Wednesday, February 26, 2014






கலைஞரின் மறைவுக்கு பின்னால் திமுக வின் தலைமை பதவிக்கு அண்ணன் தம்பிகளுக்கிடையே போட்டிகள் நடை பெற்று வருவதை இந்த முன்னாள் மத்திய அமைச்சர் அமைதியாக பார்த்து மனதுக்குள் சிரித்து வருகிறார். அவர் வேறுயாருமல்ல தயாநிதி மாறன் அவர்கள்தான். அப்படி எல்லாம் நடக்காது இது ஒரு நகைச்சுவை என்று நினப்பவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நான் சொல்வது 'பொருத்து இருந்து பாருங்கள்". அவரசரப்பட்டு இப்போது ஏதும் கருத்து சொல்ல வேண்டாம் என்பதுதான் .




தயாநிதி மாறன் சார்பாக அவர் எந்த தொகுதியில் நின்றால் ஜெயிக்க முடியும் என்று ஒரு ரகசிய சர்வே ஒன்று எடுக்கப்பட்டதாம் அதன் படி தயாநிதி மாறன் மத்திய சென்னையில் நிற்காமல் கோவை அல்லது திருப்பூர் தொகுதியில் நின்றால் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என கணிக்கப்பட்டு இருக்கிறது...


கடந்த முறை அதிமுக ஆட்சி அமைய கோவை மற்றும் மேற்கு மண்டல மாவட்டங்கள் திருப்புமுனையாக அமைந்தன. திமுக நடத்திய செம்மொழி மாநாட்டுக்கு அடுத்த நாளே ஜெயலலிதாவின் கோவை வருகைக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஆனால் தற்போது அரசியல் சூழ்நிலைகள் அங்கு மாறியுள்ளன.

அதிமுக ஆட்சியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழில் முடங்கி உள்ளன. கர்நாடக முதல்வர் வருகைக்கு தொழில் அதிபர்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். சென்னைக்கு நிறைய முதலீடுகளை கொண்டு வந்தவர் என்ற பெயர் தயாநிதி மாறனுக்கு புகழ் உண்டு. ஜவுளித்துறை அமைச்சராக இருந்தபோது திருப்பூர் வளர்ச்சிக்கு உதவியவர் என்ற அபிப்ராயம் உண்டு. தொழிலதிபர்கள் ஆதரவு தயாநிதி மாறனுக்கு உண்டு.



ஜெயலலிதா தலைமையில் உள்ள ஆளுங்கட்சி தொழில் வளர்ச்சிக்கு உதவவில்லை என்று திருப்பூர், கோவை தொழிலதிபர்கள் குறை கூறும் வேளையில் ஆளுங்கட்சிக்கு பதிலடி கொடுக்க தயாநிதி மாறனை கோவை அல்லது திருப்பூர் தொகுதியில் இறக்க திமுக மேலிடத்திற்கு தகவல் தரப்பட்டதாக சொல்லப்படுகிறது .



சிட்டிங் எம்.பி நடராஜன் நல்ல மனிதர், ஆனால் தொகுதிக்கு எந்த பலனும் இல்லை என்று பொதுமக்களும் நினைக்கிறார்கள். மீண்டும் கம்யுனிஸ்ட் வேட்பாளர்கள் கோவை அல்லது திருப்பூரில் நிறுத்தபட்டால் தயாநிதி மாறனுக்கு சாதகமாக இருக்கும் என்ற தகவலும் திமுக மேலிடத்திற்கு அனுப்பபட்டதாக சொல்ப்படுகிறது உள்ளது.

தயாநிதி மாறனும், சென்னையை தாண்டி திருச்சி, கோவை, தூத்துக்குடி போன்ற தொகுதிகளை விரும்புகிறார். ஊட்டியில் அவர் மாமனார் தங்கி இருப்பதால், கோவை திமுக பிரமுகர்களிடம் நல்ல தொடர்பு உண்டு. திமுகவில் இருந்து விலக்கி வைத்தபோது பொங்கலூர் பழனிசாமி மாறனுடன் தொடர்பில் இருந்தார். லோக்கல் திமுக ஆதரவு மாறனுக்கு உண்டு என்பதும் பிளஸ் பாயிண்ட். திருச்சியில் திமுக மாநில மாநாட்டுக்கு வந்த கூட்டத்துக்கு கோவை, திருப்பூர் பகுதியிலிருந்து வந்த கூட்டம் கணிசமாக இருந்தது என்று தகவல் வந்து இருக்கிறது.




