Sunday, February 2, 2014


 
@avargal unmaigal
கலைஞர் அவர்களே சட்ட மன்ற தேர்தலுக்கு முன் தமிழ் நாட்டிற்கு நிறையச் செய்தீர்கள் என்று ஒரு  வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும்   தமிழகத்தில் நீங்கள் ஆட்சி பறிகொடுத்த நாளிலிருந்து மத்திய அரசில் பங்கு வகித்தும் ,காங்கிரஸ் கட்சி உங்கள் ஆதரவுடன் மிக வலுவுடன் ஆட்சி செய்த போதும் அதனுடன் சேர்ந்து இருந்த நீங்கள் தமிழகத்திற்காக என்ன என்ன வளர்ச்சி பணியில் உங்கள் கட்சி எம்பிக்கள் ஈடுபட்டார்கள் என்று உங்களால் ஏதாவது குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா என்ன? உங்களுக்கே நன்றாகத் தெரியும் ஒரு சிறு துரும்பைக் கூட தமிழகத்திற்காக, தமிழனுக்காக தூக்கிப் போடவில்லையே. அப்படி இருக்கையில் மீண்டும் உங்களை மத்திய அரசில் பங்கெடுக்க அனுப்பும் பட்சத்தில் அடுத்து வரும்  ஆண்டுகளில் ஜெயலலிதாவைக் குறை சொல்லியே தமிழகத்தைப் புறக்கணிக்கத் தானே போகிறீர்கள்? அப்படி இருக்க ,தமிழக மக்களுக்கு உங்களைத் தேர்ந்தெடுப்பதால் என்ன நன்மைகள் வரப் போகின்றன? உங்கள் பிள்ளைகளோ அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களோ மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கப் போவதைத் தவிர? இப்படிக் கேட்டதற்கு ஜெயலலிதா வந்தால் மற்றவர்கள் வந்தால் என்ன செய்யப் போகிறார்கள் என்று பதில் கேள்வி கேட்டு திசை திருப்ப வேண்டாம். இந்தக் கேள்வி நீங்கள் என்ன செய்தீர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றுதான். இப்படி எந்த கட்சி சார்புடையவனாக அல்லதா. ஒரு பாமரன்  கேட்கிறான் அதற்குப் பதில் சொல்ல உங்களால் இயலுமா?

۞,¸¸,ø¤º°`°۩ http://avargal-unmaigal.blogspot.com/ ۩ ,¸¸,ø¤º°`°۞

ஒரு மூத்த அரசியல்வாதி, மிகப்பெரிய தலைவர் என்றெல்லாம் பெயரெடுத்தவர், வீட்டுக்குள் பேச வேண்டியதை வெளியில் பேசுகிறார், ஊடகங்களிடம் பேசியுள்ளார். இது ஒரு நாடகம். குடும்ப நாடகத்தை நாங்கள் நம்பவில்லை -இப்படிப் பேசியது அரசியல் தலைவரின் மனைவி  பிரேமலதா விஜயகாந்த்.
 
இதற்குப் பதில் சொல்லும் நிலைமையில்தான் கலைஞர் என்ற ஒரு மூத்த அரசியல்வாதி, மிகப்பெரிய தலைவர்  இருந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது அவரது நிலைமை



கொஞ்சம் கலாய்ப்பு 


நேற்று வேலையை முடித்துவிட்டு வரும் போது நீண்ட நாள் பார்க்காத நண்பர் ஒருவரைப் பார்த்தேன் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது வாங்க நண்பா , உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு..சரக்கு சாப்பிட்டு பேசி விட்டுப் போகலாம் என்றார்

வேணாம் நண்பா நான் அவசரமா வீட்டிற்குப் போகணும்…!

“என்னடா ! ரொம்ப நாளைக்கு அப்புறமா ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்கிறோம். வீட்டிற்குப் போகத் துடிக்கிற. வீட்டில் ஏதாச்சும் விஷேமாடா என்றான்?”

