Tuesday, February 25, 2014

@avargal unmaigal




என் மனைவி அவள் அலுவலகத்தில் கூட வேலைப்பார்க்கும் ஒருவனைக் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்கு அழைத்து இருந்தாள். அவருக்கு இப்போதுதான் கல்யாணம் நடந்துச்சாம். அதனால், அவன் மனைவியையும் வீட்டிற்குச் சேர்த்தே கூப்பிட்டு இருந்தாள்.



அவர்கள் வந்ததும் சிறிது பேசிவிட்டு என் மனைவியும் அந்த புதுப் பெண்ணும் சமையலறைக்கு போன பின் வந்தவரிடம் கேட்டேன் என்ன சரக்கு சாப்பிடுறீங்க என்று? அதற்கு அவர் ஒன்றும் வேண்டாம் என்றார்.நான் உடனே தம்பி நான் குடிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு காரணம் சொல்ல வேண்டும் என் மனைவியிடம் அதனால்தான் உன்னை குடிக்கச் சொல்லுகிறேன் என்றேன். அதற்கு அவர் சார் நான் கல்யாணத்திற்கு அப்புறம் குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றான். நானும் அது சரிதான் என்று சொல்லிவிட்டு மனதிற்குள் எவண்டா இப்படி ஒரு சட்டம் எழுதி இருக்கிறான் கல்யாணம் ஆன நாளில் இருந்து முதல் 2 ஆண்டுகள் வரை சரக்கு அடிக்கக் கூடாதென்று நினைத்தேன் இப்படி வேண்டாம் என்று சொல்லுபவர்கள் சில வருடங்கள் கழித்து என்ன சார் நம்மை அப்படியே கைவிட்டுடீங்க. என்று வந்து நிற்பார்கள்...


சரி வந்த விஷயத்தைச் சொல்லாமல் வள வளவென்று பேசிக் கொண்டிருக்கிறேன்...


சரக்குதான் அடிக்காத இந்த ஆள்கூட என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது என நினைத்து தொலைக்காட்சியை ஆன் செய்தேன். அதில் ஜில்லா படம் அப்பத்தான் ஆரம்பித்தது. உடனே நான் வேறு சேனலுக்கு மாறினேன்.உடனே அந்த நபர் சார் இது ஜில்லாதானே ..அதை போடுங்க சார் விஜய் நடித்த படம் என் செல்லத்துக்கு பிடிக்கும் என்றான்.. நான் உடனே யாருங்க அது என்றேன் அதுக்கு அவன் என் மனைவிதான் சார் அவள் குழந்தை மாதிரி சார் என்றவாறே சமையலறைக்குப் போய் செல்லம் கண்ணு இங்க வாடி உனக்கு பிடித்த விஜய்படம் வருகிறது என்றான்.


உடனே அந்த குழந்தையும் ஹாலுக்கு வந்தது, அவளுக்கு பின்னால் என் மனைவி அவளுக்கு பாலும் எங்களுக்கு காபியும் எடுத்து வந்தாள். அவன் அந்த பாலை புதுப் பொண்டாட்டிக்குக் கொடுத்து சாப்பிடக் கெஞ்சினான்.


சரக்கு சாப்பிட முடியாமல் போனதால் எனக்கு மண்டை காஞ்சி போனது அதுமட்டுமில்லாமல் இந்த கொஞ்சல் கண்றாவியை பார்த்த எனக்கு தலை ரொம்ப சூடாகி போனது..

உடனே நான் எழுந்திருந்து அந்த பெண் பக்கம் போய் என் செல்லக் குட்டி என் கன்னுக்குட்டி என் தங்க குட்டி என்று சொல்லி குழந்தையின் கன்னத்தை பிடித்து அன்பாக கிள்ளி ஒரு முத்தம் கொடுப்பது போல இந்த குழந்தைக்கும் கொடுத்து, இந்த பாலை குடிமா வேஸ்டாக்காதே செல்லம் என்று சொல்லி அவள் கையில்தான் கொடுத்தேன்.


அப்படிக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்த்த போது என் மனைவியின் கண்கள் மிக சிவந்து இருந்தன உடனே நான் அவள் கண்ணில்தான் ஏதோ தூசி பட்டிருக்கிறது என்று நினைத்து அவள் அருகில் போன போதுதான் உணர்ந்தேன் அவள் கைகள் மிகவும் பரபரக்கிறது என்று. அது நல்லதுக்கில்லை என்று என் அனுபவம் சொல்லியதால் நான் என் மனைவியிடம் என் நண்பன் ஒருத்தன் கூப்பிட்டு இருந்தான் அவனை நான் பார்த்துவிட்டு வருகிறேன். நீ வந்தவர்களை நங்கு உபசரி என்று சொல்லிவிட்டு ஞாயிறு ஈவினிங்க் வீட்டை விட்டு லேப்டாபுடன் வெளியே கிளம்பியவன் இன்னும்(திங்கள் ஆகிவிட்டது) வெளியில்தான் சுற்றிக் கொண்டு இருக்கிறேன்.