அன்புடன்
மதுரைத்தமிழன்

20 comments:

  1. திருப்பூர் எம்பி மட்டுமல்ல எங்கள் தொகுதி எம்பியாலும் தொகுதிக்கு எவ்வித பலனும் இல்லை. இவர்கள் பாராளுமன்றத்தில் எப்போதாவது பேசியுள்ளார்களா என்பதும் தெரியவில்லை. இத்தகையவர்களை மீண்டும் அதிமுக நிறுத்தும் பட்சத்தில் இவர்களுடைய வெற்றி சந்தேகம்தான். ஜெயலலிதா பெயரில் ஒரு கழுதையை நிற்க வைத்தாலும் ஜெயிக்கும் என்கின்றனர் தொண்டர்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. வரட்டும் வரட்டும்.... இந்த முறை திமுக சார்பில் யார் வந்தாலும் அவர்களூக்கு காத்திருக்கு தோல்வி....

    ReplyDelete
  3. வரட்டும் வரட்டும் காத்திருக்கு அவருக்கு தோல்வி பரிசு

    ReplyDelete
  4. ஏஞ்சாமி இந்த கொலவெறி? நாங்க நல்லாயிருக்குறது பிடிக்கலையா?

    ReplyDelete
    Replies
    1. NEATHAJI 'OONU-KK; ORU VOTE than- nee 'enna' ayavvvvvvvv;

      Delete
    2. NEATHAJI 'OONU-KK; ORU- VOTE; than nee enna 'APPA-DUKKER' 'vaaiee' mudeeeaa'

      Delete
  5. தயாநிதி மாறன் அவர்கள் எல்லாம் தலைவராக விருப்ப மாட்டார் என்று நினைக்கிறேன்... ஏனென்றால் அவரின் "கணக்கே" வேறு...

    ReplyDelete
  6. கழுதைக்கு கூட ஓட்டு போடும் வாக்காளர்கள் நிறைந்த நாடு..இந்தியா.

    ReplyDelete
    Replies
    1. எல்லா வேட்பாளர்களும் கழுதைகள்தானே? மக்கள் என்ன செய்வார்கள்.

      நீங்கள் இலங்கை பக்கம் எட்டி பார்க்கவில்லை போல.. அங்கு கழுதைகள் குரங்குகள் எருமைகள் பல இரத்தகாட்டேரிகள் எல்லாம்தான் தேர்தலில் போட்டியிிட்டு ஆட்சி புரிகின்றன. நாடுக்கு தலைவரே தமிழரின் இரத்தம் குடிக்கும் காட்டேரி எனும்போது சொல்லவும் வேண்டுமா? அந்த காட்டேரியை தெரிவு செய்தது பெரும்பான்மையான சிங்கள காட்டேரிிகள்

      Delete
  7. தயாநிதியின் வெற்றி சந்தேகம்தான். ஏற்கனவே அவர்மீது உள்ள புகார்கள் மக்கள் மீது வைக்கப்படும்.

    ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இப்போது பிடிக்காமல் போனது. அந்தப் பாடல் : //அம்மா என்று அழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே// எழுதியவர் எப்படி ஒரு தீர்க்கதரிசி. தமிழனைத் துல்லியமாக எடைபோட்டவர்.

    ம்ம்ம்ம் பணமும் இலவசமும் பத்தும் செய்யும். ஜெஜெ உனக்கு ஜேஜே.

    கோபாலன்

    ReplyDelete
  8. என்னடா, கொஞ்ச நாளா, அரசியல் பதிவுகளையே காணோமேன்னு யோசிச்சேன்.
    உம், இப்ப நீங்க வீட்டுக்குள்ள போயிட்டீங்கன்னு தெரிஞ்சிடுச்சு. ஆமா, இனி அடி வாங்க உடம்புல தெம்பு இல்லைன்னு, கவர்ச்சிப் பதிவுகளிலிருந்து, அரசியல் பதிவுகளுக்கு வந்துட்டீங்களா தலைவரே?

    ReplyDelete
  9. மேற்க்கு எப்போதும் அதிமுகவின் கோட்டை ..
    யார் வந்தாலும் தோல்விதான் பரிசு ..

    ReplyDelete
  10. so வீடு திரும்பியாச்சு?
    நான் அரசியலை சொன்னேன்!! lol

    ReplyDelete
  11. கொஞ்சம் அதிகப் பசையுள்ள பார்டி நின்னா
    நல்லதுதானே

    ReplyDelete
  12. பார்க்கலாம்....

    இப்போதெல்லாம் தேர்தல் என்றாலே பணபலம் தானே..