விஷேசம் ஒன்னுமில்லை.என் பொண்டாட்டி சாப்பிடாம எனக்காக காத்திட்டிருப்பா”

என்ன இந்தக் காலத்தில் அதுவும் அமெரிக்காவில் இப்படி ஒரு பொண்டாட்டியா! அதுவும் நீ வரும் வரைக்கும் காத்திருந்து சாப்பிடுகிற பொண்டாட்டியா!” மிக ஆச்சரியமா இருக்கே! நீ ரொம்ப அதிர்ஷ்ட சாலிடா என்றான்

“அடப் போடா வெண்ணெய் அவளாச்சும் எனக்காக சாப்பிடமா காத்திட்டிருப்பதாவது. நான் போய் தாண்டா அவங்களுக்கே சமைச்சு போடனும் என்றேன்

அதுக்கு அவன் நீயும் நம்ம கட்சிதாண்டா....ஆனா நான் உன்னைவிடக் கொஞ்சம் விவரம்டா நான் காலியில் வேலைக்கு வரும் போதே சமைச்சு வச்சிட்டு வந்திடுவேன் அப்பத்தான் ஈவினிங்க் நான் கெத்தா வெளியில் சுற்றிவிட்டு வூட்டுக்கு போவேன் என்ற தந்திரத்தை எனக்கு கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

ஆனா இதை எங்க வூட்ல அமுல் செய்ய முடியாது எங்க வூட்டம்மாவுக்கு சுடச் சுடத்தான் பொங்கிப் போட வேண்டும் இல்லையென்றால் அவங்க என் மேல் பொங்கிடுவாங்க பொங்கி
((((¯’·.¸() படித்ததில் பிடித்தது பேஸ்புக்கில் Ragav Endhiran பதிந்தது.)¸.·’ ´¯))))

 
அமெரிக்கவில் துங்குவதற்கு முன் கணவன் மனைவிக்கு கூறுவது "Good Night My Love"
இங்கிலாந்தில் "Sleep Well My Love "
ஆஸ்திரேலியாவில் "Sweet Dreams My Love "
நம்ம நாடுகளில் - கேட் ,கதவு,ஜன்னல் எல்லாம் பூடியச்சா?
எல்லாம் பூட்டியாச்சி மூடிட்டு படுத்து தூங்கு...!!!


பேஸ்புக்கில் ரஹீம் கஸாலி பதிந்தது :


தனித்து நில்லுங்க...தனித்து நில்லுங்கன்னு தொண்டர்கள் பாட்டுக்கு அவரை இப்படி உசுப்பேத்தி விட்டுடுறாங்க. ஆனால், கூட்டணி இல்லாட்டி ஜெயிக்க முடியாதுன்னு மனதளவில் சோர்ந்து போயிருக்க இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் கட்சியை விட்டு ஓடிப்போய் கடைசியில் நிஜமாகவே யாரும் இல்லாமல் விஜயகாந்த் மட்டுமே தனிச்சுதான் நிற்கப்போறாரு.....

தலைவர் ஏன் அந்த பத்திரிகை மீது கோபமா இருக்காரு?

அவரு தனித்து போட்டின்னு சொன்னதை ஜோக்ஸ் பகுதியில் போட்டுட்டாங்களாம்...


சென்னை: சட்டசபை கூட்டத் தொடரை, புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக, சட்டசபை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.


 
@avargal unmaigal



அன்புடன்
மதுரைத்தமிழன்
மழையோ புயலோ வெயிலோ.....விடுமுறையோ...பந்தோ .எப்படி இருந்தாலும் மெயில்பேக் மூலம் பதிவுகள் உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும்... உங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டேன்ல

#avargal unmaigal



18 comments:

  1. என் பதிவுகளை பிரபலப்படுத்தியதற்கு நன்றி அண்ணே

    ReplyDelete
    Replies
    1. கஸாலி பிரபலத்தை எப்படிங்க பிரபலபடுத்த முடியும்.....

      விஜயகாந்தை நக்கல் பண்ணுவது போல என்னையும் நக்கல் பண்ணுறீங்க பரவாயில்லை தம்பி நக்கல் பண்ணினால்

      Delete
  2. தந்திரத்தை வைத்து ஒரு கட்சியே ஆரம்பித்து விடுங்கள்... ஹிஹி...

    ReplyDelete
  3. "சிலிண்டரை ஆஃப் பண்ணி வச்சிட்டியா பிள்ளே ?"

    "ஆமா ஆமா சத்தங்காட்டாம தூங்குங்க"

    கேஸ் சிலிண்டருக்கு அம்புட்டு பயம் எனக்கு அவ்வவ்...

    ReplyDelete
  4. ////நம்ம நாடுகளில் - கேட் ,கதவு,ஜன்னல் எல்லாம் பூடியச்சா? எல்லாம் பூட்டியாச்சி மூடிட்டு படுத்து தூங்கு...!!!

    உண்மையிலேயே நல்ல ஜோக் தான்...

    //எல்லாம் பூடியச்சா?
    'ட் ' மிஸ்ஸிங் பாஸு.....

    அப்போபோ கொஞ்சம் 'கூர்ப்பான' ஜோக்-கும் போடுங்க !!!!!!!!! ஹி...ஹி...!!!!

    ReplyDelete
  5. கொஞ்சம் சிரிப்பு வந்தது. நான் கஞ்கன் இல்லே.

    ReplyDelete
  6. உங்கள் நிலை நினைச்சு சிரிப்பு வந்தது. நாட்டு நிலமை படிச்சு சோகம் வந்தது

    ReplyDelete
  7. சிரிப்பு வருது ,சின்ன மனுஷன் (நீங்கதான் )பெரிய மனுஷன் (கலைஞர் )செயலைப் பார்க்க சிரிப்பு வருது !
    த ம 5

    ReplyDelete
  8. எனக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்.

    அழகிரி அயல்நாடு சென்று திரும்பியவுடன் தந்தையைப் பார்க்க காலை 7 மணிக்குச் சென்றார். மகிழ்ச்சியில் வீல் சேரிலிருந்து எழுந்த கலைஞர் தடுக்கி கீழே விழுந்தார். அந்த சத்தம் கேட்டு எதோ அவர்களுக்குள் பிரச்ச்னை என்று பத்திரிகையாளர்கள் நியூஸ் கிளப்பி விட்டார்கள். பிரேமலதாவும் இப்படி ஒரு வாய்ப்பைத்தானே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

    தனியே நிற்போம் என்று அவர்களை விஜயகாந்திடம் சொல்ல வைத்தது நமது முதல்வரின் அரசியல் தந்திரம். சொல்லிக் கொடுத்தவர் சோ.

    அதிமுக கம்யூனிஸ்டுகள் கூட்டணி உறுதி என்ற ரகசிய செய்திகேட்டு செத்தாடா என்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு திமுக எம் எல் ஏக்கள் வெளியே வந்தனர். அவர்கள் சிரித்துக் கொண்டு வெளியே வந்தது இதனால்தான்.

    அரசியல் பேசியாச்சு.

    எல்லாம் பூட்டியாச்சு. மூடிட்டு படுத்து தூங்கு. - அப்ப மத்த நாட்லலாம் கொசுவே கெடயாதா.

    நானும் என் சம்சாரமும் இணைபிரியாத் தோழருங்க. அவங்க கைல இங்லீசு புக்க வச்சிகிட்டு சொல்லுவாங்க. நான் கேட்டுட்டே சமச்சிருவேன். அவங்களும் இங்லீசு கத்துகிட்டாப்பல இருக்கும்ல.

    கோபாலன்

    ReplyDelete
  9. //வாழ்க்கையில் இப்படித்தான் பலர் நமக்கு உதவுவதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்//

    ஒங்களுக்கு புரியலயா. ஏணியை எறக்கிவிட்டப்றம் மேலவந்து கடனக் குடுக்கறயா ஓம்பேண்ட்ட களட்டிக் குடுக்கறயான்னு கேட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டுக்காரு..

    கோபாலன்

    ReplyDelete
  10. கொஞ்சம் கலாய்ப்பு நிறைய சிரிப்பு................

    ReplyDelete
  11. மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. FB- நல்ல ஜோக்! நம்ம நாட்டு குட் நைட்!!!

    கலாய்ப்பு! அருமை! தங்களின் அலம்பல்! ரசித்தோம்!

    தந்திரம் வொர்க் அவுர் ஆகுமே! சமைச்சுவைச்சுட்டு, ஊர் சுற்றிவிட்டு, மைக்ரோ வேவ்ல வைச்சு சூடு பன்னிட்டா சுட சுட.....அப்புறம் என்ன....

    ReplyDelete
  13. வாழ்க்கையில் இப்படிதான் பலரும் நமக்கு உதவுவதாக நடித்துகொண்டிருக்கிறார்கள்!!
    fact ...fact...இவ்ளோ வாயாடியா இருந்துட்டு சமைக்கிறேன்னு சொல்லறது எல்லாம் நம்புகிற மாதிரி இல்லையே பாஸ் !!

    ReplyDelete
  14. மதுரைத் தமிழன் அமெரிக்காவில் தன் மனைவியிடம் தூங்கப்போவதற்கு முன் கூறுவது:
    "Honey! Don't beat me tomorrow!!!"

    (என்ன சரி தானே???)

    ReplyDelete
  15. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  16. சிறப்பான மெயில் பேக்.... தொடர்வேன் எனச் சொன்னது மகிழ்ச்சி தந்தது.

    ReplyDelete
  17. சிரிக்க முடிந்தது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.