Monday, February 24, 2014




புத்தனுக்கோ போதிமரம் இந்த மதுரைத்தமிழனுக்கோ படுக்கை அறை. இந்த அறையில்தான் இந்த மதுரைத்தமிழன் சிந்திப்பான். அப்படி அவனது சிந்தனையில் வந்த கருத்துக்களை பேஸ்புக் மூலமும் டிவீட்டர் மூலமும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வான். அப்படி நான் இட்ட தத்துவ கருத்துக்களை படிக்காமல் தப்பித்தவர்களை மாட்டும் இடம்தான் இந்த தளம் என்பதால் இங்கே எனது தத்துவ முத்துக்களை கொட்டுகிறேன். படித்து ரசித்து சிந்தித்து கருத்துகள் இடலாம் அல்லது நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பூரிக்கட்டையால் ஆசிர்வாதம் செய்யலாம்


பெண்ணின் இதயத்தை கவர உங்கள் அறிவை அல்ல உள்ளத்தை திறந்து காட்டுங்கள்


நீ என் முதுக்கு பின்னால் புறம் பேசுபவனாக இருந்தால் என் முகத்திற்கு முன் புன்னகை செய்ய தேவயில்லை நண்பனே

வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுகிறவனுக்கு கஷ்டம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது


உங்கள் கஷ்டங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம் யாரும் உதவ முன்வரமாட்டார்கள் அது போல உங்கள் சந்தோஷத்தையும் சொல்ல வேண்டாம் அதில் அவர்கள் சந்தோஷப்பட ஏதும் இருக்காது

தலையணை வைத்து கொள்பவர்கள் எல்லாம் தலைக்கணம் பிடித்தவர்களா?


ஒரு ரூபாய் பிச்சை போடுபவனைப் பார்த்து பிச்சைக்காரன் நினைப்பது இவன் சரியான பிச்சைகாரானாக இருப்பான் போலிருக்கிறதே என்றுதான்


உறவுகளிடமும் நட்புகளிடமும் வேஷம் போடாதீர்கள் காரணம் வேஷம் ஒரு நாள் கலைந்துவிடும்


எந்த கடலில் விழுந்தாலும் எழுந்துவிடலாம் ஆனால் பெண்ணின் உள்ளக்கடலில் விழுந்தால் மட்டும் யாராலும் எழுந்திருக்க முடியாது

நடிகன் நல்லவனாக இருந்தாலும் அவன் நடிப்பதாகவே உலகம் கருதும்



ராஜிவ் கொலைக்குற்றவாளிளுக்கு மட்டும் கடவுள் தலையெழுத்தை எழுதவில்லை எழுதுவது எல்லாம் இந்திய அரசியல் தலைவர்கள்தான்

நாம் கோபபடும் நேரத்தில் நாம் முளை செயல்படும் வேகத்தை விட வாய் செயல்படும் வேகம் மிக அதிகமாக இருக்கிறது


ஒருவன் கோபத்தில் கத்தும் போது உங்களைப் பற்றி என்ன சொல்கிறானோ அதை மட்டும் மறக்க வேண்டாம் அதில்தான் உங்களைப் பற்றிய உண்மைகள் வெளிவரும்

அசிங்கம் பிடித்தவர்களுடன் சண்டை இடுவதால் ஒரு பலனும் இல்லை காரணம் நம்மால் அவர்களை அசிங்கப்படுத்த முடியாது அவர்கள் ஏற்கனவே அசிங்கம் பிடித்தவர்களாக இருப்பதால்




அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. கல்வெட்டில் எழுதி வைக்க வேண்டிய மிகச்சிறந்த டிவிட்ஸ்கள்!

    ReplyDelete
  2. ட்விட்ஸ் எல்லாம் டிஜிட்டல் ரகம் !

    ReplyDelete
  3. நீங்கள் மிகவும் பாக்கியசாலி, அதனால் தான் இறைவன் அந்த மிக அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு வழங்கியிருக்கிறார். இறைவன் அந்த பொக்கிஷத்தைக்கொண்டு தினமும் பூரிக்கட்டையால் உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கிக்கொண்டிருக்கிறார். இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    இந்த ஆசீர்வாதத்தை விடுவதற்கு மனசில்லாமல் தான் நீங்களும் இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும், இந்த ஆசீர்வாதம் தொடரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார்களாமே அப்படியா!!!!!

    ReplyDelete
  4. திருஷ்டி சுத்தி போடலாம் ! சகோ
    இந்த முறை படத்திலிருந்து ஒவ்வொரு ட்விட்சும் சிம்ப்ளி சூப்பர்ப் !
    கமலஹாசனின் ஸ்டைலா??
    ஒரு காமெடி ஒரு சீரியஸ் பதிவுன்னு போடுறதைக்கேட்டேன் :)))

    ReplyDelete
  5. நல்ல ட்வீட்ஸ்..... பாராட்டுகள் மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  6. எம்புட்டு அறிவு....... "தத்துவத்தின் பிறப்பிடம் படுக்கையறை"-மதுரை தமிழன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.