடைமுறை.

  ReplyDelete
 8. தொடருங்கள், தொடருங்கள். நாங்கள் படிக்க காத்துக்கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete
 9. உங்கள் வலைப்பூவின் பெயர் போலவே உண்மை! உண்மை! அதைத்தான் சொல்லி வருகின்றீர்கள்! பளிச் என்று போட்டு உடைப்பதற்கு ஒரு சல்யூட்!

  ஒரு சில சமயம் இந்த்யாவின் தினசரி வாழ்க்கையை படுக் அல்லல்களை அனுபவிக்கும் போது அமெரிக்க வாழ்க்கை சுகமோ என்று தோன்றத்தான் செய்கிறது! அமெரிக்க என்றில்லை மற்ற மேலை நாடுகளையும் சேர்த்துதான்! இங்கு தெருவில் நடப்பதற்கே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டி உள்ளது...உயிருக்கு மதிப்பே இல்லையோ என்று தோன்ற வைக்கிறது....

  அதே சமயம் நீங்கள் சொல்லி உள்ளது போல், பணம் ஈட்டுவது குறித்து சொல்லியிருப்பது நிஜம்தான் அங்கு இறுதி வரை ஆம் செத்தாலும் பணம் தான்.......உறவினர்....சாதி சனம்....இப்படி இதெல்லாம் அங்கு கிடைப்பது கஷ்டம்தான்......

  ஸோ இக்கரைக்கு அக்கரை பச்சை!

  தங்கள் காதல் வாழ்க! மெச்சுகிறோம்! தைரியமான முடிவிற்கு பாராட்டுகிறோம்! hats off to you!

  த.ம.

  ReplyDelete
  Replies
  1. Hi

   Good example on the life of an Indian in the US.

   While I don't agree with your bleak outlook on the retirement life of US citizen, I am really interested in reading your views. I am looking forward to reading your future blog posts.

   Regards
   Bala

   Delete
 10. இதுக்குதான் வீட்டை எதிர்த்து கல்யாணம் கட்டக்கூடாதுங்குறது. பூரிக்கட்டை அடி விழும்போது நாங்கலாம் ஏன்!? எதுக்குன்னு கேக்க வந்து சண்டையை இன்னும் கொஞ்சம் பெருசாக்குவோமில்ல!

  ReplyDelete
 11. நல்லவர்களும் சரி, கெட்டவர்களும் சரி, உலகெங்கிலும் உள்ளனர். ஆனால் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசியல்வா(வியா)திகளும், அரசு அதிகாரிகளும் செய்யும் அழிச்சாட்டியம் இருக்கிறதே, சொல்லி மாளாது. அனைத்து இந்தியருக்கும் சட்டம் பொதுவானது அன்று அரசியலமைப்பு கூறுகின்றது. ஆனால் மதத்திற்கு ஒரு சட்டம், மாநிலத்திற்கு ஒரு சட்டம், பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம், அரசியல் வாதிக்கு ஒரு சட்டம், பொது மக்களுக்கு ஒரு சட்டம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
  தொடரட்டும் உண்மைகள்.

  பாலாஜி

  ReplyDelete
  Replies
  1. இந்திய ஜோக்.

   சட்டத்தின் முன் எல்லோரும் சமம்.
   சட்டம் ஒரு இருட்டறை.

   நன்றி,

   கோபாலன்

   Delete
 12. தயக்கத்தோடு எழுத வேண்டாம் தைரியத்தோடு எழுதலாம்

  ReplyDelete
 13. ம்... வெளிப்படையாச் சொல்லியிருக்கீங்க...

  ReplyDelete
 14. ஜோதிஜி அவர்கள் சொல்வதைப்போல
  தயக்கமின்றி சொல்ல நினைப்பதை
  தாங்கள் தயக்கமின்றி சொல்வதுதான்
  இன்னும் பதிவைச் சிறப்பாக்கும் என்பதுதான்
  எனது கருத்தும்,,,,
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. இன்னும் எழுதுங்கள் நண்பரே! நான்குமுறை அமெரிக்கப் பயணம் செய்து கிட்டத்தட்ட பதினான்கு மாதங்கள் தங்கி வாழ்ந்த அனுபவத்திலிருந்து நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை, உணமையைத் தவிர வேறொன்றுமில்லை என்று என்னால் சொல்லமுடியும்.

  ReplyDelete
 16. சிறப்பான கருத்துகள் மதுரைத்தமிழன்.

  தொடர்ந்து எழுதுங்கள்..... புதிய பல விஷயங்களையும் தெரிந்த சில விஷயங்களையும் உங்கள் கோணத்தில் படிக்கக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 17. Racist thinking in U.S.

  Our guys always complaining that whites are not treating them equal (Racism). But our Indians always think that all blacks are thief and scared when they see them any where (courtesy of holy wood movies). Indians made a new color in between white & black that is "Brown". Our guys think they are brown but in realty no one here think (white racist) that Indians are above than black. I have lot of black friends and they are very soft and good friends, but in realty most of our Indian guys have not any black friend.
  My son once told me "You bloody Indians are black and you think that blacks are inferior to you".

  ReplyDelete
 18. வீட்டோட மாப்பிள்ளை - செம......

  என் சொந்த அனுபவத்தை வார்த்தைகளில் வாசித்த ஒரு feeling

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog