Friday, February 21, 2014


   ╔════════════════════════════════════╗
    ║ படிக்க ரசிக்க மதுரைத்தமிழனின் டுவிட்ஸ்       ║
    ╚════════════════════════════════════╝



மதுரைத்தமிழனும் யோசிக்க ஆரம்பிச்சதால் வந்த வினை...இதுதான்



தாய் மீது பற்று இல்லாதாவர்கள் எல்லாம் தாய்மொழி பற்றி வாய்கிழிய பேசுகிறார்கள்...



அம்மாவிடம் அப்படி சமைத்து போடு இப்படி சமைத்து போடு என்று அதிகாரம் செய்பவர்கள் மனைவி எப்படி சமைத்து போட்டாலும் சத்தம் இல்லாமல் சாப்பிட்டு போவது எப்படிங்க



பர்ஸில் உள்ள பணத்திற்கேற்றவாறே நமக்கும் பசி எடுக்கிறது


அன்பே மனக்காத பூக்களின் இடையே உன் சுவாசக் காற்றி வரும் போது அந்த பூக்களும் மணக்கிறதே அது எப்படி?



நல்ல மனைவி உனக்கு கிடைத்தால் நீ சொர்க்கத்தை வாழும் போதே காண்பாய்


லஞ்சம் கொடுப்பதை நீ நிறுத்தாதவரை லஞ்சம் வாங்குபவறை குறை சொல்ல உனக்கு அருகதை இல்லை



பிரச்சனைகள் என்றால் தமிழனுக்கு பிடிக்கும் காரணம் அதை எப்படி தீர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல அதை எப்படி பேசி பேசி பெரிதாக்கலாம் என்பதற்காகவே


சராசரி தமிழனுடைய தேவை ஒரு குவார்ட்டர் பாட்டிலும் ஒரு பொட்டலம் பிரியாணியும்தான்



பிச்சைகாரனுக்கு பிச்சை போட்டு அவர்களிடம் லைக் வாங்குவதைவிட,பிச்சை எடுப்பதை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு லைக் வாங்கவிரும்புபவர்களே இப்போது அதிகம்



வீட்டை தினமும் சுத்தம் செய்ய தெரிந்த தமிழனுக்கு மனதை சுத்தம் செய்ய தெரியவில்லையே?



நல்லவனாக இருங்கள் ஆனால் அதை மற்றவர்களிடம் நிருபவிக்க உங்கள் நேரத்தை வீணடிக்க தேவையில்லை


தமிழக காங்கிரஸ் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்களாம். மக்களே அங்கே போய் அவர்கள் சாவதை அமைதியாக வேடிக்கை பாருங்கள் அவர்கள் சாவது நாட்டிற்கு நன்மையே



கலைஞர் வீட்டில் நடக்கும் சண்டைக்கு எங்கள் சீரியல்கள் பரவாயில்லை: ராதிகா சரத்குமார்# சிரிக்க சொன்னாலும் சீரியாஸகத்தான் இருக்கிறது



அமெரிக்க செய்தி பூமி சூரியனைச் சுற்றி வருவது 26% அமெரிக்கர்களுக்கு தெரியவில்லை # இந்திய செய்தி தலைவர்கள் தங்களை ஏமாற்றுவது 99% இந்தியர்களுக்கு தெரியவில்லையாம்



புட்டத்தை துடைக்க உதவும் காஸ்ட்லியான காகிதங்களாகவே இன்று வெளிவரும் அநேக புத்தங்கங்கள் இருக்கின்றன



அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. பிரச்சனைன்னா தமிழனுக்கு ஏன் பிடிக்குதுன்னு இன்னிக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

    ReplyDelete
  2. மனைவி பூரிக்கட்டை எடுத்தால் எதை போட்டாலும் அமைதியாய் சாப்பிட்டு விட்டு போக போறீர்... அப்புறம் எதுக்கு எப்படின்னு ஒரு கேள்வி?

    ReplyDelete
  3. மனைவி சில இடங்களில் உயர் இராணுவ அதிக்கரியாய் இருக்கும் போது
    எப்படீப்பா வாயைத் திறக்கிறது ?...பாவம் இது கூடத் தெரியாத சின்னப்
    பிள்ளையாய் இருக்குறாயே !! :)))))) இப்படியெல்லாம் டுவிட்ஸ் போட்டு
    மாட்டிக்காதீங்க தம்பி :)))

    ReplyDelete
  4. தமிழன், தமிழன் நீங்க குறிப்பிட்டிருக்கிறது உங்களை தானே?!
    பசியை பற்றிய ட்விட் எதார்த்த அழகு !!

    ReplyDelete
  5. கலைஞர் குடும்பத்து சண்டைய இதவிட கேவலமாக சொல்ல முடியாது ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  6. அதான் பூரிக்கட்டை அனுபவம் இருக்கு....அவங்க எப்படி சமைச்சுப் போட்டாலும் சாப்பிடத்தானே போறீங்க!
    யோசிச்சதால வந்த வினை எல்லாம் வினை விளைவிக்காம இருந்தா சரிதான்!!!

    ReplyDelete
  7. நல்ல பதிவு...
    இப்படி ஒரு வரியில் பதிவிட எவ்வளவு நேரம் யோசிக்க வேண்டும்..
    நினைத்தாலே ஆச்யர்மாக இருக்கிறது...

    ReplyDelete
  8. டுவிட்டுங்க எசமான்... டுவிட்டுங்க...!

    அல்லாம் மகுடம் ஏத்தியாச்சு...ஏத்தியாச்சு...!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.