இந்த வார ஜுனியர்
விகடனில் தி.மு.க.
கூட்டணி வேட்பாளர்
பட்டியலோடு வந்தார் கழுகார்!
என்ற செய்தியை சொல்லி அதில்
யார் யார் திமுக வேட்பாளராக
போட்டியிடப் போகிறார்கள் என்ற
பட்டியலையும்
வெளியிட்டுள்ளனர்.
அதில் வந்த செய்தி
சுருக்கமும் வேட்பாளர்
பட்டியலும் இதுதான்.
''தி.மு.க.
வட்டாரம் தன்னுடைய
தேர்தல் முஸ்தீபுகளைத்
தொடங்கிவிட்டது.
15, 16 ஆகிய தேதிகளில்
திருச்சியில் தி.மு.க.
மாநாடு
முடிந்ததும், வேட்பாளர்
நேர்காணல் தொடங்க
ஆரம்பிக்கலாம் என்கிறார்கள்.
தி.மு.க-வை
காங்கிரஸ் கூட்டணிக்குள்
கொண்டுவந்து சேர்த்துவிட
பலரும் முயற்சித்து
வருகிறார்கள். ஆனால்,
அதற்கு இதுநாள் வரை
கருணாநிதியும் ஸ்டாலினும்
பிடிகொடுக்கவில்லை.
தே.மு.தி.க-வுடனான
பேச்சுவார்த்தைகளையும்
தற்காலிகமாக தி.மு.க.
நிறுத்தி
வைத்துள்ளது. ஒவ்வொரு
தொகுதிக்கும் இரண்டு,
மூன்று
வேட்பாளர்களைத் தேர்வுசெய்து
வைத்துள்ளார்களாம்
கருணாநிதியும் ஸ்டாலினும்!
தென் சென்னை தொகுதி
குஷ்புவுக்கு
உறுதியாகிவிட்டது
என்கிறார்கள். மதுரையில்
பி.டி.ஆர்.
பழனிவேல்ராஜனின்
மகன் தியாகராஜனை நிறுத்த
தலைமை நினைக்கிறது.
ஆனால்,
தியாகராஜனுக்கு
அதில் சம்மதம் இல்லையாம்.
அதேபோல்,
தமிழச்சி
தங்கபாண்டியனை
ராமநாதபுரத்தில் நிறுத்த
கருணாநிதி நினைத்தார்.
ஆனால் அவர்,
'தேர்தலில்
போட்டியிட விரும்பவில்லை’
என்று
சொல்லிவிட்டாராம்.
அதனை தலைமையிடமும்
சொல்லிவிட்டதாகச்
சொல்கிறார்கள்.
துரைமுருகன்,
திண்டுக்கல்
பெரியசாமி, தூத்துக்குடி
பெரியசாமி, எ.வ.வேலு,
பொங்கலூர்
பழனிசாமி ஆகியோர் தங்களது
வாரிசுகளை களம் இறக்கத்
தயாராகி வருகிறார்கள்.
மாநாடு
முடிந்ததும் தி.மு.க.
களைகட்டும்!
இந்த செய்தியை ஆழ்ந்து
படித்த எவருக்கும் ஒரு
உண்மைபுலப்படும்.இது
ஜுனியர் விகடன் நிருபர் குழு
ஆராய்ந்து அல்லது
துப்புதுலக்கி எழுதியது
அல்ல. ஸ்டானின்
உத்தரவுபடி, இணைய
உடன் பிறப்புக்கள்
நிருபர்களுக்கு அனுப்பிய
தகவலின்படி விகடனுக்கு
ஏற்றவாறு மாற்றி
அமைக்கப்பட்டு
வெளியிடப்பட்டு இருக்கிறது.
இல்லை இல்லை
அப்படியெல்லாம் இல்லை
என்பவர்களிடம் ஒரு கேள்வி?
இது போல மற்றக்
கட்சியினரின் வேட்பாளர்
பட்டியலை ஜுவி வெளியிடுமா
என்றால் அதற்கு பதில்
இல்லையென்றுதான் இருக்கும்.
காரணம் மற்ற கட்சிகளில்
இருந்து யாரும் இப்படி தகவலை
கசிய விடவில்லை.
சரி இப்படி எதற்கு
ஸ்டாலின் வெளியிட வேண்டும்
என்று கேள்வி எழக் கூடும்?