    ReplyDelete
  13. அன்பு நண்பர் மதுரை தமிழனுக்கு,
    திருச்சி துவாக்குடியில் இருந்து புவனேஸ்வரி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் D சண்முகவேலிடமிருந்து இருந்து வணக்கங்கள் பல...
    நேற்று உங்கள் இணையதளத்தில் திமுக முக்கிய தலைவர் தயாநிதி மாறன் சென்னையை தாண்டி திருச்சி, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் போட்டியிட யோசிப்பதாக உங்களுக்கு தகவல் வந்துள்ளதாக பதிவு செய்துள்ளீர்கள். (http://avargal-unmaigal.blogspot.com/2014/02/dayanidhi-maran.html)
    தயாநிதி மாறன் திருச்சி போன்ற தொகுதியில் போட்டியிட்டால் இங்குள்ள இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வர்த்தக அமைப்புகள் வரவேற்று பெருமளவில் ஆதரவு கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இது தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட வென்றுள்ள மாவட்டம் என்றாலும், தொழில் நிறுவனங்களுக்கு உரிய உதவி தமிழக அரசிடம் கிடைப்பதில்லை. திருச்சியை சுற்றியுள்ள அரியமங்கலம், துவாகுடி, திருவெறும்பூர், சிட்கோ எஸ்டேட், சிறுகனூர், புதுக்குடி போன்ற இடங்களில் நூற்றுகணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் பல ஆயிரகணக்கான பேர் வேலை செய்கின்றனர். திருச்சி போன்ற நகரமான மகாராஷ்ட்ராவில் உள்ள புனே வளர்ச்சி எங்களை பிரமிக்க வைக்கிறது. மறைந்த MGR அவர்கள் காலத்தில் தமிழகத்தின் தலைநகராக மாற்றும் யோசனை கூட இருந்த அளவுக்கு முக்கிய நகரான திருச்சி மீது தமிழக அரசு பாராமுகம் செலுத்துகிறது. தற்போது மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் MP குமார், திமுகவை சேர்ந்த KN நேரு மற்றும் அவர் தம்பி ராமஜயம் அளவுக்கு பொதுமக்கள் அதிருப்தியை ஏற்படுத்தி கொள்ளவில்லை என்பதாலே அவருக்கும் மீண்டும் வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. KN Nehru family is full of rowdies and Trichy people thank CM for keeping them under check. MP குமார் அவர்களால் திருச்சி கடந்த ஐந்தாண்டுகளாக குறிப்பிட்டு சொல்லும்படி எந்த பயனும் அடையவில்லை. Our Collector Mrs Jayashree is a wonderful lady and good administrator, but not much of help to us.
    திருச்சிக்கு சமீபத்தில் உதவி செய்தவர் என்ற வகையில் திமுகவை சேர்ந்த TR பாலுவை குறிப்பிட வேண்டும். திருச்சிக்கு நிறைய ரயில் சர்வீஸ் கொண்டு வந்து பொதுமக்களின் மனதை கவர்ந்து விட்டார். திமுக காலத்தில் IIM கொண்டு வரப்பட்டது.மறைந்த அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் குறுகிய காலம் திருச்சி எம்பியாக இருந்தாலும், திருச்சி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி உள்ளார். BJP க்கு திருச்சியில் ஆதரவு இருக்க அவரின் திட்டங்களே காரணம். ரங்கராஜன் குமாரமங்கலம் போன்ற செயல் வீரர் தயாநிதி மாறன். அவர் திருச்சியில் இருந்து போட்டியிட்டால் இங்குள்ள தொழில் நிறுவனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். திமுக சாய்ந்து விட்டது என்று பத்திரிகைகள் எழுதி தள்ளினாலும், திருச்சி திமுக மாநாடு, திமுகவுக்கு உள்ள ஆதரவை காட்டியுள்ளது...
    தயாநிதி மாறன் திருச்சி தொகுதியில் போட்டியிட்டால் போட்டி கடுமையாக இருக்கும், அவர் வெற்றி பெற வாய்ப்புண்டு...வெற்றி பெற்றால் சென்னை தொழில் வளர்ச்சிக்கு உதவியது போல் திருச்சிக்கு உதவும் திறமை உள்ளவர். காங்கிரஸ் சார்பில் மீண்டும் சாருபாலா தொண்டைமான் மீண்டும் நின்றாலும் ஓட்டு கிடைக்கும். அவர் மேயர் காலத்தில் திருச்சி நகரம் நன்றாக இருந்தது. இப்ப இருக்கற மேயர் எங்கே என்று தெரியவில்லை...BJP சார்பில் லலிதா குமாரமங்கலம் நிற்கிறார் என்று கூட கேள்விபட்டேன்.
    ADMK, DMK, Congress, BJP யார் நின்னாலும், திருச்சிக்கு வளர்ச்சி கொடுப்பவர்களுக்கே ஓட்டு கிடைக்கும்.
    சண்முகவேல்

    ReplyDelete
  14. அவர்கள் உண்மைகள் இணையதள ஆசிரியருக்கு,

    கொங்கு நாட்டின் முக்கிய மாவட்டமான திருப்பூரில் இருந்து இளங்கோவின் வணக்கங்கள்...