 

வீட்டிற்குப் போகலாமா வேண்டாமா என்று யோசனையாய் இருக்கிறது. யாரவது என் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தால் வீட்டில் ஏற்பட்ட சுனாமி அடங்கிவிட்டதா என்று பார்த்துச் சொன்னால் நன்றாக இருக்கும்..
 
@avargal unmaigal



அன்புடன்
மதுரைத்தமிழன்.
.

17 comments:

  1. உங்க மனைவி பூரிக்கட்டையால் உங்களை அடிப்பதில் தப்பேயில்லை சகோ.

    என்ன கேட்டா! இன்னும் வெயிட்டான ஏதோ ஒன்றால் அடிக்க சிபாரிசு பண்ணுவேன்..

    ReplyDelete
  2. யோவ் மதுரை
    அந்த ஜோடியை எங்க வீட்டுக்கும் அனுப்பிவையா!
    நானும் குழந்தைக்கு பாலூட்டி விடுகிறேன்.

    ReplyDelete
  3. கோபம் குடியைக் கெடுக்கும்பாங்க.

    அந்தாளு கெஞ்சியே குடியைக் கெடுத்துட்டானே.

    கோபாலன்

    ReplyDelete
  4. ஆஹா.ரொம்ப தகிரியம் தான் உங்களுக்கு......

    ReplyDelete
  5. எத்தனை வருசம் கழிச்சுப் போனாலும் சுனாமி ஓயாதுங்க.

    ReplyDelete
  6. ஊரான் பொண்டாட்டியைக் கொஞ்சிட்டு..., உன்னைலாம் வெளுக்கனும்

    ReplyDelete
    Replies
    1. வெளுக்குறதுதான் வெளுக்குறீங்க... கொஞ்சம் உப்புக்கல்லு போட்டு வெளுங்க...!

      Delete
  7. வீட்டிற்கு போக முடியாது என்று தயவு செய்து என் வீட்டிற்கு வந்துவிடாதீர்கள். அப்புறம் நானும் உங்களை மாதிரி தெரு தெருவா அலையனும்.

    ReplyDelete
  8. சுனாமி அடங்கி இருந்தாலும்......
    “என்னத்திமிர் இருந்தால் இப்படி செய்வார். இதை இப்படியே விடக்கூடாது மாமீ......“
    என்று வத்தியைக் கொளுத்தி போட்டு விட்டு வருவோமில்ல.

    ReplyDelete
  9. ஹலோ! .....ஹலோ!

    .......ஹலோ!

    ம்ம்ம் is it மிஸஸ் மதுரைத் தமிழன்?! மதுரைத் தமிழன் இருக்காராங்க?

    என்னது மதுரைத் தமிழனா? யாரது? ராங்க் நம்பர்!

    மேடம் மேடம்....இருங்க....கேளுங்க....

    இங்க பாருங்க எனக்கு டைம் எல்லாம் இல்ல...அவரு எங்க இங்கதான் எங்கயாவது லுக் விட்டுகிட்டு சுத்திக்கிடு இருப்பாரு....இருந்தாலும் காணலனு போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுக்கலாமானு யோசிச்சுகிட்டு இருக்கேன்! சொல்லிவைங்க ....பூரிக்கட்டை ரெடியா இருக்குனு! டொக்!
    ------------------------------

    மதுரைத் தமிழா போயிடுங்க! சுனாமி அலையோடு அலைய அப்படியே உள்ள நுழஞ்சுடுங்க.....கண்ணுல படாம......

    செம காமெடிங்க உங்களோடு!

    த.ம.


    ReplyDelete
  10. அதான் அழாகான wordings கொடுத்துட்டு ஆப்புறம் என்ன பயம்? போறதுக்கு?

    ReplyDelete
  11. செய்யறதையும் செஞ்சிட்டு இங்க வந்து குழந்தைப் புள்ளை மாதிரி கேள்வி கேக்கறது உங்களுக்கே நல்லா இருக்கா?

    ReplyDelete
  12. இந்தப் பிரச்னைக்கு உருட்டுக் கட்ட போதாது தம்பி பொண்டாட்டிக்கு
    இந்த நேரத்தில நாங்க உதவணும் !ஆனா இப்புடி ?..!!! (கடுமையா யோசிச்சுக்
    கண்டு பிடிப்போம் ):))))

    ReplyDelete
  13. ஹா... ஹா....
    மனுசங்க எப்படியெல்லாம் கொஞ்சுறாங்க.... அப்புறம் வீட்டுக்குப் போறதுக்கு கெஞ்சுறாங்க...
    சுனாமி இன்னும் நீடிக்கிறதாம் சகோ....

    ReplyDelete
  14. ஹா.. ஹா.. குழந்தையோட ஹஸ்பெண்டு உருட்டு கட்டையோட உங்களை தேடி வந்துட்டிருக்காரு....எப்படி இருந்தாலும் வந்து வாங்கிக்க போறிங்கன்னு உங்க வீட்ல பூரிக்கட்டையோட... ம் எதையும்... தாங்கும் இதயம்...!

    ReplyDelete
  15. ஏன்ன்ன்..... இது தேவையா உங்களுக்கு......

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.