அதற்கு பதில் மிக எளிது
குப்பனோ சுப்பனோ எளிதில்
சொல்லிவிடுவான். ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் வேட்பாளராக நிற்க
விருப்ப மனு செய்துள்ளனர்
என்றும் அதில் தனக்கு
வேண்டியவர்களை மட்டும்
ஸ்டாலின்
தேர்ந்தெடுத்துள்ளார்
அதுதான் இந்த லிஸ்ட் அதில்
குஷ்பு தமிழச்சி என்ற
பெயரையும் இணைத்து இந்த
லிஸ்ட் அவரால் மட்டுமல்ல
அதற்கு கலைஞரும் துணை
புரிந்துள்ளது போல ஒரு
தோற்றத்தை ஏற்படுத்தி
இருக்கிறார். அது
மட்டுமல்லாமல் இதனை
வெளியிட்டதன் மூலம்
மற்றவர்களுக்கு அவர்
மறைமுகமாக சொல்வது
என்னவென்றால் இதுதான் நான்
தேர்ந்தெடுத்த லிஸ்ட் அதில்
சில கடைசி நேர மாறுதல்களுக்கு
உட்பட்டவை ஆனால் இதற்கு
எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்
கட்சிக்கு எதிரானவர்கள் என்று
சொல்லி அழகிரியையும் அவரது
ஆட்களையும் ஒரங்கட்டியது போல
ஒரங்கட்டிவிடுவேன் என்று
சொல்ல முயற்சித்து
இருக்கிறார்.
இப்படி அவர் தகவலை
கசியவிட்டதற்கு மேலும் ஒரு
காரணம் சொல்லப்படுகிறது
அதன்படி இப்படி இரு வேட்பாளர்
பட்டியல் ஸ்டாலின் மனதில்
இருக்கிறது என்பதை அறிந்த
பலர் போட்டியில் பங்கு
கொள்ளாமலே விலகிவிடக் கூடும்
இல்லையென்றால் அவர்களும்
போட்டியில் கலந்து கொண்டு
தோல்வியை தளுவும் போது
உடன்போட்டியிட்ட
வேட்பாளருக்கு எதிராக
உட்கட்சி உள்குத்து நடக்க
வாய்ப்புகள் ஏற்படும் அதுவும்
இதன் மூலம் குறைய வாய்ப்பு
உண்டு
இனிமேல் என்ன நடக்கும்
திருச்சி மாநாடுக்கு அப்புறம்
ஜனநாயக முறைப்படி நேர்காணல்
என்ற நாடகம் நடக்கும்.
இந்த ஜனநாயக
நாடகத்தை எழுதி
டைரக்ட் செய்பவர்
ஸ்டாலின் அதில்
ஹீரோவாக நடிப்பவர் கலைஞர். அதன்
பின் இன்னொரு மாநாடு கூட்டி
அதன் மூலம் ஜனநாயக முறைபடி
திமுக தலைமை வேட்பாளர்
பட்டியலை வெளியிடும்
Photo courtesy : Vikatan. Thank you Vikatan
அன்புடன்
மதுரைத்தமிழன்
இது முழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது. இவர்கள் செய்யும் ப்ளானே தனியாகத்தான் இருக்கும். முதலில் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பதற்கு பல கட்சிகளை தேர்தல் சமையத்தில் வாங்குவார்கள். பின் ஆட்சியை பிடித்தவுடன் 5 வருடங்களுக்கு தங்கள் குடும்பத்தினர் மட்டும் கொள்ளை அடிக்க விடுவார்கள். பின் ஆட்சியை இழந்துவிட்டு அடுத்த ஐந்து வருடங்களுக்கு தங்களுக்குள் பங்கு பிரிப்பதில் அடித்துக் கொள்வார்கள். பின் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும்.
ReplyDeleteGood shot
Deleteதந்திரம் தான்... பார்ப்போம்...
ReplyDeleteஇதில் விசி க்கும் புதிய தமிழகத்துக்கும் தனி தொகுதிகளையே வழங்கியுள்ளார்கள் இவர்களுக்கும் பொது தொகுதியில் இடம் அளித்திருக்கவேண்டுமல்லவா? இதுவும் திமுக விசி யையும் புத வையும் ஏமாற்றும் வேலையில்லையா?.
ReplyDeleteஇத்தனை வேட்பாளர்கள் ஓகே! ஏதாவது நாட்டுக்கு உருப்படியா செய்வாங்களா இல்ல தங்களுக்கு "உருப்படி" சேர்த்துவாங்களானு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்........சரி....நாங்க ஒரு தலைய தேடினோம்! வழக்கமா வருமே அந்தத் தலைதாங்க...நம்ம ..மதுரைத்தமிழனின் தலையைக் காணவில்லையே!
ReplyDeleteஜனநாயகம் தான் செத்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டதே! எப்படியோ ஸ்டாலின் கை ஓங்கி விட்டது போலும்!
ReplyDeleteஇந்த பட்டியல், ஜூனியர் விகடன் நிருபர் குழுவே ஒரு பரபரப்பிற்காக தயாரித்த ஒன்றாக ஏன் இருக்கக் கூடாது?
ReplyDeleteஎன்னாமா ப்ளான் பண்றாங்க பா !!!
ReplyDeleteஅலர்ட்டா இருக்கனும் போல.
பாளையம் மகராஜின் கருத்து
ReplyDeleteமிகச் சரியான கருத்து
அரசியல் அலசல் அருமை
தொடர நல்வாழ்த்துக்கள்
tha.ma 8
ReplyDeleteத.ம. +1
ReplyDeleteபார்க்கலாம்...