    26.02.2014 அன்று அவர்கள் உண்மைகள் இணையதளத்தில் திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் திருப்பூர் அல்லது கோவையில் போட்டியிட பரிசீலித்து வருவதாக படித்தேன். தயாநிதி மாறன் திருப்பூரில் போட்டியிட்டால் உண்மையான போட்டி திமுகவுக்கு, பா.ஜ.க கூட்டணியில் உள்ள கொங்கு மாநில தேசிய கட்சிக்குதான் இருக்கும். கோவை, திருப்பூர் தொழில் நிறுவனங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. கர்நாடக முதல்வர் கோவை வந்தபோது அவருக்கு வரவேற்பு பெரிய அளவில் கிடைக்க காரணம் தமிழக அரசின் அலட்சியம்தான். இதுவரை கண்டுகொள்ளாத தங்கமணி போன்ற அமைச்சர்கள, சீதாராமையா விசிட்டுக்கு பின் அவசரகா கதியில் ஓடி வந்து அம்மாவிடம் கணக்கு காண்பிக்க வந்த விசிட் தமிழக அரசின் மீதான அதிருப்தியை கூடியதே தவிர குறைக்கவில்லை. இந்த முறை அதிமுக கொங்கு மண்டலத்தில் சரிவை சந்திக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் கணிப்பு...

    பா.ஜ.க கூட்டணி சார்பில் பொதுசெயலாளர் ஈஸ்வரன் திருப்பூரில் போட்டியிட முயற்சித்து வருகிறார். அவர் ஒரு எஞ்சினியரிங் பட்டதாரி. ஏற்கனவே பல பிசினஸ் நடத்தி வருவதால் இங்குள்ள தொழில் நிறுவனங்கள் அவருக்கு ஆதரவு அளிக்கும். ஒருவேளை பா.ஜ.க நேரடியாக திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டால், வேட்பாளர் முன்னாள் எம்.பி சிபி ராதாகிருஷ்ணனாக இருக்கும். திருப்பூரை சேர்ந்த இவர் கோவை எம்பியாக இரண்டு முறை இருந்தார். தொழில் நிறுவனங்கள் இவருக்கும் ஆதரவு கொடுக்கும். பி.ஜே.பி சார்பில் வெற்றி பெற்றால் மத்திய மந்திரியானால் திருப்பூர், கோவை தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார் என பி.ஜே.பி செய்யும் பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்புள்ளது. இதுநாள் வரை இருந்த அதிமுகவை சேர்ந்த எம்பி சிவசாமி தொழில் நிறுவனங்களின் குறைகளை டில்லிக்கு எடுத்து செல்லவில்லை என்று ஆளுங்கட்சி மீது அதிருப்தி உள்ளது. தற்போது ஆளுங்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சத்தியபாமா மீது சொந்த கட்சியினரே புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் வாதாட ஆங்கில புலமை உள்ளது என்று சொன்னவர் 9ஆம் வகுப்பில் பெயில் ஆனவர், எம்.ஏ கரஸ்பாண்டன்ஸ் வழியாக படித்தேன் என்று பொய்யான தகவல் கொடுத்து மேலிடத்தை கன்வின்ஸ் செய்துள்ளார் என்று அதிமுகவினர் புலம்புகிறார்கள். திருப்பூர், கோவை தொழில் நிறுவனங்கள் தங்கள் குறைகளை எடுத்து சொல்லும் பிரதிநிதியாக விரும்புவதால் அதிமுக வேட்பாளராக அறிவித்த சத்தியபாமாவுக்கு ஆதரவு குறைவு.

    தயாநிதி மாறன் திருப்பூரில் போட்டியிட்டால் திருப்பூர் மக்கள் வரவேற்பார்கள். பா.ஜ.க அணிக்கும் திமுகவுக்கும் நேரடி போட்டியாக மாறும். ஆளுங்கட்சி வேட்பாளர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படுவார்.

    இங்கனம்

    தமிழ் இளங்கோ

    புத்தரச்சல், பல்லடம்
    திருப்பூர் மாவட்டம்




    ReplyDelete
    Replies
    1. இவர்களெல்லாம் தேர்தலுக்குப் பிறகு தங்களின் கருத்துக்களைத் திரும்பிப் படித்துப் பார்த்துத் தாங்கள் எப்படிப்பட்ட அப்பாவிகளாக அல்லக்கைகளாக இருந்திருக்கிறோம் என்று எண்ணிப்பார்ப்பார்களா?

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.